/tamil-ie/media/media_files/uploads/2023/07/convoy-1.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், சி.என்.ஜி எரிபொருள் ஒரு கிலோ ரூ. 90.50-க்கு விற்பனை ஆகிறது.
-
Mar 06, 2025 22:16 IST
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாம்பன் மீனவர்கள் 14 பேரைக் கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாம்பன் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்ததாக ஒரு விசைப்படகுடன் 14 மீனவர்களைக் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
-
Mar 06, 2025 22:09 IST
மகாராஷ்டிராவில் மராத்தி அனைவருக்கும் கட்டாயம் - தேவேந்திர பட்னாவிஸ்
எலோருக்கும் மராத்தி தெரிய வேண்டும் என அவசியம் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் பியாஜி ஜோஷி பேசியிருந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “மராத்திதான் நம் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி. இந்த மாநிலத்தில் உள்ள அனைவரும் மராத்தியைக் கண்டிப்பாக கற்க வேண்டும். மதிக்க வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சியிலும் கலாச்சாரத்திலும் மராத்திக்கு முக்கியப் பங்கு உள்ளது” என்று கூறியுள்ளார்.
-
Mar 06, 2025 21:08 IST
விழுப்புரம், புதுக்கோட்டை மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டையில், தனியார் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரத்தில் உள்ள தனியார் மதுபான உற்பத்தி தொழிற்சாலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையிலும் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கல்லாக்கோட்டையில் துணை ராணுவ படையோடு, 5 அதிகாரிகள் கடந்த 2 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Mar 06, 2025 20:21 IST
பா.ஜ.க-வின் கையெழுத்து இயக்கத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு - அண்ணாமலை
மாநில பா.ஜ.க கையெழுத்து இயக்கத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
Mar 06, 2025 19:39 IST
லண்டனில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு விதிமீறல் - இந்தியா கண்டனம்
லண்டனில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் காரை வழிமறித்து; தேசிய கோடியை கிழித்து காலிஸ்தான் ஆதரவாளர் முழக்கமிட்ட சம்பவம். “பிரிவினைவாத , தீவிரவாத குழுக்களின் அத்துமீறல்களையும், இதுபோன்ற ஜனநாயகத்தின் சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதையும் கண்டிக்கிறோம். பிரிட்டன் அரசு இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
-
Mar 06, 2025 19:18 IST
“உலகம் முழுக்க செல்கிறார்கள் தமிழர்கள்” - சந்திரபாபு நாயுடு புகழாரம்
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “தமிழ்நாட்டிலிருந்து பலரும் அமெரிக்கா செல்கின்றனர்; அவர்கள் ஆங்கிலம் கற்று மிகச்சிறப்பாக செயல்படுகின்றனர். பிற சீனியர் பொறுப்புகளிலும் முதல் அல்லது இரண்டாம் இடங்களில் தமிழர்களே அதிகம் உள்ளனர். தமிழ்நாடு என்றாலே முன்பு இந்திய அளவில் சேவைத்துறையில் அதிகம் இருந்தார்கள். இப்போது உலகம் முழுக்க சென்றுள்ளார்கள். காரணம் அவர்களின் திறமை” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
-
Mar 06, 2025 19:11 IST
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக 7 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில் - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக 7 மாவட்டங்களில் 100°Fக்கு மேல் வெயில் வெப்பநிலை பதிவாகி உள்ளது. ஈரோட்டில் 103°F, கரூர் - 102°F, மதுரை - 101°F, திருப்பத்தூர் - 101°F, வேலூர் - 101°F, சேலம் - 100°F, திருச்சி - 100°F வெயில் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Mar 06, 2025 19:04 IST
அன்னபிரசாதத்தில் மசால் வடை
திருப்பதி திருமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான சாப்பாட்டுடன் மசால் வடை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
-
Mar 06, 2025 19:02 IST
ஒடிசாவில் அனைத்து அரசு பள்ளிகளும் காவி நிறத்தில் இருக்க வேண்டும் - மாநில அரசு உத்தரவு!
ஒடிசாவில் அனைத்து அரசு பள்ளிகளும் காவி நிறத்தில் இருக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த உதாரண படத்துடன் கூடிய சுற்றறிக்கை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிவைப்பு. ஒடிசாவில் கடந்தாண்டு பாஜக பொறுப்பேற்ற நிலையில், முந்தைய ஆட்சியின் (நவீன் பட்நாயக் ஆட்சி) பச்சை வர்ணம் நீக்கப்பட்டு காவி நிறத்தில் பள்ளிகள் மாற உள்ளன.
-
Mar 06, 2025 18:29 IST
புதுச்சேரி மத்திய பல்கலை. துணைவேந்தர் நியமனம்
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பனிதி பிரகாஷ் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரிதகவல் அறிவியல் துறையின் மூத்த பேராசிரியராக பணியாற்றியுள்ளார் பனிதி. புதுச்சேரி மத்திய பல்கலை. துணைவேந்தராக 5 ஆண்டுகள் பனிதி பிரகாஷ் பாபு பதவி வகிப்பார்.
-
Mar 06, 2025 18:29 IST
2026 தேர்தல் பா.ஜ.க-வுக்கு மரண அடி - அமைச்சர் சேகர் பாபு பேச்சு
“2026 தேர்தல் பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டில் மரண அடியாக இருக்கும்” என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
Mar 06, 2025 18:12 IST
‘பைசன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘பைசன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
-
Mar 06, 2025 18:00 IST
சீன ஆக்கிரமிப்பு - ஏன் வாய் திறக்கவில்லை? - உமர் அப்துல்லா கேள்வி
'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என்கிறீர்கள். தாராளமாக செய்யுங்கள். நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் சீனாவிடம் உள்ள ஒரு பகுதியை பற்றி மட்டும் ஏன் யாரும் பேசுவதில்லை?' என்று வெளியுறவு துறை அமைச்சரின் சமீபத்திய அறிக்கை குறித்து ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Mar 06, 2025 17:43 IST
இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் - இலங்கை எம்.பி பேச்சு
"இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் வகையில் செயல்படும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இலங்கை நாடாளுமன்றத்தில் வன்னி எம்.பி. துரைராசா ரவிகரன் கூறியுள்ளார்.
-
Mar 06, 2025 17:30 IST
பெண்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் உண்மை அல்ல - கேரள ஐகோர்ட் பரபர கருத்து
பெண்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தையும் உண்மையானதாக கருத முடியாது என கேரள ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டு உள்பட பெண்கள் அளிக்கும் புகார்களில் அனைத்தையும் உண்மை என கருத்தில் கொள்ள முடியாது என முன்னாள் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனு மீது கேரள ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. பொய் வழக்குகளில் நிரபராதிகள் பாதிக்கப்படும் போக்கை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும் நீதிபதி குன்ஹில்கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
Mar 06, 2025 16:55 IST
தமிழர்கள் ஆங்கிலம் கற்று மிக சிறப்பாக செயல்படுகின்றனர்: சந்திரபாபு நாயுடு புகழாரம்
தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து பலர் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர். அவர்கள் ஆங்கிலம் கற்று மிக சிறப்பாக செயல்படுகின்றனர். வெளிநாடுகளில் உயர் பதவியில் இருக்கும் பலர் தமிழர்கள் தான்.ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்காக டெல்லி வருபவர்கள் அதிகம் தமிழர்கள் தான். பொதுவாக ஐ.ஏ.எஸ். ஐ,பி.எஸ். தேர் என்றால், தமிழ்நாடு என்ற நிலை தான் இருக்கும். தற்போது அவர்கள் சாதிக்க உலகம் முழுக்க செல்கிறார்கள் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
-
Mar 06, 2025 16:04 IST
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கான வரவேற்பை திசை திருப்புகிறார்கள்: செல்வ பெருந்தகை
சென்னையில் காவல்துறையினரின் அனுமதியின்றி தமிழிசை சௌந்தரராஜன் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை பொறுத்துக் கொள்ளமுடியாமல் திசை திருப்புகின்றனர் என்று கூறியுள்ளார்.
-
Mar 06, 2025 15:54 IST
கோயில் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி
சென்னை அயனாவரத்தில் கோவில் குளத்தில் கை கழுவ சென்ற ராம்(55) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 06, 2025 15:17 IST
அதிமுகவின் நாடகம் வெற்றி பெற போவதில்லை: அமைச்சர் ரகுபதி
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு கொடுத்துவிட்டு, திமுக நாடகம் நடத்துகிறது என ஜெயக்குமார் பேசியுள்ளார். பாஜகவோடு சேர்ந்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக இதனை சொல்வதற்கு எதாவது தகுதி உண்டா? பாஜகவுடன் இணைந்து அதிமுக நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
-
Mar 06, 2025 15:15 IST
சீமான் வீட்டு பாதுகாவலர்களின் ஜாமின் மனு தள்ளுபடி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் பாதுகாவலர்களுக்கு ஜாமின் வழங்க செங்கல்பட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சீமான் வீட்டு பாதுகாவலர்கள் அமல்ராஜ், சுபாகர் ஆகியோரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிள்ளது.
-
Mar 06, 2025 14:36 IST
தவெக இஃப்தார் நிகழ்வு... இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு அழைப்பு
நாளை தவெக சார்பில் நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு தவெக சார்பில் அழைப்பு. நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1500 பேர் பங்கேற்க உள்ளனர்.
-
Mar 06, 2025 14:34 IST
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் அபினய்!
துள்ளுவதோ இளமை, தாஸ் போன்ற படங்களில் நடித்த நடிகர் அபினய் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரூ.15 லட்சத்துக்கு மேல் செலவு செய்து சிகிச்சை பெற்று வரும் அவர் மேல் சிகிச்சைக்காக ரூ. 28.5 லட்சம் உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
Mar 06, 2025 14:04 IST
சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
Mar 06, 2025 13:56 IST
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ED சோதனை
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். எஸ்.என்.ஜே என்ற மதுபான நிறுவன அலுவலகத்திலும் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
-
Mar 06, 2025 13:31 IST
ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வு
சென்னையில் ஒரு சவரனுக்கு இன்று காலை ரூ. 360 குறைந்த நிலையில் தற்போது ரூ.320 உயர்ந்துள்ளது.
-
Mar 06, 2025 13:17 IST
"கட்சிகள் அலுவலகங்களில் கொடிக்கம்பங்களை மதிப்புடன் வைத்துக் கொள்ளுங்கள்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
சாலையில் வைக்கப்படும் கொடிக்கம்பத்தால் குடும்பத்தில் ஒருவரை இழக்கும் நிலை. சாலை மக்களின் வசதியான போக்குவரத்திற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். கட்சிகள் தங்களது அலுவலகங்களில் கொடிக்கம்பங்களை மதிப்புடன் வைத்துக் கொள்ளுங்கள். பொது இடங்களில் உள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
-
Mar 06, 2025 13:14 IST
பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - அண்ணாமலை
திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, ஸ்டாலின் பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார்.
-
Mar 06, 2025 13:13 IST
பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை - அண்ணாமலை
தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற அக்கா தமிழிசை சௌந்தரராஜனை காவல்துறை கைது செய்திருக்கிறது. கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.
-
Mar 06, 2025 12:44 IST
காவல்துறை - தமிழிசை இடையே நீடிக்கும் வாக்குவாதம்
சென்னையில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் காவல் துறையினருடன் வாக்குவாதம். சென்னை கோயம்பேட்டில் காவல் துறையினருடன் ஒருமணிநேரத்திற்கு மேல் நீடிக்கிறது வாக்குவாதம்
-
Mar 06, 2025 12:17 IST
சிம்பொனி இசைக் கோர்வை விழா: பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து
“இசை உச்சத்தை என்றோ இளையராஜா தொட்டுவிட்டதாக நாமெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த இசை மருத்துவர் தமது இசை வாழ்வின் புதிய உச்சங்களைத் தேடித் தேடிச் சென்று சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார். சிம்பொனி இசைக் கோர்வையை அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி வெற்றி பெற உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்று இளையராஜாவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Mar 06, 2025 12:09 IST
ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்க ஆணை
ஆனந்த விகடனின் இணையதள பக்கம் முடக்கப்பட்டதை நீக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை. சர்ச்சைக்குரிய கார்ட்டூனை முடக்குமாறு ஆனந்த விகடன் நிறுவனத்திற்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்; டிரம்ப் - பிரதமர் மோடியை விமர்சித்து ஆனந்த விகடனில் கார்ட்டூன் வெளியிடப்பட்டிருந்தது; மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக பரிந்துரைப்படி கடந்த மாதம் 15ஆம் தேதி விகடன் இணையப் பக்கம் முடக்கம்
-
Mar 06, 2025 11:42 IST
உதயநிதி மீது புதிய வழக்குகள் பதிவு செய்யக் கூடாது
உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் சனாதன வழக்கில் உதயநிதி மீது இனி புதிய வழக்குகள் பதியக் கூடாது - நீதிபதிகள் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை தொடரும்; வழக்கை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
-
Mar 06, 2025 11:30 IST
தமிழிசை செளந்தரராஜன் கைது
சென்னை எம்.ஜி.ஆர். நகரில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். கையெழுத்து இயக்கத்திற்கு காவல்துறை அனுமதி பெறவில்லை என தகவல். போலீசாரை கண்டித்து பாஜகவினர் கண்டன கோஷம். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கையெழுத்து இயக்கம் நடத்த காவல்துறை அறிவுறுத்தல். அனுமதி பெற்று தான் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது என காவல் துறையிடம் தமிழிசை வாக்குவாதம்
-
Mar 06, 2025 10:55 IST
கங்கா மாதா கோயிலில் மோடி வழிபாடு
மாநிலம், முக்வா பகுதியில் உள்ள கங்கா மாதா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். மேலும், உத்தரகாண்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
Mar 06, 2025 10:26 IST
புழல் சிறையில் நீதிபதிகள் ஆய்வு
புழல் சிறையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். சிறைவாசிகளுக்கான வசதிகள், உணவின் தரம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
-
Mar 06, 2025 10:07 IST
"அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது": ஸ்டாலின் பதிவு
முதலமைச்சர் ஸ்டாலின், தனது எக்ஸ் தள பக்கத்தில் "அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது" எனப் பதிவிட்டுள்ளார். மார்ச் 6-ஆம் தேதி அண்ணா தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்றதை குறிக்கும் விதமாக முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.
-
Mar 06, 2025 09:18 IST
விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
சென்னை, ஊரப்பாக்கத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் கல்லூரி மாணவர்களான தானேஸ் ரெட்டி மற்றும் ஸ்ரேயர்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், காரில் பயணித்த மூன்று பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
Mar 06, 2025 08:47 IST
சிம்பொனி இசை நிகழ்வுக்காக லண்டன் புறப்பட்ட இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா, தனது சிம்பொனி இசை அரங்கேற்றத்தை நிகழ்த்துவதற்காக இன்று லண்டன் புறப்பட்டார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இது என்னுடைய பெருமை அல்ல, நாட்டின் பெருமை" எனக் கூறினார்.
-
Mar 06, 2025 07:41 IST
தாய்மொழி என்பது தேன்கூடு - ஸ்டாலின்
தாய்மொழி என்பது தேன்கூடு, அதில் கை வைப்பது ஆபத்து என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், "ஒரு மொழியை கட்டாயமாக திணித்தால், அது பகை உணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மொழித் திணிப்பால் பிளவுபட்ட தேசங்களின் வரலாறு, நம் பக்கத்திலேயே இருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Mar 06, 2025 06:42 IST
16 மின்சார ரயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் இன்றும் (மார்ச் 6), நாளையும் (மார்ச் 7) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.