கொரோனா சிகிச்சைக்கு பிறகும் 12 வாரங்களுக்கு நோயின் தாக்கம்; சென்னையில் 24% பேர் பாதிப்பு

வீட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் காட்டிலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களிடையே COVID-19 அறிகுறிகள் கணிசமாக அதிகமாக இருக்கிறது.

coronavirus, chennai news, new in Tamil, covid19

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களில் 24% பேரிடம் அதன் நோய் தாக்கமும், அறிகுறிகளும் இருந்து வருகிறது என்றும், 76% பேர் முற்றிலும் நலமடைந்துவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கொரோனா வைரஸ் தொற்றிற்கு பிறகு பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளால் அவதிப்படும் நோயாளிகளிக்கு தேவையான ஆலோசனைகள் டெலி-கவுன்சிலிங் மூலம் மருத்துவர்கள் அளித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகள் தொடர்பான விரைவான தேவைகள் மதிப்பீட்டிற்காக தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 48.2% பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குணமடைந்தவர்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆலோசகர் ரூபேஷ்குமார் தெரிவித்தார். மதிப்பீட்டிற்காக தேவை செய்யப்பட்டவர்களில் மீதம் உள்ளவர்கள் வீட்டில் தாங்களை தனிமைப்படுத்திக் கொண்டவர்கள். மதிப்பீட்டில் சேர்க்கப்பட்ட நோயாளிகளில் 34% க்கும் அதிகமானோர் இணை நோய்களை கொண்டிருந்தனர்.

23% பேருக்கு நீரிழிவு நோய் இருந்தது. 19% பேருக்கு ஹைப்பர் டென்சனும், 3.2% பேருக்கு 3.2% இதய நோயும், 0.8% பேருக்கு சிறுநீரக பிரச்சனையும், 1.1% பேருக்கு ஆஸ்த்துமாவும் இருந்தது.

இருமல், மூச்சு பிரச்சனை, உடல் சோர்வு, தூக்கமின்மை , மற்றும் உடல் எடை குறைவு போன்ற பிரச்சனைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 9% பேர் உடல் எடை குறைந்துள்ளது. 7% நபர்களுக்கு முடி உதிர்வு ஏற்பட்டுள்ளது. அதே போன்று உறக்கமின்மையால் 5% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1.6% நபர்கள் தொடர்ந்து மூச்சுத் திணறல், 0.8% மூட்டு வலி, 0.7% பசியின்மை மற்றும் 0.5% COVID-19 நோய்த்தொற்றுக்குப் பிறகு நினைவாற்றல் இழந்ததாகக் கூறினர். குணமடைந்த பின் அறிகுறிகளைப் புகாரளித்தவர்களில், 57% ஆண்கள் மற்றும் 43% பெண்கள். 45-59 வயதுடையவர்களில் (40%) தொடர்ச்சியான அறிகுறிகள் அதிகமாக இருந்தன, அதைத் தொடர்ந்து 30-44 வயதுடையவர்கள் (24%) இது போன்ற பாதிப்பை சந்தித்து வருகின்றனர். நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அறிகுறியில்லாமல் இருந்தவர்களில், 4% பேருக்கு சிகிச்சைக்கு பிறகு இத்தகைய அறிகுறிகள் பதிவாகியுள்ளன.

வீட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் காட்டிலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களிடையே COVID-19 அறிகுறிகள் கணிசமாக அதிகமாக இருக்கிறது. மேலும் ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்பட்டவர்களிடமும் இந்த அறிகுறிகள் அதிகம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தாலும் இந்த அறிகுறிகள் 12 வாரங்களுக்கு மேல் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai news 24 percent of covid 19 recovered patients in the city reporting symptoms

Next Story
தமிழக விவசாயிகள் போராட்டம்… பயன்களும் கடக்க வேண்டிய தூரமும்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com