பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03 காசுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.61 காசுக்கும் விற்பனையாகிறது.
2024 மிகவும் வெப்பமான ஆண்டு
இந்தியாவில் 1901-ல் தொடங்கி தற்போது வரையில் உள்ள காலகட்டத்தில் 2024ம் ஆண்டை மிக வெப்பமான ஆண்டாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததுள்ளது.
-
Jan 03, 2025 05:10 ISTசென்னை ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் உடன் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் சந்திப்பு.
காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், சென்னை ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்-கை சந்தித்து, “திருவள்ளூர் தொகுதியில் ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார்.
திருவள்ளூரில் புதிய கோச்சிங் டெர்மினல் நிறுவ வேண்டும்.
கும்மிடிப்பூண்டி-சென்னை மத்திய புறநகர்ப் பிரிவை மேம்படுத்த வேண்டும்.
வேகமான லூப் லைன்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
முக்கிய அதிவேக விரைவு ரயில்களுக்கான நிறுத்தங்களை திருவள்ளூரில் ஏற்படுத்த வேண்டும்.
பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் அனைத்தையும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும்.
திருவள்ளூரில் சில ரயில் நிலையங்களில் மேற்கூரைகள் அமைக்க வேண்டும்.
திருவள்ளூர் முழுவதும் பெரும் பிரச்னையாக உள்ள இருப்புப்பாதை சந்திக் கடவு, சுரங்க பாதை கட்டமைக்க மற்றும் சீரமைக்க வேலைகளை தீவிரப்படுத்த வேண்டும்.” ஆகிய கோரிக்கைகளி முன்வைத்தார்.
-
Jan 03, 2025 05:04 ISTதமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம்
பா.ஜ.க மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பா.ஜ.க தலைமை அறிவித்துள்ளது. தமிழக பா.ஜ.க-வின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Jan 02, 2025 21:53 ISTஅண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை: பேரவையில் கேள்வி எழுப்புவேன் - வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்: அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யபப்ட்ட சம்பவம் தொடர்பாக தொடர்பாக சட்டப் பேரவையில் மக்கள் குரலாக கேள்வி எழுப்புவேன் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த அத்தனை பிரச்னைகள் குறித்தும் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவேன் என்று கூறினார்.
-
Jan 02, 2025 21:49 ISTஎதிர்க்கட்சிகளைப் போராட விடாமல் அரசு வன்முறைகளை ஏவிவிடுவது ஜனநாயகத் துரோகம் - சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “நியாயமான கோரிக்கைகளுக்காக அறவழியில் போராடுவதற்கே அரசு அனுமதி மறுக்கிறது. போராட்டம் செய்த சவுமியிஆ அன்புமணியை கைது செய்த கொடுங்கோல் போக்கு கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகளை போராட விடாமல், அரசு வன்முறைகளை ஏவிவிடுவது ஜனநாயகத் துரோகம்” என்று கூறினார்.
-
Jan 02, 2025 20:34 ISTஎண்ணி ஏமாற வேண்டாம் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு
அமைச்சர் ரகுபதி: “தனது கட்டுப்பாட்டில் இருந்து அ.தி.மு.க் கைநழுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து மட்டமான அரசியலை செய்து வருகிறார். இ.பி.எஸ் ஆட்சியில் குற்றவாளிகளுக்கெல்லாம் கட்சியிலேயே அடைக்கலம் கொடுத்து, புகார் அளித்த பெண்களையே மிரட்டும் கொடுமைகள் எல்லாம் அரங்கேறின; இன்றும் அப்படி தொடரும் என எண்ணி ஏமார வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
-
Jan 02, 2025 19:52 ISTஜனவரி 13 முதல் 5 நாட்கள் 'சென்னை சங்கமம்' தொடக்கம்
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சி வரும் ஜனவரி 13-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 13 முதல் ஜனவரி 17 வரை நடக்க உள்ள கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 2025-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு நடக்கும் விழா சென்னையில் 18 இடங்களில் நடைபெறும்; விழா நடக்கும் பாரம்பரிய உணவுத் திருவிழாவும் நடக்க உள்ளது.
-
Jan 02, 2025 19:18 ISTவாங்குகிற கடனை என்னதான் செய்கிறீர்கள்? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “கடந்த ஆண்டு ரூ.90,000 கோடி கடன்; இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறீர்கள். வாங்குகிற கடனை என்னதான் செய்கிறீர்கள்? இவ்வளவு கடன் வாங்கியும் பொங்கலுக்கு ரூ.1,000 கொடுக்க முடியவில்லை என்ன அரசு நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Jan 02, 2025 18:12 ISTஉலகம் மோசமான நிலையில் உள்ளது - ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி: “உலகம் மோசமான நிலையில் இருக்கிறது. உலகத்தை அழிப்பதற்கான ஆயுதங்கள் தற்போது பல நபர்களிடம் உள்ளது. காலநிலை மாற்றம், பூமியில் அதிக வெப்பம் ஆகியவை மிகபெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. நிலையற்ற இண்த உலகம் எதை நோக்கி நகர்கிறது” என்று பேசியுள்ளார்.
-
Jan 02, 2025 18:10 ISTதிருச்சி மாநகராட்சியுடன் 22 கிராம ஊராட்சிகள் இணைப்பு
திருச்சி மாநகராட்சியுடன் திருச்சியில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் எதுவும் இணைக்கப்படவில்லை. அதேசமயம், 22 கிராம ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை சார்பில் அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை எண் 202 (31.12.2024) வெளியீட்டுள்ளார்.
அதன்படி, மல்லியம்பத்து, கம்பரசம்பேட்டை, மருதாண்டாகுறிச்சி, முத்தரசநல்லூர், அதவத்தூர், அல்லித்துறை, கே.கள்ளிக்குடி, குமரவயலூர், நாச்சிக்குறிச்சி (சோழங்கநல்லூர்), புங்கனூர், சோமரசம்பேட்டை, குண்டூர், கீழக்குறிச்சி, கும்பக்குடி (பகுதி), நவல்பட்டு (பகுதி), அப்பாதுரை, தாளக்குடி, வாளாடி, நெருஞ்சலக்குடி, கூத்தூர், மாதவ பெருமாள் கோவில், பிச்சாண்டார் கோவில் ஆகிய 22 கிராம ஊராட்சிகளும் அடங்கும்.
செய்தி: க.சண்முகவடிவேல்
-
Jan 02, 2025 17:42 ISTசாதி ரீதியிலான பாகுபாடு உள்துறை அமைச்சகம் உத்தரவு
சிறைகளில் கைதிகள் இடையே சாதி ரீதியிலான பாகுபாடு தொடர்பான விதிகளில் மாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கைதிகள் சாதி ரீதியிலாக வகைப்பாடு செய்யப்படுவது இல்லை என்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். சாதி அடிப்படையில் சிறையில், கைதிகளுக்கு வேலை வழங்கக் கூடாது. சிறையில் கழிவறை, கழிவு நீர் ஓடை ஆகியவற்றை சுத்தம் செய்ய கைதிகளை அனுமதிக்கக் கூடாது என சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
-
Jan 02, 2025 17:21 ISTதொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஞானசேகரன் - காவல்துறை தகவல்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர் குற்றங்களில்
ஈடுபட்டு வந்ததை காவல்துறையும் உறுதி செய்தது. பள்ளிக்கரணை, அமைந்தகரை பகுதிகளில் ஞானசேகரன் இரவில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்தது அம்பலமாகியுள்ளது.பல்வேறு சிசிடிவி காட்சிகளை வைத்து ஞானசேகரனை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். ஞானசேகரனை கைது செய்ய நெருங்கிய போது, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 02, 2025 17:19 ISTஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து
ஜிம்பாப்வேயில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான சட்டமசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதான, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு மனதாக நிறைவேறியது. இதையடுத்து, மரண தண்டனை ரத்து செய்யும் சட்டமசோதாவுக்கு அதிபர் எம்மர்சன் மனங்காக்வா ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் தற்போது 60 கைதிகள் மரண தண்டனையில் உள்ளனர். புதிய சட்டத்தை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
Jan 02, 2025 17:12 ISTநன்றி தலைவா - சமுத்திரக்கனி பதிவு
`திரு.மாணிக்கம்' படத்தை பாராட்டிய ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ள சமுத்திரக்கனி, "நன்றி தலைவா" என்று பதிவிட்டுள்ளார்.
நேர்மையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி🙏🙏🙏🙏🙏 நன்றி தலைவா🙏🙏🙏❤️❤️ படம் பார்த்து பாராட்டிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் எங்கள் அன்பும் நன்றியும்🙏🙏🙏 வென்றோம்💪💪💪💪💪💪 pic.twitter.com/FZuKE6Wrrx
— P.samuthirakani (@thondankani) January 2, 2025 -
Jan 02, 2025 17:03 ISTசென்னை செம்மொழி பூங்கா மலர் கண்காட்சிக்கான கட்டணம் உயர்வு
சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. பெரியவர்களுக்கு 200 ரூபாய், சிறியவர்களுக்கு 100 ரூபாய் என கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது; இன்று தொடங்கிய மலர் கண்காட்சி ஜனவரி 18ம் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
-
Jan 02, 2025 16:44 ISTஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு - ஸ்டாலின் உத்தரவு
`சி' மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சி, டி பிரிவை சார்ந்த பணியாளர்கள் (ம) ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம். அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
-
Jan 02, 2025 16:43 ISTசி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்
அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கப்பட்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் மின்கசிவு என பொய் தகவல்களை பரப்பியதாக சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்திருந்தனர்.
-
Jan 02, 2025 16:25 IST“கட்டபொம்மனுக்கு மரியாதை செலுத்தப்படும்'' - இ.பி.எஸ் அறிவிப்பு
வீரபாண்டிய கட்டபொம்மனின் 256-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்படும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
Jan 02, 2025 16:07 ISTஆகாஷ் தீப் விலகல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து முதுகு வலி காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் விலகியுள்ளார்.
-
Jan 02, 2025 15:58 ISTசிட்னி டெஸ்ட் - கேப்டனாக பும்ரா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற வைத்த பும்ரா 5-வது டெஸ்ட் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
Jan 02, 2025 15:49 ISTதமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்படுள்ளது.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான மத்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 17-ம் தேதி நடைபெறும் விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குகிறார்
-
Jan 02, 2025 15:29 ISTஆண்டின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி - இலங்கை வெற்றி
ஆண்டின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
-
Jan 02, 2025 15:28 IST8 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jan 02, 2025 15:02 ISTஉலக செஸ் சாம்பியன் குகேஷ் - கேல் ரத்னா விருது அறிவிப்பு
செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17 ஆம் தேதி குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்க உள்ளார்
-
Jan 02, 2025 14:44 ISTஜிப்மா் இயக்குநராக கவுதம் ராய் நியமனம்
புதுச்சேரி ஜிப்மா் இயக்குநராக மூத்தப் பேராசிரியா் கவுதம் ராய் நியமிக்கப்பட்டுள்ளாா். இது தொடர்பாக ஜிப்மா் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஜிப்மா் இயக்குநராக பணியாற்றிய டாக்டா் ராகேஷ் அகா்வாலின் பணிக்காலம் டிச.31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவுப்படி, நிரந்தர இயக்குநா் நியமிக்கப்படும் வரையில், மூத்தப் பேராசிரியா் டாக்டா் கவுதம் ராய் ஜிப்மரின் இயக்குநராக செயல்படுவாா்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Jan 02, 2025 14:33 ISTதிருமாவளவனுக்கு எதிரான வழக்கு ரத்து
இந்து பெண்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதாக விசிக தலைவர் திருமாவளவன்மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து. குற்றச்சாட்டுக்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
-
Jan 02, 2025 14:16 ISTசென்னை மலர் கண்காட்சிக்கான கட்டணம் உயர்வு
சென்னையில் 4 வது மாலா கண்காட்சியை காண்பதற்கான கட்டணம் ரூ.25 முதல் ரூ.50 வரை உயர்வு.
மலர் கண்காட்சியை காண பெரியவர்களுக்கு ரூ. 200, சிறுவர்களுக்கு ரூ.100 ஆகா நுழைவு கட்டணம் நிர்ணயம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.25 முதல் ரூ.50 வரை நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
-
Jan 02, 2025 13:55 ISTதமிழகத்தில் 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை - வானிலை மையம்
தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (2-01-2025) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை (3-01-2025) முதல் வரும் 8ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
-
Jan 02, 2025 13:19 ISTதேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு கொடுத்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளிக்க சூரியமூர்த்திக்கு உரிமை இல்லை மற்றும் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரமே உள்ளது என்றும் கூறியுள்ளார். சூரியமூர்த்தியின் மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருக்கக் கூடாதுசூரியமூர்த்தியின் கோரிக்கை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கருத்து.
-
Jan 02, 2025 13:07 ISTஅரசு பள்ளிகள் தத்தெடுப்பா? அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதாக நான் பேசினேனா? தவறாக புரிந்துகொண்டு தாரைவார்த்து என்று விமர்சனங்கள் செய்கின்றனர். அரசு பள்ளிகள் எங்கள் பிள்ளைகள், அதை யாரும் தத்துக்கொடுக்கவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.
-
Jan 02, 2025 12:38 ISTமெட்ரோவில் 10.52 கோடி பேர் பயணம்!
சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத அளவாக 2024 ஆம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் பயணம். 2015 - 2024 வரை சென்னை மெட்ரோ ரயிலில் 35.53 கோடி பேர் பயணம் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Jan 02, 2025 12:18 ISTதென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
"கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?" வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.
-
Jan 02, 2025 12:12 IST"பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும்"
"பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளை அரசியலாக பார்க்காதீர்கள்" என்று குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார். தன்னை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை என்று குஷ்பு வெளிப்படையாக அறிவித்த நிலையில், இன்று கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு.
-
Jan 02, 2025 12:00 IST"இன்னும் எத்தனை பொண்ணுங்கள பலி வாங்க போகுதோ"
"இன்னும் எத்தனை பொண்ணுங்கள பலி வாங்க போகுதோ" என்று ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார் சௌமிய அன்புமணி. தடையை மீறி போராட்டம் நடத்தியதால் வள்ளுவர்கோட்டத்தில் நுங்கம்பாக்கம் போலீஸ் இவரை கைது செய்தது.
-
Jan 02, 2025 11:42 IST"ஆண்ட பரம்பரை" - அமைச்சர் மூர்த்தி விளக்கம்.
ஆண்ட பரம்பரை என்று அமைச்சர் மூர்த்தி பேசியதாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இன்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
நேற்று அப்படியொரு நிகழ்ச்சி நடக்கவே இல்லை என்றும் முழு வீடியோவை பார்க்காமல் பரப்பி வருகிறார்கள் என்றும் அக்கருத்து தெரிவித்துள்ளார். -
Jan 02, 2025 11:33 ISTசெம்மொழிப்பூங்காவில் 4வது மலர் கண்காட்சி
சென்னை செம்மொழிப்பூங்காவில் 4வது மலர் கண்காட்சி. ரிப்பன் வெட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
-
Jan 02, 2025 11:24 ISTபாஜக மகளிர் அணி பேரணிக்கு அனுமதி மறுப்பு!
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமையை கண்டித்து மதுரையில் பாஜக மகளிர் அணியினர் நாளை (ஜன 3) நடத்தவிருந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு. மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து மகளிர் அணி தலைவி குமாரத்தி தலைமையில் பேரணி செல்ல திட்டம்.
-
Jan 02, 2025 10:57 ISTசௌமியா அன்புமணி கைது
அண்ணா பல்கைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக சார்பில் போராட்டம் நடத்த வந்த சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Jan 02, 2025 10:46 ISTமாணவர் நலனில் அரசியல் வேண்டாம் - அமைச்சர் கோவி.செழியன்
மாணவர் நலனில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம். துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்கிறது என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
-
Jan 02, 2025 10:34 ISTபாமக ஆர்ப்பாட்டம்- போலீஸ் குவிப்பு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் பாமக மகளிர் அணி சார்பாக போராட்டம் நடைபெற உள்ளது.
300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், கைது நடவடிக்கைக்காக பேருந்துகளும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
Jan 02, 2025 10:29 ISTபத்திரப் பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணப் பதிவு திட்டம்
தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணப் பதிவு செய்யும் திட்டம் விரைவில் அமல். தற்போதுள்ள அரசு நடைமுறையால் பலரும் திருமணங்களை பதிவு செய்ய வருவதில்லை எனத் தகவல்.
திருமண பதிவுக்கு ரூ.300 கட்டணம் என்ற நிலையில் சில இடங்களில் ரூ.5000 வரை கேட்பதாக புகார். நடைமுறை சிக்கல்களை களைய திருமணப் பதிவு முறையை எளிதாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இணையதளம் அல்லது மொபைல் போன் வாயிலாக திருமணப் பதிவை செய்து கொள்ள விரைவில் வழிவகை செய்யப்பட உள்ளது.
-
Jan 02, 2025 09:23 IST'ஸ்க்ரப் டைபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று
தமிழகத்தில் 'ஸ்க்ரப் டைபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை
'ரிக்கட்ஸியா' எனும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், உயிரினங்கள் மற்றும் மனிதர்களை கடிக்கும் போது இத்தொற்று ஏற்படும்
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் ஆகியவை இதற்கான முக்கிய அறிகுறிகளாக கண்டறிப்பட்டுள்ளன
இத்தகைய தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
Jan 02, 2025 09:17 ISTபொங்கல் பரிசு- நாளை முதல் வீடுவீடாக டோக்கன்
தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கனை நாளை ஜன.3 முதல் நியாய விலைக் கடை ஊழியர்கள் வீடுவீடாக சென்று வழங்க உள்ளனர். பொங்கல் பரிசை பெற வேண்டிய நாள், நேரம் உள்ளிட்டவை டோக்கனில் இடம் பெற்றிருக்கும்.
-
Jan 02, 2025 08:14 ISTசெம்மொழிப் பூங்காவில் இன்று மலர்க் கண்காட்சி
சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர்க் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மலர்க் கண்காட்சியில் தோட்டக் கலைத்துறை சார்பில் 30 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
-
Jan 02, 2025 07:46 ISTபா.ம.க போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாமக மகளிரணி சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாமக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என பாமக தகவல் கூறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.