Chennai News Highlights: விகடன் விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - எல்.முருகன்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
L Murugan Trichy

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்:

Advertisment

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சி.என்.ஜி எரிபொருள் ஒரு கிலோ ரூ. 90.50-க்கு விற்பனையாகிறது.

  • Feb 16, 2025 21:35 IST

    எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு - கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: “ஆனந்த விகடனின் எல்லா கருத்துகளுடனும் ஒத்துப்போவது என் கடமை அல்ல; விகடன் தன் கருத்தைச் சொல்லும் உரிமையை யார் பறிக்க முயன்றாலும் கடுமையகா எதிர்த்து அந்த வழிப்பறியைடத தடுக்க வேண்டியது என் கடமை. எங்கள் பேச்சுரிமை மீதோ, மொழியின் மீதோ கைவைத்த எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு. இதைச் சொல்லும் தைரியத்தை ஆயிரமாண்டு தமிழ்ச் சரித்திரம் தருகிறது எங்களுக்கு” என்று பதிவிட்டுள்ளார்.



  • Feb 16, 2025 19:45 IST

    தேசிய கல்விக் கொள்கையை ஏற்கச் சொல்லி நிர்ப்பந்திப்பது சரியல்ல... மத்திய அரசுக்கு இ.பி.எஸ் வேண்டுகோள் 

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் பேச்சு: “தமிழ்நாட்டுக்கு நிதியைத் தர மறுக்கும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். தேசியக் கல்விக் கொள்கையைக் கடைபிடித்தால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும் எனக் கூறுவது சரியல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் எனக் நிர்பந்திப்பது சரியல்ல. தமிழ்நாடு இருமொழிக் கொள்கையைத்தான் கடைபிடிக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது” என்று கூறினார்.



  • Advertisment
    Advertisements
  • Feb 16, 2025 19:33 IST

    பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் அப்பா எனக் கதறுவது ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா? - இ.பி.எஸ் கேள்வி

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் 2025 ஜனவரி முதல் பிப்ரவரி 14 வரை சுமார் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பாலியல் வன்கொடுமையால் பாதிக்கபப்ட்டோர்  அப்பா என கதறுவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Feb 16, 2025 19:05 IST

    காமெடி நடிகருக்கு உதவு 

    ஓமந்தூரார் மருத்துவனையில் சர்க்கரை வியாதியால் காலை இழந்த காமெடி நடிகர் சிரிக்கோ உதயாவை  நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்து பணம் உதவி செய்தனர். 



  • Feb 16, 2025 18:53 IST

    51 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

    சென்னை ஆர்.கே நகரில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு 51 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு ஒரு கிராம் வெள்ளி நாணயம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



  • Feb 16, 2025 18:07 IST

    கல்வி மட்டுமே வாழ்க்கையை மாற்றும்" - இயக்குனர் த.செ.ஞானவேல்ராஜா பேச்சு

    "கல்வி மட்டுமே வாழ்க்கையை மாற்றும். கரம் அலுவலகமாக இல்லாமல் பயிற்சி பட்டறையாக இயங்கும்.

    அப்போதைய காலகட்டத்தில், நடிகர்களின் பெயரில் மட்டுமே அறக்கட்டளைகள் இருக்கும். இதை ஆரம்பிக்கும் போது Surya Charitable Trust என்று இருந்தது அதன் பின்பு `அகரம்' என்று மாறியது.. தனி நபரின் அடையாளமாக இல்லாமல் அனைவருக்குமானதாக மாறியது வரைக்குமான அளவிற்கு சிந்தனைகள் இதற்குள் இருந்தது. "  என்று சென்னை தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அகரம் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழாவில் இயக்குனர் த.செ.ஞானவேல்ராஜா  தெரிவித்துள்ளார்



  • Feb 16, 2025 17:18 IST

    மயிலாடுதுறை இரட்டை கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது

    மயிலாடுதுறையில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    ஏற்கனவே, தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மூவேந்தனின் தந்தை முனுசாமியும் கைது செய்யபட்டு உள்ளனர்



  • Feb 16, 2025 16:22 IST

    மும்மொழி கொள்கையை கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

    மாற்றான் போக்கு எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுவது மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும். மத்திய கல்வி அமைச்சரின் பேச்சு கண்டனத்திற்கு உரியது. இரு மொழி கொள்கையை கடைபிடித்து வரும்போது மும்மொழி கொள்கையை கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.



  • Feb 16, 2025 15:41 IST

    கல்வியே எங்கள் ஆயுதம்: அகரம் ஃபவுண்டேஷன் புதிய கிளை திறப்பு விழாவில் மாணவிகள் உறுதிமொழி

    சென்னை தியாகராய நகரில் அகரம் ஃபவுண்டேஷன் புதிய அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா முன்னிலையில் “கல்வியே எங்கள் ஆயுதம்.. கல்வியே எங்கள் கேடயம்” என்று மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.



  • Feb 16, 2025 15:33 IST

    7 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: வானிலை ஆய்வு மையம்

    தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். வடமாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Feb 16, 2025 15:32 IST

     லிப்டில் சிக்கிய காங்கிரஸ் எம்பி

    கடலூர் காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிரசாத் லிப்டில் சிக்கினார். மூன்று பேர் மட்டுமே செல்லக்கூடிய லிப்டில். ஆறு பேர் சென்ற நிலையில் திடீரென பழுது; ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு எம்பி மீட்பு



  • Feb 16, 2025 14:35 IST

    பக்தர்கள் வெள்ளத்தில் பிரயாக்ராஜ் 

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில், பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், 50 கோடிக்கும் அதிகமானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு செய்துள்ளனர்.



  • Feb 16, 2025 13:49 IST

    தமிழ்நாட்டில் இருந்து வரியை ஏன் பெறுகிறீர்கள்? 

    மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மத்திய அரசு மறுப்பதெல்லாம், சரியல்ல. தமிழ்நாட்டில் இருந்து வரியை மட்டும் ஏன் பெறுகிறீர்கள்  என்று மத்திய அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Feb 16, 2025 13:47 IST

    தமிழ்நாட்டை சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்: உதயநிதி ஸ்டாலின்

    நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா?'' ``மொழி, இன உணர்வு வந்த பிறகுதான் தமிழர்களுக்கு அரசியலே, தமிழ்நாட்டின் வரலாற்றை படித்தாலே இது புரியும். தமிழ்நாட்டை சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம், தலைக்கனம் காட்டாதீர்! தமிழ்நாடு பொறுக்காது'' என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • Feb 16, 2025 13:46 IST

    திருட்டை தடுக்க முயன்ற மெட்ரோ பாதுகாவலர் மீது தாக்குதல் 

    சென்னை : பெருங்குடியில் மெட்ரோ பணிக்காக வைத்திருந்த இரும்புகளை சில நபர்கள் ஆட்டோவில் திருட முயன்ற நிலையில்,  திருட்டை தடுக்க முயன்ற பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.



  • Feb 16, 2025 13:44 IST

    தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது: விஜய்

    மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே என்று த.வெ.க தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.



  • Feb 16, 2025 12:33 IST

    எம்.பி., கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்

    மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்க தவறியதாக மத்திய அரசை கண்டித்து கனிமொழி எம்.பி., தலைமையில் திமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு கொடியை கையில் ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டம்



  • Feb 16, 2025 12:33 IST

    மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு கண்டனம்

    காரைக்காலில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆயிரத்திற்கும் ​மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் மீனவர்கள் கண்டன ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.



  • Feb 16, 2025 12:29 IST

    இந்தியாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்: அமெரிக்காவில் இருந்து 119 இந்தியர்கள் வெளியேற்றம்

    சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 119 இந்தியர்களை, விமானம் மூலம் அனுப்பி வைத்தது அமெரிக்க அரசு. அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மீண்டும் கைவிலங்கு போடப்பட்டு அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்தியர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. தற்போது மீண்டும் சர்ச்சை “எங்கள் கைகளும், கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன என்று நாடு திரும்பிய இந்தியர் தகவல் தெரிவித்துள்ளார்.



  • Feb 16, 2025 11:52 IST

    ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிரிக்கெட் போட்டி

    முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி "தலைவர் 72" என கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், சென்னை மேயர் பிரியா தலைமையிலான மகளிர் அணி மற்றும் தி.மு.க மகளிர் அணிகள் இடையேயான போட்டி தற்போது நடைபெறுகிறது. இப்போட்டியில், மேயர் பிரியா பந்துவீசினார்.



  • Feb 16, 2025 11:33 IST

    இ.பி.எஸ் எங்கே பதுங்கியுள்ளார்? - செந்தில் பாலாஜி கேள்வி

    இந்தியை ஏற்றுக் கொண்டால் தான் நிதி அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியதை கண்டிக்காமல், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்கே பதுங்கியுள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.



  • Feb 16, 2025 11:06 IST

    மத்திய அமைச்சருக்கு வைகோ கண்டனம்

    தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்திற்கு நிதி அளிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துகள் கண்டனத்திற்குரியது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிப்பதற்காக தேசிய கல்வி கொள்கை ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.



  • Feb 16, 2025 10:29 IST

    இருமொழிக் கொள்கை குறித்து அண்ணாமலை கேள்வி

    இருமொழிக் கொள்கை குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். "உலகம் வளர்ந்து வரும் சூழலில், காலாவதியான இருமொழிக் கொள்கையை திணிப்பதா? 1960-களில் காலாவதியான இருமொழிக் கொள்கையை குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்? முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் பேரன்கள் பயிலும் பள்ளிகளில் மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டு குழந்தைகள் பயிலும் அரசு பள்ளிகளில் மும்மொழிகள் கற்பிக்கக் கூடாது?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Feb 16, 2025 10:21 IST

    பெண் காவலரிடம் செயின் பறிப்பு

    சென்னை, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்பேரில், செயின் பறிப்பில் ஈடுபட்ட சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த சத்யபாலு என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். 



  • Feb 16, 2025 10:02 IST

    மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்த நபர் கைது

    சென்னை, காசிமேடு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படாத நேரத்தில், மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜோசப் என்பவரிடமிருந்து 20 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.



  • Feb 16, 2025 09:01 IST

    தி.மு.க-வில் இணைந்த சத்யராஜ் மகளுக்கு பொறுப்பு

    அண்மையில் தி.மு.க-வில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவிற்கு, அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.



  • Feb 16, 2025 08:59 IST

    டெல்லி கூட்ட நெரிசல்- ரூ.10 லட்சம் நிதியுதவி

    டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் அளிக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.



  • Feb 16, 2025 08:15 IST

    த.வெ.க முதலாம் ஆண்டு விழா

    த.வெ.க முதலாம் ஆண்டு விழா, பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்சியின் உட்கட்டமைப்பில் நிர்வாகிகள் நியமனம் முழுமையாக நிறைவு பெற்ற பின்னர், பொதுக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.



  • Feb 16, 2025 07:24 IST

    மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கண்டனம்

    தமிழக அரசுக்கு நிதி வழங்குவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி. அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. 'மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது' என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்" என பதிவிட்டுள்ளார்.



  • Feb 16, 2025 07:05 IST

    பயோ கேஸ் ஆலையில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

    சென்னை, மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் ஆலையில், இயந்திரம் வெடித்து ஏற்பட்ட விபத்தில், ஆப்ரேட்டர் ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஆலையை இடமாற்றம் செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • Feb 16, 2025 06:49 IST

    டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 18 பேர் உயிரிழப்பு

    டெல்லி ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 18 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



Tamil News Live Update Tamil News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: