scorecardresearch

இந்த ஆண்டு பதிவு செய்த வழக்குகளில் 33% சைபர் குற்றங்கள் தொடர்பானவை: சென்னை குற்றப்பிரிவு

10 நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள 2,732 வழக்குகளில் 37 வழக்குகள் தண்டனையில் முடிவடைந்தது, 120 வழக்குகள் தீர்ப்பளித்து முடிக்கப்பட்டன.

Chennai
Chennai cyber crime cases

ஜனவரி முதல் ஏப்ரல் வரை சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (CCB) பதிவு செய்த 264 வழக்குகளில் 86- கிட்டத்தட்ட 33 சதவீதம் வழக்குகள் சைபர் குற்றங்கள் தொடர்பானவை என்று தெரிய வந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் 227 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், 321 வழக்குகளில் விசாரணைகள் முடிக்கப்பட்டுள்ளன, இதில் 182 வழக்குகள் நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்று சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்கள் பிறப்பித்த 168 ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகளில் 107, சிசிபி புலனாய்வாளர்களின் முயற்சியின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டன.

10 நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள 2,732 வழக்குகளில், 37 வழக்குகள் தண்டனையுடன் முடிவடைந்த நிலையில், 120 வழக்குகள் தீர்ப்பளித்து முடிக்கப்பட்டன. பதினாறு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மட்டும், சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு,  84 வழக்குகளை பதிவு செய்து, 46 குற்றவாளிகளை கைது செய்தது, அவர்களில் 10 பேர் ஒழுக்கக்கேடான போக்குவரத்து (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைதாகினர்.

குறிப்பிடத்தக்க வழக்குகளில், நைஜீரியர்களான பாலினஸ் மற்றும் கிளீடஸ் ஆகியோருக்கு மேட்ரிமோனியல் மோசடி வழக்கில், தண்டனை வழங்கியுள்ளது.

கிராமப்புற மற்றும் வேளாண்மை உழவர் கூட்டுறவு வங்கி என்ற போலி வங்கியை நடத்தி வந்த எம்பிஏ பட்டதாரி சந்திரபோசையும் சிசிபி கைது செய்தது. இந்த வழக்கில் இந்திய ரிசர்வ் வங்கியின் பதிவு சான்றிதழை போலியாக தயாரித்ததாக டெல்லியைச் சேர்ந்த அபிஷேக் ஒருவரும், டெபாசிட் திரட்டியதாகக் கூறப்படும் அப்பன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai news chennai cyber crime cases cyber offences

Best of Express