Chennai News Covid19 booster dose : இன்று சென்னை எம்.ஆர்.சி. நகரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதிக்கு முன்பு தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட 36.26 லட்சம் பேர் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெற தகுதி வாய்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 50 ஆயிரத்தை தாண்டிய ஆக்டிவ் கேஸ்கள்… கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா?
இந்த 36.26 லட்சம் நபர்கள்ல் 5.65 லட்சம் நபர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள். 9.78 லட்சம் நபர்கள் முன்கள பணியாளர்கள். 60 வயதிற்கு மேற்பட்ட பயனர்களின் எண்ணிக்கை 20.83 லட்சம் ஆகும். இந்த 36.26 லட்சம் நபர்களில் 15 லட்சம் நபர்கள் சென்னை பெருநகரில் வசித்து வரும் மக்கள். சென்னையில் உள்ள 140 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்கள்ளில் மக்கள் தங்களின் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள இயலும்.
சுகாதாரத்துறை அறிவிப்பின் படி தமிழகத்தில் இதுவரை 8.8 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் மக்கள் 91% மற்றும் 71% என முறையே தங்களின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களை செலுத்தியுள்ளனர்.
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா; முதல்வர் நலம் விசாரிப்பு
திங்கள் கிழமை அன்று 4 லட்சம் பேர் தடுப்பூசி பெற தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முடிவதற்குள் 10.7 லட்சம் பேர் தங்களின் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம். இந்த பூஸ்டர் தடுப்பூசி மூலம் பயன் பெறும் நபர்களில் 2.7 லட்சம் பேர் முன்கள பணியாளர்கள். 2.7 லட்சம் பேர் மருத்துவத் துறை ஊழியர்கள். மீதம் உள்ள 5 லட்சம் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் டி.எஸ். செல்வ விநாயகம் அறிவித்துள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் 9.1 லட்சம் பயனாளர்கள் கோவிட்ஷீல்ட் தடுப்பூசியையும், 1.5 லட்சம் பேர் கோவாக்ஸின் தடுப்பூசிகளையும் பெறுவார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil