சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார். இந்நிலையில் இந்த புதிய முனையத்தில் உள்ள வசதிகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
இந்த புதிய கட்டிடம் , ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 295 சதுர மிட்டரில் அமைந்துள்ளது. வருடத்திற்கு 300 லட்சம் பயணிகள் இந்த முனையத்தை பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையம், தமிழகத்தின் கலாச்சாரத்தை வெளிகாட்டும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் உலக தரத்தில் உள்ள வசதிகளை பயணிகளுக்கு வழங்குகிறது.
இதில் 108 இமிகிரேஷன் (immigration) கவுண்டர்கள் உள்ளது. விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும், வேறு இடங்களிலிருந்து பயணம் செய்து சென்னை விமானம் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கும் சரிசமமாக இந்த கவுண்டர்கள் பிரிக்கப்பட்டுள்ளது. விரைவாக பயணத்தை மேற்கொள்ள 100 சோதனை மையங்கள் உள்ளது.
இந்த புதிய கட்டத்தின் மேற்கூரை மோடிஃ (motif ) விளக்குகளால் ஆனது, மேலும் தென் இந்தியாவின் கோல வடிவங்களை கொண்டது.

விமான பயணம் மேற்கொள்ளும்போது அனுமதி அட்டையை ஸ்கேன் செய்த பிறகு, உங்களது உடமைகளை சோதனை செய்ய நீங்கள் வழங்க வேண்டும். இந்நிலையில் மிகவேகமாக சோதனை செய்யும் ஏ.ஆர்.டி.எஸ் முறையில் தானாக இயங்கும் பாதுகாப்பு சோதனை சிஸ்டம் உள்ளது. இதனால் நீங்க வேகமாக உங்கள் உடமைகளை சோதனை செய்து, விரைவில் பயணம் மேற்கொள்ள முடியும். இந்த புதிய முனையம் ரூ. 1, 260 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”