Chennai News Highlights: தமிழக பட்ஜெட்: மக்களுக்கு எந்தவித பலனும் இல்லை - எச்.ராஜா

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
h raja

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:

Advertisment

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை ஆகிறது. இதேபோல், ஒரு கிலோ சி.என்.ஜி. எரிபொருள் ரூ. 90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Mar 14, 2025 23:35 IST

    ரூபாய் குறியீடு நீக்கம்; ஸ்டாலினுக்கு கன்னட ரக்ஷண வேதிகே பாராட்டு

    தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, கன்னட ரக்ஷண வேதிகே பாராட்டு தெரிவித்துள்ளது. அதன்படி, "ரூபாய் குறியீட்டை நீக்கி மத்திய அரசுக்கு எதிராக மிக தைரியமாக செயல்பட்டதற்கு வாழ்த்து. தொகுதி மறுசீரமைப்பு மூலமாக தென்மாநிலங்களை மரண குழியில் மத்திய அரசு தள்ளப் பார்க்கிறது. மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் தொடங்கியுள்ள போராட்டம் வரவேற்கத்தக்கது. பெரியார் வழியில் திராவிட கொள்கைகளை, தென் மாநில மொழி பேசுபவர்கள் கடைபிடித்து இந்தி திணிப்பை விரட்ட வேண்டும். எத்தனை சோதனை வந்தாலும், உறுதியுடன் மாநில நலனுக்காக போராடும் ஸ்டாலினுக்கு பாராட்டுகள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Mar 14, 2025 21:04 IST

    ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து

    சென்னை, அம்பத்தூரில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.



  • Advertisment
    Advertisements
  • Mar 14, 2025 20:38 IST

    காலாவதியான பொருட்கள் பறிமுதல்

    உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 14) பல்லாவரம் வாரச் சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து சென்றனர்.



  • Mar 14, 2025 20:16 IST

    "90 % அ.தி.மு.க தொண்டர்கள் பா.ஜ.க-வுடன் இணைய விரும்புகின்றனர்": டிடிவி தினகரன்

    பா.ஜ.க-வுடன் இணைவதை 90 சதவீத அ.தி.மு.க தொண்டர்கள் விரும்புகின்றனர் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். முன்னதாக, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தால் என்ன தவறு என்று செல்லூர் ராஜு, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். அதனைக் குறிப்பிட்டு, "90 சதவீத தொண்டர்களின் மன ஓட்டத்தை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இ.பி.எஸ் போன்ற ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் பா.ஜ.க-வுடன், அ.தி.மு.க இணைவதை விரும்புகின்றனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 14, 2025 19:17 IST

    விஜய் தலைமையில் த.வெ.க பொதுக்குழு கூட்டம்

    சென்னையில், மார்ச் 28-ஆம் தேதி விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி, திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.



  • Mar 14, 2025 19:00 IST

    டாஸ்மாக் முறைகேடு; வெறும் அறிக்கை வைத்து மட்டும் எதுவும் சொல்ல முடியாது – திருமாவளவன்

    டாஸ்மாக் 1000 கோடி முறைகேடு அறிக்கை வெளியாகி உள்ளது. அமலாக்கத்துறை விசாரணை முடிந்த பிறகு தான் தெரியும், வெறும் அறிக்கை வைத்து மட்டும் எதுவும் சொல்ல முடியாது என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்



  • Mar 14, 2025 18:56 IST

    டாஸ்மாக் முறைகேடு நடத்திருந்தால் கட்டாயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் - சண்முகம்

    அமலாக்கத்துறை சொல்வது போல டாஸ்மாக் முறைகேடு நடத்திருந்தால் கட்டாயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், 24வது அகில இந்திய மாநாடு பிரச்சார துவக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாநில செயலாளர் பெ.சண்முகம் கட்சிக் கொடியேற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் விவகாரத்தில், முறைகேடு நடக்க காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 



  • Mar 14, 2025 18:27 IST

    மேகதாது அணை கட்ட நிச்சயமாக மத்திய அரசு அனுமதி அளிக்காது - அண்ணாமலை

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட நிச்சயமாக மத்திய அரசு அனுமதி அளிக்காது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்



  • Mar 14, 2025 18:07 IST

    பொற்கோயிலில் பக்தர்களை தாக்கியவர் கைது; 5 பேர் காயம்

    வெள்ளிக்கிழமை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதலில், தடியுடன் ஆயுதம் ஏந்திய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஐந்து பக்தர்களைக் காயப்படுத்தினார்.



  • Mar 14, 2025 17:49 IST

    5,000 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் – அண்ணாமலை

    40% மதுபானங்கள் விற்பனை கணக்கில் வரவில்லை. மதுபான ஆலைகள் மட்டுமே முறைகேட்டில் ஈடுபட்டிருக்க முடியாது. அடுத்த வாரத்தில் 5,000 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்



  • Mar 14, 2025 17:17 IST

    இந்தியாவில் 10 லட்சம் கோடி கடனை நெருங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது - அண்ணாமலை

    தமிழக அரசு நிதிநிலை அறிக்கைக்கு பதிலாக வெற்றுப் பேப்பர் அளித்திருக்கலாம். இந்தியாவில் 10 லட்சம் கோடி கடனை நெருங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஓய்வூதியம் அளிக்கக் கூட முடியாத அளவிற்கு தமிழ்நாடு அரசு தத்தளிக்கிறது. டாஸ்மாக் ஊழலில் போக்குவரத்து துறையை மையப்படுத்தி மட்டும் ரூ.100 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்



  • Mar 14, 2025 17:15 IST

    60வது பிறந்தநாளில் தனது 3வது காதலியை அறிமுகப்படுத்திய அமீர்கான்

    60வது பிறந்தநாளில் தனது 3வது காதலியை அறிமுகப்படுத்தினார் அமீர்கான். தனது நீண்ட கால தோழியும், அமீர்கானின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் கவுரி ஸ்ப்ராட்டுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உறவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமீர்கான் இதற்கு முன் 2 முறை விவாகரத்து ஆனவர். தமிழ் தாய்க்கும்; ஐரிஷ் தந்தைக்கும் பிறந்த கவுரி ஸ்ப்ராட்டிற்கு ஏற்கனவே திருமணமாகி 6 வயதில் மகன் உள்ளார்



  • Mar 14, 2025 17:13 IST

    ரூ.66 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.66,400க்கும், ஒரு கிராம் ரூ.8,300க்கும் விற்பனையாகிறது. இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1440 உயர்ந்துள்ளது 



  • Mar 14, 2025 16:34 IST

    தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள் நடைமுறைக்கு வருமா என்ற கேள்வி எழுகிறது - விஜய் விமர்சனம்

    தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்டில் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட். இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் மக்கள் கொடுக்கும் மிகப்பெரிய பதிலடியாக 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும். இதை இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசு விரைவில் உணரும். 

    புதிய தொழிற்பேட்டை, பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு உதவித்தொகை, ஈட்டிய விடுப்பு சரண், 15 நாட்கள் வரை பணப்பலன், பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம். அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழுகிறது. காரணம், இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே” என்று விமர்சித்துள்ளார்.



  • Mar 14, 2025 16:19 IST

    மார்ச் 28-ல் த.வெ.க பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு

    தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28-ல் சென்னையில் கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. த.வெ.க தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் என நிர்வாகிகள் நியமனத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் தர உள்ளது. த.வெ.க நிர்வாகிகள் நியமனத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்று தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.



  • Mar 14, 2025 15:54 IST

    இனி கட்சி நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் - காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு 

    சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்,  “இனிவரும் காலங்களில் பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில், பாதுகாப்பு வழங்குவதற்காக உரிய கட்டணம் நிர்ணயம் செய்து அந்தந்த கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.



  • Mar 14, 2025 15:33 IST

    விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு: தமிழ்நாடு போலீஸ் ஆலோசனை நிறைவு; விரைவில் நடவடிக்கை

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக Y பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், துணை ராணுவ அதிகாரிகள், தமிழ்நாடு போலீசார் நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது. விஜய்க்கு விரைவில் Y பிரிவு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒரு ஷிஃப்டிற்கு 4 பேர் வீதம் 3 ஷிஃப்டிற்கு 12 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Mar 14, 2025 14:59 IST

    முதல்வர் குறித்து அவதூறு: சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து

    முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், எதிர்காலத்தில் இது போன்று பேசாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும்  உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Mar 14, 2025 14:58 IST

    தங்க கடத்தலில் குருவியாக செயல்பட்ட இளம் பெண் தற்கொலை முயற்சி 

    காரைக்காலில் தங்கக் கடத்தல் குருவியாக செயல்பட்ட இளம் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, சென்னை விமான நிலையத்தில் பதுக்கி வைத்த தங்கம் மாயமடைந்ததாக கூறி குருவியாக செயல்பட்ட பெண் தற்கொலை முயற்சியில்ஈடுபட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

     



  • Mar 14, 2025 14:56 IST

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நிறைவு

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள், துணை ராணுவ அதிகாரிகள், தமிழ்நாடு போலீசார் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. விஜய்க்கு விரைவில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பாதுகாப்பில், ஒரு ஷிஃப்டிற்கு 4 பேர் வீதம் 3 ஷிஃப்டிற்கு 12 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,



  • Mar 14, 2025 14:45 IST

    எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை புறக்கணித்த செங்கோட்டையன்

    இன்று சட்டமன்றத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை புறக்கணித்தார். அதன்படி, எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்காமல், நேரடியாக சட்டமன்ற அரங்கத்திற்குள் அவர் சென்றார். மேலும், செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்த போது, அவருடன் செங்கோட்டையன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Tamil News Update Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: