Chennai News Highlights: “ தமிழகத்தில் நடக்கும் ஊழலை பற்றி நான் பேச விரும்பவில்லை” - நிர்மலா சீதாராமன்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நிர்மலா சீதாராமன் உள்பட 4 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்பு

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:

Advertisment

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை ஆகிறது. இதேபோல், ஒரு கிலோ சி.என்.ஜி எரிபொருள் ரூ. 90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Mar 22, 2025 23:15 IST

    வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: நீதிபதி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் 

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் இருந்த விவகாரம் தொடர்பான வழக்கில்,3 நீதிபதிகள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு யஷ்வந்த் சர்மாவை மாற்ற கொலீஜியம் முடிவு செய்துள்ளது.



  • Mar 22, 2025 23:11 IST

    நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில்: தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

    தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வரும் நிலையில், வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!



  • Advertisment
    Advertisements
  • Mar 22, 2025 20:21 IST

    கிரிக்கெட் பார்க்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய QR குறியீடு

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'சென்னை சிங்கம் IPL QR குறியீடு' என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது சென்னை பெருநகர காவல் துறை.



  • Mar 22, 2025 18:50 IST

    த.வெ.க. பொதுக்குழு கூட்டம் - குழு அமைப்பு

    28ம் தேதி விஜய் தலைமையில் நடைபெறவுள்ள த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு, குழுக்கள் அமைப்பு அமைக்கப்பட்டுள்ள. வரவேற்புக்குழு, தொழில்நுட்பக்குழு, ஊடக மேலாண்மைக் குழு என பல்வேறு குழுக்களில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.



  • Mar 22, 2025 18:47 IST

    செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அனுமதி!

    செவ்வாய் கிரகத்திலும் ரோவர் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ள மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி இருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.



  • Mar 22, 2025 18:28 IST

    கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் திருவிழா!


    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. முதல் நாளான இன்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியுடன் ஆயத்தமாகியுள்ளனர். நடிகை திஷா பதானி, ஸ்ரேயா ஹோஷல், கரன் ஆஜ்லா ஆகியோரின் ஆட்டம் , பாட்டம் நிகழ்ச்சிகளுடன் நடப்பு ஐ.பி.எல் தொடர் தொடங்கியது.



  • Mar 22, 2025 18:19 IST

    இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை , நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் , தேனி , மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Mar 22, 2025 18:00 IST

    ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு: 318 போலிப்பட்டியல் வணிகர்கள் சிக்கினர் - வணிகவரித்துறை அதிரடி

    மிழகத்தில் 318 போலிப்பட்டியல் வணிகர்கள், ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, 2 போலிப்பட்டியல் வணிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Mar 22, 2025 17:26 IST

    இலங்கை சிறையில் இருந்து விடுதலை; 11 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வருகை

    இலங்கையில் இருந்து நேற்றிரவு ஏர்இந்தியா விமானத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களும் சென்னை வந்தனர். அவர்களை விமான நிலையத்தில் மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு அனுப்பிவைத்தனர்.



  • Mar 22, 2025 16:59 IST

    சிறப்பு ரயில் இயக்கம் 

    மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு  தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மறு மார்க்கத்தில் மார்ச் 31ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் புறபடுப்பட உள்ளது. 



  • Mar 22, 2025 16:36 IST

    ஐ.பி.எல் 2025 - சூப்பர் ஓவர் போடுவதில் புதிய விதி 

    ஐ.பி.எல் போட்டிகளில் சூப்பர் ஓவர்களுக்கு அதிகபட்சம் 1 மணி நேரம் வழங்கப்படும் என புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்திற்குள் எத்தனை சூப்பர் ஓவர்கள் வேண்டுமானாலும் விளையாடிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

    போட்டி டை ஆன 10 நிமிடத்திற்குள் முதல் சூப்பர் ஓவர் தொடங்கும். அதுவும் டை ஆகும் பட்சத்தில் அடுத்த 5 நிமிடத்தில் அடுத்த சூப்பர் ஓவர் தொடங்கும். நேரக் கட்டுப்பாட்டை பொறுத்து, எது கடைசி சூப்பர் ஓவராக இருக்கும் என கள நடுவர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 



  • Mar 22, 2025 16:30 IST

    பி.எஸ்.4 ரக வாகனம் பதிவு - தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு 

    தமிழ்நாட்டில் 2020க்கு பின் பி.எஸ்.4 வாகனங்களை முறைகேடாக பதிவு செய்தது பற்றி அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பி.எஸ்.4 ரக வாகனங்கள்
    2020 ஏப்ரலுக்கு பின் தடை செய்யப்பட்டன. முறைகேடாக பதிவான வாகனங்கள் பற்றி விசாரிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். தடை செய்யப்பட்ட பி.எஸ்.4 உட்பட 315 வாகனங்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

     



  • Mar 22, 2025 16:07 IST

    'மேகதாது - தமிழகத்திற்கு தான் அதிக பயன்' -  டி.கே.சிவக்குமார்

    மேகதாது அணை கட்டினால் கர்நாடகத்தை விட தமிழகம் தான் அதிக பயனடையும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். 



  • Mar 22, 2025 15:51 IST

    மோடியை சந்தித்து மனு அளிக்க தீர்மானம் 

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே எம்.பி.க்கள் குழு பிரதமர் மோடியை சந்தித்து மனு அளிக்க தீர்மானம் போடப்பட்டுள்ளது



  • Mar 22, 2025 15:23 IST

    “இது வெறும் தொடக்கம்தான்” - கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி 

    "வெறும் எண்ணிக்கைக்காக மட்டுமல்ல, தென் மாநிலங்களின் அடையாளத்தை காக்கும் வகையிலான போராட்டம் இது. தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து, தென் மாநிலங்களின் குரலை ஒடுக்குவதை ஏற்க முடியாது. கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்வோம்" என்று சென்னையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்ற பின் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 



  • Mar 22, 2025 15:08 IST

    தொகுதி மறுசீரமைப்பு: 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வலியுறுத்தல் - கனிமொழி பேட்டி 

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்துக்குப் பின் திமுக எம்.பி. கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “இந்திய அரசியல் வரலாற்றில் இந்த கூட்டம் ஒரு மைல்கல். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒருமித்த கருத்தை வலியுறுத்தினர். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வலியுறுத்தி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுவரையறை குறித்து வெளிப்படைத் தன்மையுடன் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது,”இவ்வாறு தெரிவித்தார்.



  • Mar 22, 2025 14:10 IST

    தலைவர்களுக்கு சிறப்பு பரிசு பெட்டகம்

    தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்களான பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு அடங்கிய, அழகிய பெட்டியை விருந்தினர்களுக்கு பரிசாக  வழங்கிய முதல்வர் ஸ்டாலின்



  • Mar 22, 2025 14:09 IST

    "எங்கள் உரிமையை தான் கேட்கிறோம்" - திமுக எம். பி கனிமொழி

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தெளிவான விளக்கம் வேண்டும். திரிணாமுல் காங். கட்சி மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பிரதமரை சந்தித்து, தீர்மானங்களை அளிக்க திட்டமிட்டுள்ளோம். முதலமைச்சர் தலைமையில் அனைவரும், ஒரே அணியில் இணைந்துள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைவரும் ஒருமித்த  குரலில் பேச உள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசிடம் தெளிவான முடிவு இல்லை. மத்திய அரசு, அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும். 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதன் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும் - திமுக எம். பி கனிமொழி



  • Mar 22, 2025 13:38 IST

    அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் விருப்பத்தை ஏற்று அறிவித்துள்ளார். சென்னையில் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டம் நிறைவு



  • Mar 22, 2025 13:31 IST

    அண்ணாமலை கருப்புக்கொடி போராட்டம்

    “தமிழ்நாடு உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் விட்டுக் கொடுக்கிறார்கள்; சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் மத்திய அரசு மீது பழி போடுகிறார் முதலமைச்சர்" - விகிதாச்சாரத்தின் அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி



  • Mar 22, 2025 13:23 IST

    "கூட்டாட்சியை சிதைக்கின்றனர்” - டி.கே.சிவக்குமார்

    “கூட்டாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்டடத்தில், ஒவ்வொரு செங்கலாக உருவி கூட்டாட்சியை சிதைக்கின்றனர்; ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக, இந்த கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் அமைகிறது; தனது காலில் ஏற்பட்ட காயத்தால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை” - கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேச்சு



  • Mar 22, 2025 13:11 IST

    "7 மாநிலங்கள் 44 இடங்களை இழக்க நேரிடும்!" - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    “தற்போதைய கணக்குபடி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 7 மாநிலங்கள் 44 இடங்களை இழக்க நேரிடும், குறிப்பாக தென் மாநிலங்களின் இடங்கள் 30%-ல் இருந்து 20%-ஆக குறையும் அபாயம் உள்ளது! மக்களவை தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் நமக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும்” - கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு



  • Mar 22, 2025 12:42 IST

    "கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, உரிமை"

    உரிமைகளை காக்கும் போராட்டத்திற்கான இன்ஸ்பிரேஷன் தமிழ்நாடு; கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் - தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ராமராவ் பேச்சு



  • Mar 22, 2025 12:26 IST

    தொகுதி மறுசீரமைப்பு - பிரதமருக்கு JMR கடிதம்

    "நாடாளுமன்றத்தில் எந்த மாநிலமும் அதன் பிரதிநிதித்துவத்தை குறைக்காமல் எல்லை நிர்ணய பயிற்சி நடத்தப்பட வேண்டும். மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்காதவாறு தொகுதி மறுசீரமைப்பு தேவை" - பிரதமர் மோடிக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்



  • Mar 22, 2025 12:13 IST

    “பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம்"

    மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தி, சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை; கட்சி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து இதை எதிர்த்து போராடுவோம். டெல்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்; பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை; அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள் - கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு 



  • Mar 22, 2025 12:11 IST

    "நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்"

    “நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்; மக்கள் தொகையை நாம் கட்டுப்படுத்தியிருக்காவிட்டால் மிகவும் பெருகி வளர்ச்சி பாதித்திருக்கும்" - ஒடிஷா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொலி மூலமாக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பேச்சு



  • Mar 22, 2025 12:09 IST

    "இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம் இது"

    எண்ணிக்கை மட்டுமில்லை இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம்; தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்; மாநிலங்களோடு மத்திய அரசு அர்த்தமுள்ள உரையாடல்களை தொடங்கவேண்டும்” - கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு



  • Mar 22, 2025 11:46 IST

    அரசியல் வலிமை குறையும் - ஸ்டாலின்

    தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால், அரசியல் வலிமையும் குறையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். குறிப்பாக, "2 ஆண்டுகளாக மணிப்பூர் பற்றி எரிகிறது. நீதிக்கான அவர்கள் குரல்கள் புறக்கணிக்கிப்படுகின்றன. ஏனெனில், நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறைவு என்பதை, நம்முடைய அரசியல் வலிமை குறைப்பு என்ற கோணத்தில் பார்க்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.



  • Mar 22, 2025 11:28 IST

    ஸ்டாலின் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

    தமிழ்நாட்டின் பிரச்சனைகளை அண்டை மாநிலங்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோட்டை விட்டதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கேரள மருத்துவக் கழிவு பிரச்சனை உள்ளிட்ட பல விஷயங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 22, 2025 11:07 IST

    ஜனநாயகத்தை காக்க ஒரே அணியாக திரண்டு நிற்கிறோம் - ஸ்டாலின்

    ஜனநாயகத்தை காக்க ஒரே அணியாக திரண்டு நிற்கிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் அவர் உரையாற்றி வருகிறார். அப்போது, இந்திய கூட்டாட்சியைக் காக்கும் இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 22, 2025 10:28 IST

    இந்த நாள் வரலாற்றில் பொறிக்கப்படும் - ஸ்டாலின்

    கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறும் இன்றைய நாள், வரலாற்றில் பொறிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்தக் கூட்டத்திற்கு வருகை தரும் மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்களை அன்புடன் வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 22, 2025 09:41 IST

    கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பரிசு

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, பத்தமடை பாய், தோடர்கள் தயாரித்த சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டு சேலை, ஊட்டி வர்க்கி, குமரி கிராம்பு, கோவில்பட்டி கடலைமிட்டாய் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட உள்ளன.



  • Mar 22, 2025 09:12 IST

    "மாநில உரிமைகளை விட்டுத் தர மாட்டோம்": டி.கே. சிவகுமார் திட்டவட்டம்

    கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் இன்று சென்னைக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்தக் கூட்டம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான ஒரு தொடக்கம் தான். மாநில உரிமைகளையோ, தொகுதிகளையோ எக்காரணம் கொண்டும் விட்டுத் தர மாட்டோம்" எனத் தெரிவித்தார்.



  • Mar 22, 2025 08:14 IST

    கழிவுநீர் கால்வாயில் குதித்த நபர் மீட்பு

    சென்னை, கொடுங்கையூரில் கழிவு நீர் கால்வாயில் குதித்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை,  தீயணைப்புத் துறையினர் மீட்டனர். அவருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



  • Mar 22, 2025 07:58 IST

    'திருப்பதி கோயிலின் 7 மலைகளும் தேவஸ்தானத்திற்கு சொந்தம்': சந்திரபாபு நாயுடு

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள ஏழு மலைகளும் தேவஸ்தானத்திற்கு மட்டுமே சொந்தமானது எனவும், அதனை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், மலை அடிவாரத்தில் தனியார் உணவகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.27 ஏக்கர் நிலங்களும் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 22, 2025 07:22 IST

    வங்கி ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

    மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.



  • Mar 22, 2025 06:50 IST

    ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடக்கம்

    18வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. அதன்படி, போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.



  • Mar 22, 2025 06:43 IST

    இன்று நடைபெறும் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் அண்டை மாநில முதலமைச்சர்கள், கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.



Tamil News Update Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: