Chennai News Highlights: மறைந்த நடிகர் மனோ பாரதிராஜா உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manoj

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 

  • Mar 26, 2025 06:27 IST

    சென்னையில் தொடர் செயின் பறிப்பு: கைதான ஜாபர் குலாம் ஹுசைன் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை

    சென்னையில் நேற்று தொடர் செயின் பறிப்பு சம்பவங்களின் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன், போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்தனர்.

    விமான நிலையத்தில் நேற்று காலை கைது செய்யப்பட்டவரை, விசாரணைக்குப் பிறகு தரமணி ரயில் நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்க போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்ப முயன்ற போது, காவல் ஆய்வாளர் முகமது புகாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். உயிரிழந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாபர் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Mar 26, 2025 06:11 IST

    இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்

    இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் திரு. மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.

    இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Mar 26, 2025 06:06 IST

    நடிகர் மனோஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

    நடிகர் மனோஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். 

    தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.



  • Mar 25, 2025 21:58 IST

    நடிகர் மனோஜ் பாரதி மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்

    இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி மறைவுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான திரு. மனோஜ் பாரதி அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. 

    ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” என்று தெரிவித்துள்ளார்.



  • Mar 25, 2025 21:40 IST

    என்ன சொல்வதென்றே எனக்கு வார்த்தை வரவில்லை - மனோஜ் பாரதி மறைவுக்கு இளையராஜா இரங்கல்

    பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமான நிலையில், மனோஜ் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். என்னுடைய நண்பன் பாரதியின் மகன் மஜோஜ் குமார் மறைநந்த செய்தி கேட்டு அதிர்ந்துபோனேன். என்ன சொல்வதென்றே எனக்கு வார்த்தை வரவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.



  • Mar 25, 2025 20:41 IST

    டெலியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி சென்ற நிலையில், அவர் அங்கே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.



  • Mar 25, 2025 20:26 IST

    இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்

    இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது. 48. தாஜ்மஹால், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.



  • Mar 25, 2025 19:50 IST

    பா.ஜ.க கூட்டணி விவகாரத்தில் மத்திய தலைமை ஏற்பாடு செய்வதே முடிவு - வானதி சீனிவாசன்

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பா.ஜ.க எம்.எல். வானதி சீனிவாசன், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார் என்றால், யாரை சந்திக்கிறார் என்பது கட்டாயம் தெரியவரும். பா.ஜ.க கூட்டணி விவகாரத்தில் மத்திய தலைமை ஏற்பாடு செய்வதே முடிவு; அவர்களின் முடிவை தமிழகத்தில் ஏற்றுக்கொள்வோம்” என்று கூறினார்.



  • Mar 25, 2025 19:40 IST

    இந்தித் திணிப்பு தி.மு.க.வி-னர் நடத்தும் பள்ளியில்தான் - அண்ணாமலை

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “முதல்வர் குடும்பம் உட்பட தி.மு.க.வி-னர் நடத்தும் தனியார் பள்ளிகளில் வழங்கப்பட்ம் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே மும்மொழிக் கொள்கை; தவிர முதல்வர் ஸ்டாலின் கூறுவது போல, இந்தித் திணிப்பு அல்ல. இந்தித் திணிப்பு நடப்பதே தி.மு.க.வி-னர் நடத்தும் பள்ளியில்தான்” என்று விமர்சித்தார்.



  • Mar 25, 2025 19:34 IST

    எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தில் அரசியல் கணக்கு இல்லை - அண்ணாமலை

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தில் அரசியல் கணக்கு இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை. அரசியல் முடிச்சுபோட்டு கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல இயலாது.” என்று கூறினார்.



  • Mar 25, 2025 18:47 IST

    எப்போதும் மோடி தான் பிரதமர் - ஓ.பி.எஸ் 

    எத்தனை முறை தேர்தல் நடந்தாலும் மோடி தான் பிரதமராக வருவார் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் யாராலும் தீர்க்க முடியாத ஜல்லிக்கட்டு பிரச்சனையை, ஒரே நாளில் தீர்த்து வைத்த பெருமை மோடியையே சாரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 



  • Mar 25, 2025 18:27 IST

    தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    தமிழ்நாட்டில் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக பொது ஏலம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றக் கோரி வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் அடுத்த மாதம் 25-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Mar 25, 2025 17:50 IST

    மும்மொழிக் கொள்கை என்பது இந்தி திணிப்பு அல்ல - அண்ணாமலை

    மும்மொழிக் கொள்கை என்பது இந்தி திணிப்பு கிடையாது என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இது பல மொழிகளை கற்கும் வாய்ப்பு என்றும், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 25, 2025 17:47 IST

    வங்கி லாக்கரில் இருந்த நகைகளை காணவில்லை என புகார்

    சென்னை, அண்ணா நகரில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 43 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை என ஊழியர் புகாரளித்துள்ளார். வங்கி மேலாளர் உதவியுடன் திருட்டு நடந்திருப்பதாக, வங்கியில் பணிபுரியும் அசோக் குமார் என்பவர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.



  • Mar 25, 2025 17:10 IST

    மூத்த நிர்வாகிகளுடன் இ.பி.எஸ் ஆலோசனை

    டெல்லியில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, இன்று மாலை டெல்லியில் சில முக்கிய தலைவர்களை அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.



  • Mar 25, 2025 17:00 IST

    ரூ.33 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையங்கள்: அமைச்சர் கே.என் நேரு அறிவிப்பு

    போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக திருக்கழுக்குன்றம், மீஞ்சூர், திமிரி, அரூர், பாலக்கோடு, கெலமங்கலம், பருகூர், தேன்கனிக்கோட்டை, செஞ்சி, சுவாமிமலை, வல்லம், தரங்கம்பாடி, நத்தம், கோட்டையூர், ஆலங்குடி, ஜலகண்டாபுரம், கருப்பூர், வாழப்பாடி, வடுகப்பட்டி (தே), வேலூர் (நா) ஆகிய பேரூராட்சிகளில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படும் என பேரவையில் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.



  • Mar 25, 2025 16:33 IST

    சென்னை மாநகராட்சிக்கான அறிவிப்புகள் 

    சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் ரூ.45 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.  ஏரி குளங்களை சீரமைத்து கொள்ளளவை அதிகரிக்கவும், வெள்ள பாதிப்பை தவிர்க்கவும் ரூ.120 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும். ஓட்டேரி நல்லா கால்வாய் மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்கள் தடுப்புச் சுவர் கொண்டு உயர்த்தவும் குப்பைகள் தேங்காமல் இருக்க பாதுகாப்பு வேலிகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.



  • Mar 25, 2025 16:30 IST

    தமிழ்நாடு காவல்துறையில் உயரதிகாரிகள் பணியிட மாற்றம்

    மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமார் நியமனம், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தி நியமனம். நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு. ஈரோடு எஸ்.பி.யாக சுஜாதா நியமனம். 



  • Mar 25, 2025 16:29 IST

    நிதி நிறுவன மோசடி வழக்கில்,தேவநாதன் யாதவின் சொத்துகளை ஏலம் விடலாமா?

    நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவின் சொத்துகளை ஏலம் விட்டு, அந்தப் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தேவநாதன் யாதவ் தரப்பு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Mar 25, 2025 16:23 IST

    டெல்லி பயணத்தில் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி

    அதிமுக தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமிழக அரசியலில் ஒரு தீர்க்கமான தருணமாக இருக்கக்கூடிய ஒரு நிகழ்விற்காக,டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு,  தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பழனிசாமி மீண்டும் திரும்புவதற்கு வழிவகுக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. 



  • Mar 25, 2025 15:28 IST

    சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை

    தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 1 முதல் சுமார் 40 சுங்கச்சாவடிகளில் அமலுக்குவரும் புதிய கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்.  ஏற்கனவே பாதிப்பில் உள்ள போக்குவரத்துத்துறை மேலும் பாதிப்படைந்து பொதுமக்கள் மீது கூடுதல் பொருளாதாரப் பளுவை ஏற்படுத்தும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



  • Mar 25, 2025 15:26 IST

    சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை அறிவிப்புகள்

    புதிய பேருந்து நிலையங்கள்: கும்பகோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர்,கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர்  
    பேருந்து நிலையங்கள் மேம்பாடு: கடலூர், தஞ்சாவூர், ஆரணி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், காரமடை, கிருஷ்ணகிரி, குடியாத்தம், கொமாரபாளையம், கோவில்பட்டி, திருவாரூர், துறையூர், தேனி, அல்லிநகரம், பட்டுக்கோட்டை, பல்லடம், பொன்னேரி, முசிறி, விருதுநகர்  
    புதிய சந்தைகள்: தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஆத்தூர், திருத்துறைப்பூண்டி, தேவகோட்டை, புஞ்சைப் புளியம்பட்டி, பெரியகுளம், திருவாரூர் 
    சந்தைகள் புதுப்பித்தல்: திருச்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், முசிறி, மேட்டூர், கோபி, வாலாஜாப்பேட்டை , 
    வால்பாறையில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் மற்றும் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும் 
    புதிய நவீன இறைச்சிக்கூடங்கள்: கடலூர், இராமநாதபுரம், காயல்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவத்திபுரம், பரமக்குடி, விழுப்புரம் 
    புதிய நவீன எரிவாயு தகன மேடைகள்: கடலூர், ஓசூர், தூத்துக்குடி, தாம்பரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், உதகை, மறைமலைநகர், பெரம்பலூர், அரியலூர், திருவத்திபுரம் 
    புதிய பாதாள சாக்கடை வசதி: தென்காசி, இராணிப்பேட்டை



  • Mar 25, 2025 15:20 IST

    கலைஞர் கருணாநிதி வழியில் முதலமைச்சர்: கே.என்.நேரு பேச்சு

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழியில், முதலமைச்சர் ஸ்டாலினும் எனக்கு பெரிய இலாகாவை ஒதுக்கியிருக்கிறார். இந்த பிறப்பு அவர்களுக்கான பிறப்பு என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.



  • Mar 25, 2025 14:51 IST

    ஹுஸைனி மறைவு - பவன் கல்யாண் இரங்கல்

    நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி மறைவிற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல். "கராத்தே வீரரும், வில்வித்தை பயிற்சியாளருமான ஹுஸைனி காலமானர் என்ற செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன்" - பவன் கல்யாண்



  • Mar 25, 2025 14:49 IST

    புதுச்சேரில் மேலும் 10,000 பேருக்கு முதியோர் உதவித்தொகை

    புதுச்சேரில் உதவித்தொகைக்கோரி புதிதாக விண்ணப்பித்துள்ள 10,000 முதியவர்களுக்கு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும்! -சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு



  • Mar 25, 2025 14:41 IST

    முக்கிய நபருடன் சந்திப்பா? - இபிஎஸ் பதில்

    டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தை பார்க்க வந்தேன் - முக்கிய நபர்களை சந்திக்கத் திட்டமா என்ற கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் இரு மொழிக் கொள்கை பற்றி பேசுவீர்களா என்ற கேள்விக்கு ஏற்கெனவே பேசியாகிவிட்டது என இபிஎஸ் பதில்



  • Mar 25, 2025 14:37 IST

    தமிழ்நாட்டில் வரும் மே மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல்

    தமிழ்நாட்டில் வரும் மே மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 



  • Mar 25, 2025 14:27 IST

    “இபிஎஸ் யாரை சந்திக்கப் போகிறார் என்ற செய்தி வந்திருக்கிறது”

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது; டெல்லியில் யாரை சந்திக்கப் போகிறார் என்ற செய்தியும் வந்திருக்கிறது; அப்படி சந்திக்கும் நேரத்தில் இருமொழிக் கொள்கை பற்றி இபிஎஸ் வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன் - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • Mar 25, 2025 14:24 IST

    அமித்ஷா ஜிகே வாசன் சந்திப்பு

    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் சந்திப்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருக்கும் சூழலில், அமித்ஷாவை சந்தித்திருக்கிறார் ஜிகே வாசன் 



  • Mar 25, 2025 13:47 IST

    “பாஜக கூட்டணி... மத்திய தலைமை முடிவு செய்யும்"

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார் என்றால், யாரை சந்திக்கிறார் என்பது கட்டாயம் தெரியவரும் பாஜக கூட்டணி விவகாரத்தில் மத்திய தலைமை ஏற்பாடு செய்வதே முடிவு; அவர்களின் முடிவை தமிழகத்தில் ஏற்றுக்கொள்வோம் - இபிஎஸ் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதில்



  • Mar 25, 2025 13:39 IST

    பாலியல் புகார் - மாணவர்கள் போராட்டம்

    சென்னை தரமணியில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை என புகார். அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம். மாணவர்கள், போலீசார் இடையே வாக்குவாதம் - தள்ளுமுள்ளு



  • Mar 25, 2025 13:23 IST

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 28 முதல் 31ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.



  • Mar 25, 2025 13:22 IST

    3 மணிநேரத்தில் பிடிபட்ட செயின் கொள்ளையர்கள்..!

    சென்னையில் இன்று காலை 8 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டு, விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்கள் பிடிபட்டனர். வடமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து கொள்ளையடித்துவிட்டு விமானத்திலேயே ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தனர். சென்னை தனிப்படை போலீசார் தந்த தகவலின்பேரில் விமான நிலையத்தில் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு



  • Mar 25, 2025 13:09 IST

    ஆளுநரை புகழ்ந்த பார்த்திபனுக்கு வன்னி அரசு பதில்

    “தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் ஆளுனருக்கு, தங்களைப் போன்ற புகழ் பெற்ற ஆளுமைகள் பயன்படுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமில்லையா?” “ஆளுநரின் தமிழர் விரோத மற்றும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கை அடுக்கிக்கொண்டே போகலாம்” நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநரை புகழ்ந்தது குறித்து விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சனம்



  • Mar 25, 2025 12:44 IST

    குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் சார்பில் திட்டங்கள்

    குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் சார்பில் திட்டங்கள் - காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம் அரியகவுண்டம்பட்டியில் அடுக்குமாடி வெள்ளி கொலுசு உற்பத்தி வளாகம் ரூ.35.33 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 5 பொது வசதி மையங்கள் ரூ.40.27 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 5 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.



  • Mar 25, 2025 12:29 IST

    இபிஎஸ் யாரை சந்திக்கப் போகிறார் என்ற செய்தி வந்திருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. டெல்லியில் யாரை சந்திக்கப் போகிறார் என்ற செய்தி வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் இருமொழிக் கொள்கை பற்றி இபிஎஸ் வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன் என சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேசியுள்ளார்.



  • Mar 25, 2025 12:06 IST

    சட்டசபையில் மொழி குறித்து பேசிய ஸ்டாலின்

    “நிதி தரவில்லை என இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல. இது பண பிரச்னை அல்ல இன பிரச்னை. இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும். பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம். யார் எந்த மொழியை கற்பதிலும் தடையாக இருப்பதில்லை. தமிழை அழிக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது. 3வது மொழியை அனுமதித்தால், அது நம்மை மென்று தின்றுவிடும் என்று வரலாறு உணர்த்துகிறது” என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.



  • Mar 25, 2025 12:04 IST

    இபிஎஸ்ஸை தொடர்ந்து வேலுமணியும் டெல்லி பயணம்

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து இன்று மாலை டெல்லிக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செல்கிறார்.  



  • Mar 25, 2025 11:34 IST

    சென்னையில் செயின் பறிப்பு- விமான நிலையத்தில் இருவர் கைது

    சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். விமானத்தில் தப்ப முயன்ற வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை விமானத்தில் வைத்தே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரு மணி நேரத்தில் 8க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.



  • Mar 25, 2025 11:24 IST

    அமலாக்கத் துறையை கண்டித்த நீதிபதிகள் விலகல்

    அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் தொடர்ந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு அறிவித்துள்ளது. முன்பு ஆவணம் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நீதிபதிகள் திடீரென்று விலகினர். 



  • Mar 25, 2025 11:14 IST

    "அமெரிக்கர்கள் விரும்பும் ஆவின் நெய்..!" -அமைச்சர் ராஜ கண்ணப்பன்

    விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்ககாரர்கள் ஆவின் நெய்யை தான் விரும்புகிறார்கள். ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.



  • Mar 25, 2025 11:09 IST

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்

    டெல்லியில் திறக்கப்பட்ட அதிமுக புதிய அலுவலகத்தை பார்வையிடச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில் பேரவைக் கூட்டம் நடக்கும் சூழலில் ஈபிஎஸ் டெல்லி சென்றுள்ளார்.



  • Mar 25, 2025 10:11 IST

    கள் இறக்க அனுமதி - முதலமைச்சர் பரிசீலிப்பார்: பொன்முடி

    கள் இறக்க அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் எதிர்காலத்தில் பரிசீலிப்பார் என்று அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார். கள் இறக்க அரசு அனுமதி தருமா? ஆவின் போன்று கள் விற்பனை கூடங்கள் அமைக்கப்படுமா என சட்டப்பேரவையில் ரூபி மனோகரன் கேள்வி எழுப்பியுள்ளார். பதநீர், கள் மீதான வழக்குகளை கள்ளச்சாராயம் காய்ச்சியது போன்ற வழக்குகளாக பதியக்கூடாது. கள் இறக்கினால் அது தொடர்பாக தனியாக வழக்கு பதிய வேண்டும் என்று உறுப்பினர் அசோகன் கோரிக்கை வைத்துள்ளார்.



  • Mar 25, 2025 09:48 IST

    சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

    சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.65,480-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.8,185-க்கு விற்பனையாகிறது.



  • Mar 25, 2025 09:41 IST

    ஜெ. முன்னாள் வளர்ப்பு மகனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன்

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது. தனிப்படை முன்பு வரும் 27ம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.



  • Mar 25, 2025 09:11 IST

    சென்னை: மதுபோதையில் காவலரை தாக்கிய நபர் கைது

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் குடிபோதையில் தலைமைத் காவலரை தாக்கி அவரது செல்போனை பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.



  • Mar 25, 2025 08:39 IST

    சென்னை: ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவம்-அதிர்ச்சி

    சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இன்று காலை 6 முதல் 7 மணி வரை திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மர்மநபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 15 சவரனுக்கு மேல் நகை பறிப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



  • Mar 25, 2025 08:32 IST

    சென்னை: ஹெராயின் விற்பனை - 2 பேர் கைது

    சென்னை அபிராமபுரத்தில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  5 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.



  • Mar 25, 2025 08:26 IST

    மன்னிப்பு கேட்க மாட்டேன் - ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா 

    ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்த விவகாரத்தில், மன்னிப்பு கேட்க மாட்டேன் என ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நீதி மற்றும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தர தயார் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.



  • Mar 25, 2025 08:20 IST

    நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

    நியூசிலாந்தின் தென்மேற்கு பகுதியில் 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிவர்டன் நகரில் இருந்து தென்மேற்கே 170 கி.மீ. தொலைவில் கடலுக்கு நடுவே மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.



Tamilnadu News Update Tamilnadu News Latest tamilnadu news

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: