செல்போனில் ஆபாச பேச்சு.. சென்னை காவல்நிலையத்தில் புகார் அளித்த முன்னாள் முதல்வர் மகள்!

2 செல்போன் எண்கள் மற்றும் ஒரு தொலைபேசி (லேண்ட் லைன்) எண் குறித்து சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரிக்கின்றனர்.

By: Updated: July 30, 2020, 10:44:45 AM

ex-cm daughter complaint : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகளுக்கு செல்போனில் தொல்லை கொடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அடையாளம் தெரியாத நபர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகள் ருபையா ஷெரிப் (55). திருமணமாகி சென்னை ஆர்.ஏ.புரம் என்ற பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருக்கிறார். அவரது கணவர் வேளச்சேரியில் கார் விமான நிலையம் வைத்திருக்கின்றார்.இந்த நிலையில் ரூபியா செஃரிப் நேற்று அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது அலைபேசிக்கு அறிமுகம் இல்லாத மூன்று அலைபேசி எண்களில் இருந்து வந்திருந்த அழைப்பின் அடையாளம் தெரியாத நபர்கள், தொடர்ந்து மூன்று தினங்களாக மிக ஆபாசமான வார்த்தைகளை பேசி தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார். ருபையா ஷெரிப்பின் செல்போனுக்கு வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன.

அதில்,பேசிய நபர்கள் ஆபசமாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசியுள்ளனர். இதையடுத்து சட்டம் ஒழுங்கு போலீஸார், ருபையா ஷெரிப்புக்கு அழைப்பு விடுத்த 2 செல்போன் எண்கள் மற்றும் ஒரு தொலைபேசி (லேண்ட் லைன்) எண் குறித்து சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து, போலீஸார் கூறும்போது, “பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்கள் கருதி, ருபையா ஷெரிப் குடும்பத்தினர் சென்னைக்குவந்து குடியேறி உள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றி ரோந்து போலீஸார் எப்போதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, செல்போனில் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது குறித்து வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரிக்கிறோம்” என்றனர்.

செல்போனில் ஆபாச பேச்சு.. சென்னை காவல்நிலையத்தில் புகார் அளித்த முன்னாள் முதல்வர் மகள்!

இதற்கு முன் தந்தை முஃப்தி முகமது முதலமைச்சராக இருந்த போது பயங்கரவாதிகள் சிலர் ரூபியாவை கடத்தி சென்று விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai news in tamil ex cm daughter complaint about lewd calls

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X