சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Chengalpattu, Thiruvallur, Kanchipuram districts account nearly half the covid 19 cases செங்கல்பட்டில் 611 பேர், திருவள்ளூரீல் 333 பேர் மற்றும் காஞ்சீபுரம் 277 பேர் என நகரின் அண்டை மாவட்டங்களில் நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

Chennai news, Tamil news, death records

Chennai Neighboring districts account nearly half the covid 19 cases : கடந்த திங்களன்று தமிழ்நாட்டில் பதிவான 6,711 புதிய கோவிட் -19-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவை சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 6,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலை மொத்தம் 9,40,145 ஆக தற்போது உள்ளது. செயலில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,000-ஐ கடந்து 46,308 ஆக உயர்ந்திருக்கிறது. அவற்றில் சென்னை 17,098 ஆகவும், கோயம்புத்தூரில் 4,378 ஆகவும், செங்கல்பட்டில் 4,085 ஆகவும் உள்ளன. சென்னையில், 2,105 பேர் நோய்த்தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்திருக்கின்றனர். செங்கல்பட்டில் 611 பேர், திருவள்ளூரீல் 333 பேர் மற்றும் காஞ்சீபுரம் 277 பேர் என நகரின் அண்டை மாவட்டங்களில் நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கோயம்புத்தூரில் 604 பேரும், மதுரையில் 219 பேரும் பதிவாகியுள்ளனர். மொத்தம் 10 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர். இதில் திருச்சி (184), திருப்பூர் (160), சேலம் (158) ஆகியவை அடங்கும்.

மொத்தம் 19 பேரில், தனியார் மருத்துவமனைகளில் 11 பேரும், அரசு மருத்துவமனையில் 8 பேரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, அதன் எண்ணிக்கை 12,927 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சென்னை எட்டு இறப்புகளையும், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருச்சியில் தலா இரண்டு இறப்புகளையும் கண்டிருக்கிறது.

சிகிச்சைக்குப் பின் மொத்தம் 2,339 பேர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இதில், சென்னையில் மட்டும் 710 பேர் அடங்குவர்.

கடந்த 24 மணி நேரத்தில், 82,982 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இந்த மொத்த எண்ணிக்கை 2,06,03,108-ஆக இருந்தது. மேலும், சென்னையில் உள்ள ஹுமா ஸ்பெஷலிஸ்ட்ஸ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி எனும் தனியார் ஆய்வகம் ஒன்றில்  சமீபத்தில் COVID-19 சோதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இப்போது மாநிலத்தில் 69 அரசு சோதனை வசதிகளும், 193 தனியார் வசதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai neighboring districts account nearly half the covid 19 cases tamil news

Next Story
Tamil News Today Live : வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 92ல் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com