சென்னை நேரு பார்க் மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் தம்பதிகள் மற்றும் இளைஞர்கள் பல மணி நேரம் அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்.) “நிறுத்தப்பட்ட வாகனங்களுடன் யாரும் நீண்டநேரம் இருக்கக்கூடாது” என சுவரொட்டி ஒன்றை ஒட்டியுள்ளது.
ஒருபுறம், பயணிகளுக்கு போதுமான வாகன நிறுத்துமிடத்தை வழங்க அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், மறுபுறம், இந்த வசதியை பொதுமக்கள் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இதுவரை சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், தகவல்களை கண்காணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பயணிகளுக்கான பார்க்கிங் இடங்களைத் திறப்பதன் ஒரு பகுதியாக, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் பேவர் பிளாக்குடன் கூடிய புதிய கார் பார்க்கிங் வசதியைத் திறப்பதாக சி.எம்.ஆர்.எல்., சமீபத்தில் அறிவித்தது.
3,000 சதுர மீட்டரில் புதிய பார்க்கிங் வசதியில் 83 கார்கள் நிறுத்துவதற்கு அமைக்கப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil