/tamil-ie/media/media_files/uploads/2019/06/loll.jpg)
Amma Scooter Subsidy Scheme
Amma Scooter Subsidy Scheme : 2016ம் ஆண்டி அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த, பெண்களுக்கான முக்கியமான அம்சங்களில் ஒன்று தான் அம்மா ஸ்கூட்டர் திட்டம். இந்த திட்டடத்தின் மூலம் பணிக்கு செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கு ரூ. 25000 அல்லது ஸ்கூட்டர் விலையில் 50% வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த திட்டத்தினை தமிழக அரசு துவங்கியது. இந்த ஆண்டில், இந்த திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் வாங்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 7ம் தேதி மாலை மணி 5 வரை ஆகும்.
விண்ணப்பிக்க தேவையான தகுதி
மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண் தமிழகத்தை சேர்ந்தவராகவும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராகவும் இருப்பது அவசியம்.
ஓட்டுநர் உரிமம் கட்டாயம் அவர் பெற்றிருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது போன்றவை ஆகும்.
கடந்த ஆண்டு மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தமிழகத்தில் துவங்கி வைத்தது பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Right To Education: தனியார் பள்ளிகளில் இலவச அட்மிஷன் பெறுவது எப்படி?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.