Chennai News Highlights: 100% போராட்டம் தொடரும்; முடிந்தால் அப்புறப்படுத்துங்கள் - தூய்மைப் பணியாளர்கள் உறுதி

Tamilnadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamilnadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Screenshot 2025-08-13 194110

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Aug 13, 2025 20:32 IST

    18ம் தேதி இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்

    வரும் 18ம் தேதி இந்தியா வருகிறார் சீன  வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி.  இந்த சந்திப்பில், இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Aug 13, 2025 19:52 IST

    துரோகம் செய்தது திமுக: அன்புமணி

    பொய் வாக்குறுதிகளை தந்து துரோகம் புரிந்தது திமுக. பொய் வாக்குறுதிகளை தந்த திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. திமுகவுக்கு கடந்த தேர்தலில் வாய்ப்பளித்தும் மக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. திமுக ஆட்சியில் பெண்கள் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை; பாதுகாப்பு இல்லை. இட ஒதுக்கீடு தரும்படி முதல்வரை சந்தித்து முறையிட்டும் கொடுக்க மாட்டேன் என்கிறார். எல்லாம் இருந்தும் இடஒதுக்கீடு தர முதல்வருக்கு மனமில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 



  • Advertisment
  • Aug 13, 2025 19:15 IST

    100% போராட்டம் தொடரும்; முடிந்தால் அப்புறப்படுத்துங்கள் - தூய்மைப் பணியாளர்கள் உறுதி

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தூய்மை பணியாளர்களுடன் அரசு தரப்பில் 8ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதுதொடர்பாக பேசிய போராட்டக் குழுவினர், அரசுத் தரப்பு உறுதியான முடிவை அறிவிக்காததால், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.



  • Aug 13, 2025 19:00 IST

    முதலமைச்சர் ஈகோ பார்க்காமல் வர வேண்டும் - தமிழிசை

    "முதலமைச்சரிடம் வேண்டி கேட்டு கொள்கிறேன். கொள்கை முடிவுகள் இருந்தாலும் இதனை பேர் உட்காந்திருக்கிறார்கள் என்ற காரணத்திற்காகவாவது சற்று ஈகோ பார்க்காமல் வர வேண்டும்" என்று தமிழிசை கேட்டுள்ளார். 



  • Advertisment
    Advertisements
  • Aug 13, 2025 18:56 IST

    பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம்: மேயர் பிரியா

    தூய்மைப்பணியாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். தூய்மைப்பணியாளர்களுக்கு என்றுமே பணி பாதுகாப்பு இருக்கும் என்று உறுதி கூறுகிறேன் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 



  • Aug 13, 2025 18:49 IST

    டெல்லி தேர்தல் ஆணையம் செல்கிறார் அன்புமணி

    பாமக தலைவர் அன்புமணி இரு நாட்களில் டெல்லி தேர்தல் ஆணையம் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.



  • Aug 13, 2025 18:23 IST

    இறந்தவர்களோடு தேநீர் அருந்தும் வாய்ப்பு - ராகுல் காந்தி

    இறந்தவர்களோடு தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது, தனித்துவமான அனுபவத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாழ்வில் பல சுவாரஸ்ய அனுபவங்கள் கிடைத்தன; ஆனால் இறந்தோருடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு கிடைத்ததில்லை; இறந்தவர்கள் என கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோரை சந்தித்ததாக ராகுல் பதிவிட்டுள்ளார்.



  • Aug 13, 2025 18:04 IST

    வாராக்கடன் என அறிவித்த பிறகும் வசூல் நடவடிக்கை தொடரும் என்ற அறிவிப்பு குறித்து சு.வெங்கடேசன் கேள்வி

    வாராக்கடன் என அறிவித்த பிறகும் வசூல் நடவடிக்கை தொடரும் என்ற அறிவிப்பு குறித்து சு.வெங்கடேசன் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார். 'தீய்ந்துபோன டயலாக்கை எத்தனை முறை பேசுவீர்கள். 2014ம் ஆண்டில் இருந்து பெயர், தொகையோடு கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும். மக்கள் சேமிப்பு எவ்வாறு சூறையாடப்படுகிறது என்று தேசம் பார்க்கட்டும். கால் கிணறு கூட தாண்டவில்லை உங்கள் வசூல் வேட்டை; 5 ஆண்டுகளில் வாராக்கடன் வசூல் ரூ.4.16 லட்சம் கோடி. வாராக்கடனில் வசூல் செய்யப்படாத தொகை ரூ.13,98,155 கோடி' என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.



  • Aug 13, 2025 17:43 IST

    ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் பேச்சு - ஜெகன்மோகன் ரெட்டி பரபர தகவல்

    எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசி வருகிறார் என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 'ராகுலுடன் சந்திரபாபு நாயுடு பேசி வருவதன் காரணமாகவே ஆந்திரா குறித்து காங்கிரஸ் கட்சியினர் எதுவும் பேசாமல் உள்ளனர்' எனவும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.



  • Aug 13, 2025 17:42 IST

    அண்ணாமலைக்கு  ராஜீவ் காந்தி கேள்வி

    தமிழ்நாடு ஆளுநர் பா.ஜ.க உறுப்பினராக செயல்படும் போது தான் கஷ்டப்பட்டு, படித்து வாங்கிய பட்டத்தை ஆளுநர் கையில் வாங்க விருப்பம் இல்லை என்று சொல்பவர் தி.மு.க-வை சேர்ந்த மாணவியாக இருக்கக் கூடாதா? என அண்ணாமலைக்கு தி.மு.க மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தங்கை ஜீன் ஜோசப்க்கு வாழ்த்துகள். உங்களின் சுயமரியாதை உணர்வு ஆளுநருக்கு சவுக்கடி என்றும் அவர் கூறியுள்ளார். 



  • Aug 13, 2025 17:38 IST

    ரஜினிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து 

    திரைத்துறையில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்த ரஜினிகாந்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "தலைவா, நான் உங்களைப் பார்த்து வளர்ந்தேன், உங்களைப் பின்பற்றினேன், உங்கள் அடிச்சுவடுகளில் நடந்தேன். நீங்கள் இருக்கும் அதே துறையில் இருப்பது எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம். என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி, மேலும் உங்கள் 50 ஆண்டுகால மகத்தான பாரம்பரியத்திற்கு வாழ்த்துக்கள். 

    கூலி உங்கள் கிரீடத்தில் இன்னொரு வைரமாக இருக்கும். இப்போது, என்றென்றும், அதற்கு அப்பாலும் உன்னை நேசிக்கிறேன். ஒரு மகத்தான வெற்றிக்காக முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள்." என்று பதிவிட்டுள்ளார். 



  • Aug 13, 2025 17:32 IST

    நடிகர் ரஜினிக்கு ஹ்ரித்திக் ரோஷன் வாழ்த்து

    "ஒரு நடிகனாக நான் முதல் அடி எடுத்து வைத்தது உங்களுடன் தான். என் துவக்க கால ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர்" என்று திரைத்துறையில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்த ரஜினிகாந்துக்கு பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 



  • Aug 13, 2025 17:08 IST

    தூய்மை பணியாளர்கள் போராட்டம் - அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

    சென்னை, தூய்மைப் பணியாளர்கள் போராட்ட குழு உடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்



  • Aug 13, 2025 16:41 IST

    சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் - தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை தொடக்கம் 

    சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் - தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது. அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை அங்கிருந்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



  • Aug 13, 2025 16:33 IST

    கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ்க்கு 10 ஆண்டுகள் சிறை

    கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பயிற்சியாளர் கெபிராஜ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்ப்பை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 



  • Aug 13, 2025 15:46 IST

    சுதந்திர நாள் விழாவில் பங்கேற்க ஆளுநர் அழைப்பு - விசிக புறக்கணிப்பு

    வழக்கம்போல ஆளுநர் ரவி சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கும்படி விசிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வழக்கம்போல அவ்விழாவில் விசிக பங்கேற்காது என தெரிவித்துக் கொளவதாக திருமா தெரிவித்துள்ளார்.



  • Aug 13, 2025 15:19 IST

    முழு வீச்சுடன் களப்பணியாற்றிடுவோம் - ஸ்டாலின்

    முழு வீச்சுடன் களப்பணியாற்றிடுவோம் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.



  • Aug 13, 2025 14:58 IST

    “நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை, உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை”

    “நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை. உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை” என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.



  • Aug 13, 2025 14:29 IST

    ராகுலின் புகார் உண்மையா? - இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு கூறும் தகவல்

    வீட்டு எண் 791, மாரத்தஹள்ளியில் 46 வாக்காளர்கள் இருப்பதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டிய பகுதியில், ஆண்கள் விடுதி உள்ளதாகவும் 46 பேரும் விடுதியில் தங்கியவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. வீட்டு எண் 153, விநாயகா நகரில் 68 வாக்காளர்கள் இருப்பதாக கூறிய நிலையில், அவர்கள் அனைவரும் மது உற்பத்தி ஆலையில் வேலை பார்த்தவர்கள் என தகவல். வீட்டு எண் 35, முனிரெட்டி கார்டனில் 80 வாக்காளர்கள் உள்ளதாக குறிப்பிட்ட நிலையில், அந்த முகவரியில் தற்போது மே.வங்கத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே வசிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ராகுல்காந்தியின் குற்றச்சாட்டின் அடிப்படையில் 3 இடங்களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய கள ஆய்வில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.



  • Aug 13, 2025 13:59 IST

    செப்டம்பரில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மு.க.ஸ்டாலின் பயணம்

    செப்டம்பரில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்த்து வர உள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Aug 13, 2025 13:57 IST

    சிறுபான்மை மாணவர் வெளிநாட்டுப் படிப்பு: அரசு அறிவித்த திட்டத்தை உடனே செயல்படுத்துக - தமிமுன் அன்சாரி 

    மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமுமுக அன்சாரி: “2025 பட்ஜெட் கூட்டத் தொடரில், சிறுபான்மை மாணவர், மாணவிகள் வெளிநாடுகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள புதிய திட்டத்தை அமைச்சர் நாசர் அறிவித்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பைப் பெற்ற எண்ணற்ற மாணவர்கள் தற்போது சிரமப்படுகிறார்கள். எனவே, அமைச்சர் நாசர் அறிவித்த இந்தத் திட்டத்தை அரசு உடனடியாக அரசாணை வெளியிட்டுச் செயல்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.



  • Aug 13, 2025 12:57 IST

    சென்னை பல்கலைக்கழக சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்; தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு

    சென்னை பல்கலைக்கழக சட்டத்தில் 'காது கேளாத', 'வாய் பேசதாவர்', 'தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்' என்ற சொற்களை நீக்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.



  • Aug 13, 2025 12:55 IST

    ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு

    சுதந்திர தினத்தையொட்டி நாளை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு மக்களின் உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் ரவி தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கண்டித்து, தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.



  • Aug 13, 2025 12:48 IST

    கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு  ஜாமின் ரத்து

    சாகர் ராணா கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமினை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஒரு வாரத்திற்குள் சரணடைய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுஷில் குமாரின் ஜாமினை ரத்து  செய்யக் கோரி சாகர் ராணாவின் தந்தை தாக்கல் செய்த மனு மீது உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு அடிதடி சம்பவத்தில் சக மல்யுத்த வீரர் சாகர் ராணா (23) கொலை செய்யப்பட்டார். கடந்த மார்ச் மாதம் சுஷில் குமாருக்கு டெல்லி 
    உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.



  • Aug 13, 2025 12:45 IST

    அப்புறப்படுத்த காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு; தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல மறுப்பு

    சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துரைக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை, அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தை நடத்திக்கொள்ளுங்கள் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். சென்னை மாநகராட்சியிடம்தான் எங்களது கோரிக்கையை முறையிட முடியும். வேறு ஒரு இடத்தில் போராட முடியாது என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



  • Aug 13, 2025 12:07 IST

    ரிப்பன் மாளிகை முன்பு போராடும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு

    சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துரைக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை, அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தை நடத்திக்கொள்ளுங்கள் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



  • Aug 13, 2025 11:59 IST

    திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்- தீர்மானம்

    வாக்காளர் பட்டியலில் வாக்குத்திருட்டு நடைபெறுவதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் குளறுபடி செய்வதாகவும்,திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



  • Aug 13, 2025 11:41 IST

    தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்- எஸ்.பி. வேலுமணி

    2026ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

    ஈபிஎஸ்-ன் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் குறித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி உறுதியளித்தார்.



  • Aug 13, 2025 11:41 IST

    ரஜினிக்கு உதயநிதி வாழ்த்து

    திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தி மகிழ்கிறேன்.

    - உதயநிதி ஸ்டாலின் x பக்கத்தில் வாழ்த்து



  • Aug 13, 2025 11:02 IST

    திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை தொடங்கியது.


    நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கும் நோக்கத்தில் இந்தக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.



  • Aug 13, 2025 11:00 IST

    மைத்ரேயன் பேட்டி

    2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியானது. 2வது இடத்திற்குதான் போட்டி நடக்கும்


    -  திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி

    Video: Sun News 



  • Aug 13, 2025 10:59 IST

    அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்

    அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம் செய்து எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

    மைத்ரேயன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று காலை திமுகவில் இணைந்தார்



  • Aug 13, 2025 10:38 IST

    'கூலி' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்

    'கூலி' படம் வெற்றியடைய X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்



  • Aug 13, 2025 10:28 IST

    திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்.

    அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்.



  • Aug 13, 2025 09:47 IST

    ஆசிய குத்துச்சண்டை: தங்கம் வென்று ரித்திகா சாதனை

    தாய்லாந்தில் நடந்த 22 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 80 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரித்திகா அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆடவருக்கான 75 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ், உஸ்பெகிஸ்தான் வீரர் ஷவ்கட்ஜோன் போல்டே உடன் மோதினார். இப்போட்டியில் தோல்வியை தழுவிய நீரஜ், வெள்ளிப் பதக்கம் வென்றார்.



  • Aug 13, 2025 09:38 IST

    பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்?

    அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் 80-வது பொதுச் சபையில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் 23 ஆம் தேதி பிரதமர் மோடி அந்நாட்டிற்கு பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஐநா கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 



  • Aug 13, 2025 09:32 IST

    வெப்சிரீஸ் அனுமதி கேட்ட DD ஒளிப்பதிவாளர் டிரான்ஸ்பர்

    டாக்டர் அம்பேத்கர் எழுதிய 'புத்தரும் அவரது தர்மமும்' என்ற புத்தகத்தை தழுவி வெப் சிரீஸ் உருவாக்க அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்த சென்னை தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் ஆனந்தன் சிம்லாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுள்ளார். வெப் சீரிஸ் தொடங்க அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காரணத்திற்காகவே உள்நோக்கத்துடன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி, சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஆனந்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.



  • Aug 13, 2025 09:22 IST

    திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்?

    அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக 3 முறை எம்.பி.யாக இருந்தார் மைத்ரேயன். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மைத்ரேயன் திமுகவில் இணைகிறார் என்று கூறப்படுகிறது. டந்த மாதம் 21-ம் தேதி தான் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.



  • Aug 13, 2025 09:05 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,040 கனஅடியாக குறைவு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,288 கன அடியில் இருந்து 15,040 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.02ஆக உள்ள நிலையில், பாசன வசதிக்காக 7,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



  • Aug 13, 2025 09:00 IST

    சுதந்திர தினவிழா: பிளாஸ்டிக் கொடி பயன்படுத்தக்கூடாது

    பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும், பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை கண்டிப்பாக விழாவில் பயன்படுத்தக் கூடாது. அதேபோல், தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Aug 13, 2025 08:58 IST

    வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

    மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Aug 13, 2025 08:49 IST

    16-ம் தேதி 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நடைபெறாது

    ஆகஸ்ட் 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்திக்கான அரசு விடுமுறை என்பதால் 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது.



  • Aug 13, 2025 08:48 IST

    "கூலி" படத்திற்கு போலி டிக்கெட் விற்பனை? - புகார்

    கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பயன்படுத்தி டிக்கெட்டை ரூ.500 முதல் ரூ.3,000 வரை விற்கின்றனர். மேலும், போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு முன்பாக முழுமையாக சரிபார்த்து வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.



  • Aug 13, 2025 08:35 IST

    கற்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

    சென்னை திருவெற்றியூரில் கற்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரிதாஸ், நடராஜ், நவீன், ஆகியோர் கைது செய்யப்பட்டடு, ரூ.1500, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



  • Aug 13, 2025 08:29 IST

    ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மா. செ. கூட்டம்

    இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு கூடுகிறது. அதில் ஓரணியில் தமிழ்நாடு-உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு பூத்திலும் 30% உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தநிலையில், பின்னர் அதனை 40% உயர்த்தி முதலமைச்சர் அறிவித்தார். 



  • Aug 13, 2025 08:15 IST

    நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை

    சென்னை கொடுங்கையூரில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் மதனஸ்ரீ தோல்வியடைந்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மதனஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



  • Aug 13, 2025 08:06 IST

    ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் பலி

    ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கதுஷ்யாம்ஜி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பியவர்கள் சென்ற வேன்-லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10 பெண்கல் உயிரிழந்த நிலையில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

     



  • Aug 13, 2025 08:06 IST

    6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 13, 2025 07:46 IST

    கருணை அடிப்படையில் பணி நியமன விதியில் திருத்தம்

    கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான விதிகளை திருத்தம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கருணை அடிப்படையில் அரசு பணிக்கு நியமிக்கப்படுவோருக்கான நடைமுறையில் தமிழ்நாடு அரசு சில மாற்றத்தை அறிவித்துள்ளது. இனிமேல், இத்தகைய நியமனங்கள் மாவட்டத் தொகுப்புகளின் அடிப்படையில்லாமல், மாநிலம் முழுவதும் ஒரே மூத்தத்தன்மை பட்டியலின் அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படும்.



  • Aug 13, 2025 07:43 IST

    குமரி கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகு சேவை ரத்து

    கன்னியாகுமரி கடலில் நீர் மட்டம் தாழ்வு காரணமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி கூண்டு பாலத்திற்கான சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: