பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.
இன்று முதல் பொங்கல் பரிசு டோக்கன்
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.
-
Jan 03, 2025 22:48 ISTஇந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதி தேவை - மத்திய அரசு
இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதி பெற வேண்டும். இதை வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும். கருத்து கேட்புக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. -
Jan 03, 2025 21:18 ISTஅண்ணாமலை நம்புகிற ஆண்டவரே வந்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது - கே.பாலகிருஷ்ணன் காட்டம்
விழுப்புரத்தில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தில் தாமரை மலரப்போகிறது என்று தமிழிசை கூறி வந்தார். ஆனால், தாமரை மலரவில்லை, கருகிப்போய் உள்ளது; அண்ணாமலை நம்புகிற ஆண்டவரே வந்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது” ன்று காட்டமாகப் பேசினார்.
-
Jan 03, 2025 21:08 ISTதுரைமுருகன் வீட்டில் சோதனை: கடப்பாரை, சுத்தியல், உளியை எடுத்து வரச்சொன்ன இ.டி அதிகாரிகள்
காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊழியர் ஒருவரிடம் கடப்பாரை, சுத்தி, உளி போன்றவற்றை எடுத்து வரச் சொன்னதன் பேரில், ஊழியர் ஒருவர் கடப்பாரை, சுத்தி, உளி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
-
Jan 03, 2025 21:02 ISTதமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனம் செய்துவிட்டீர்களா? கே.பாலகிருஷ்ணன் கேள்வி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனம் செய்துவிட்டீர்களா? தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? விவசாயிகள் தொழிலாளர்களுக்கு எதிராக தி.மு.க அரசு செயல்பட்டால் போராடுவோம்” என்று கூறினார்.
-
Jan 03, 2025 20:50 ISTவிக்கிரவாண்டி தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை மரணம்; ரூ.3 லட்சம் நிவாரணம் - ஸ்டாலின் அறிவிப்பு
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Jan 03, 2025 20:02 ISTஇந்தியாவில் ஹெச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பு இல்லை - பொது சுகாதார இயக்குநரகம்
இந்தியாவில் இதுவரை ஹெச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை. சாதாரண சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் ஹெச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பு இல்லை. வைரஸ் பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டாம் என்று பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளார்.
-
Jan 03, 2025 19:41 ISTவிக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் குழந்தை உயிரிழப்பு - அறிக்கை தர உத்தரவு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரம் குறித்து, அறிக்கை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகள் இயக்குனர் முத்து பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
Jan 03, 2025 19:37 ISTவிக்கிரவாண்டியில் குழந்தையின் இறப்பிற்கு பள்ளியே முழு பொறுப்பு - செல்வப்பெருந்தகை
விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமை. குழந்தையின் இறப்பிற்கு பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறினார்.
-
Jan 03, 2025 18:31 IST30 கிலோ தங்கம் கொள்ளை
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் உள்ள மணப்புரம் கோல்டு நிறுவனத்தில் 30 கிலோ தங்கம், ரூ.4 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மணப்புரம் நிறுவனம் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மணப்புரம் கோல்டு நிறுவனத்தின் 3 ஊழியர்கள், மேலாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு லாக்கர் பாஸ்வேர்டை பெற்று கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளை நடைபெறும்போது மணப்புரம் கோல்டு நிறுவனத்துக்கு வெளியே கொள்ளையர்களின் கூட்டாளிகள் காவலுக்கு நின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், மணப்புரம் கோல்டு நிறுவன ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
Jan 03, 2025 18:05 ISTநடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் - ஐதராபாத் கோர்ட் உத்தரவு
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்தவும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டின்போது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் கிடைத்தது.
-
Jan 03, 2025 18:03 IST‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் பாடல் வெளியீடு
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ‘It's a break up da’ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Upcoming song from #KadhalikkaNeramillai, releasing tomorrow at 6 PM. #StayTuned
— A.R.Rahman (@arrahman) January 3, 2025
Movie Releasing on this Pongal, January 14th, 2025! 🕊️@actor_jayamravi @MenenNithya @astrokiru @RedGiantMovies_ @tseriessouth @MashookRahman @shobimaster @iYogiBabu @VinayRai1809 @LalDirector… pic.twitter.com/VPnxq5MCZO -
Jan 03, 2025 18:01 ISTட்ரெண்டிங் பட போஸ்டர் வெளியீடு
அறிமுக இயக்குநர் சிவராஜ் நாகராஜ் இயக்கத்தில் கலையரசன், பிரியாலயா உள்ளிட்டோர் நடிப்பில் சாம் சி.எஸ். இசையில் உருவாகவுள்ள ட்ரெண்டிங் (TRENDING) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.
Launching the first look of #TRENDING Best wishes to the team!
— VijaySethupathi (@VijaySethuOffl) January 3, 2025
Directed by: @ShivarajNagaraj
PRODUCED BY: @RAMFILMFACTORY@SamCSmusic@srikanth_R@KalaiActor@Priyalaya_ubd@premkumaractor@MADURADIRECTOR pic.twitter.com/cjleK74xXI -
Jan 03, 2025 17:27 ISTமாரத்தான் ஓட்டம் - அதிகாலையில் சிறப்பு ரயில் சேவைகள்: சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வருகின்ற 05.01.2025 சிறப்பு மெட்ரோ ரயில் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், “சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Fresh Works Chennai Marathon உடன் இணைந்து, அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயணத்தை வழங்குவதற்காக, மெட்ரோ இரயில் சேவைகள், வருகின்ற 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும்.
மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் QR குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். வாகன நிறுத்துமிடத்தில் இந்த QR / Bib குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
-
Jan 03, 2025 16:47 ISTதமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப் பயணம்
மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள, த.வெ.க தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Jan 03, 2025 15:35 ISTதாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 4,5,10,11,12,13,17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 3:30 மணிக்கு, ஜன் சதாப்தி அதி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் 4,5,10,11,12,13,17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து மாலை 5:35 மணிக்கு இயக்கப்படுகிறது.
-
Jan 03, 2025 14:52 IST40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ரூ100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
-
Jan 03, 2025 13:41 ISTதீக்குளித்த நபர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த நபர் 70% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
Jan 03, 2025 13:29 ISTஆளுநர் ஆர்.என்.ரவி உடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு
2025-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 6ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் சபாநாயகர் அப்பாவு சந்தித்து பேசியுள்ளார்.
-
Jan 03, 2025 13:26 ISTவேலூரில் இ.டி. ரெய்டு: பூஞ்சோலை சீனிவாசன் இல்லத்தில் டிராவல் பேக் கைப்பற்றிய அதிகாரிகள்
வேலூரில், தி,மு.க எம்.பி கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், காட்பாடியில் தி.மு.க பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து ஒரு டிராவல் பேக்கை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
-
Jan 03, 2025 12:42 ISTஆளுநரைச் சந்தித்து பேரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் சபாநாயகர்
ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேரவை கூட்டத்துக்கு சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார்
-
Jan 03, 2025 12:38 ISTதுரைமுருகன் இல்லத்தில் இ.டி ரெய்டு; தலைமை செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் வேலூர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னையில் தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Jan 03, 2025 12:17 ISTவேலூர் இல்லத்தில் இ.டி ரெய்டு; ஸ்டாலினுடன் துரைமுருகன் சந்திப்பு
அமைச்சர் துரைமுருகனின் வேலூர் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்
-
Jan 03, 2025 12:00 ISTவேலுநாச்சியார் பிறந்த நாள் - பிரதமர் மோடி புகழஞ்சலி
வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தினார். துணிச்சல் மிக்க ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வோம். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீரப் போராட்டத்தை நடத்தியவர் வேலுநாச்சியார். ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்கவும், சுதந்திரத்திற்காகப் போராடவும் தலைமுறைகளைத் தூண்டியவர் என மோடி தெரிவித்துள்ளார்
-
Jan 03, 2025 11:26 ISTவழக்கறிஞருடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை
காட்பாடியில் திமுக எம்.பி கதிர்ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் வழக்கறிஞரை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம், வீட்டில் யாரும் இல்லை. சோதனைக்கு எந்த துறை வந்துள்ளார்கள் என தெரியவில்லை. இந்த சோதனை தொடர்பாக உங்களுக்கு எந்த அளவு தெரியுமோ அதே அளவுதான் எனக்கும் தெரியும். வந்திருக்கிற அதிகாரிகள் யார் என்று வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு தெரியவில்லை. காட்பாடி சென்ற பிறகு தான் சோதனை குறித்து தெரியவரும் என்று துரைமுருகன் கூறினார்
-
Jan 03, 2025 11:00 ISTவேலு நாச்சியார் படத்திற்கு விஜய் மரியாதை
வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வேலு நாச்சியார் படத்திற்கு மலர் தூவி தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம் என விஜய் X பதிவிட்டுள்ளார்.
-
Jan 03, 2025 10:54 ISTஅமலாக்கத்துறை சோதனை - சென்னையில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
”யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை. வீட்டில் யாரும் இல்லை. தெரிந்த பிறகு கருத்து சொல்கிறேன். சோதனை தொடர்பாக உங்களுக்கு எந்த அளவு தெரியுமோ, அதே அளவுதான் எனக்கும் தெரியும்” என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
-
Jan 03, 2025 10:32 ISTசுயவிளம்பரத்திற்காக நாள்தோறும் போராட்டம் - சேகர்பாபு பேச்சு
சுயவிளம்பரத்திற்காக நாள்தோறும் போராட்டங்களை நடத்துகின்றனர். போராட்டங்களால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எந்த அடக்குமுறையும் செய்யப்படுவதில்லை என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
-
Jan 03, 2025 09:56 ISTபொங்கல் பரிசு - வீடுவீடாக டோக்கன் விநியோகம்
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது.
டோக்கனில் பரிசு தொகுப்பை பெறும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன
ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகித்து வருகின்றனர்.
-
Jan 03, 2025 09:47 ISTவேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் இ.டி சோதனை
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. -
Jan 03, 2025 09:10 ISTமுருங்கைக்காய் விலை மீண்டும் அதிகரிப்பு.
மழை, பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவால் சென்னையில் முருங்கைக்காய் விலை மீண்டும் அதிகரிப்பு. இன்று ஒரே நாளில் ₹30 உயர்வு. சில்லரை விற்பனை கடைகளில், கிலோ ₹140 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் கிலோ ₹400 வரை விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் படிப்படியாக விலை குறைந்து கடந்த 2 வாரங்களாக கிலோ ₹100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
-
Jan 03, 2025 08:01 ISTசவுமியா அன்புமணி மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமையை கண்டித்து சென்னையில் பாமக மகளிர் அணியினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதில் சவுமியா அன்புமணி உள்ளிட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சவுமியா அன்புமணி உள்ளிட்ட 297 பேர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.