Advertisment

Chennai News Updates: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது; சென்னைக்கு 390 கி.மீ தூரத்தில் மையம்

இன்று (டிச.20) நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai IMD rain update for next 7 days Tamil News

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் கடந்த சில நாட்களாகவே  பெட்ரோல், டீசல் விலை சற்று குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று விலை சற்று உயர்ந்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.23க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.81க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

வைகை எக்ஸ்பிரஸ் ரயில்

தைப்பூசம் மற்றும் இருமுடி விழாவை ஒட்டி மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (டிச. 20) முதல் வரும் பிப்ரவரி 11ம் தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
  • Dec 20, 2024 20:56 IST
    ரேஷன் பொருட்கள் கொள்முதல் விவகாரம் குறித்து அரசு தரப்பு விளக்கம் 

    தரமான பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே ரேஷன் பொருட்கள் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்ய ஆணை ஏதும் வழங்கப்படவில்லை என நுகர்பொருள் வாணிப கழகம் கூறியுள்ளது.



  • Dec 20, 2024 20:55 IST
    வலு பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு - வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது,



  • Advertisment
    Advertisement
  • Dec 20, 2024 20:54 IST
    கொப்பரை தேங்காய்க்கான ஆதார விலை அதிகரிப்பு 

    கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  முழு கொப்பரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.12,100 ஆகவும், அரவை கொப்பரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,582 ஆகவும் ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



  • Dec 20, 2024 19:56 IST
    அமித் ஷாவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

    போரூர், சென்னை: அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



  • Dec 20, 2024 18:36 IST
    பாமக சாா்பில் திருவண்ணாமலையில் நாளை தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநாடு

    திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் பாமக சாா்பில் நாளை தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநாடு நடைபெற உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி  பங்கேற்கின்றனர்.



  • Dec 20, 2024 17:54 IST
    அமித்ஷாவுக்கு கண்டனம்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீதான பொய் வழக்கை கண்டித்து பொன்னேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்



  • Dec 20, 2024 17:53 IST
    500 உறுப்பினர்கள், 20 பொறுப்பாளர்கள்: ந.த.க.வில் இருந்து விலகிய கிருஷ்ணகிரி பிரபலங்கள்!

    கிருஷ்ணகிரியில் உள்ள 500 உறுப்பினர்கள், ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்கள் 20 பேர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறோம்.  கட்சிக்காக உழைக்கும் எங்களை எச்சில் என்கிறார் சீமான். புதிதாக வருபவர்களுக்கே முக்கியத்துவம் தருகிறார் என்று கிருஷ்ணகிரியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த நாதக பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.



  • Dec 20, 2024 17:53 IST
    துணைவேந்தர் நியமனம் - தமிழக அரசு மீது ஆளுநர் குற்றச்சாட்டு

    "தேர்வு குழுவில் வேண்டுமென்றே பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினர் தவிர்க்கப்பட்டிருக்கிறார். மூன்று பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்ப பெற வேண்டும்

    யூஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்தால், அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட நேரிடும். பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரை சேர்த்து, புதிய தேடுதல் குழுவிற்கான அரசாணையை வெளியிட வேண்டும்" என்று துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடல் குழு விவகாரத்தில் தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். 



  • Dec 20, 2024 17:47 IST
    மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

    வடதமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று  மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. 



  • Dec 20, 2024 17:32 IST
    காவல்துறை தடுக்காதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி 

    "நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் கொலை நடந்துள்ளது. இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், 
    அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 



  • Dec 20, 2024 17:30 IST
    தட்கல் திட்டத்தில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை அறிவுறுத்தல்

    10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 23, 24, 26 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.



  • Dec 20, 2024 17:25 IST
    '#StatueOfWisdom-ஆக கொண்டாடுவோம் - ஸ்டாலின் 

    "சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, குமரி எல்லையில் வானுயரச் சிலை. மூப்பிலா தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom-ஆக கொண்டாடுவோம்" என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 



  • Dec 20, 2024 17:19 IST
    நெல்லை படு கொலை சம்பவம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    நெல்லை நீதிமன்றம்  அருகே நடந்த படுகொலை சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 



  • Dec 20, 2024 17:16 IST
    பா.ஜ.க பிரமுகர் கொலை - இருவர் சரண்

    வேலூர் மாவட்ட பா.ஜ.க பிரமுகர் விட்டல் குமார் மரணம் தொடர்பாக சந்தோஷ் குமார், கமலதாசன் ஆகிய இருவர் காட்பாடி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். கடந்த 16ம் தேதி சாலையோரம் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட  விட்டல் குமார் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . 



  • Dec 20, 2024 17:14 IST
    கிறிஸ்துமஸ் - சிறப்பு ரயில் இயக்கம் 

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருவுக்கு வரும் 21ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Dec 20, 2024 17:14 IST
    தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எங்கே போய்விட்டது? - அன்புமணி கண்டனம் 

    பா.ம.க தலைவர்  அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் காவல்துறையினர் கண்முன் நடந்த படுகொலை:
    தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எங்கே போய்விட்டது?

    திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்ற இளைஞர் பட்டப்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்ற வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களையும் மீறி இந்தப்  படுகொலை நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

    மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் அனைவரும் தீவிர ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், காவல்துறையின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே வந்தது எப்படி? அப்படியானால், காவல்துறையினர் கவனக்குறைவாக இருந்தார்களா? அல்லது கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே நுழைவதை காவல்துறையினரே கண்டும் காணாமலும் விட்டுவிட்டார்களா? என்ற ஐயங்கள் எழுகின்றன. இவை அனைத்திற்கும் தமிழக காவல்துறையும், அரசும் விளக்கம் அளிக்க வேண்டும். 

    தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களில் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது, நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரை படுகொலை செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நிகழ்வின் போதும் முன்பகை காரணமாகவே இத்தகைய நிகழ்வுகள் நடப்பதாகக் கூறி காவல்துறையின் தோல்வியை நியாயப்படுத்தும் வகையில் தான் தமிழக அரசு பதிலளிக்கிறதே தவிர, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையின் அலட்சிய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. 

    நெல்லை நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு வந்தவரை கொலை செய்தவர்களை கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையினர் முன்னிலையில் படுகொலை நடைபெற்றிருக்கிறது. அதைத் தடுக்க தவறிய காவல்துறையினர், கொலை நடந்த பிறகு கொலையாளியைப் பிடிப்பது ஒன்றும் சாதனையல்ல. கொலையைத் தடுக்கத் தவறியது காவல்துறையின் படுதோல்வி. அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். 

    கடந்த சில நாட்களுக்கு முன் கடலூரில் கடை ஒன்றில் வணிகம் செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அதற்குக் காரணமானவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டு, 15 நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், அந்த வழக்கிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பது இல்லாமலேயே போய்விட்டது. அது எங்கு போயிருக்கிறது? என்பதுதான் தெரியவில்லை. 

    ஒரு மாநிலத்தில் அமைதியும், சட்டம் - ஒழுங்கும் நிலவாவிட்டால், அங்கு மக்களால் வாழ முடியாது. சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத தமிழக ஆட்சியாளர்கள், தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் இருந்து வெளியே வந்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடவும் வகை செய்ய வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார். 



  • Dec 20, 2024 17:07 IST
    அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

     

    பொன்னேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீதான பொய் வழக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

     



  • Dec 20, 2024 17:01 IST
    விஜய் முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் - பாஜக நிர்வாகி விஜயதாரணி பேச்சு 

    "அமித்ஷா விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும். விஜய் சரியான கூட்டணி வைத்தால், ஆளுங்கட்சியாக வருவதற்கு மக்கள் வாய்ப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பார்கள்" என்று  அம்பேத்கர் விவகாரத்தை, திரித்து மக்களை ஏமாற்ற காங்கிரஸ் முயற்சித்து வருவதாக காரைக்காலில் பா.ஜ.க நிர்வாகி விஜயதாரணி கூறியுள்ளார். 



  • Dec 20, 2024 16:37 IST
    தாம்பரம் சாலையில் விரிசல் - போக்குவரத்து நெரிசல்

    தாம்பரம் அருகே இரும்புலியூர் மேம்பாலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பணிகள் காரணமாக சாலையில் விரிசல் ஏற்பட்டு மண் சரிவு ஏற்பட்டதால் வாகனங்கள் மெதுவாக செல்கின்றன



  • Dec 20, 2024 16:23 IST
    ஆம்ஸ்ட்ராங் வழக்கு - காவல்துறைக்கு உத்தரவு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி  குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். 

     



  • Dec 20, 2024 16:03 IST
    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - அண்ணாமலை காட்டம் 

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "பா.ஜ.க வேலூர் மாவட்ட ஆன்மீகப் பிரிவு மாவட்ட நிர்வாகி வி. விட்டல் குமார், கடந்த 16.12.2024 அன்று, தி.மு.க ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

    பொதுமக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த திரு. விட்டல் குமாருக்கும், வேலூர் மாவட்டம் K.V.குப்பம் மேற்கு ஒன்றியம், நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான N.பாலாசேட்டு என்ற நபருக்கும், பலமுறை வாக்குவாதங்கள் நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. விட்டல் குமார் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, மாவட்ட பாஜகவினர் போராட்டமும் நடத்தினர். 

    இந்த நிலையில், திமுக ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட்டுவின் மகனின் வாகன ஓட்டுநரும், அவரது நண்பரும், இன்று நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாகத் தெரிகிறது. இதிலிருந்து, திரு. விட்டல்குமார் படுகொலையில், திமுக நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. திமுகவோ, தனது கட்சியில் சமூக விரோதிகளுக்குப் பதவியும் அதிகாரமும் கொடுத்து வருகிறது. உடனடியாக, திரு. விட்டல் குமார் அவர்கள் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்கள் கட்சிக்காரர்கள் என்பதற்காக சமூக விரோதிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், அதற்கான எதிர்வினைக்கும் திமுகவே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார். 



  • Dec 20, 2024 15:51 IST
    "எங்கும் கொலை; எதிலும் கொலை" - தி.மு.க மீது இ.பி.எஸ் கடும் தாக்கு!  

    அ.தி.மு.க பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "எங்கும் கொலை; எதிலும் கொலை" என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல.

    திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள்  தொடர்ந்து நடைபெறுவது என்பது 
    @mkstalin
     ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி!

    இதுமட்டுமின்றி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் செய்திகளில் வந்தவை:

    ●சென்னை தி. நகரில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரின் காது வெட்டு

    ●சிவகங்கையில் தாயின் கண்ணெதிரே மகனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை

    ●சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் 5 பேருக்கு கத்திக்குத்து.

    "தனிப்பட்ட கொலைகள்" என்று இன்னும் எத்தனை நாட்கள் தான் ஸ்டாலினின் திமுக அரசு சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கடந்து செல்லப் போகிறது?

    நிர்வாகத் திறன் துளியும் இல்லாமல், சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாத ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம்.

    மேற்சொன்ன குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், போட்டோஷூட்டிலும், மடைமாற்று அரசியலிலும் மட்டுமே செலுத்தும் கவனத்தை தனது முதல் பணியான சட்டம் ஒழுங்கை காப்பதிலும் செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். 

     



  • Dec 20, 2024 15:21 IST
    சென்னை உணவுத் திருவிழா - விலைப் பட்டியல் வெளியீடு 

    சென்னை மெரினாவில் இன்று முதல் 5 நாட்கள் நடைபெறும் மாபெரும் உணவுத் திருவிழாவில் இடம்பெறும் உணவு வகைகளும், அதன் விலைப் பட்டியல்களும் வெளியாகியுள்ளது.  இன்று மாலை 4 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

     



  • Dec 20, 2024 15:15 IST
    "நெல்லை கொலை நடந்தது எப்படி? " -  நேரில் பார்த்த வழக்கறிஞர் கார்த்திக் பேட்டி 

    நெல்லை நீதிமன்ற வாசலில் மாயாண்டி என்ற நபரை 7 பேர் கொண்ட கூலிப்படை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்த வழக்கறிஞர் கார்த்திக் பேசுகையில், "சரமாரியாக வெட்டிவிட்டு சாவகாசமாக தப்பிச் சென்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கொலையாளிகளை பிடிக்க முயற்சிக்கவில்லை. காரில் தப்பிய குற்றவாளிகளை வழக்கறிஞர்களே பிடிக்க முயன்றோம். எங்களோடு இருந்த உதவி ஆய்வாளர் மட்டும் ஒரு குற்றவாளியை மடக்கிப் பிடித்தார்" என்று அவர் கூறினார். 



  • Dec 20, 2024 14:52 IST
    எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கத் திட்டம்: நான் உயிரோடு இருக்கும் வரை நடக்காது - சீமான்

    எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய பேசிய நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “வேலைவாய்ப்பு, சம்பளம்தான் முக்கியம் எனக் கூறி, அனல்மின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், உங்கள் வீட்டை அதன் அருகில் கட்டிக்கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும்,  எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கத் திட்டம், நான் உயிரோடு இருக்கும் வரை நடக்காது என்று ஊடகங்களிடம் சீமான் கூறினார்.



  • Dec 20, 2024 14:46 IST
    செந்தில் பாலாஜி வழக்கு: தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை - உச்ச நீதிமன்றம் கண்டனம்

    செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வ்ழ்க்கில், தமிழக அரசு என்ன சொல்ல வருகிறது, கடந்த முறை பதில் சொல்கிறோம் என்று கூறியதால் நோட்டீஸ் அனுப்பவில்லை; தற்போது வரை தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை” என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.



  • Dec 20, 2024 14:07 IST
    ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும் - ஸ்டாலின் உறுதி

    கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், “ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க கூட்டணி வசமாகும். தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பது குறித்து காங்கிரசுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார்.



  • Dec 20, 2024 13:21 IST
    இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் முடிவெடுக்க காலக்கெடு நீட்டிக்க ஐகோர்ட் மறுப்பு 

    இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சூரிய மூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.



  • Dec 20, 2024 13:18 IST
    ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா மரணம்

    ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சரும் இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89. ஓம் பிரகாஷ் சவுதாலா தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



  • Dec 20, 2024 12:56 IST
    அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: அமித் ஷாவுக்கு இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம்

    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள விடுதலை 2 படம் இன்று வெளியாகி உள்ளது. சென்னை காசி தியேட்டரில் படம் பார்த்த இயக்குநர் வெற்றிமாறனிடம், மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பற்றிய கேள்விக்கு, அமித்ஷாவின் பேச்சு கண்டனத்துக்குரியது என்று கூறினார்.



  • Dec 20, 2024 12:15 IST
    தி.மு.க அரசின் வெற்றியை தாங்க முடியாமல் புலம்புகிறார் எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் கடும் தாக்கு

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தி.மு.க அரசின் வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாமல் புலம்பும் எடப்பாடி பழனிசாமி. ஃபெஞ்சல் புயல் பாதிப்பு பகுதிகளை இரவு பகல் பார்க்காமல் அரசு இயந்திரம் செயல்பட்டதால் தான் மக்கள் ஓரிரு நாளில் இயல்புநிலைக்கு திரும்பினர்.வயிற்று எரிச்சலால் புலம்புகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.செந்தில் காமெடி போல இ.பி.எஸ் தவறான தகவலை திரும்ப திரும்ப சொல்கிறார். எங்களை பார்த்து இவ்வளவு பேசும் ஈ.பி.எஸ்., மத்திய அரசை  பார்த்து கீச்சுக் குரலில் கூட பேச வில்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.



  • Dec 20, 2024 11:43 IST
    நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    மத்திய சட்டத்துறை அமைச்சர் மக்களவையில் தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில், குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 



  • Dec 20, 2024 11:18 IST
    ஈரோட்டில் விரைவில் ஐ.டி பார்க்- ஸ்டாலின் அறிவிப்பு

    ஈரோட்டில் விரைவில் ஐ.டி பார்க் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவிப்பு

    ஈரோட்டில் 2-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஈரோட்டில் விரைவில் ஐ.டி பார்க் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 



  • Dec 20, 2024 10:28 IST
    பொன்னேரி- சென்னை வரும் ரயில்கள் ஒரு வழிப்பாதையாக மாற்றம்

    சென்னை - எண்ணூர் வழித்தடத்தில் அத்திப்பட்டு அருகே உயர் மின்னழுத்த கேபிள் அறுந்து விழுந்ததால் அவ்வழியே செல்லும் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

    காலை 7.30 மணிக்கு தொடங்கிய ரயில் சேவை பாதிப்பு காலை 10 மணி வரை தொடர்கிறது

    பொன்னேரியில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஒரு வழிப்பாதையில் இயக்கப்படுகிறது



  • Dec 20, 2024 10:09 IST
    சென்னை- பினாங்கு தீவுக்கு தினசரி விமான சேவை

    நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த, மலேசியாவின் பினாங்குத் தீவுக்கு சென்னையில் இருந்து வரும் 21ம் தேதி முதல் தினசரி விமான சேவை தொடங்குகிறது. 



  • Dec 20, 2024 09:46 IST
    சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 79.17% நீர் இருப்பு

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 79.17% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில், மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில், தற்போது 9.308 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.

    செம்பரம்பாக்கம் - 82%

    புழல் - 83.3%

    பூண்டி - 87.37%

    சோழவரம் - 28.86%

    கண்ணன்கோட்டை - 87%



  • Dec 20, 2024 09:45 IST
    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 3,004 கன அடியாக குறைவு

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 3,004 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 111.02 அடியாகவும், நீர் இருப்பு 91.915 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,300 கன அடியாக உள்ளது



  • Dec 20, 2024 09:23 IST
    சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

    சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  உயரழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிப்பு. எண்ணூர், திருவொற்றியூர் ரயில் நிலையங்களில் ஒன்றன் பின் ஒன்றாக ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். 



  • Dec 20, 2024 08:06 IST
    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு

    தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  (டிசம்பர் 22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 20, 2024 07:58 IST
    புதுச்சேரி - பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு

    புதுவையில் 6 ஆண்டுகளுக்குப் பின் அரசுப் பேருந்து கட்டணம் உயர்தப்பட்டுள்ளது. ஏ.சி., வசதி இல்லாத டவுன் பேருந்துகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5ல் இருந்து 7 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

    ஏ.சி., டவுன் பேருந்து குறைந்தபட்ச கட்டணம் 10ல் இருந்து 13 ரூபாயாகவும், டீலக்ஸ் ஏ.சி., பேருந்துகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் 12ல் இருந்து 16 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 36ல் இருந்து 47 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி - கடலுார் பஸ் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது,



  • Dec 20, 2024 07:56 IST
    6 மாவட்டங்களில் மழை

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை இன்று பெய்யும், நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    சென்னையில் பல்வேறு இடங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது

     



  • Dec 20, 2024 07:53 IST
    ராகுல் மீது வழக்குப் பதிவு 

    நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் என்.டி.ஏ மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிகள் நேற்று போராட்டம் நடத்தி நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில்  பாஜகவின் இரண்டு எம்.பி.க்கள் காயமடைந்ததை அடுத்து, பாஜக அளித்த புகாரின் பேரில், டெல்லி காவல்துறை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாரதீய நியாய சன்ஹிதாவின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. 

    ராகுல் தள்ளி விட்டதாக பாஜக அளித்த புகாரில்  டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

     



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment