Chennai News highlights: தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

Tamil Nadu Latest Live News Update in Tamil 4 July 2025: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest Live News Update in Tamil 4 July 2025: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu secretariat

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சிஎன்ஜி ஒரு கிலோ ரூ.91.50 காசுகளுக்கு விற்பனையாகிறது.

  • Jul 04, 2025 22:28 IST

    தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

    தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிறுபான்மையினர் நலத்துறையின் சிறப்பு செயலாளரான கலையரசிக்கு, சீர்மரபினர் நலத்துறையின் ஆணையாராக பதவி வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த ஜான் லூயிஸ், நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.



  • Jul 04, 2025 20:47 IST

    குற்றச்சாட்டுகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் மறுப்பு

    இழப்பீடு தொகை தொடர்பாக ஏர் இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, "அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு தருவதை தட்டிக் கழிக்க ஏர் இந்தியா நிறுவனம் முயல்வதாக வெளியான செய்திகள் உண்மை கிடையாது. உயிரிழந்தவர்கள் குறித்த மிகவும் சாதாரண தரவுகளையே, உறவினர்களிடம் கேட்டுள்ளோம். எந்த தரவுகளும் இல்லாமல் இழப்பீடு தொகையை வழங்குவது சாத்தியம் இல்லை. எனவே, எளிதாக மின்னஞ்சல் மூலமாகவும் உறவினர்கள் பதிலளிக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Jul 04, 2025 20:22 IST

    தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த விஜய்க்கு வாழ்த்துகள் - கனிமொழி

    த.வெ.க-வின் தேர்தல் நிலைப்பாடு குறித்து கனிமொழி எம்.பி தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதன்படி, "தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்திருக்கும் த.வெ.க தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள். த.வெ.க தனித்து போட்டியிடுவதால் தி.மு.க-விற்கு சவால் இல்லை. அ.தி.மு.க - த.வெ.கவுக்கு இடையே சவாலாக இருக்கலாம். தி.மு.க மீதும், முதல்வர் மீதும் மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jul 04, 2025 20:12 IST

    நடிகை கௌதமியிடம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு

    நடிகை கௌதமியிடம் நடைபெற்ற அமலாக்கத்துறையின் விசாரணை, ஏறத்தாழ 9 மணி நேரத்திற்கு பின்னர் நிறைவு பெற்றது. அதன்படி, தன்னுடைய சொத்துகளை தொழிலதிபர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அபகரித்து, சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வெளிநாட்டு முதலீடு செய்ததாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த விசாரணை நடைபெற்றது. அந்த வகையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளை அடிப்படையாக கொண்டு விசாரணை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சாட்சியங்களின் அடிப்படையில் நடிகை கௌதமியிடம் காலை 10 மணி முதல் நடந்த விசாரணை நிறைவு பெற்றது.



  • Jul 04, 2025 19:36 IST

    சிறுமிக்கு பாலியல் தொல்லை - உ.பி காவலர்கள் மீது புகார்

    தமிழ்நாட்டில் இருந்து மீட்கப்பட்டு உத்தர பிரதேசம் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமிக்கு, பரைலி காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ரயில் பயணத்தின் போது துணை ஆய்வாளரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இந்நிலையில், உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தர பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.



  • Jul 04, 2025 19:01 IST

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 193 புள்ளிகள் உயர்வு

    பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 193 புள்ளிகள் உயர்ந்து 83,433 புள்ளிகளானது. தொடங்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச் சந்தை உயர்ந்து முடிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 30 நிறுவனங்களில் 20 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகம். தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 56 புள்ளிகள் அதிகரித்து 25,461 புள்ளிகளில் நிறைவடைந்தது.

     



  • Jul 04, 2025 18:32 IST

    ரைஸ் மில்லில் பயங்கர தீ விபத்து

    குஜராத், கெடாநகரில் உள்ள ரைஸ்மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதில் இருந்து வெளியேறும் கரும்புகையால் மக்கள் அவதியுற்றுள்ளனர். 5 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

     



  • Jul 04, 2025 18:24 IST

    ஈட்டிய விடுப்பு சரண் அக்.1 முதல் நடைமுறை - தமிழக அரசு அறிவிப்பு 

    தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் 2025 அக்டோபர் 1 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது என்றும், அறிவிப்பை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

     



  • Jul 04, 2025 18:12 IST

    பாகிஸ்தானுக்கு 81% ராணுவ தளவாடங்களை வழங்கியது சீனா - லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங் 

    ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதன் விளைவாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ விரிவாக்கத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் இராணுவம் பெறும் இராணுவ வன்பொருளில் 81 சதவீதம் சீவைச் சேர்ந்தவை என்று ராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங் தெரிவித்துள்ளார். 

    "‘ஆபரேஷன் சிந்தூர்’ விஷயத்தில் நான் சில பாடங்களை சுட்டிக் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். முதலாவதாக, ஒரு எல்லை, இரண்டு எதிரிகள். பாகிஸ்தான் அதில் முன்னணி முகமாக இருந்தது. சீனா எங்களுக்கு அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்கியது. மேலும் இது ஆச்சரியமல்ல, ஏனென்றால் நீங்கள் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில், பாகிஸ்தான் பெறும் ராணுவ தளவாடங்களில் 81 சதவீதம் அனைத்தும் சீனாவில் இருந்து வந்தவை. எனவே, இது ஆச்சரியமல்ல. சீனா அங்குள்ள பல்வேறு ஆயுத அமைப்புகளுக்கு எதிராக தனது ஆயுதங்களை சோதிக்க முடியும் என்பதைக் கண்டிருக்கலாம். இது அதற்குக் கிடைக்கும் ஒரு நேரடி ஆய்வகம் போன்றது.” என்று அவர் கூறியுள்ளார். 



  • Jul 04, 2025 17:59 IST

    மணிப்பூரில் குவியல் குவியலாக ஆயுதங்கள் பறிமுதல்

    மணிப்பூரில் நடந்த அதிரடி தேடுதல் வேட்டையில் குவியல் குவியலாக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரேநாள் தேடுதல் வேட்டையில் 203 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், வெடிப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.



  • Jul 04, 2025 17:42 IST

    ரேபிஸ் சிகிச்சை வழிகாட்டுதலை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது

    நாய் கடித்த இடத்தை முறையாக கழுவாமல் இருப்பது, தாமதமாக சிகிச்சைக்கு வருவது, தடுப்பூசி கால அட்டவணையை மீறுவது ஆகியவை உயிருக்கே ஆபத்தாக மாறும்” கேரளாவில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியும் இரு சிறார்கள் உயிரிழப்பை அடுத்து, ரேபிஸ் சிகிச்சை வழிகாட்டுதலை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.



  • Jul 04, 2025 17:01 IST

    ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நமது இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நமது இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலக்கை அடைவதற்கான அடித்தளம் அமைத்து, வளர்ச்சி பாதையில் வீறுநடை போடுகிறோம். தமிழக வளர்ச்சியில் பெரும்பங்காற்றவுள்ள கோவை மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட்டுள்ளோம். அனைத்துப் பகுதிகளுக்குமான பரவலான சீரான வளர்ச்சி திட்டமே தமிழ்நாடு உயர அடித்தளம் எனவும் தெரிவித்தார்.



  • Jul 04, 2025 17:01 IST

    வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க டெண்டர்

    வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் வெளியிட்டது.வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 04, 2025 16:09 IST

    அன்புமணி தரப்பும், ராமதாஸ் தரப்பும் சட்டப்பேரவை செயலாளரிடம் அடுத்தடுத்து கடிதம்!

    பாமக கொறடா பொறுப்பில் எம்.எல்.ஏ. அருள் தொடர்ந்து நீடிப்பார் என சட்டப்பேரவை செயலாளருக்கு ராமதாஸ் தரப்பு கடிதம் கொடுத்துள்ளனர். அருளுக்கு பதிலாக மயிலம் சிவக்குமாரை கொறாடாவாக அங்கீகரிக்க அன்புமணி தரப்பு இன்று மனு அளித்திருந்தனர்.



  • Jul 04, 2025 15:59 IST

    பா.ம.க. கட்சியின் கொரடாவாக நானே தொடர்வேன்: எம்.ஏல்.ஏ அருள் உறுதி

    பா.ம.க. கட்சியின் கொரடாவாக நானே தொடர்வேன் என எம்.எல்.ஏ அருள் உறுதியாக கூறியுள்ளார். மயிலம் சிவக்குமாரை கட்சியின் கொரடாவாக நியமிக்க, அன்புமணி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்த நிலையில், ராமதாஸ் ஆதரவு பெற்ற அருள் தற்போது கடிதம் கொடுத்துள்ளார்.



  • Jul 04, 2025 15:22 IST

    த.வெ.க கூட்டணி எப்போதும் திமுக, பாஜகவுக்கு எதிராகவே இருக்கும்: விஜய்

    மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மத ரீதியாக பிரித்து குளிர்காய நினைக்கிறது பாஜக. கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. திமுக பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார்.



  • Jul 04, 2025 15:00 IST

    கூடி குழைந்து கூட்டணிக்கு போக தி.மு.கவோ, அ.தி.மு.க-வோ இல்லை - விஜய் பேச்சு

    தந்தை பெரியாரை அவமதித்தோ அல்லது அறிஞர் அண்ணாவை, அவதூறுக்கு உள்ளாக்கியோ, தமிழ்நாட்டின் மதிப்பிற்குரிய தலைவர்களை அவமதித்தோ அரசியல் செய்ய நினைத்தால், அதில் பா.ஜ.க ஒருபோதும் வெற்றிபெற இயலாது. சுயநல அரசியல் லாபத்திற்காக, கூடி குழைந்து கூட்டணிக்கு போக நாம் திமுக, அதிமுகவோ இல்லை, நாம் தமிழக வெற்றிக் கழகம் என விஜய் கூறியுள்ளார். 



  • Jul 04, 2025 14:56 IST

    விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன் த.வெ.க மாநில மாநாடு

    த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு முன் த.வெ.க மாநில மாநாட்டை நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு. ஆகஸ்ட் 3ம் வாரத்தில் விஜய் சுற்றுப்பயணம் துவக்கம் அதற்கு முன் மாநாட்டை நடத்தத் திட்டம்



  • Jul 04, 2025 14:34 IST

    பா.ஜ.க.வின் அரசின் செயலை த.வெ.க ஏற்றுக் கொள்ளாது: செயற்குழுவில் தீர்மானம்

    இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பாஜகவின் அரசின் செயலை தவெக ஏற்றுக் கொள்ளாது - தவெக செயற்குழுவில் தீர்மானம்.  கீழடி விவகாரத்தில் தமிழர்களின் உண்மையை மறைக்கும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



  • Jul 04, 2025 13:41 IST

    த.வெ.க தலைவர் விஜய் செப்டம்பரில் சுற்றுப்பயணம் - என். ஆனந்த் அறிவிப்பு

    ஆகஸ்ட்டில் த.வெ.க மாநில மாநாடு நடைபெறும். தேர்தலையொட்டி, செப்டம்பரில் விஜய் சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார் என த.வெ.க பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.



  • Jul 04, 2025 13:26 IST

    நடிகை கௌதமி இ.டி. அலுவலகத்தில் ஆஜர்

    நடிகை கௌதமி தனது சொத்துக்களை அழகப்பன் என்பவர் மோசடி செய்து அபகரித்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் அழகப்பன் ஏற்கெனவே கைது செய்ப்பட்டார். இந்த நிலையில், நடிகை கௌதமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இ.டி. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். 



  • Jul 04, 2025 13:12 IST

    வீட்டிற்கு ஒருவரை த.வெ.க-வில் சேர்க்க வேண்டும் - தொனண்ர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

    த.வெ.க செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், “வீட்டிற்கு ஒருவரை த.வெ.க-வில் சேர்க்க வேண்டும், ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பேர் நிர்வாகியாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.



  • Jul 04, 2025 13:12 IST

    தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய வேண்டும் - த.வெ.க செயற்குழுவில் என்.ஆனந்த் பேச்சு

    த.வெ.க செயற்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், த.வெ.க தலைவர் விஜயை, தமிழக மக்கள் தமிழ்நாட்டின் மாற்று சக்தியாகவும், நம்பிக்கையாகவும் பார்க்கின்றனர்; எதிர்பார்ப்பை நாம் பூர்த்திசெய்ய வேண்டும்  என கூறினார்.



  • Jul 04, 2025 13:06 IST

    கிராமந்தோறும் கொள்கை விளக்க கூட்டம்; த.வெ.க செயற்குழுவில் தீர்மானம்

    த.வெ.க-வின் 120 மாவட்டங்கள், 12,500 கிராமப் புறங்களில் த.வெ.க-வின் கொள்கை விளக்க கூட்டங்களை நடத்த த.வெ.க செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



  • Jul 04, 2025 12:38 IST

    ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை வைக்க அனுமதி - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

    பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவருடைய முழு உருவ சிலை வைக்க திருவள்ளூர் ஆட்சியர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து, திருமதி ஆம்ஸ்ட்ராங் வழக்கை வாபஸ் பெற்றார்.



  • Jul 04, 2025 12:23 IST

    விஜய் தலைமையில் கூடியது த.வெ.க செயற்குழு

    ஜய் தலைமையில் த.வெ.க மாநில செயற்குழு கூடியது. த.வெ.க செயற்குழுவுக்கு வந்த தாய் ஷோபாவை நடிகர் விஜய் அன்போடு அரவணைத்தார். 



  • Jul 04, 2025 12:15 IST

    துணைவேந்தர் நியமனம்: 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசு, ஆளுநர் அலுவலகத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    துணைவேந்தர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம், யு.ஜி.சி. 4 வாரங்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தங்களை நிறுத்தி வைத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • Jul 04, 2025 11:50 IST

    பா.ம.க சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி மனு

    பா.ம.க சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் 3 பா.ம.க எம்எல்ஏக்கள் மனு அளித்தனர்



  • Jul 04, 2025 11:19 IST

    த.வெ.க. தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

    சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க.  தொடர்ந்த வழக்கை  அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கள் கிழமை விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது



  • Jul 04, 2025 11:06 IST

    பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு

    சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர்களை தாக்கிய சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யுனானி மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்தில் பயணம் செய்தபோது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. தட்டிக் கேட்ட யுனானி மருத்துவக் கல்லூரி மாணவர்களை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியுள்ளனர். புகாரின் பேரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்



  • Jul 04, 2025 10:42 IST

    சென்னையில் போராட்டத்திற்கு அனுமதி கோரி த.வெ.க. மனு

    திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வலியுறுத்தி சென்னையில் வரும் 6ஆம் தேதி த.வெ.க. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை 2 முறை அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் த.வெ.க சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது



  • Jul 04, 2025 10:06 IST

    சென்னை கமலா திரையரங்கிற்கு வந்த நடிகர் சரத்குமார்

    Video: Sun News



  • Jul 04, 2025 09:43 IST

    இந்தியாவுக்கு 500% வரி: அமெரிக்காவில் புதிய மசோதா

    ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி விதிக்க அமெரிக்கா முடிவு

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்



  • Jul 04, 2025 08:44 IST

    தக்காளி விலை உயர்வு

    சென்னை கோயேம்பேடு காய்கறி சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.10 உயர்ந்து ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • Jul 04, 2025 08:31 IST

    நடிகர் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருள் சப்ளை: மேலும் 2 பேர் கைது

    நடிகர் கிருஷ்ணாவுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட கெவின் கூட்டாளிகள் அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகியோரை கைது செய்து அரும்பாக்கம் போலீசார் நடவடிக்கை



  • Jul 04, 2025 08:08 IST

    விபத்து காப்பீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

    அதிவேகமாகவும், பொறுப்பற்ற முறையிலும் வாகனம் ஓட்டி மரணிப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவது காப்பீடு நிறுவனங்களின் வேலை அல்ல- உச்சநீதிமன்றம் உத்தரவு



  • Jul 04, 2025 08:05 IST

    கோவை கோவிலில் பிரசன்னா, சினேகா தம்பதி

    Video: Sun News 



  • Jul 04, 2025 07:46 IST

    விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை: கணவர் ஸ்டீபன்ராஜ் சரண்

    திருவள்ளூர், திருநின்றவூரில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி பெண் கவுன்சிலர் கோமதியை, வெட்டி கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரண்



  • Jul 04, 2025 07:38 IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - தொடர்ந்து 10வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.



  • Jul 04, 2025 07:38 IST

    Qualifier 2 - சேப்பாக் Vs திண்டுக்கல்

    TNPL டி20 கிரிக்கெட் தொடரின் 2வது குவாலிஃபயர் போட்டியில் இன்று  சேப்பாக் மற்றும் திண்டுக்கல் மோதல்

    வெல்லும் அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு



  • Jul 04, 2025 07:38 IST

    4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை

    நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    - வானிலை மையம்



  • Jul 04, 2025 07:34 IST

    ஓரணியில் தமிழ்நாடு: பொதுமக்களுடன் வீடியோ காலில் பேசிய மு.க.ஸ்டாலின்

    Video: Sun News



  • Jul 04, 2025 07:33 IST

    நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

    போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு போதைப்பொருள் நீதிமன்றம் உத்தரவு. 2 பேருக்கும் ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனுக்கள் தள்ளுபடி



  • Jul 04, 2025 07:33 IST

    விஜய் தலைமையில் இன்று த.வெ.க. செயற்குழு கூட்டம்

    விஜய் தலைமையில் இன்று த.வெ.க செயற்குழு கூட்டம்; பனையூர் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: