Chennai News Updates: மதுரை வரி முறைகேடு வழக்கு - மேயர் கணவர் பொன்.வசந்த் சிறையில் அடைப்பு

Tamilnadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamilnadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vasanth

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Aug 14, 2025 22:36 IST

    மதுரை வரி முறைகேடு வழக்கு - மேயர் கணவர் பொன்.வசந்த் சிறையில் அடைப்பு

    பொன்.வசந்தை மருத்துவப் பரிசோதனையின்போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, நேற்று மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்த் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி ஆனந்த், பொன்.வசந்திற்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.



  • Aug 14, 2025 21:30 IST

    முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி: 13,409 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தகவல்

    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 1937.76 கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 13409 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.



  • Advertisment
  • Aug 14, 2025 20:47 IST

    அதிக கட்டணம் விதித்தால் நடவடிக்கை

    சுதந்திர தினம், தொடர் விடுமுறையை ஒட்டி, தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் விதித்தால் வாகனங்களை சிறைபிடித்து, அபராதம் விதிக்கப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.



  • Aug 14, 2025 20:46 IST

    ஜம்மு-காஷ்மீர் மேகவெடிப்பு - 32 உடல்கள் மீட்பு

    ஜம்மு-காஷ்மீர், கிஸ்த்வார், சிசோட்டி பகுதியில் மேகவெடிப்பால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 32 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளது. 



  • Advertisment
    Advertisements
  • Aug 14, 2025 20:28 IST

    கமலாலயத்துக்குப் போட்டியாக ராஜ்பவனை மாற்ற ஆளுநர் முயல்கிறார் - அமைச்சர் கே.என்.நேரு காட்டம்

    தமிழ்நாட்டின் சூழல் குறித்து ஆளுநர் ரவி தனது சுதந்திர தின உரையில் பேசியதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் ரசாயனப் போதைப்பொருள்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது’’ எனக் கிண்டி கமலாலயத்தில்(!) இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

    தென்னை மரத்தில் தேள் கொட்டியதற்குப் பனை மரத்தில் நெறிக் கட்டும் என்ற பழமொழியைப் போல ‘தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டிற்கும் ஆளுநர் எதுவும் செய்யவில்லை’ எனச் சொல்லி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் பட்டம் பெற மறுத்து அவமானத்தைச் சந்தித்த ஆளுநர் ரவிக்கு 24 மணி நேரம் கழித்து நெறி கட்டியிருப்பதைத்தான் அவருடைய அறிக்கை வெளிக்காட்டுகிறது.

    இன்னொரு பக்கம் சுதந்திர தினத்திற்காகத் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்ததை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருக்கின்றன. இப்படி விரக்தியில் வெம்பி அறிக்கை விட்டிருக்கிறார் ஆளுநர். அதில் சொல்லப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கெனவே ஆதாரத்தோடு பதில் அளிக்கப்பட்டுவிட்டது. நாட்டின் சுதந்திர தினத்திற்கு விடுத்துள்ள செய்தியில் கூட நாகரிகம் இல்லாமல் ஆதாரமில்லாமல், மனம் போன போக்கில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக, தங்களுக்கு வேண்டாத மாநிலங்களுக்கு ஆளுநர் என்னும் நச்சுப் பாம்பை அனுப்பி குடைச்சல் கொடுத்து வருகிறது.

    அப்படித் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்த ஆர். எஸ்.எஸ்- சின் கைக்கூலி ஆர். என்.ரவி ஜனநாயக முறையில் மக்களின் பெருவாரியான ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார். அத்தனை நெருக்கடிகளையும் உச்ச நீதிமன்றம் வரை சென்று நாம் நசுக்கினோம். அமைச்சர்கள் நியமனம், மசோதாக்கள் நிறுத்தி வைப்பு, ஆளுநர் உரையில் ஆரியத் திணிப்பு என எதிலாவது ஆளுநர் ரவி வெற்றி பெற்றிருக்கிறாரா? அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை. இந்திய அளவில் பாசிசச் சக்திகளிடம் கட்டுண்டு கிடந்த ஜனநாயகத்தை மீட்டெடுத்தோம்.

    பல் பிடுங்கப்பட்ட பாம்பாக மாறி ஆள் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மாறிவிட்ட ஆளுநர், சுதந்திர தின உரை என்ற பெயரில் அவதூறுகளை வீசி தன்னையே அழுக்காக்கிக் கொண்டார். ஆளுநரின் அறிக்கையில் ’பாஜகவுக்கு வாக்களியுங்கள்’ என்ற ஒற்றை வார்த்தை மட்டும்தான் இல்லை. மற்றபடி ஆதாரங்கள் இல்லாமல் அவதூறுகளை வீசும் அசிங்கமான அரசியல்தான் செய்திருக்கிறார். ஒன்றிய அரசு லட்சக்கணக்கான கோடிகளை தமிழ்நாட்டுக்கு நிதிப் பகிர்வு வழங்கியது எனச் சொல்லியிருக்கிறார். இந்த ஆண்டு மோடி அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் ’தமிழ்நாடு’ என்ற பெயரே இல்லை என்பது கூட தெரியாமலா ஓர் ஆளுநர் இருப்பார்?

    இந்த போட்டோஷாப் வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது என்று தெரிந்தும் அறிக்கை வெளியிட்டுத் திருப்திப்பட்டுக் கொள்வது எல்லாம் ஆகச் சிறந்த நகைச்சுவை. ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். தமிழ்நாடு பற்றிய தேசியப் புள்ளி விவரங்கள் கல்வியிலும், சமூக-பாலின வேறுபாடுகளைக் களையும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், ஆற்றல்மிக்க இளையோரை உருவாக்குவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்து, நாட்டின் பொருளாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகின்றது. அண்மையில் ஒன்றிய அரசு புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட விவரங்களின்படியே பத்தாண்டுக்குப் பிறகு, தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.19 சதவிகிதமாக இரட்டை இலக்க வளர்ச்சிய எட்டியுள்ளது.

    இந்நிலையில்தான் ஆளுநர் பொய்களையும் அவதூறுகளையும் வரி இறைத்திருக்கிறார். ஆளுநரின் பேச்சுக்குப் பதில் கூறும் முகமாக ஆதாரங்களை முன்வைத்துப் பதிலளிப்பது, பயனற்றது. ஏனென்றால், ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராகச் செயல்படாமல், திராவிட மாடல் மீது வெளிப்படையாக வெறுப்பைக் கக்கும் நாக்பூரின் ஏஜெண்டாகச் செயல்பட்டு வருகின்றார். பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். என்கிற வள்ளுவரின் குறளுக்கு உதாரணமாக விளங்குகின்றார். "பலர் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவன், எல்லாராலும் இகழப்படுவான்" என்பதுதான் அந்த குறளின் பொருள். இதனைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிந்தே உள்ளனர்.

    அதனால் தமிழ்நாட்டு மக்கள் எவரும் ஆளுநருக்குரிய மதிப்பை அவருக்கு அளிப்பதில்லை. நாட்டிலேயே தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக இருப்பதும் தமிழ்நாடுதான். இந்தியாவிலேயே அதிகப் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கியதும் அதிக ஸ்டார்ட் அப் எண்ணிக்கைகளும் உருவாக்கியது தமிழ்நாடுதான். கடந்தாண்டு புயல் வெள்ளப் பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு 37,907 கோடி ரூபாய் கேட்டபோது வெறும் 276 கோடி ரூபாயை மட்டுமே வழங்கி வஞ்சித்தது ஒன்றிய அரசு. பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியையும் இன்னும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

    மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்று ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவித்தது ஜனநாயகப் படுகொலை இல்லையா? குலக்கல்வியை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தைச் செயல்படுத்தத் துடிக்கும் ஒன்றிய அரசின் கையாலாகாத கையாள் ரவிக்கு தமிழ்நாட்டுக் கல்வியின் தரம் பற்றி என்ன தெரியும்? தமிழ்நாட்டு அடையாளத்தை அழிக்கும் வகையில் கீழடி அகழ்வாராய்வு அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது ஒன்றிய அரசு. ராஜ்பவனை ஆளுநர் ரவி அரசியல் பவனாக மாற்றி, கரை வேட்டிக் கட்டிய அரசியல்வாதி போலச் செயல்படுகிறார். கமலாலயத்திற்குப் போட்டியாக ராஜ்பவனை மாற்ற முயல்கிறார். ஆளுநர் அந்தந்த மாநில அரசுகளுக்கு நண்பராக இருக்க வேண்டியவர்.

    ஆனால், எதிரிக் கட்சியாக நின்று, வசைமாரி பொழிந்து கொண்டிருக்கிறார். ரம்மி நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் நீட் பயிற்சி மையங்களுக்கும் பி.ஆர்.ஓ-வாகவும் செயல்படுகிறவரிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? உச்ச நீதிமன்றம் வரையில் போய் கரியைப் பூசிக் கொண்ட பிறகும் ஒருவர் திருந்தவில்லை. என்று அவர் தெரிவித்துள்ளார். 



  • Aug 14, 2025 20:12 IST

    அக்டோபரில் தொடங்கும் பிக்பாஸ் 

    விஜய் டி.வி-வில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி இந்த ஆண்டு அக்டோபர் முதல் தொடங்குவதாகவும், எதிர்வரும் சீசனும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் எனவும் ஜியோ ஸ்டாரின் தென்னிந்திய தலைமை அதிகாரி கிருஷ்ணன் குட்டி தந்தி டி.விக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். 



  • Aug 14, 2025 20:10 IST

    ஆபரேஷன் சிந்தூர்  - 9 விமானப்படை அதிகாரிகளுக்கு வீர் சக்ரா விருது

    ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஈடுபட்ட 9 விமானப்படை அதிகாரிகளுக்கு இந்த ஆண்டுக்கான வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீர தீரத்துடன் செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது



  • Aug 14, 2025 19:28 IST

    15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு

    சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணி பதக்கங்கள் வழங்கப்படும். 5 காவல் அதிகாரிகளுக்கு பொதுச் சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 14, 2025 19:24 IST

    இஸ்ரோ தலைவருக்கு அப்துல் கலாம் விருது

    சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்படும். காஞ்சிபுரம் துளசிமதி முருகேசனுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 14, 2025 19:18 IST

    ஆசிரியர் தகுதித் தேர்வு தேதிக்கு மாற்றம்

    நவம்பர் 1, 2 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வேறு தேதிக்கு மாற்றம் செய்யபப்ட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் நவ. 15, 16 ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

     



  • Aug 14, 2025 18:58 IST

    தவறு செய்தவர்களை அதிமுக மன்னித்தது கிடையாது: பழனிசாமி

    அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது; திமுக ஆட்சியில் நிலைமை மாறி, எங்கும் கொலை, கொள்ளை என இருக்கிறது. தவறு செய்தவர்களை அதிமுக மன்னித்தது கிடையாது; இன்று நிலைமை மாறிவிட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 



  • Aug 14, 2025 18:26 IST

    சிறுபான்மையினருக்கு அரணாக அதிமுக இருந்தது: பழனிசாமி

    திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆம்பூர் காலணி தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலை இல்லாத சூழல். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சரிந்த தொழிலை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என திமுக கூட்டணி அவதூறு; ஆட்சியில் இருந்தபோது சிறுபான்மையினருக்கு அரணாக அதிமுக இருந்தது; சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 



  • Aug 14, 2025 18:06 IST

    தெரு நாய்களை பாதுகாக்க தனி காப்பகம் அமைக்க வேண்டும்: ஐகோர்ட்

    தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுடன் அவற்றை பாதுகாக்க தனி காப்பகம் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன என சென்னை மாநகராட்சி கால்நடைத் துறை அதிகாரி அறிக்கை அளித்துள்ளார். தோராயமாக கடந்த ஆண்டு 20,000 நாய்க் கடி சம்பவங்கள் நடைபெற்று இருக்கலாம் என தெரிவித்தார்.



  • Aug 14, 2025 17:52 IST

    சீனா உடனான எல்லை வழி வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா முடிவு

    சீனா உடனான எல்லை வழி வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா முடிவு செய்துள்ளது. உத்தரகாண்ட், இமாச்சலப் |பிரதேசம் மற்றும் சிக்கிம் எல்லை வழியாக வர்த்தகத்தை தொடங்க சீனத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவிப்பு. கல்வான் பள்ளத்தாக்கு மோதலால், கடந்த 2020-ம் ஆண்டு முதல் இருநாடுகளுக்கு இடையேயான எல்லை வழி வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.



  • Aug 14, 2025 17:50 IST

    6 வழக்கறிஞர்களை உடனடியாக விடுவிக்க உத்தரவு

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட 6 வழக்கறிஞர்களை உடனடியாக விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை காணவில்லை என ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 



  • Aug 14, 2025 17:48 IST

    போதைப்பொருள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு: ஆளுநர்

    தமிழ்நாட்டில், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா போன்றவற்றோடு ரசாயன போதைப்பொருள்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது; பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 



  • Aug 14, 2025 17:38 IST

    கொள்கை முடிவுகள் முதலாளிகளுக்கானதா, இல்லை மக்களுக்கானதா? - சீமான் காட்டம்

    “கொள்கை முடிவுகள் முதலாளிகளுக்கானதா, இல்லை மக்களுக்கானதா? அது கொள்கையா கொடுமையா?” என்று தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசிடம் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்விகளை கேட்டுள்ளார். 



  • Aug 14, 2025 17:36 IST

    ஆளுநரின் தேநீர் விருந்து - முதலமைச்சர் புறக்கணிப்பு

    தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுவதை எதிர்த்து, சுதந்திர நாளை ஒட்டி அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எதிர்வரும் அழகப்பா பல்கலை., திருவள்ளுவர் பல்கலை.களின், பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்பதில்லை என உயர்கல்வி அமைச்சரும் அறிக்கை விடுத்துள்ளார். 



  • Aug 14, 2025 17:18 IST

    தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்துக: வைகோ வலியுறுத்தல்

    தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம். பணியின் போது மரணம் அடையும் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணம். நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள் என தூய்மைப் பணியாளர்களுக்கான அரசின் இத்திட்டங்களை தொய்வு இன்றி செயல்படுத்த நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினார்.



  • Aug 14, 2025 17:15 IST

    “தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்”- வைகோ

    "தூய்மைப் பணியாளர்களுக்கு ஆறுதல் தரும் நல்வாழ்வு திட்டங்களை, வரவேற்கத்தக்க அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது; அவற்றை தொய்வின்றி விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும்” என்று மதிமுக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். 



  • Aug 14, 2025 17:10 IST

    சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு

    சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணி பதக்கங்கள் வழங்கப்படும். 5 காவல் அதிகாரிகளுக்கு பொதுச் சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 14, 2025 17:09 IST

    எழும்பூர்-திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில்

    சுதந்திர தினத்தையொட்டி, எழும்பூரிலிருந்து திருச்சிக்கு இன்று இரவு 11.10 மணிக்கு சிறப்பு ரயில் இன்று இரவு 11.10க்கு புறப்பட்டு நாளை காலை 7.30 மணிக்கு திருச்சி சென்றடையும். 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படுமென ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 



  • Aug 14, 2025 17:03 IST

    மக்களை பற்றி சிந்திக்காமல் கூலி படம் பார்க்கிறார் முதல்வர் - சீமான்

    “கூலிக்கு போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படம் பார்க்கிறார் முதல்வர்; சென்னை மாநகராட்சியை தூய்மைப்படுத்துவது ராம்கி நிறுவனத்தின் வேலையா? அதிகார வலிமை இல்லாத மக்களைதான் அரசு குறிவைக்கிறது” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 



  • Aug 14, 2025 16:42 IST

    சுதந்திர தினம் - புறநகர் மின்சார ரயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்

    சுதந்திர தினத்தை ஒட்டி நாளை சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 



  • Aug 14, 2025 16:31 IST

    கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் வாய்க்காலில் குளிக்கும் போது கல்லூரி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் குளிக்க வந்த நிலையில் விபத்து. சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Aug 14, 2025 16:30 IST

    தூய்மைப் பணியாளர்களுடன் சீமான் சந்திப்பு

    பேருந்தில்ஏற்றப்பட்டதூய்மைபணியாளர்களைசாலையிலும்வேளச்சேரியில்அடைக்கப்பட்டதூய்மைப்பணியாளர்களையும்சந்தித்தார்.

     



  • Aug 14, 2025 16:10 IST

    "மேக வெடிப்பால் வேதனை அடைந்தேன்"

    கிஸ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பால் வேதனை அடைந்தேன். மீட்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.



  • Aug 14, 2025 15:54 IST

    மத்திய அமைச்சருக்கு M.P. கடிதம்

    வடசென்னையின் மணலி சாலை மேம்பால பணிகளை சென்னை மாநகராட்சி முழுமையாக நிறைவு செய்துவிட்ட நிலையில், நிலுவையில் உள்ள ரயில்வே துறைக்கு உட்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளது. மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவவிற்கு, எம்.பி.கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.



  • Aug 14, 2025 15:53 IST

    பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை 3 நாட்களில் வெளியிட உத்தரவு.

    பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை டிஜிட்டல் வடிவத்தில் 3 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வாரியாக நீக்கபப்ட்ட வாக்காளர்களின் விவரம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியாக தெரிவித்துள்ளது.



  • Aug 14, 2025 15:38 IST

    புதிய டிஜிபி நியமனம் - வழக்கு முடித்து வைப்பு

    புதிய டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கை முடித்து வைத்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி புதிய டிஜிபி பணி நியமனம் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனத்திற்கான பணி துவங்கியது என அரசு தரப்பு நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



  • Aug 14, 2025 15:35 IST

    தூய்மைப் பணியாளர்களின் மாண்பை அரசு விட்டுக் கொடுக்காது - ஸ்டாலின் பதிவு

    நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது #DravidianModel அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து, தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை, தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி, தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு, தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள், பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி, தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம். இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசுஎன்றுஸ்டாலின்தனதுஎக்ஸ்பக்கத்தில்பதிவிட்டுள்ளார்.

     



  • Aug 14, 2025 15:15 IST

    செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு

    செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் மாற்று வழியை பயன்படுத்த காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் போது தாமதத்தைத் தவிர்க்க இ.சி.ஆர் வழித்தடங்களை பயன்படுத்தலாம் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.



  • Aug 14, 2025 15:13 IST

    மேக வெடிப்பு - 12 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு

    ஜம்மு காஷ்மீர், கிஸ்த்வார் மாவட்டம் – சஷோட்டி பகுதியில் பெரும் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மச்சைல் மாதா யாத்திரை செல்லும் வழி இது நிகழ்ந்திருப்பதால் யாத்ரீகர்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.



  • Aug 14, 2025 15:12 IST

    தூய்மை பணியாளர்கள் பிரச்சனையில் முதலமைச்சர் சுமூகத் தீர்வுக் காண வேண்டும் - செல்வப்பெருந்தகை

    தூய்மைப்பணியாளர்களைநீதிமன்றஉத்தரவின்பேரில்அப்புறப்படுத்தியிருப்பதுவேதனையளிக்கிறது. நீதிமன்றம்கூறினாலும்கூடகாவல்துறைதாயுள்ளத்தோடுஅணுகியிருக்கவேண்டும்என்றுசெல்வப்பெருந்தகைகூறினார். தூய்மைப்பணியாளர்களிடன்பேச்சுவார்த்தைநடத்தவும்கைதுசெய்யப்பட்டுள்ளவர்களையும்அவர்களுக்காகபோராடியஜனநாயகசக்திகளைவிடுவிக்கவேண்டும். முதலமைச்சர்மு..ஸ்டாலின்இப்பிரச்சனையில்நேரடியாகதலையிட்டுசுமூகதீர்வுகாணவேண்டுகிறேன்எனதமிழ்நாடுகாங்கிரஸ்கமிட்டித்தலைவர்செல்வப்பெருந்தகைஅறிக்கைவெளியிட்டுள்ளார்.

     



  • Aug 14, 2025 14:47 IST

    ஜி.எஸ்.டி சாலையில் கட்டுமான பணி: மாற்று வழிகளைப் பயன்படுத்த செங்கல்பட்டு காவல்துறை அறிவுறுத்தல்

    செங்கல்பட்டு ஜி.எஸ்.டி சாலையில் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் மாற்று வழியை பயன்படுத்த காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் போது தாமதத்தைத் தவிர்க்க இ.சி.ஆர், ஜி.டபிள்யூ.டி வழித்தடங்களை பயன்படுத்தலாம் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.



  • Aug 14, 2025 14:43 IST

    தூய்மைப் பணியாளர்கள் கைது: செய்தியாளரிடம் ஒளிப்பதிவு கருவிகள் பறிமுதல் - சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

    தூய்மைப் பணியாளர்கள் கைது நடவடிக்கையை செய்தி சேகரித்துக்கொண்டிருந்த தீக்கதிர் நாளிதழின் டிஜிட்டல் பிரிவைச் சேர்ந்த செய்தியாளர்களிடமிருந்து ட்ரோன் உட்பட ஒளிப்பதிவு கருவிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை செய்தி சேகரித்துக்கொண்டிருந்த தீக்கதிர் நாளிதழின் டிஜிட்டல் பிரிவைச் சேர்ந்த செய்தியாளர்களிடமிருந்து ட்ரோன் உட்பட ஒளிப்பதிவு கருவிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். செய்தியாளர்களை பணிசெய்ய விடாமல் தடுத்த காவல்துறையின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். பறிமுதல் செய்த ஒளிப்பதிவு கருவிகளை, அதில் உள்ள பதிவுகளுடன் உடனே உரியவர்களிடம் திருப்பித்தர வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறையை வலியுறுத்துகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 14, 2025 14:43 IST

    தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு - தங்கம் தென்னரசு

    அமைச்சர் தங்கம் தென்னரசு: “நகர்புற உள்ளாட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும். முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.



  • Aug 14, 2025 14:17 IST

    தலைமைப் பண்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி மீது ஓ.பி.எஸ் சரமாரி குற்றச்சாட்டு

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூவை காரில் ஏற்றாதது மற்றும் தம்பிதுரையைப் பேச அனுமதிக்காததைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள, ஓ. பன்னீர்செல்வம், “தலைமைப் பதவிக்கான அறிகுறி இல்லாத எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க உள்ளதால் தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது. அ.தி.மு.க ஒற்றுமையை வலியுறுத்துபவர்கள் குறி வைத்து அவமரியாதைச் செய்யபடுகிறார்கள்” என்று சரமாரியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.



  • Aug 14, 2025 13:27 IST

    தூய்மைப் பணியாளர்களை இரவில் அப்புறப்படுத்திய காவல்துறை: மனித உரிமை மீறல் - சு. வெங்கடேசன் கண்டனம்

    சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த மதுரை தொகுதி எம்.பி சு. வெங்கடேசன்: “இரவோடு இரவாக காவல்துறை நடத்திய ‘அப்புறப்படுத்துதல்' முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான மனித உரிமை மீறல். அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைந்தது நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கை. அத்துமீறிய காவல் துறையினர் மீதும், அதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும். உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலகீனம் வேறெதுவுமில்லை.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • Aug 14, 2025 13:23 IST

    தூய்மை பணியாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சமூக செயல்பாட்டாளர்கள்; கை உடைத்ததாகக் குற்றச்சாட்டு

    தூய்மை பணியாளர் போராட்டத்திற்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர் நிலவு மொழி மற்றும் செயற்பாடாளர் வளர்மதி ஆகியோரை இரவு முழுக்க துன்புறுத்தி கையை உடைத்ததாக கூறியுள்ளனர். 20 பேர் சேர்ந்து அடித்தார்கள் என்று கூறியுள்ளனர்.



  • Aug 14, 2025 13:20 IST

    மலையாள நடிகை மினு முனீர் கைது 

    மலையாள நடிகை மினு முனீரை கேரளாவில் கைது செய்து திருமங்கலம் மகளிர் போலீசார் சென்னை அழைத்து வந்தனர். 10 வருடங்களுக்கு முன்பு உறவினரின் 14 வயது மகளை நடிப்பதற்காக  சென்னை அழைத்து வந்து 4 பேர் அத்துமீறியதாக புகார்  அளிக்கப்பட்டது. நடிகை மினு முனீர் மீது பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்த நிலையில் சென்னை திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கேரளா சென்று நடிகை மினு முனிரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.



  • Aug 14, 2025 13:17 IST

    தூய்மை பணியாளருக்கான சிறப்பு திட்டங்கள் - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் - தங்கம் தென்னரசு 

    தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போதி தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சிகிச்சை அளிக்க  தனித்திட்டம் செயல்படுத்தப்படும். பணியின் போது மரணம் அடையும் தூய்மை பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும் போது அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதற்கென ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு. தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.” என்று கூறினார்.



  • Aug 14, 2025 13:07 IST

    தூய்மைப் பணியாளர்கள் கைது; பிரேமலதா கண்டனம்

    தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக கைது செய்தது கண்டனத்திற்கு உரியது. முதலமைச்சர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன் என தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்



  • Aug 14, 2025 13:05 IST

    தூய்மைப் பணியாளர்கள் கைது; சீமான் கண்டனம்

    தூய்மைப் பணியாளர்கள் மீதான தி.மு.க அரசின் கோர ஒடுக்குமுறை அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! பாசிசத்தின் வெறியாட்டம்! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ஆட்சியாளர்களே! என சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Aug 14, 2025 13:01 IST

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; ஐகோர்ட்டில் முறையீடு

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் ஒதுக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது, அனுமதிபெற்று போராட்டம் நடத்த எந்த தடையும் இல்லை. அனுமதி பெற்று போராட்டம் நடத்தும் போது காவல்துறை தலையிட்டால் நீதிமன்றம் தலையிடலாம். அனுமதி பெறவில்லை என தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் தெரிவித்ததால்தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி தெரிவித்தார்



  • Aug 14, 2025 12:59 IST

    தூய்மை பணியாளர்கள் கைது; அப்போது இனித்தது? இப்போது கசக்கிறதா? – இ.பி.எஸ் கண்டனம்

    யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை எளிய மக்கள். அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள். அவர்களோடு டீ, காபி அருந்தியது போல்  போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே...அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும் போது கசக்கிறதா? என தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்



  • Aug 14, 2025 12:55 IST

    தூய்மைப் பணியாளர்கள் கைது; சி.பி.எம் ஆர்பாட்டம் அறிவிப்பு

    தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்



  • Aug 14, 2025 12:50 IST

    ரூ.10 லட்சம் அபராதத்தை செலுத்தினார் சி.வி.சண்முகம்

    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்த வழக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு எதிரான வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.10 லட்சம் அபராதத்தை சி.வி.சண்முகம் செலுத்தி விட்டார் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்



  • Aug 14, 2025 12:16 IST

    தெரு நாய்களை பிடிக்கும் உத்தரவு - தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

    டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. டெல்லியில் தெரு நாய்களை பிடிக்கும் உத்தரவுக்கு எதிராக மனித உரிமைகள் மாநாடு என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது



  • Aug 14, 2025 12:00 IST

    தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: