/tamil-ie/media/media_files/uploads/2023/06/TRFF4.jpg)
சென்னை முழுவதும் 30 இடங்களில் ஸ்பீடு ரேடார் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பகலில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கும், இரவில் 50 கிலோமீட்டர் வேகத்திற்கும் மேல் வாகன ஓட்டுனர்கள் பயணித்தால் அபராதம் வழங்கவேண்டும் என்று பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் "போக்குவரத்து பாதுகாப்பிற்காக" ரூ.7 கோடி மதிப்பிலான உபகரணங்கள் மற்றும் அமைப்புகளை சென்னை காவல் ஆணையர் துவக்கி வைத்தார்.
"தேசிய தகவல் மையத்துடன் திட்டமிடப்பட்டால், சாலை விதிகளை மீறுபவர்களுக்கு சலான்கள் தானாகவே சென்றடையும்," என்று அவர் மேலும் கூறினார்.
"இந்த அமைப்பு நிகழ்நேர தரவுகளுடன் 100 சதவீத கவரேஜை வழங்குகிறது. இது நகரத்தில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் போக்குவரத்தை ஆய்வு செய்ய உதவுகிறது. கூகுள் மேப்பின் கட்டணச் சேவையிலிருந்து தரவைச் சேகரிப்பதன் மூலம், சுமார் 1,000 சாலைகளை உள்ளடக்கிய 300 முன்மொழியப்பட்ட சந்திப்புகளை இந்த அமைப்பு ஒரே நேரத்தில் நேரடியாகக் கண்காணிக்கிறது,” என்று ஷங்கர் ஜிவால் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.