Advertisment

இம்மாதத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள்: செக் பண்ணுங்க!

ஜூலை மாதத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் விவரம் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai-Nellai Vande Bharat train will be operated in October

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் அக்டோபரில் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் நீட்சியாக அண்மையில், நெல்லை-நாகர்கோவில் இடையேயான அகலப்பாதை பணிகளை ஆய்வு செய்த தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், “நெல்லை வந்தே பாரத் ரயில் அக்டோபர் மாதம் இயக்கப்படும்” என்றார்.

Advertisment

இந்த நிலையில், ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் 4 வந்தே பாரத் ரெயில்கள் புதிதாக இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த ரயில்கள்,
1) டெல்லி-சண்டிகருக்கும் (243 கிலோ மீட்டர் தூரம்)
2) சென்னை-நெல்லை
3)குவாலியர்- போபால்
4) லக்னோ- பிரயாக்ராஜ் ஆகும்.

இதற்கிடையில், மேற்கூறிய ரயில்கள் பகல் நேரத்தில் இயக்கப்படும் என்பதால் பயணிகள் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் 16 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயிலானது இயக்கப்பட உள்ளது. சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலும் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.

மேலும் இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 552 பயணிகள் பயணிக்க முடியும் என்றும் காத்திருப்பு வசதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Train
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment