/indian-express-tamil/media/media_files/2024/12/20/kLihorh5nyvngtu2qRYb.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்!
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,769 மில்லியன் கனஅடியாக உள்ளது. அதேபோல்,1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 157 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 260 மில்லியன் கனஅடியாக உள்ளது
- Aug 09, 2025 22:22 IST
எடப்பாடியுடன் இணையும் எண்ணம் இல்லை -டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணையும் எண்ணம் எங்களுக்கு இல்லை என சென்னை அயனாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். என்.டி.ஏ. கூட்டணிக்கு ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என்றும் கூறினார்.
- Aug 09, 2025 21:57 IST
எந்த போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்படவில்லை: பாக்.,
இந்திய தரப்பிலிருந்து பாகிஸ்தானின் ஒரு விமானம் கூட சுட்டு வீழ்த்தப்படவோ அல்லது தாக்கப்படவோ இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தரப்பிலிருந்து கால தாமதமாக தெரிவிக்கப்பட்டு இருக்கும் தகவல் நம்பும் படியாக இல்லை. உண்மை தெரிய வேண்டுமாயின், இரு தரப்பிலிருந்தும் விமானப்படை தளவாடங்களை சுதந்திரமாக ஆய்வு செய்திட அனுமதிப்போம் என்றார்.
- Aug 09, 2025 21:33 IST
லெபனானில் ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடி விபத்து
லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்களை அகற்றும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் 6 ராணுவ நிபுணர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
- Aug 09, 2025 21:17 IST
”அமெரிக்க வரிவிதிப்பு மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது”
சர்வதேச வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியில், யாருக்காகவும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்வதால், இந்தியப் பொருட்கள் மீது 50% கூடுதல் வரி விதிப்பது போன்ற நெருக்கடிகள் அமெரிக்கா தரப்பில் கொடுக்கப்படும் நிலையில், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பேட்டியில், ‘இன்றைய இந்தியா மிகவும் வலிமையான, தன்னம்பிக்கை மிக்க நாடாகத் திகழ்கிறது. யாருக்காகவும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என்றார்.
- Aug 09, 2025 21:14 IST
மும்பையில் விமான சேவை பாதிப்பு-பயணிகள் அவதி
மும்பை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர். நெட்வொர்க் கோளாறு காரணமாக ஏர் இந்தியா உள்ளிட்ட விமானங்களின் புறப்பாடு தாமதம் ஏற்பட்டுள்ளது. நெட்வொர்க் கோளாறு சரிசெய்யப்பட்டு விமான சேவை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்புகிறது.
- Aug 09, 2025 21:09 IST
4K தரத்தில் "கேப்டன் பிரபாகரன்" டிரெய்லர் வெளியீடு
கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வருகிற 22ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதாவது இப்படம் 4 கே தரத்தில் டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், கேப்டன் பிரபாகரன் படத்தின் மேம்படுத்தப்பட்ட டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
- Aug 09, 2025 21:08 IST
நாகலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை
மருத்துவமனையில் மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்ட நாகாலாந்து மாநிலத்தின் கவர்னர் இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இல.கணேசன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- Aug 09, 2025 20:29 IST
எம்ஜிஆர், ஜெயலலிதா மீது அதீத மதிப்பு - திருமா
ஜெயலலிதா தன்னை பார்ப்பன பெண் என சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக கூறியதால் கலைஞரை எதிர்த்த அளவிற்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பார்ப்பனர்கள் எதிர்க்கவில்லை என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
- Aug 09, 2025 19:58 IST
"எனக்கு எதிராக ட்ரோல் செய்ய பணம் கொடுக்கப்படுகிறது"
எனக்குஎதிராகட்ரோல்செய்யபணம்கொடுக்கப்படுகிறது. என்னைவளரவிடாமல்தடுக்கின்றனர். இதுவருத்தமளிக்கிறது. என்அன்புகாட்டாவிட்டாலும்அமைதியாகஇருங்கள், அதுவேபோதுமானதுஎனபேட்டிஒன்றில்நடிகைராஷ்மிகாமந்தனாவேதனைதெரிவித்துள்ளார்.
- Aug 09, 2025 19:09 IST
அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம்
4 முக்கிய அவசரகால மருந்துகளுக்கு உச்சவரம்புவிலை நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நுரையீரல் நோய்க்கான இப்ராட்ரோபியம் மருந்தின்விலை ஒரு மில்லி ரூ.2.96ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதய பிரச்சினைக்கான சோடியம் நைட்ரோபுருசைடு மருந்து ஒரு மில்லி ரூ.28.99ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம், நெஞ்சுவலிக்கான டில்டியாசெம்மாத்திரை ஒரு காப்ஸ்யூல் ரூ.26.77ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Aug 09, 2025 19:02 IST
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- Aug 09, 2025 18:33 IST
கமல்ஹாசன் பாராட்டு
"மாறிவரும் உலகின் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களுடன் நமது மாணவர்களை உருவாக்க வேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது?" –கமல்ஹாசன் X பக்கத்தில் பதிவு
- Aug 09, 2025 17:42 IST
சென்னையில் சாலை விபத்துகள் குறைவு
சென்னையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 15% தடுக்கப்பட்டுள்ளன.
-கார்த்திகேயன், சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர்
- Aug 09, 2025 17:13 IST
தேர்தல் நாளில் லீவ் போட்டு படம்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு
தேர்தல் நாளில் லீவ் போட்டு படத்துக்கு, ஊருக்கு போயிடுறாங்க.. நம்ம கடமைகளை பண்ணால்தான் உரிமைகளை தட்டிக் கேட்க முடியும். தனியார் கல்லூரியில் நடந்த அரசியலமைப்பு தினம் நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு
Video: Sun News
#WATCH | "தேர்தல் நாளில் லீவ் போட்டு படத்துக்கு, ஊருக்கு போயிடுறாங்க.. நம்ம கடமைகளை பண்ணால்தான் உரிமைகளை தட்டிக் கேட்க முடியும்.."
— Sun News (@sunnewstamil) August 9, 2025
தனியார் கல்லூரியில் நடந்த அரசியலமைப்பு தினம் நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு#SunNews | #AnandVenkatesh | #Constitutionpic.twitter.com/ZCQ2CZnTmj - Aug 09, 2025 16:37 IST
60 எம்எல்ஏக்கள் கிடைத்தால் பாமக ஆட்சி- அன்புமணி
உங்களது விருப்பப்படி கூட்டணி அமையும் 60 எம்எல்ஏக்கள் கிடைத்துவிட்டால் பாமக ஆட்சிதான். மெகா கூட்டணி அமைத்து, யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்வோம் என பொதுக்குழு மேடையில் அன்புமணி பேசினார்.
- Aug 09, 2025 16:37 IST
தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகள் நீக்கம்
நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 334 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியது. இவை கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. தமிழ்நாட்டில் உள்ள பதிவுசெய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாதகட்சிகள் பட்டியலிலிருந்து 22 கட்சிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
- Aug 09, 2025 15:37 IST
மெகா கூட்டணி அமைப்போம்; வெற்றி பெறுவோம் - அன்புமணி
உங்கள் விருப்பப்படி கூட்டணி அமையும். மெகா கூட்டணி அமைப்போம், வெற்றி பெறுவோம். ஆட்சி அமைப்போம் தேர்தலில் நமக்கு 30- 40 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே நம்முடைய ஆட்சிதான் என்று பாமக பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
- Aug 09, 2025 15:32 IST
தமிழகம் வரும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோசை சந்திக்க ஓ.பி.எஸ்-க்கு பாஜக அழைப்பு
நாளை தமிழகம் வரும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோசை சந்திக்க ஓ.பி.எஸ்-க்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. உரிமை மீட்புக் குழுவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக ஓ.பி.எஸ் தகவல் அளித்துள்ளார்.
- Aug 09, 2025 15:22 IST
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : இந்திய விமானப்படை தளபதி தகவல்
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். சுட்டு வீழ்த்தப்பட்ட 5 போர் விமானங்களில் ஒன்று அதிநவீன கண்காணிப்பு விமானம் என்றும் எஸ் 400 ஏவுகணைகள் மூலம் பாக். போர் விமானங்களை இந்தியா தாக்கி அழித்தது என்றும் பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி.சிங் தகவல் அளித்துள்ளார்.
- Aug 09, 2025 15:07 IST
ராமதாஸ் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது - அன்புமணி
ராமதாஸுக்கு நிரந்தரமான நாற்காலி உள்ளது; அவர் நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. சில நேரங்களில் சாமிக்கு கோபம் வந்துவிடும்; இங்கு பூசாரிதான் சரியில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- Aug 09, 2025 14:30 IST
பாமக நிறுவனர் ராமதாஸின் கனவுகளை லட்சியங்களை நாம் நிறைவேற்றுவோம் : அன்புமணி பேச்சு
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, "என் மீது நம்பிக்கை வைத்து ஓராண்டு காலம் பொறுப்பில் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி. பொறுப்புகள் பதவிகளை எதிர்பார்ப்பவன் நான் அல்ல என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். என் மீது நம்பிக்கை வைத்து வந்துள்ளீர்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது. பாமக நிறுவனர் ராமதாஸின் கனவுகளை லட்சியங்களை நாம் நிறைவேற்றுவோம்,"இவ்வாறு பேசினார்.
- Aug 09, 2025 14:30 IST
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை பெறுவோரை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- Aug 09, 2025 14:29 IST
தமிழ்நாட்டில் 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 22 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து நீக்கம்
தமிழ்நாட்டில் 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 22 அரசியல் கட்சிகளின் பெயர்கள் தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன. இந்த உத்தரவை எதிர்த்து 30 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- Aug 09, 2025 14:03 IST
திமுக இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜாவை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் சேர்ந்த அன்வர் ராஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜாவை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
- Aug 09, 2025 13:46 IST
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கிடப்பில் திட்டம் - எடப்பாடி பழனிசாமி
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏரிகளை நிரப்பும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது அதிமுக ஆட்சியில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தில் 75% பணிகள் முடிந்தன; மீதமுள்ள 25% பணிகளை முடிக்காததால் பல ஏரிகள் வறண்டு கிடக்கின்றன என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
- Aug 09, 2025 13:14 IST
சென்னையில் தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
சென்னை மாநகராட்சியில் தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா. நாள் ஒன்றிற்கு தோராயமாக 3000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. ஒட்டுண்ணி நீக்க மருந்தும் செலுத்தப்பட்டு நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும்.
- Aug 09, 2025 13:14 IST
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மாதாந்திர சராசரி இருப்பு தொகை ரூ.50,000ஆக உயர்வு
புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை (Avg. Minimum Balance) நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50,000-ஆக உயர்த்தியது ஐ.சி.ஐ.சி.ஐ. இதுவே சிறு நகரங்களுக்கு ரூ.25,000-ஆகவும் கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10,000-ஆகவும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய AMB தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
- Aug 09, 2025 13:08 IST
2026 வரை அன்புமணி தலைவர் - பா.ம.க பொதுக்குழுவில் தீர்மானம்
2026 ஆகஸ்ட் வரை பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணியின் பதவிக்காலம் மே 28ம் தேதி நிறைவடைந்த நிலையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக உட்கட்சி தேர்தல் நடைபெறும் வரை அன்புமணியே பாமக தலைவராக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 09, 2025 12:40 IST
மதுவிற்கு அடிமையான மகனை கொன்ற தாய்
சென்னையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சண்டையிட்டு மிரட்டி வந்த மகன் முகிலை தாய் ஆத்திரத்தில் கத்தியால் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு வடபழனி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- Aug 09, 2025 12:32 IST
வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதலிடம் - ஸ்டாலின் பேச்சு
"கல்வியும் சுகாதாரமும் நமது தமிழ்நாட்டின் இரு கண்கள். காலிற்கு கீழ் நிலமும் தலைக்கு மேல் கூரையும் பலருக்கு கனவு, ஏழை மக்களுக்கு
இலவச பட்டா என்பது பேருதவி. 2021 முதல் தற்போது வரை சுமார் 17 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். - Aug 09, 2025 12:31 IST
பா.ம.க பொதுக்குழு தொடங்கியது!
மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பா.ம.க பொதுக்குழு தொடங்கியது. ராமாதாஸின் எதிர்ப்புக்கு மத்தியில் அன்புமணி தலைமையில் பொதுக் குழு நடைபெறுகிறது. அன்புமணி பொதுக்குழுவுக்கு தடை கோரிய ராமதாஸ் தரப்பு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்ட பேனரில் ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
- Aug 09, 2025 11:48 IST
பாலியல் உறவு: 18+ தான் சரி - மத்திய அரசு
பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு மேற்கொள்ள வயது வரம்பு 18 ஆகவே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சம்மத வயதை நீர்த்துப்போகச் செய்வது, இளம் பருவ காதலென்ற போர்வையில் விதிவிலக்களிப்பது சட்டப்படி நியாயமற்றது, ஆபத்தானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- Aug 09, 2025 11:44 IST
உறுப்பினர்களை ஆவணப்படுத்தும் அன்புமணி தரப்பு
செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அன்புமணி தலைமையில் இன்று பாமக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அன்புமணி தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களை 16 சிசிடிவி வாயிலாக அடையாளம் காணவும், வருகையை பதிவு செய்யவும் அன்புமணி திட்டமிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தில் இருதரப்பினரும் ஆவணங்களை கொடுத்து வரும் நிலையில், அன்புமணி தரப்பு உறுப்பினர்களை ஆவணப்படுத்தி வருகிறது.
- Aug 09, 2025 11:24 IST
திருப்பதி சென்ற கார் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் 3 பேர் பலியாகினர். ஆந்திரா நெல்லூர் மாவட்டம் சாகோலு அருகே கார் சென்றபோது நேர்ந்த விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். நம்புலா வெங்கட நரசம்மா, நம்புலா சுபாஷினி, அபிராம் உள்ளிட்டோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
- Aug 09, 2025 10:53 IST
தாம்பரம் சானடோரியத்தில் மருத்துவனை திறந்து வைக்கும் ஸ்டாலின்
தாம்பரம் சானடோரியத்தில்,ரூ.110 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, ரூ.7 கோடியில் சிறப்பு பல்நோக்கு பல் மருத்துவமனை, ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார ஆய்வகம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
- Aug 09, 2025 10:30 IST
2030-க்குள் நிலவில் அணுமின் நிலையம்: நாசா திட்டம்
2030-க்குள் நிலவில் அணுமின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது, நிலவில் மனிதன் நிரந்தரமாக வாழும் சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிலவில், சூரியசக்தி மற்றும் பேட்ரிகளால் மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், அணுமின்நிலையம் அவசியமானதாக கருதப்படுகிறது. ஆனாலும் பூமியின் வலிமண்டலம் வழியாக அணுக்கதிர் பொருட்களை ஏவுவது பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- Aug 09, 2025 09:07 IST
திட்டமிட்டபடி இன்று பொதுக்குழு நடைபெறும்: அன்புமணி ராமதாஸ்
பாமக பொதுக்குழுவை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி. பொதுக்குழுவுக்கு தடையில்லை, வாருங்கள் சொந்தங்களே" என்று நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
- Aug 09, 2025 09:06 IST
அமெரிக்க ஆயுத கொள்முதல் நிறுத்தமா? - மத்திய அரசு மறுப்பு
டிரம்பின் வரிவிதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கும் திட்டத்தை நிறுத்தியதாக பரவும் தகவலுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு கொள்முதல் செயல்முறைகள், பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி நடந்து வருவதாக விளக்கம் அளித்துள்ளது,
- Aug 09, 2025 09:05 IST
ஏழை என்ற சொல் இல்லை எனும் நிலை உருவாகும்: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் ஏழை என்ற சொல் இல்லை என்னும் நிலையை உருவாக்குவது தான் அதிமுகவின் லட்சியம். தேர்தல் நேரத்தில் அதற்காக நிறைய திட்டங்களை அறிவிப்போம் என விருதுநகர் சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
- Aug 09, 2025 09:03 IST
தமிழ்நாட்டு வாக்காளர்களை அடமானம் வைக்க ஈபிஎஸ் துணிந்துவிட்டாரா?துரைமுருகன் கேள்வி
வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை அபகரிக்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டு வாக்காளர்களை டெல்லியிடம் அடமானம் வைக்க ஈபிஎஸ் துணிந்துவிட்டாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
- Aug 09, 2025 08:16 IST
டிரம்ப், புதின் ஆக.15ல் பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சந்திப்பு நடைபெறும் என டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
- Aug 09, 2025 08:16 IST
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- Aug 09, 2025 08:14 IST
கடைசி வரை விஜயகாந்த் மகன், அந்த பெருமை போதும்: விஜய பிரபாகரன்
கேப்டன் பிரபாகரன்' படம் ஆகஸ்ட் 22ல் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது, இந்த படத்தின் இசை, ட்ரெய்லர் மறு வெளியீடு விழாவில், நடிகர் விஜயகாந்தின்
மகன் விஜய பிரபாகரன், எனக்கு வேற பெருமை ஏதும் வேண்டாம், கடைசி வரை விஜயகாந்த் மகன் என்கிற பெருமை மட்டும் போதும்"கண்ணீர் மல்க பேசியுள்ளார். - Aug 09, 2025 07:31 IST
இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது: அதிபர் ட்ரம்ப்
வரி விதிப்பு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியா மீது 50 சதவீதம் வரி இருப்பதால், வர்த்தக பேச்சுவார்த்தை வலுவாகும் என்று எதிர்பாக்கிறீர்களா என்ற கேள்விக்கு ட்ரம்ப் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.