‘பொதுமக்கள் குறைகளைச் சொல்ல வீடியோ காலில் பேச ஏற்பாடு’ சென்னை புதிய போலீஸ் கமிஷனர் பேட்டி
சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட மகேஷ்குமார் அகர்வால், பொதுமக்கள் தங்கள் குறைகளைச் சொல்ல வீடியோ கால் மூலம் என்னிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

Advertisment
சென்னை போலீஸ் கமிஷனராக 3 ஆண்டுகளாக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மகேஷ்குமார் அகர்வால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
ஏ.கே.விஸ்வநாதன் தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு காவலர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு விடை பெற்றார். இதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் 107வது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். சிபிஐ மற்று சிபிசிஐ பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மகேஷ்குமார் இதற்கு முன்பு மதுரை காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். ஐஜியாகவும், டிஐஜியாகவும் பதவி வகித்துள்ளார்.
Advertisment
Advertisements
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது, “சென்னை பெருநகர காவல் ஆணையராக என்னை நியமித்த முதல்வருக்கு நன்றி. சென்னை நகர மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். சென்னை பொது மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். சென்னை காவல் துறையில் சுமார் 20 ஆயிரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த விரும்புகிறேன்.
பொதுமக்கள் தங்கள் குறைகளைச் சொல்வதற்கு வீடியோ கால் மூலமாக என்னிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறேன். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளபடி, முகக் கவசம் அணிதல், ஹேன் சானிடைசர் பயன்படுத்துதால், சமூக விலகலைக் கடைபிடித்தல் ஆகியவற்றை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்களுக்கு சேவை செய்ய ஊடகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"