/indian-express-tamil/media/media_files/2025/07/16/seeman-2025-07-16-16-49-10.jpg)
Today Latest Live News Update in Tamil 2 August 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. சி.என்.ஜி. ஒரு கிலோ கிராம் ரூ.91.50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
-
Aug 03, 2025 00:27 IST
புதுக்கோட்டையில் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டிய கனமழை
புதுக்கோட்டையில் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டிய கனமழையால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்த வெள்ளம். பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் அவதி அடைந்துள்ளனர்.
-
Aug 02, 2025 20:25 IST
கவின் வழக்கு - சுர்ஜித்திற்கு காவல் நீட்டிப்பு
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் வழக்கில் கைதான சுர்ஜித்திற்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 28ம் தேதி கைதான சுர்ஜித் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுர்ஜித்திற்கு வரும் 14ம் தேதி வரை காவலை நீட்டித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Aug 02, 2025 20:25 IST
த.வெ.க பூத் கமிட்டி பயிற்சி கருத்தரங்குகள் : நேரலையில் பார்க்கும் கட்சி தலைமை
தவெக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு புகார்
எழுந்த நிலையில், மாவட்ட அளவில் நடைபெறும் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கை கட்சி தலைமை தலைமையின் நேரடி காணொலி மூலம் கண்காணிக்க தகவல் வெளியாகியுள்ளது. தவெக சார்பில் மாவட்ட அளவிலான பூத் கமிட்டி பயிற்சி கருத்தரங்குகள் தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கை விஜய் அல்லது தவெக பொதுசெயலாளர் ஆனந்த்
காணொலி மூலம் கண்காணிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. -
Aug 02, 2025 20:22 IST
15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி மாவட்டங்களில்
இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு. திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், தி.மலை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு. ராமநாதபுரம் தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நீலகிரி, கோவையிலும்
லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது, -
Aug 02, 2025 18:58 IST
எண்ணூர் கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் தூர்வாரும் பணி - நீர்வளத்துறை
சென்னை: எண்ணூர் கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் தூர்வாரும் பணி ஒரு மாதத்துக்குள் நிறைவு பெறும் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. பூண்டி புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளின் மதகுகளை தானியங்கி மூலமாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாத பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.
-
Aug 02, 2025 18:35 IST
பா.ம.க விதிகளின்படியே அன்புமணி தலைமையில் பொதுக்கூட்டம் - வழக்கறிஞர் பாலு பேட்டி
அன்புமணி பொதுக்குழுவை கூட்டியிருப்பது சட்டவிரோதம் என ராமதாஸ் கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று வழக்கறிஞர் பாலு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படியே கூட்டப்படுவதாக வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்தார். மேலும், பாமக பொதுக்குழு வரும் 16ம் தேதி நடக்கும் என சமூக வலைத்தளத்தில் வெளியான அறிவிப்பில் யார் வெளியிட்டார்கள் என்பது இல்லை. பாமக விதியின்படி ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒருவாரத்துக்கு முன்பாக அறிவிப்பு வெளியிட்டால் போதுமானது" என்று அவர் கூறியுள்ளார்.
-
Aug 02, 2025 17:56 IST
பா.ம.க அலுவலகம் தைலாபுரத்தில் இல்லை - வழக்கறிஞர் பாலு பரபர பேட்டி
"எந்தக் காலத்திலும் பா.ம.க-வின் தலைமை அலுவலகம் தைலாபுரத்தில் இல்லை. கட்சி தொடங்கியது முதல் சென்னையில் தான் உள்ளது. சட்டமன்ற தேர்தலில் பா.ம.க-வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்படுள்ள தகவலை தேர்தல் ஆணையம் அன்புமணியின் தியாகராய அலுவலகத்துக்கே அனுப்பியுள்ளது" என்று வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
-
Aug 02, 2025 17:29 IST
ராஜா என்ற கருத்துக்கு எதிரானவன் நான் - ராகுல் காந்தி
எனக்கு ராஜாவாக மாற வேண்டும் என்ற எண்ணம் இல்லை; ராஜா என்ற கருத்துக்கே எதிரானவன் நான். காங்கிரஸ் தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
-
Aug 02, 2025 16:59 IST
ஜிவிக்கு தனுஷ் வாழ்த்து
தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று , 2வது தேசிய விருது வென்றுள்ள ஜி.வி.பிரகாஷ்-க்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Aug 02, 2025 16:58 IST
அன்புமணி பொதுக்குழு குறித்து அழைப்பு இல்லை: ராமதாஸ்
ஆகஸ்ட் 9யில் அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அழைப்பு வரவில்லை. எந்த அழைப்பையும் எதிர்பார்த்து நான் காத்திருக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
Aug 02, 2025 16:47 IST
பாலியல் வன்கொடுமை - பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை
பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து எம்.பி, எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
Aug 02, 2025 16:22 IST
சீமானுக்கு இடைக்காலத் தடை
டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பொது வெளியில் ஆதாரமின்றி அவதூறு கருத்து தெரிவிப்பதாகக்கூறி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். ரூ. 2.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Aug 02, 2025 16:19 IST
கிணற்றில் விழுந்த 2 பெண் சிறுமிகள் உயிரிழப்பு
திண்டுக்கல் பொன்மாந்துறை அருகே 2 பெண் சிறுமிகள் ஒச்சம்மாள், தமிழ்செல்வி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். 2 சிறுமிகளின் உடலை மீட்ட தாலுகா போலீசார் உடல் கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
Aug 02, 2025 16:16 IST
பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து
திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம். தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன.
-
Aug 02, 2025 16:01 IST
கவின் வழக்கு - ஆவணங்கள் சரிபார்ப்பு
காதல் விவகாரத்தில் உயிரிழந்த கவின் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மாநகர காவல்துறையின் விசாரணை அதிகாரி சுரேஷ், சிபிசிஐடி காவல் நிலையத்தில் ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகள் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
Aug 02, 2025 15:44 IST
சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு!
தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50% ஆக 15க்குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மீதி 50 சதவீதத்தை செப்டம்பரில் செலுத்தப்படும் எனவும் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கப்பலூர், எட்டூர் வட்டம், சாலைப்புதூர், நாங்குநேரி சுங்கச் சாவடிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.276 கோடி கட்டணத்தை செலுத்தாமல் உள்ளதாக வழக்கு போட்டுள்ளது.
-
Aug 02, 2025 15:40 IST
திமுக நிர்வாகியை கொன்றவரின் தந்தை கொலை - பழிக்குப்பழியா?
சிவகங்கை, சாமியார்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கருப்பையாவின் மகன் விக்கி என்ற கருணாகரன் திமுக நிர்வாகி பிரவீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.கருணாகரனின் தந்தை கருப்பையா, ஆடுமேய்க்கும் தொழில் செய்து வந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பழிக்குப்பழியாக கொலையா? என்ற கோணத்தில் சிவகங்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Aug 02, 2025 15:11 IST
பாமகவுக்கு வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது - ராமதாஸ்
நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சியை வேறு யாரும் உரிமை கோர முடியாது. பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு முன்பு தகவல்கள் தெரிவிக்க வேண்டும். அன்புமணி அறிவித்துள்ள பாமக பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
-
Aug 02, 2025 15:09 IST
உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் - ராமதாஸ்
தைலாபுரம் வீட்டில் உளவுக்கருவிகள் வைத்து உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான் என ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
-
Aug 02, 2025 14:41 IST
நீதி மறுக்கப்படவோ, தாமதப்படவோ கூடாது - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
61 ஆயிரம் வழக்குகளில் பல ஆண்டுகளாக பிடி வாரண்டை அமல்படுத்தாமல் இருப்பது குறித்து உயர்நீதிமன்றம் அதிர்ச்சி. “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல் குறித்த நேரத்தில் செயல்படுத்த வேண்டும்“ குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால், தலைமறைவு குற்றவாளி என அறிவிக்க வேண்டும். தலைமறைவான குற்றவாளியின் சொத்துக்களை முடக்கி சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவு. நீதிமன்ற கதவுகளை தட்டும் மக்களுக்கு நடைமுறை குளறுபடிகளால் நீதி மறுக்கப்படவோ, தாமதப்படவோ கூடாது என்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Aug 02, 2025 14:34 IST
தேசிய திரைப்பட விருது வென்றோருக்கு நடிகர் சங்கம் பாராட்டு
தேசிய திரைப்பட விருது வென்றோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்கு தென்னிந்திர நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
Aug 02, 2025 14:17 IST
வெளி மாநிலத்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாற்ற பா.ஜ.க சூழ்ச்சி - கருணாஸ் அறிக்கை
நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ கருணாஸ் வெளி மாநிலத்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாற்ற பா.ஜ.க சூழ்ச்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக எச்சரித்துக் கொண்டே இருந்தோம்! எந்த அரசும் அதற்கு செவிசாய்க்கவில்லை. இப்போது வெளிமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக மாறப் போகிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் பலர் அலறுகிறார்கள். இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே!! சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்த செயல் திட்டத்தில் பீகரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழக வாக்களர் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளனர்.
பெரும் அதிர்ச்சி இது! 70 இலட்சம் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வாக்களர்கள் அதாவது 10% வெளிமாநிலத்திவர் என்றால் நாளை தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தொலைநோக்குத் திட்டத்தை நீண்டகாலமாக செய்துவருகிறது பா.ஜ.க. எப்படியாவது தமிழ்நாட்டை பீகாராக, மத்திய பிரதேசமாக மாற்றவேண்டும் என்ற திட்டத்தில் இந்திக்காரர்களை மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு குடியேற பா.ஜ.க. அரசு அனுமதித்தது. தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் யார் வந்தாலும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. வந்தாரை வாழ வைப்போம் என்ற பெரிய மனதோடு தமிழ்நாட்டு வேலைகளுக்கு வெளிமாநிலத்தவரை அனுமதித்தார்கள் இப்போது தமிழ்நாட்டில் அவர்களும் வாக்களர்களாக மாறப் போகிறார்கள்.
வெளிமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கக் கூடாது. வாக்களர்களாக மாற்றக் கூடாது. 90% வேலை தமிழ்நாட்டு தமிழர்களுக்கே என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். இப்போது எல்லாம் தலை கீழாக மாறிவிடுமோ என்ற அச்சம் நமக்கு இருக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 34 லட்சத்து 87 ஆயிரத்து 974 வெளிமாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து தங்கி உள்ளனர். இந்த எண்ணிக்கை இப்போது பல மடங்காக மாறிவிட்டது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிந்து விட்டால், தமிழ்நாட்டில் தற்போது உள்ள வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 70 லட்சம் பேர் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் உரிமை பெறுவர்கள். அவ்வாறு நடந்தால் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பா.ஜ.க.விடம் கையளிக்கப்படும்.
ஏனென்றால் பீகார், உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர் அனைவரும். பா.ஜ.க.விற்குதான் அரசியல் வழியாக பங்குகளிப்பு செய்வார்கள். அப்படி செய்தால் தமிழ்நாட்டின் அரசியல் நிலை என்ன வாகும். தமிழ்நாட்டில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமே அது உடனடியாக நடந்தேறும். ஆகவே தமிழ்நாடு அரசு உடனடியாக இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, வெளிமாநிலத்தவரை வெளியேற்றும் செயலில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று தமிழ்நாட்டில், நகரம் தொடங்கி கிராமம் வரை இந்திக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. பா.ஜ.க. சனாதன கும்பல் அவர்கள் வழியாகத்தான் தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்தியை தமிழர்களிடையே திணிக்கிறது.
மண்ணின் மக்களின் அனைத்து வேலை வாய்ப்புகளும் இந்திக்காரர்கள் வசம் சென்றடைந்து விட்டது. இப்போது கிராமப்புற வங்கிகளில் மேலாளர்கள், எழுத்தர்களாக வட இந்தியர்களைப் பணியமர்த்துகிறார்கள். அவர்கள் தமிழும் பேசுவதில்லை, ஆங்கிலமும் பேசுவதில்லை. பா.ஜ.க. அரசு தமிழர் இன ஒதுக்கல் கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து இந்திக்காரர்களை திட்டமிட்டே பணியமர்த்துகிறது. ஆகவே நாம் விழித்துக் கொள்ளவேண்டும். கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதுபோல், தமிழ்நாட்டிலும் மத்திய, மாநில அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை உருவாக்க வேண்டும். வெளிமாநிலத்தவர்களை வேலைக்கு அழைத்து வந்தாலும், வேலை கொடுக்கும் ஒப்பந்தபடி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இன்னர் லைன் பர்மீட் என்ற சட்டம் உள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டிலும் உள் அனுமதிச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். இதை உடனடியாக நடைமுறைப் படுத்தினால் வெளியாரின் மிகை எண்ணிக்கையிலிருந்தும், எதிர்கால அரசியலிலிருந்தும் நாம் தப்பிக்க முடியும் இல்லையேல் தமிழ்நாடு பீகார். உத்திரபிரதேசமாக மாறும். நாம் இரண்டாம் தர குடிமக்களாக மாறுவோம்! ஆகவே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சேர்க்கப்படவுள்ள 70 இலட்சம் வெளிமாநிலத்தவரை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது! உடனடியாக தமிழக அரசு தடுத்த நிறுத்தவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!" என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.
-
Aug 02, 2025 14:04 IST
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஆக.5ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Aug 02, 2025 13:56 IST
நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - பரபரப்பு
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது கார். தீ விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது, ஆனால் அதிர்ஷ்டவசமாக மத போதகர்கள் உயிர்தப்பியுள்ளனர்.
-
Aug 02, 2025 13:47 IST
இயற்கை விவசாயம் நோக்கி நாம் செல்ல வேண்டும்: அண்ணாமலை பேச்சு
இயற்கை விவசாயம் நோக்கி நாம் செல்ல வேண்டும்; மாணவர்கள், இளைஞர்கள் விவசாய பயிற்சித் திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஐஐடிக்குள் வந்தாலும் விவசாயத்தை வைத்து அறிவியலையும் பார்க்க வேண்டும்; தமிழகத்தில் 75,000 ஹெக்டரில்தான் இயற்கை விவசாயம் நடைபெறுகிறது.
-
Aug 02, 2025 13:39 IST
தனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்தது அன்புமணிதான் - ராமதாஸ்
தனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்தது அன்புமணிதான் என ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதமாகும். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான். நான் நியமித்த மாவட்டச் செயலாளர்களில் 100 பேரை என்னை சந்திக்கவிடாமல் அன்புமணி தடுத்தார். என்னை சந்திக்க வராத 100 பேருக்கு மாற்றாக புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தேன் என போட்டி பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.
-
Aug 02, 2025 13:19 IST
தேர்தல் ஆணையம் பாஜகவுக்காகச் செயல்படுகிறது - பத்திரிகையாளர் அய்யநாதன்
வெளிப்படைத்தன்மை அற்ற தேர்தலை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது. தேர்தல் தொடர்பான விவரங்களை வெளியிட மறுப்பதே மோசடிகளுக்கு சான்று. இந்த அமைப்பு பாஜகவுக்காகச் செயல்படுகிறது” என்று பத்திரிகையாளர் அய்யநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
Aug 02, 2025 12:59 IST
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் விரைவில் நமது படைகளின் பலமாக மாறும்: மோடி
வாரணாசி, உ.பி: பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், "ஆபரேஷன் சிந்தூரின் போது, நமது உள்நாட்டு ஆயுதங்களின் திறனை உலகம் கண்டது. நமது வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள், 'ஆத்மநிர்பர் பாரதத்தின்' வலிமையை நிரூபித்துள்ளன, குறிப்பாக பிரம்மோஸ் ஏவுகணைகள்... பிரம்மோஸ் ஏவுகணைகள் இப்போது லக்னோவில் தயாரிக்கப்படும். பல பெரிய பாதுகாப்பு நிறுவனங்கள் உ.பி. பாதுகாப்பு வழித்தடத்தில் (UP Defence Corridor) தங்கள் உற்பத்தி ஆலைகளை அமைத்து வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் விரைவில் நமது படைகளின் பலமாக மாறும்."
#WATCH | Varanasi, UP: Prime Minister Narendra Modi says, "During operation Sindoor, the world saw the capabilities of our indigenous weapons. Our Air Defence Systems, missiles, and drones, have proved the strength of 'Atmanirbhar Bharat', especially the Brahmos missiles...… pic.twitter.com/uMIKGH8jRm
— ANI (@ANI) August 2, 2025 -
Aug 02, 2025 12:20 IST
ராகுல் காந்தி ஆவேசம்
மகாராஷ்டிரா தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. தேர்தல் முறைகேடுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். மக்களவை தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையே புதிய வாக்காளர்கள் தோன்றுகின்றனர். புதிதாக தோன்றும் வாக்காளர்களின் வாக்கு பாஜகவுக்கு செல்கிறது
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் காங்கிரஸ்க்கு ஒரு இடம் கூட கிடைக்காதது ஆச்சர்யம் தருகிறது. நான் ஒரு ராஜா என்ற கருத்துக்கு எதிரானவன் இந்த ராகுல் காந்தி. 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் முதல் தற்போது வரை ஏதோ தவறு இருக்கிறது
- ராகுல் காந்தி
-
Aug 02, 2025 12:15 IST
கால அவகாசம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
வன்னியர் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை வழங்க அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கான கால அவகாசம் கடந்த ஜூலை 11ம் தேதியுடன் முடிந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது தமிழ்நாடு அரசு.
-
Aug 02, 2025 11:43 IST
திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை
உடல்நலம் குணமடைந்து 3 வாரங்களுக்குப் பிறகு ஸ்டாலின், திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 2026 தேர்தல் குறித்து தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்கேட்கிறார்.
-
Aug 02, 2025 11:06 IST
மருத்துவமனையில் இருந்தபோது அரசு பணிகளை மேற்கொண்டேன்: ஸ்டாலின்
மருத்துவமனையில் இருந்தபோது அரசு பணிகளை மேற்கொண்டேன், மக்கள் பணிதான் முதன்மை. மக்களை சந்திப்பதுதான் எனக்கு உற்சாகம் தரும், நாட்டு மக்களின் நலம்தான் என்னுடைய நலன். கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தினோம், பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். வாக்கிங் சென்றபோது தலைசுற்றல் எனக்கு ஏற்பட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட விழாவில் ஸ்டாலின் பேச்சு
-
Aug 02, 2025 11:00 IST
பார்க்கிங் படக் குழுவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை வென்ற ‘பார்க்கிங்’ படக் குழுவுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) August 2, 2025
‘பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சினிஷ் ஶ்ரீதரன்… -
Aug 02, 2025 10:53 IST
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆரம்பம்
சாமானிய மக்களின் உடல்நலனைக் காக்க தமிழ்நாடு முழுவதும் `நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இனி சனிக்கிழமைதோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், நோய்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
Video: Sun News
#WATCH | 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் சிறப்புகள் என்ன?
— Sun News (@sunnewstamil) August 2, 2025
விழாவை தொடங்கி வைத்து பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #NalamKaakumStalin | #CMMKStalin | @mkstalin pic.twitter.com/zDlBG5nYY2 -
Aug 02, 2025 10:52 IST
மெத்தையில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
சென்னையில் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 6 மாத ஆண் குழந்தை மெத்தையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Aug 02, 2025 10:30 IST
கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 வரை உயர்வு
சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கும், சில்லறை விற்பனையில் கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Aug 02, 2025 10:29 IST
புதுச்சேரி: போக்குவரத்து ஊழியர்கள் 6வது நாளாக போராட்டம்
புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 6வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Aug 02, 2025 10:14 IST
ஜூலை மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.96 லட்சம் கோடி
ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,95,735 கோடி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் வசூலான தொகையைவிட 7.5 சதவீதம் அதிகம். கடந்த மாதம் வசூல் ரூ.1.84 லட்சம் கோடி ஆகும். இதன் மூலம் தொடர்ச்சியாக 7 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.
-
Aug 02, 2025 10:07 IST
வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தார். அதன்படி வைகோவை கண்டித்து மல்லை சத்யா இன்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். தனது போராட்டத்தை தொடங்கும் முன்னர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மல்லை சத்யா மரியாதை செலுத்தினார்.
-
Aug 02, 2025 09:58 IST
மலையாள நடிகர் ஹோட்டல் அறையில் சடலமாக கண்டெடுப்பு
பிரபல மலையாள திரைப்பட நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கலாபவன் நவாஸ் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கபட்டுள்ளார். 51 வயதான கலாபவன் நவாஸ், மிமிக்ரி கலைஞர், பின்னணிப் பாடகர், நடிகர் என பன்முகத்திறன் கொண்டவர். 1995 ஆம் ஆண்டு சைதன்யம் என்கிற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான அவர் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானார்.
-
Aug 02, 2025 09:40 IST
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் தொடக்கம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1,256 உயர்தர மருத்துவ மையங்களில் 17 சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். சனிக்கிழமைதோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறும்.தமிழகத்தில் மாநகராட்சி, ஊரக பகுதிகள், குடிசை பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படைப்படையில், ''நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
-
Aug 02, 2025 09:16 IST
கல்வியில் சமூகநீதி எதிர்காலத்தை மாற்றுகிறது: ஸ்டாலின்
எளிமையான தொடக்கத்திலிருந்து இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்கள் வரை, கல்வியில் சமூகநீதி எதிர்காலத்தை மாற்றுகிறது என்பதற்கு தமிழ்நாட்டின் மாணவர்கள் உறுதியான சான்றாக நிற்கிறார்கள் என ஆங்கில செய்தியை மேற்கோள் காட்டி முதல்வர் மு.க ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் கல்வி என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இலக்கு என ஆங்கில நாளேடு கட்டுரை வெளியிட்டிருந்தது.
-
Aug 02, 2025 08:56 IST
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு: இருவர் கைது
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு புகாரில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். வரிவிதிப்பு குழுத் தலைவரான விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். வரிவிதிப்பு முறைகேடு வழக்கில் ஏற்கெனவே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Aug 02, 2025 08:49 IST
ரஷ்யாவின் குரில் தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவின் குரில் தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 11.50 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளது.
-
Aug 02, 2025 08:48 IST
மேட்டூர்: 16 கண் மதகுகள் வழியாக நீர்திறப்பு நிறுத்தம்
கடந்த 4 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இரவில் வினாடிக்கு 16,500 கனஅடியாக குறைந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரானது அணையையொட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாகவே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முதல் நிறுத்தப்பட்டது.
-
Aug 02, 2025 08:15 IST
நாளை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் -வானிலை மையம்
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (ஆக.3) மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 02, 2025 08:05 IST
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கிராமங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி. சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழையால் இதமான சூழல் ஏற்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஆக.02) கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு தகவல் அளித்துள்ளது.
-
Aug 02, 2025 07:43 IST
பராமரிப்பு பணிகள் - இன்று 17 புறநகா் ரயில்கள் ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிபூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஆக. 2) ரத்து செய்யப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக சனிக்கிழமை (ஆக. 2) சென்ட்ரலிலிருந்து காலை 11.35, பிற்பகல் 1.40, 3.05 மணிக்கும், கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40, 2.40, 3.45 மணிக்கும் பொன்னேரிக்கு சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். பொன்னேரியிலிருந்து பிற்பகல் 1.18, 2.48, 3.33, மாலை 4.03, 5.18 மணிக்கு சென்ட்ரலுக்கும், மாலை 4.47 மணிக்கு கடற்கரைக்கும் ரயில்கள் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 12.05 மணிக்கு சென்ட்ரலுக்கும், சூலூா்பேட்டையிலிருந்து மாலை 4.30 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 02, 2025 07:40 IST
நாளை முதல் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம்
எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸை தொடர்ந்து நாளை முதல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் தேமுதிக நிர்வாகிகள், பொதுமக்களை மாநிலம் முழுவதும் பிரேமலதா சந்திக்கிறார்.
-
Aug 02, 2025 07:27 IST
காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.