சென்னை நெம்மேலியில் மூன்றாவது கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணிகள், அக்டோபர் மாத இறுதியில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.5 ஏக்கர் பரப்பளவில், கிழக்கு கடற்கரை சாலையில், அமைய உள்ள இந்த புதிய ஆலையின் மூலம், நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றலாம். இதன்மூலம், தென் சென்னை பகுதியை சேர்ந்த 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பிளான்டில், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில் கடல்நீர் சுத்திகரிக்கப்பட உள்ளது. ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறை சுத்திகரிப்பிற்கு முன்னதாக கடல்நீர் dissolved air flotation மற்றும் ultra filtration முறைக்கு உட்படுத்தப்பட உள்ளன. இந்த முறையின் மூலம், கடல் ஆல்கா உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் அகற்றப்படும்.
ரூ.1,259.38 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ள இந்த பிளான்ட், கேஎப்டபிள்யூ, ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் ஒத்துழைப்புடன் 2021ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட உள்ளன. இந்த பிளான்டில் சுத்திகரிக்கப்படும் நீர், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட உள்ளது.
தற்போது நெம்மேலியின் பயன்பாட்டில் உள்ள 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு பிளான்டில், கடல்நீரை சுத்திகரிக்க ஒரு கிலோவுக்கு ரூ.36 செலவு ஆகிறது. இந்த புதிய பிளான்டில் செலவு கிலோவுக்கு ரூ.42 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ வாட்டர் நிறுவனம், மீஞ்சூர் பிளான்டில் இருந்து ஒரு கிலோ குடிநீரை ரூ.55க்கு கொள்முதல் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
விரைவில் நான்காவது பிளான்ட் : நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை சுத்திகரிக்கும் திறன் பெற்ற சென்னையின் நான்காவது கடல்நீர் சுத்திகரிப்பு பிளான்டை, கிழக்கு கடற்கரை சாலையின் பேரூரை அடுத்த பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.