Tamil Nadu News Live Updates: பிளாஸ்டிக் பயன்பாடு தடைக்கு பின் ரூ21.47 கோடி அபராதம் வசூல் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

Tamil Nadu news live updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu news live updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN pollution control board

Today Latest Live News Update in Tamil 19 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jul 19, 2025 18:51 IST

    பிளாஸ்டிக் பயன்பாடு தடைக்கு பின் ரூ21.47 கோடி அபராதம் வசூல் -  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

    பிளாஸ்டிக் பொருளுக்கு தடை அரசாணை பிறப்பித்த பின், ரூ.21.47 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 17.23 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என ஐகோர்ட்டில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்தது. அரசாணையை ஊட்டி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் முழுமையாக அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. 

    ஊட்டியில் மே மாதம் நடந்த நாய் கண்காட்சியில் பெட் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கண்காட்சிக்கு நாய் அழைத்து வந்த வாகனங்களில் பெட் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டுள்ளன நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. நாய் கண்காட்சியில் பெட் பாட்டில் பயன்படுத்திய நபர்களுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்து நிர்வாகம் உத்தரவிட்டது. நீலகிரியில் அரசு, தனியார் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தப்படவில்லை என உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.



  • Jul 19, 2025 18:41 IST

    நடிகர் ஷாருக்கானுக்கு காயம் 

    மும்பையில் நடைபெற்ற 'கிங்' படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்டண்ட் செய்தபோது, ஷாருக்கானுக்கு தசை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கும்நிலையில், ஒருமாதம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    இதனைத்தொடர்ந்து, 'கிங்' படத்தின் படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தப்படுவதாகவும், அக்டோபர் மாதத்திற்கு பின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என்றும் படக்குழு தெரிவித்திருக்கிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்தப் படம், ஆக்சன் திரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



  • Advertisment
  • Jul 19, 2025 18:17 IST

    ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அன்மோல் ககன் மான் ராஜினாமா

    பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அன்மோல் ககன் மான் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பஞ்சாப் சட்டப்பேரவை தலைவருக்கு அன்மோல் ககன் மான் அனுப்பியுள்ளார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அன்மோல் ககன் மான், தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 



  • Jul 19, 2025 17:42 IST

    திருப்புவனம் அஜித் வீட்டில் சி.பி.ஐ விசாரணை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் விசாரணையின் போது அஜித் குமார் மரணமடைந்த விவகாரத்தில் அஜித் குமாரின் இல்லத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் 



  • Advertisment
    Advertisements
  • Jul 19, 2025 17:29 IST

    தலைகுப்புற கவிழ்ந்த லாரி

    கொடைக்கானலுக்கு கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த லாரி மலை கிராமத்தில் பொருட்களை இறக்கிய போது மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், 20 அடி பள்ளத்தில் லாரி குப்புற கவிழ்ந்ததில் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார். 



  • Jul 19, 2025 17:20 IST

    பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் 'விரைவில் நல்ல செய்தி' - அமைச்சர் அன்பில் மகேஷ்

    பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்கள் 8 நாட்களாக போராடி வரும் நிலையில், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். 



  • Jul 19, 2025 16:53 IST

    திருப்புவனம் அஜித்குமார் வீட்டில் சி.பி.ஐ விசாரணை

    திருப்புவனம் அருகே போலீஸ் விசாரணையின் போது அஜித் குமார் உயிரிழந்த வழக்கை தற்போது, சி.பி.ஐ விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி, இன்று அஜித் குமாரின் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.



  • Jul 19, 2025 16:24 IST

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை - வாகன ஓட்டிகள் அவதி

    சென்னையில் மயிலாப்பூர், வடபழனி, எழும்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.



  • Jul 19, 2025 15:12 IST

    கும்மிடிப்பூண்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை - சக மாணவன் கைது

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சக மாணவனை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



  • Jul 19, 2025 14:52 IST

    அதிமுக-பாஜக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை: அண்ணாமலை பேட்டி

    அதிமுக – பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என நாமக்கல்லில் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுக்கும் முடிவே இறுதியானது என தெரிவித்தார்.



  • Jul 19, 2025 14:39 IST

    அதிமுக கூட்டணியில் இருந்து ஜ.மு.க. வெளியேறியது..!!

    10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்து வந்த ஜனநாயக முஸ்லிம் கட்சி வெளியேறியது. பாஜகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைப்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவு தருவதாக அக்கட்சி நிறுவனர் தமீம் அறிவித்தார்.



  • Jul 19, 2025 14:37 IST

    சென்னை மெட்ரோவுக்கு கிடைத்த அங்கீகாரம்!

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நிலையான வளர்ச்சியின் தலைமைத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விம்கோ நகர் பணிமனை, இந்திய பசுமை கட்டுமான கவுன்சிலிடமிருந்து (IGBC) மதிப்புமிக்க “தங்க மதிப்பீட்டை” பெற்றுள்ளது. பணிமனையின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டு செயல்முறைகளை எடுத்துக்காட்டும் வகையில், 'பசுமை தொழிற்சாலை கட்டிடம்" பிரிவின் கீழ் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது.



  • Jul 19, 2025 14:23 IST

    ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை விதிப்பு

    ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை விதித்து மருத்துவ நலப்பணிகள் இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார். அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் உயிர்காக்கும் டயாலிசிஸ் சிகிச்சை மட்டும் மேற்கொள்ள அனுமதி. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கிட்னி திருட்டு நடப்பதாக வந்த தகவலை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் நடவடிக்கை மேற்கொன்டுள்ளனர்.



  • Jul 19, 2025 14:23 IST

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 6% குறைவாக பதிவு: வானிலை மையம் தகவல்..!!

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 6% குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 45% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பாக 124.4 மி.மீ. மழை பொழியும் நிலையில் இதுவரை 180.8 மி.மீ. மழை பொழிந்துள்ளது.



  • Jul 19, 2025 12:02 IST

    சிறுமி வன்கொடுமை: புகைப்படம் வெளியீடு

    திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது

    கிரெடிட்: தந்தி டிவி



  • Jul 19, 2025 12:01 IST

    திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை

    போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில் திருப்புவனம் காவல் நிலையத்தில் 10 பேர் கொண்ட சிபிஐ குழு விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jul 19, 2025 11:53 IST

    பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: மாணவர்கள் காயம்

    திருச்செந்தூர், சேதுக்குவாய்த்தான் பகுதியில் தனியார் பள்ளி வேன்,  அரசு பள்ளி வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில்  3 மாணவர்கள் காயம் அடைந்தனர். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Jul 19, 2025 11:53 IST

    கனியாமூர் பள்ளி வன்முறை வழக்கு- 306 பேர் ஆஜர்

    2022 கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை வழக்கு; குற்றம்சாட்டப்பட்ட  306 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர். வழக்கை  செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.



  • Jul 19, 2025 11:48 IST

    16 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், கரூர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை ஆகிய 16 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது 

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Jul 19, 2025 11:22 IST

    2018 மோதல் வழக்கு: சீமான் விடுவிப்பு

    2018-ல் திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும் மதிமுகவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் சீமான் உள்ளிட்ட 19 பேரையும் விடுவித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு



  • Jul 19, 2025 11:00 IST

    மு.க.முத்து மறைவு: ஸ்டாலின் உருக்கம்



  • Jul 19, 2025 10:57 IST

    10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அதிமுக கடிதம்

    கும்மிடிபூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அதிமுக கடிதம் அனுப்பியுள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    அதிமுக கடிதம்



  • Jul 19, 2025 10:55 IST

    உதகையில் 3 சூழல் சுற்றுலா மையங்கள் இன்று ஒரு நாள் மூடல்

    கனமழை எச்சரிக்கை காரணமாக உதகையில் 3 சூழல் சுற்றுலா மையங்கள் இன்று ஒரு நாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது

    அவலாஞ்சி, பைன் மரக்காடு, 8வது மையில் டீ பார்க் ஆகிய 3 சுற்றுலா தலங்கள் இன்று ஒருநாள் மூடப்படும்



  • Jul 19, 2025 10:24 IST

    பொறியியல்: 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு

    முதல் சுற்று பொறியியல் கலந்தாய்வில் 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் சுற்று கலந்தாய்வில் 11,359 மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 23-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். தற்காலிக ஆணை பெற்றவர்கள் ஜூலை 23-க்குள் உதவி மையம் சென்று சேர்க்கையை உறுதி செய்யவேண்டும். ஜூலை 23-க்குள் சேர்க்கையை உறுதி செய்யாதவர்களின் இடங்கள் காத்திருப்பில் உள்ளவர்களுக்கு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.



  • Jul 19, 2025 10:09 IST

    மு.க. முத்து உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மு.க. முத்துவின் சகோதரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.



  • Jul 19, 2025 10:04 IST

    தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 7 -11 செ.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் 4 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4 நாட்கள் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்தது



  • Jul 19, 2025 10:02 IST

    அண்ணாமலையார் கோயில் சிறப்பு தரிசன கட்டணத்தை உயர்த்துவதா?

    தமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரூ.50-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்போவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. கடந்த 4 ஆண்டுகளாக கோவில்களில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல், கூட்ட நெரிசலாலும், கோவில் நிர்வாகக் குளறுபடிகளாலும், பக்தர்கள் அவதிப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அறநிலையத் துறைக்கு, ஆட்சி முடியும் தருவாயில் பக்தர்கள் மீது என்ன திடீர் பாசம்?. ஏழை மக்களை வஞ்சிக்கும் இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும். இல்லையேல் அந்த அண்ணாமலையார் சாட்சியாக தமிழக பா.ஜனதா சார்பாக மிகப்பெரிய அறப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



  • Jul 19, 2025 09:30 IST

    கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு திமுக தொண்டர்களிடையே மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



  • Jul 19, 2025 09:25 IST

    ”தமிழக கடற்பரப்பை தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்”

    சிறு துறைமுகங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். கடல் வளங்களை அழித்து, மீனவ மக்களை வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற வழிவகுக்கும் கொடுந்திட்டமான, சிறு துறைமுகங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.



  • Jul 19, 2025 09:12 IST

    சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் 6 பேர் சுட்டுக் கொலை

    சத்தீஷ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 6 பேர் சுட்டுக் கொலை செய்தனர். அபுஜ்மத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்



  • Jul 19, 2025 09:08 IST

    கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட்

    கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ள்ளது. இந்த 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. கனமழையை அடுத்து, கண்ணூர், வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து உள்ளனர்.



  • Jul 19, 2025 09:07 IST

    கூவி, கூவி ஆட்களை சேர்க்கும் தி.மு.க. - அண்ணாமலை விமர்சனம்

    திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை, கர்மவீரர் காமராஜர் குறித்து பல்வேறு விதமாக அவதூறு பேசியவர்கள் தி.மு.க.வினர். இந்த பிரச்னை பெரிதாகி மக்கள் கோபமடைந்தவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என்கின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் எதுவும் பேசவில்லை. 'ஓரணியில் தமிழ்நாடு' முகாமில் இணைந்தால் மட்டுமே ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று பகிரங்கமாக தெரிவித்து வலுக்கட்டாயமாக மக்களை கட்சியில் தி.மு.க.வினர் சேர்த்து வருகின்றனர். மாம்பழம் விற்பது போல கூவி, கூவி ஆட்களை அவர்கள் சேர்க்கின்றனர். வருகிற தேர்தல், சட்டம்-ஒழுங்கை மையப்படுத்தும் தேர்தலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



  • Jul 19, 2025 08:52 IST

    தேசிய அளவில் தூய்மையான நகரில் சென்னைக்கு 38-ஆவது இடம்

    நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் சென்னை மாநகருக்கு 38-ஆவது இடம் கிடைத்துள்ளது. அதன்படி 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள மாநகராட்சிகளின் பட்டியலில் சென்னைக்கு 38-ஆவது இடம் கிடைத்துள்ளதாக, சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் குப்பைகளை அகற்றுதல், அகற்றப்பட்ட குப்பைகளைத் தரம் பிரித்து கையாளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் 6,822 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் கோவை 28-ஆவது இடத்தையும், மதுரை 40-ஆவது இடத்தையும், திருச்சி 49 -ஆவது இடத்தையும் பெற்றுள்ளதாகத் தெரிவித்தனா்.



  • Jul 19, 2025 08:50 IST

    வரதட்சணை வழக்கு - கணவர் பூபாலன் கைது

    தேனியைச் சேர்ந்த ஆசிரியையை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய வழக்கில், அவரின் கணவர் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பூபாலனின் பெற்றோர், சகோதரி மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Jul 19, 2025 08:24 IST

    இஸ்ரேல்-சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்

    இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த தகவலை துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பாரக் உறுதி செய்துள்ளார். இதற்கு துருக்கி, ஜோர்டான் மற்றும் அண்டை நாடுகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதன்படி, ஸ்வெய்டா மாகாணத்தில் சிரியாவின் குறிப்பிட்ட அளவிலான படையினர் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் கனடாவில் உள்ள சிரிய தூதரகம் இதற்கு உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.



  • Jul 19, 2025 08:19 IST

    நெல்லை சந்திப்பில் வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம்

    நெல்லை சந்திப்பில் ஈரடுக்கு மேம்பாலத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 10 பேர் காயம் அடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சென்டர் மீடியனில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. விபத்தில் வேனில் பயணித்த 2 பெண்கள், சிறுவன் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்



  • Jul 19, 2025 08:18 IST

    அரக்கோணம் தண்டவாள இணைப்பு கோளாறு சீரானது

    அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறு சீரானது. அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் கோளாறு ஏற்பட்டதால் விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் புளியமங்கலம் அருகே தண்டவாள இணைப்பில் கோளாறால் ஏற்பட்டது.



  • Jul 19, 2025 08:16 IST

    குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - குளிக்க தடை

    தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புலியருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.



  • Jul 19, 2025 08:08 IST

    உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி: விஜய் நாளை ஆலோசனை

    மதுரை மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் கலந்துரையாட இருக்கிறார். இந்த கலந்துரையாடல் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதற்கான அழைப்பு மாவட்ட செயலாளர்களுக்கு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை விஜய் அறிமுகம் செய்கிறார். இந்த புதிய செயலி வழியே உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட உள்ளது. இந்த செயலி செயல்முறை குறித்த பயிற்சி, மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து மதுரை 2-வது மாநில மாநாட்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், குழுக்கள் அமைப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.



  • Jul 19, 2025 07:59 IST

    ஓரணியில் தமிழ்நாடு: ஆதார் விவரங்கள் கேட்டு மிரட்டலா?

    தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டு வரும் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையின்போது, ஆதார் விவரங்களை கேட்டு மிரட்டுவதாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். தி.மு.க.வில் சேரவில்லை என்றால் அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர். அரசியல் பிரசாரத்துக்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது. இது, அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம் மற்றும் தனி உரிமையை மீறுவதாகும் என்று தனது மனுவில் கூறி உள்ளார்.



  • Jul 19, 2025 07:56 IST

    அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் கோளாறு

    அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் புளியமங்கலம் அருகே தண்டவாள இணைப்பில் கோளாறால் ஏற்பட்டுள்ளது. சென்னை செல்ல வேண்டிய பல்வேறு விரைவு ரயில்கள் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை- பெங்களூரு, நீலகிரி எக்ஸ்பிரஸ், காவேரி விரைவு ரயில் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டு உள்ளன. தண்டவாள பழுதினை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்



  • Jul 19, 2025 07:55 IST

    14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 19, 2025 07:53 IST

    NIA, UAPA வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் கட்டாயம்

    NIA, UAPA போன்ற சிறப்பு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்காவிட்டால், கைது செய்யப்பட்டோருக்கு ஜாமின் வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.



  • Jul 19, 2025 07:44 IST

    பாகிஸ்தானில் கனமழையால் ஒரேநாளில் 63 பேர் உயிரிழப்பு

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மேக வெடிப்பால் பெய்த கனமழையால் ஒரேநாளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 25 நாட்களில் பருவமழையால் 159 உயிரிழந்த நிலையில், 393 பேர் காயமடைந்துள்ளனர். வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததாலேயே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன



  • Jul 19, 2025 07:28 IST

    இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று ஆலோசனைக் கூட்டம்

    இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான கூட்டு உத்தியை வகுப்பது குறித்து கூட்டணித் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.



  • Jul 19, 2025 07:25 IST

    பீகார் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேறும் - பிரதமர் மோடி

    காங்கிரஸும், ராஷ்டிரிய ஜனதா தளமும் பிற்படுத்தப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.  பீகார் மாநிலம் மோதிஹரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, பீகார் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்றார். பாஜக ஆட்சியில் பிகாருக்கு பல மடங்கு அதிக நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.



  • Jul 19, 2025 07:20 IST

    சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளியைப் பிடிக்க தீவிரம்

    கும்மிடிப்பூண்டி அருகே 8 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியைப் பிடிக்க ஆந்திர எல்லையில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  7 நாட்களாகியும் இதுவரை குற்றவாளியை கைது செய்யவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சம்பவத்தில் ஈடுபட்டவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாயும் அவர் பிடிபடாமல் இருப்பது போலீசாருக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.



  • Jul 19, 2025 07:19 IST

    ”திமுகவிற்கு கம்யூ. அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன”

    “தி.மு.க. அரசாங்கத்திற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டன. திமுகவிடம் எப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சியினர் கைநீட்டி பணம் வாங்கினார்களோ, அப்பொழுதே கம்யூனிஸ்ட் கட்சியின் கதை முடிந்து விட்டது” என நன்னிலத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: