scorecardresearch

சென்னையில் பரவும் புதுவித வைரஸ் காய்ச்சல்: தற்காத்துக்கொள்வது எப்படி?

48 மணிநேரத்திற்குப் பிறகு உடம்பின் வெப்பநிலை குறையவில்லை என்றால், மருத்துவமனையில் காய்ச்சல் பேனலுக்கு நோயாலிகளை அனுமதிக்கிறார்கள்.

சென்னையில் பரவும் புதுவித வைரஸ் காய்ச்சல்: தற்காத்துக்கொள்வது எப்படி?

கோவிட்-19 பெருந்தொற்றின் பயம் தணிந்த பிறகு, கடந்த ஆண்டு சென்னைவாசிகள் எளிதாக சுவாசிக்கத் தொடங்கினார்கள். ஆனால், அதன்பிறகு ​​பலவிதமான வைரஸ் காய்ச்சல்கள் பரவ தொடங்கியது.

இதன்விளைவாக தற்போது சென்னையில் மர்மமான முறையில் வைரஸ் காய்ச்சல் மக்களினிடையே பரவி வருகிறது. மேலும், டாக்டரின் கிளினிக்குகளில் நீண்ட வரிசைகளில் குவியும் மக்கள், ஆய்வகங்களில் இரத்த பரிசோதனைகள் மற்றும் மருந்தகங்களில் காய்ச்சல் மருந்துகளுக்கு காத்திருப்பதை நம்மால் காணமுடிகிறது.

இப்போது புழக்கத்தில் உள்ள வைரஸ்களில், சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV), அடினோ வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகியவை அடங்கும் என்று கிரேட்டர் சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர். ம.ஜெகதீசன் கூறுகிறார்.

48 மணிநேரத்திற்குப் பிறகு உடம்பின் வெப்பநிலை குறையவில்லை என்றால், மருத்துவமனையில் காய்ச்சல் பேனலுக்கு நோயாலிகளை அனுமதிக்கிறார்கள்.

“சில நோயாளிகளில் பிளேட்லெட் எண்ணிக்கையில் திடீர் வீழ்ச்சியடைவதைக் காணமுடிகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில், டெங்கு மற்றும் சிக்குன்குனியாவில் குறைவான வழக்குகள் காணமுடிகிறது. ஆனால் மற்ற வைரஸ் நோய்கள் புதிதாக பரவி வருகின்றன,” என்று அவர் கூறினார்.

மேலும், “காய்ச்சலின் அறிகுறிகள் குறைந்த பிறகு பலர் குறைந்தது 10 நாட்களுக்கு இருமல் வருவதை எதிர்கொள்வார்கள்” என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பல நோயாளிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் நீடிக்கும் சோர்வு தொடரும் என்று கூறப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai new viral fever affects people symptoms