குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கொரோனா அபாயம்: தீவிர நடவடிக்கையில் சென்னை

கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளில் அதிக பட்சமாக 1%-த்தினருக்கு மட்டுமே மருத்துவமனை உதவி தேவைப்படும். இருப்பினும் நிறைய அவசர சிகிச்சை உதவிகளை தயார் நிலையில் வைத்துள்ளோம்

Chennai corona virus, daily reports

Chennai news covid19 third wave : வருகின்ற மாதங்களில் கொரோனா தொற்று குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதை உணர்ந்து சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கொரோனா சிகிச்சை மையங்களிலும் குழந்தைகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. நிறைய குழந்தைகளுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவை இல்லை என்ற போதும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைல்ட் ஹெல்த்தில் 160 கோவிட் படுக்கைகள் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. 100 படுக்கைகள் ஏற்கனவே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவும் விதத்தில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் குழந்தைகளுக்கான படுக்கை வசதிகளை அதிகம் உருவாக்கும் சூழல் ஏற்படும். அப்போது இளம் வயதினருக்கான படுக்கைகளை குழந்தைகளுக்காக மாற்ற வேண்டிய நிலை வரும். சிகிச்சை மற்றும் மேலாண்மை நடைமுறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையங்களில் குழந்தைகளுக்கான படுக்கை வசதிகளிலும் கூடுதலாக ஆக்ஸிஜன் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

மிகப்பெரிய மருத்துவமனைகளில் கூடுதலாக 40 முதல் 50 படுக்கை வசதிகள் குழந்தைகளுக்காக உருவாக்கப்படலாம். ஆனால் அவர்களுடன் ஒரு பெற்றோராவது அனுமதிக்கப்படும் சூழல் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளில் அதிக பட்சமாக 1%-த்தினருக்கு மட்டுமே மருத்துவமனை உதவி தேவைப்படும். இருப்பினும் நிறைய அவசர சிகிச்சை உதவிகளை தயார் நிலையில் வைத்துள்ளோம் என்றும் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பாலசுப்ரமணியன் அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கின் காரணமாக குழந்தைகள் நல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 205 படுக்கைகளில் 65 மட்டுமே நிரம்பியுள்ளது. ஆனால் அவர்கள் யாரும் கொரோனா நோயாளிகள் இல்லை என்று மருத்துவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai news covid19 third wave chennai gear up to shield kids

Next Story
Tamil News Highlights : ஜூன் மாத ரேஷன் பொருட்களை பெற டோக்கன் விநியோகம் – தமிழக அரசு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com