போட்டோஷூட் விபரீதம்: பாலித் தீவுக்கு ஹனிமூன் சென்ற புதுமணத் தம்பதி நீரில் மூழ்கி உயிரிழப்பு

கடந்த 1ஆம் தேதி, விபூஷ்ணியாவுக்கும், லோகேஷ்வரனுக்கும் பூந்தமல்லியில் தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது.

கடந்த 1ஆம் தேதி, விபூஷ்ணியாவுக்கும், லோகேஷ்வரனுக்கும் பூந்தமல்லியில் தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai

Chennai newly married doctor couple dies in Indonesia

இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு தேனிலவு சென்ற புதுமண தம்பதி, கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

பூந்தமல்லி அருகே சென்னீா்குப்பத்தைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மகள் விபூஷ்ணியா(25), மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரனும் காதலித்து வந்துள்ளனர். மருத்துவர்களான இருவரும் தங்கள் காதல் குறித்து வீட்டாரிடம் கூறி திருமணத்திற்கு சம்மதம் பெற்றுள்ளனர்.

அதன்படி கடந்த 1ஆம் தேதி, விபூஷ்ணியாவுக்கும், லோகேஷ்வரனுக்கும் பூந்தமல்லியில் தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது.

publive-image
Advertisment
Advertisements

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுமண தம்பதி தேன் நிலவு கொண்டாட இந்தோனேசியாவின் பாலி தீவுவுக்கு சென்றனா். அங்கு கடல் பகுதியில் மோட்டார் போட்டில் போட்டோஷூட் நடத்திய போது, எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

லோகேஸ்வரன் உடல் மீட்கப்பட்ட நிலையில், விபூஷ்னியாவின் உடலை இந்தோனேசியா போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர், அதிர்ச்சியில் இழப்பை தாங்க முடியாமல் கதறி அழுதனா். இருவரது உடல்களையும் சென்னைக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருமணம் ஆன சில நாட்களிலே, தேன் நிலவு கொண்டாட சென்ற பூந்தமல்லியைச் சோ்ந்த மருத்துவ தம்பதி உயிரிழிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: