/indian-express-tamil/media/media_files/2025/01/26/IU0ffFrTV2Gz9ZBf1ZHJ.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை:
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.39-க்கும் விற்பனை ஆகிறது. மேலும், ஒரு கிலோ சி.என்.ஜி எரிபொருள் ரூ. 90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 09, 2025 22:24 IST
தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்ற மேலவைக்கு நடிகை விஜயசாந்திக்கு சீட்டு
தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்ற மேலவைக்கு (எம்.எல்.சி) வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நடிகை விஜயசாந்தி, அட்டாங்கி தயாகர், கேதவடத ஷங்கர் நாயக் ஆகியோருக்கு சீட்டு ஒதுக்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
Mar 09, 2025 20:55 IST
உடல் நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தயாளு அம்மாள்
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் விடு திரும்பினார். ஒரு வார கால சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் பெற்று தயாளு அம்மாள் விடு திரும்பினார்.
-
Mar 09, 2025 20:26 IST
கொளத்தூரில் தி.மு.க சார்பில் நாட்டுப்புறக் கலை விழா; விஜய் ஆண்டனி பங்கேற்பு
சென்னை கொளத்தூரில் தி.மு.க சார்பில் நடைபெற்று வரும் நாட்டுப்புறக் கலை விழாவில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கலந்துகொண்டார்.
-
Mar 09, 2025 18:54 IST
கலிபோர்னியாவில் இந்து கோயில் சேதம் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்
கலிபோர்னியாவில் சினோ ஹில்ஸ் பகுதியில் இருக்கும் சுவாமி நாராயணன் கோயில் வளாகத்தில் சேதம் ஏற்படுத்தியதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
Mar 09, 2025 17:56 IST
பத்மநாபபுரம் அதிமுக வேட்பாளர் ஜான்தங்கம்?
பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜாந்தங்கம் என இபிஎஸ் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜான்தங்கம் குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள நிலையில் இந்த முறை எம்.எல். ஏ ஆக வேண்டும், வேட்பாளர் நீதான் என இபிஎஸ் கூறியதாக தகவல் தெரிவித்துள்ளது.
-
Mar 09, 2025 17:23 IST
நிர்வாகிகளை கடிந்து கொண்ட இபிஎஸ்
கொளத்தூர், சேப்பாக்கம் தொகுதியில் அதிமுகவினர் முறையாக பணியாற்றவில்லை. பாக முகவர்களை கூட நிரப்பவில்லை என இபிஎஸ் கடிந்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் பணிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பணியாற்றுமாறு இபிஎஸ் கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 09, 2025 17:00 IST
அதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்
மகளிர் நலன் காக்க மாற்றம் வேண்டும் என்ற கையெழுத்து இயக்கத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
-
Mar 09, 2025 16:39 IST
தமிழ்நாட்டில் தயாராகும் அடுத்த சிம்பொனி
இளையராஜாவைத் தொடர்ந்து சிம்பொனி இசைத்தொகுப்பை வெளியிடவுள்ளதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் அறிவித்துள்ளார்.
-
Mar 09, 2025 16:12 IST
ஜெகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி
குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் நெஞ்சுவலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ குழு தகவல்
-
Mar 09, 2025 16:09 IST
செருப்பு தைக்கும் தொழிலாளியை தொழிலதிபராக மாற்றிய ராகுல்காந்தி..!
ராகுல் காந்தி தொடர் உதவியல் ராம்செட் மோச்சி என்ற பெயரில் புதிய காலணி பிராண்டை செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்செட் தொடங்கவுள்ளார்.
-
Mar 09, 2025 15:32 IST
"UPSC தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்ச்சி குறைய காரணம் பாஜக அரசு"
"தமிழ்நாட்டு மாணவர்கள் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறும் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் பிரதமர் மோடியின் அரசு தமிழ்நாட்டையும் பிற இந்தி பேசாத மாநிலங்களையும் புறக்கணித்து மத்திய அரசு தேர்வுகளை வடமாநிலங்களின் வசதிக்கேற்ப மாற்றியது தான்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Mar 09, 2025 15:03 IST
பெண்கள் தனியாகச் செல்ல முடியவில்லை - எல்.முருகன்
தமிழ்நாட்டில் பெண்கள் தனியாகச் செல்ல முடியாதபடி சட்டம் ஒழுங்கு நிலை உள்ளது. 2026இல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
Mar 09, 2025 14:48 IST
கூட்டணி குறித்து தலைமை முடிவெடுக்கும் என கூறுங்கள் - நிர்வாகிகள் கூட்டத்தில் இ.பி.எஸ் பேச்சு
கூட்டணி குறித்து யார் கேட்டாலும் தலைமை முடிவெடுக்கும் என கூறுங்கள் என 82 மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
-
Mar 09, 2025 14:40 IST
சென்னை மணலியில் பிளாஸ்டிக் குப்பைகளை தரம் பிரிக்கும் இடத்தில் பயங்கர தீ விபத்து
சென்னை மணலி சின்னசேக்காடு பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை தரம் பிரிக்கும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன
-
Mar 09, 2025 13:37 IST
திருச்செந்தூர் கோயில் மாசி திருவிழா; சண்முகர் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவின் 7ம் நாளான இன்று சுவாமி சண்முகர் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். விடுமுறை தினம் என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது
-
Mar 09, 2025 13:12 IST
மார்ச் 11-ல் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
மார்ச் 11ல் குமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ள என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Mar 09, 2025 13:10 IST
சென்னையில் நாளை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Mar 09, 2025 12:49 IST
மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக த.வெ.க ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு?
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மீனவர்களை திரட்டி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் பங்கேற்பார் என கூறப்படுகிறது
-
Mar 09, 2025 12:26 IST
மனைவியை பழிவாங்க விஷம் குடித்த கணவன்; நாடகமாடியது அம்பலம்
கடலூர் அருகே கணவனுக்கு குளிர்பானத்தில் மனைவி விஷம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, தன்னை ஏமாற்றிய மனைவியை பழிவாங்கவே கணவன் கலையரசன் விஷம் குடித்து உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருமணமான 26வது நாளிலேயே கணவனுக்கு குளிர்பானத்தில் மனைவி விஷம் கொடுத்ததாக பரவும் தகவல் உண்மையல்ல என்றும் மருந்து கடைக்கு சென்று கலையரசன் வாங்கிய மருந்து ரசீது, சிசிடிவி காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவியை பழிவாங்க விஷம் குடித்து கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலையரசன் இன்று உயிரிழந்தார்
-
Mar 09, 2025 12:18 IST
ஸ்டாலின் பிறந்த தினம்; படகுப் போட்டியை தொடங்கி வைத்த உதயநிதி
முதல்வர் ஸ்டாலினின் 72வது பிறந்த தினத்தை ஒட்டி 13 மீனவ கிராமமக்கள் பங்குபெரும் மாபெரும் படகுப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
-
Mar 09, 2025 11:49 IST
திண்ணை பிரசாரத்தை தீவிரப்படுத்த இ.பி.எஸ் வலியுறுத்தல்.
திண்ணை பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவகலத்தில் இருந்து அனைத்து மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுடன் காணொளி காட்சி வாயிலாக அவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அவர் கலந்துரையாடினார்.
-
Mar 09, 2025 11:17 IST
3 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க எம்.பி-க்கள் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, நிதிப்பகிர்வு, மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் முதலமைச்சர் ஸ்டாலினின் அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக துணை நின்று, நாடாளுமன்றத்திலும் இவற்றை முன்வைத்து போராடி வெற்றியை ஈட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதேபோல், தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும், அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
Mar 09, 2025 10:55 IST
ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.பி-க்கள் கூட்டம் தொடக்கம்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.பி-க்களின் கூட்டம் தொடங்கியது. இதில், கூட்டு குழு நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
Mar 09, 2025 10:40 IST
துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி
துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Mar 09, 2025 10:09 IST
புழல் சிறையில் கஞ்சா கண்டெடுப்பு
புழல் சிறையில் காவலர்கள் ரோந்துப் பணியின் போது, சுற்றுச் சுவர் ஓரத்தில் கிடந்த பொட்டலத்தில் கஞ்சா, பீடிக் கட்டுகள், சிகரெட்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், மாதவன், உதயா ஆகிய இரு கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து, பொட்டலத்தை உள்ளே வீசியவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
-
Mar 09, 2025 09:31 IST
கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்
இன்று சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
-
Mar 09, 2025 08:57 IST
சென்னையில் முதன்முதலாக படகுப்போட்டி
சென்னை, பாரதியார் நகர் கடற்கரையில் முதன்முதலாக படகுப்போட்டி நடைபெற்றது. இதில், சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
-
Mar 09, 2025 08:24 IST
50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று மாலை வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், பயணிகளின் வசதிக்காக அந்த நேரத்தில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
-
Mar 09, 2025 07:49 IST
வேலைவாய்ப்பு இருந்தால் தமிழக மக்களே இந்தியை படிப்பார்கள் - திருமாவளவன்
வேலைவாய்ப்பு இருந்தால் தமிழக மக்களே இந்தியை படிப்பார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், "இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களே வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வரும்போது, இந்தி படிப்பதால் எங்கே வேலை கிடைக்கும் என்பதை பா.ஜ.க-வினர் சொல்ல வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Mar 09, 2025 07:40 IST
சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு
சென்னையில் 7 இடங்களில் மூன்று நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. கடந்த 6-ஆம் தேதி முதல் தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், ரொக்கத் தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
-
Mar 09, 2025 07:18 IST
கடற்கரையில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி திரையிடல்
சென்னை, மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியை பெரிய திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன்னெடுத்துள்ளது.
-
Mar 09, 2025 07:05 IST
மின்சார ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள், இன்று காலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன.
-
Mar 09, 2025 06:56 IST
ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய கேள்விகள் குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.