/indian-express-tamil/media/media_files/N81afNKwv00th4UYpI6e.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 25, 2025 20:55 IST
கிட்னி மோசடி வழக்கு - விசாரணைக்குழு அமைப்பு
கிட்னி மோசடி விவாகரத்தில் பதியப்பட்ட எப்.ஐ.ஆர் திருப்தி அளிக்கவில்லை. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகளோடு, பி.என்.எஸ் விதிகளின் அடிப்படையிலும் வழக்கு பதியலாமே? என நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவினாலேயே அரசின் கை கட்டப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது, இதனிடையே, விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு செப்டம்பர் 24ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ள நிலையில், தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
- Aug 25, 2025 20:51 IST
'கூலி' திரைப்படத்துக்கு யு/ஏ சான்று கோரிய வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு
கூலி' திரைப்படத்துக்கு யு/ஏ சான்று வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், சண்டை காட்சிகள் இல்லாத தமிழ் படங்களை பார்க்க முடியாது. சென்சார் போர்டு தெரிவித்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "ஏ சான்றிதழை முதலில் ஏற்றுக்கொண்ட படக்குழு தற்போது யு/ஏ சான்றிதழ் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளது. வன்முறை காட்சிகளை நீக்கி விட்டு, யு/ஏ சான்று கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் சென்சார் போர்டு கூறிய நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்
- Aug 25, 2025 20:47 IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திய கணவன், மனைவி கைது
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் சென்னை, விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,குழந்தைகளுடன் மலேசியாவுக்கு சுற்றுலா சென்று திரும்புவதைப் போல் தங்கம் கடத்தி வந்த கணவன், மனைவியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Aug 25, 2025 19:37 IST
14 உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை
14 உயர் நீதிமன்ற நீதிபதிகளை வேறு உயர் நீதிமன்றங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிஷா பானுவை கேரளாவுக்கு மாற்றவும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங்கை சென்னைக்கு மாற்றவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 25, 2025 19:32 IST
கொளத்தூர் தொகுதியில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை: கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு, பெண்களுக்கான அதிநவீன உடற்பயிற்சி கூடம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.
- Aug 25, 2025 19:27 IST
ஸ்டாலினை அவதூறாக பேசியதாக த.வெ.க தலைவர் விஜய் மீது புகார்
முதல்வர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாகவும், மாநாட்டில்
கட்சி தொண்டர்களை பவுன்சர்கள் தூக்கி எறிந்ததாகவும், மதுரை, திருத்துறைப்பூண்டி காவல் நிலையங்களில் த.வெ.க தலைவர் விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. - Aug 25, 2025 18:50 IST
வருகையை தவிர்க்க அறிவுறுத்தல் - சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன்
நல்லகண்ணுவை பார்க்க சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இரண்டொரு நாட்களில் நல்லகண்ணு உடல்நலம் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் கூறியுள்ளனர்.
- Aug 25, 2025 18:46 IST
தொடர் விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளது.
26ம் தேதி 675 பேருந்துகள், 28ம் தேதி 610 பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்க திட்டம்
29ம் தேதி 405 பேருந்துகள், 30ம் தேதி 380 பேருந்துகள், 31ம் தேதி 875 பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கம்
கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்
- Aug 25, 2025 18:45 IST
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை - இபிஎஸ்
ஆசையை தூண்டி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஸ்டாலின் ஏமாற்றுகிறார். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை 4 ஆண்டுகளாக எங்கு இருந்தீர்கள்? திருச்சி மணப்பாறையில் பரப்புரையின்போது உங்களுடன் ஸ்டாலி திட்டம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
- Aug 25, 2025 18:29 IST
மின் கம்பி செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்ய உத்தரவு
மின் கம்பி செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப்பணியாளர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து சென்னை முழுவதும் மின் கம்பி செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்ய வேண்டும். மின் கம்பி பூமிக்கு வெளியே தெரியாமல் இருக்குமாறு பணிகளை மேற்கொள்ளவும் பூமிக்கு வெளியே மின் கம்பிகள் இருந்தால் 4 நாட்களுக்குள் சரி செய்யவும் வேண்டும் என்றும் மின் கம்பி வழித்தடங்களை ஆய்வு செய்ய பொறியாளர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
- Aug 25, 2025 18:28 IST
பஞ்சாப்பில் காலை உணவுத் திட்டம்- அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான்
பஞ்சாப்பில் காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியில் உள்ளோம். சென்னையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்க வந்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பேட்டி அளித்துள்ளார்.
- Aug 25, 2025 18:06 IST
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு!
திருப்பூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி, மயிலாப்பூர் பிஎஸ் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ.50,000 பரிசுத்தொகை செப்டம்பர் 5 ஆம் தேதி வழங்கப்படும்.
- Aug 25, 2025 18:00 IST
தங்கம் வென்ற இந்திய வீராங்கனை
குஜராத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார். 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.
- Aug 25, 2025 17:59 IST
6 கட்சிகளின் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது? - சென்னை தலைமை தேர்தல் அலுவலர் நோட்டீஸ்
கட்சிப் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை 26ஆம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- Aug 25, 2025 17:55 IST
விஜய் மீது காவல் நிலையத்தில் புகார்
தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசியதாக தவெக தலைவர் விஜய் மீது திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் ஸ்டாலினை விஜய் தரக்குறைவாக பேசியதாகவும் பவுன்சர்கள் மனிதாபிமானம் இல்லாமல் கட்சியினரை தூக்கி எறிந்ததாகவும் வழக்கறிஞர் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார்.
- Aug 25, 2025 17:19 IST
மோடியின் பட்டப்படிப்பு - உத்தரவு ரத்து
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட டெல்லி பல்கலைக்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978யில் பி.ஏ படிப்பில் தேர்ச்சியான பிரதமர் மோடி உள்ளிட்டோரின் விவரத்தை நீரஜ் என்பவர் கேட்டிருந்தார். மத்திய தகவல் ஆணையம் உத்தரவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- Aug 25, 2025 17:09 IST
பந்தல் அமைக்கும்போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
சென்னை பூவிருந்தவல்லி சென்னீர்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பந்தல் அமைக்கும்போது மின்சாரம் பாய்ந்து பரத் என்பவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- Aug 25, 2025 17:04 IST
சுபான்ஷு சுக்லாகுடும்பத்தினருடன் உ.பி முதல்வர் சந்திப்பு
சர்வதேச விண்வெளி நிலையம் சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாகுடும்பத்தினருடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
- Aug 25, 2025 16:55 IST
நல்லகண்ணுவின் உடல்நலன் குறித்து விசாரித்த விஜய்
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நல்லகண்ணுவின் பேரனிடம் தொலைபேசி வாயிலாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நலம் விசாரித்தார்.
- Aug 25, 2025 16:53 IST
முதல்வரின் காலை உணவு திட்டம் உலகுக்கே எடுத்துக்காட்டு - அமைச்சர் சக்கரபாணி
முதல்வரின் காலை உணவு திட்டம் உலகுக்கே எடுத்துக்காட்டு என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். உலகத்திற்கே எடுத்துக்காட்டாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார் என்றும் காலை உணவு திட்டத்தை பார்த்து கனடா, இலங்கை போன்ற நாடுகளும் பின்பற்றி வருகிறது என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
- Aug 25, 2025 16:53 IST
பூந்தமல்லி: பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே சென்னீர் குப்பத்தில் விநாயகர் சதுர்த்திக்காக கோயில் அருகே பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 4 பேர் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், மேலே சென்ற மின்சாரக் கம்பி மீது இரும்பு ராடு உரசியதில் மின்சாரம் பாய்ந்து பரத் (28) என்பவர் உயிரிழந்துள்ளர். ரஜினி (45), தென்னவன் (29) ஆகிய இருவரும் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Aug 25, 2025 16:28 IST
அரசு பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
பெரம்பலூர் மாவட்டம் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- Aug 25, 2025 15:53 IST
ஆம்புலன்ஸ் வாகனம், ஓட்டுநர் மீது தாக்குதல் - 10 ஆண்டுகள் சிறை தண்டனை; தமிழக அரசு உத்தரவு
ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை எச்சரித்துள்ளது. தனி நபரோ (அ) கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை என்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவோர் மீது ஜாமீனில் வெளியே வராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும்; அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம். அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கின்றது. 108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை 108 ஆம்புலன்ஸ் கதவுகளில் வலது புறத்தில் ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 25, 2025 15:50 IST
இமாச்சலப் பாதையின் முக்கிய இணைப்பு துண்டிப்பு!
பதான்கோட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தை இணைக்கும் சக்கி பாலம், காங்ரா மாவட்டம், இந்தோரா பகுதியிலுள்ள தாங்கு என்ற இடத்தில் பெய்த கனமழையால் உடைந்து, தண்ணீரில் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் இருந்த முக்கியமான சாலை இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
- Aug 25, 2025 15:46 IST
இ.பி.எஸ் தொடுத்த வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை உரிமையியல் நீதிமன்றம் நிராகரிக்க மறுத்ததற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- Aug 25, 2025 15:38 IST
மோடியின் டிகிரி தொடர்பான தகவல் - ஐகோர்ட் தீர்ப்பு
பிரதமர் மோடியின் டிகிரி தொடர்பான தகவலை வெளியிட ஆணையிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பிரதமரின் இளங்கலை பட்ட தகவல்களை வெளியிட டெல்லி பல்கலை.க்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
- Aug 25, 2025 15:21 IST
தேசிய ஆசிரியர் விருது - தமிழகத்தில் இருவர் தேர்வு
தேசிய ஆசிரியர் விருதுக்காக நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி, திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தேசிய ஆசிரியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
- Aug 25, 2025 14:59 IST
தமிழ்நாட்டில் பொது இடங்களில் அரசியல் கொடிக் கம்பங்களை அகற்ற இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்த மேல்முறையீட்டு வழக்கில், தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள அரசியல் கொடிக் கம்பங்களை அகற்ற இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Aug 25, 2025 14:57 IST
தேசிய ஆசிரியர் விருது: தமிழகத்தில் இருந்து 2 ஆசிரியைகள் தேர்வு
தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி, திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தேசிய ஆசிரியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- Aug 25, 2025 14:35 IST
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்; எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க கண்டனம்
எடப்பாடி பழனிசாமியின் பேச்சால்தான் திருச்சி துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டுள்ளார். இ.பி.எஸ் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என தி.மு.க மருத்துவர் அணி செயலாளர் எழிலன் வலியுறுத்தி உள்ளார்.
- Aug 25, 2025 14:16 IST
ராம பக்தர்கள் இந்தியா கூட்டணிக்கு ஓட்டு போடக்கூடாது - தமிழிசை சௌந்தரராஜன்
பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரரராஜன்: “ராம பக்தர்களின் ஒரு ஓட்டு கூட ராமரை அவமதித்த இந்தியா கூட்டணிக்கு விழக்கூடாது. ஆணவக் கொலைக்கு சனாதனம் மற்றும் ராமர்தான் காரணம் என வன்னி அரசு பேசியது கண்டிக்கத்தக்கது. சம தர்மம், சமூக நீதி காத்தவர் ராமர், அவர்களை ராமாயணம் படிக்கச் சொல்லுங்கள். வன்னி அரசுக்கு ராமாயணத்தை வழங்கும் போராட்டத்தை நடத்த வேண்டும்” என்று கூறினார்.
- Aug 25, 2025 14:01 IST
சாதி மறுப்பு திருமணங்கள் செய்ய, சி.பி.எம் அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் - பெ. சண்முகம்
“சாதி மறுப்பு திருமணங்கள் செய்ய, எங்க அலுவலகங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தைரியமா காதலிங்க. திருமணம் செய்து வைக்க நாங்க தயாரா இருக்கோம்” என்று சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
- Aug 25, 2025 13:52 IST
கவினின் பெற்றோர் ஸ்டாலின் உடன் சந்திப்பு; அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரிக்கை
நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் பெற்றோர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சந்தித்தனர். கவின் கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய முதல்வரிடம் கவின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
- Aug 25, 2025 13:31 IST
காலை உணவுத் திட்டம் நகர்ப்பகுதிகளுக்கு விரிவாக்கம்; 3.6 லட்சம் குழந்தைகளுக்கு பயன் - அமுதா ஐ.ஏ.எஸ்
தமிழ்நாட்டில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் நாலை தொடங்கி வைக்கிறார். நகர்ப்பகுதிகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். 2,429 பள்ளிகளுக்கு திட்டம் விரிவாக்கப்படுவதன் மூலம் 3.6 லட்சம் குழந்தைகள் பயன் பெற உள்ளனர் என்று தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
- Aug 25, 2025 13:17 IST
ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை - மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் வாகனத்தை தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மறும் ஜாமினில் வெளியே வரம்டுஇயாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- Aug 25, 2025 13:15 IST
கே.ஜி.எஃப் பட நடிகர் மரணம்
கன்னட திரைத்துறையின் மூத்த துணை நடிகர் தினேஷ் மங்களூரு உடல்நலக்குறைவால் காலமானார். நடிகர் தினேஷ் மங்களூரு கேஜிஎப், ரிக்கி, ராணா விக்ரமா உள்ளிட்ட பல்வேறு முக்கிய படங்களில் நடித்துள்ளார். தினேஷ் மங்களூருவின் மறைவு கன்னட திரையுலகை துயரத்தில்
ஆழ்த்தியுள்ளது. நடிகர் தினேஷ் மங்களூரு மறைவுக்கு திரையுலகினர், சக நடிகர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். - Aug 25, 2025 12:53 IST
புழல் சிறைக்குள் கைதிகளுக்கு பீடி சப்ளை; சிறைக்காவலர் சஸ்பெண்ட்
புழல் சிறைக்குள் குப்பை வாகனத்தில் வைத்து மறைத்து கைதிகளுக்கு பீடி கட்டுகளை சப்ளை செய்து வந்த கருப்பையா என்ற சிறைக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கருப்பையா கைதிகளிடம் ரூ. 2000 வரை வாங்கிக் கொண்டு சட்டவிரோதமாக பீடி விற்பனை செய்து வந்துள்ளார்.
- Aug 25, 2025 12:32 IST
விஜயகாந்த் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிரேமலதா
விஜயகாந்தின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தே.மு.தி.க அலுலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
- Aug 25, 2025 12:10 IST
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் - சண்முகம்
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்
- Aug 25, 2025 11:58 IST
டிரிம் 11 உடனான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் புதிய சட்டம் இயற்றப்படும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. டிரிம் 11 ஆன்லைன் விளையாட்டில் 11 வீரர்களைத் தேர்வு செய்து பணம் கட்டி விளையாடுவார்கள். டிரிம் 11க்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், அதன் ஜெர்சி ஸ்பான்சர் முடிவுக்கு வருகிறது. எதிர்காலத்தில் இது போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டோம்.
- பிசிசிஐ உறுதி
- Aug 25, 2025 11:53 IST
கேஜிஎஃப் பட நடிகர் தினேஷ் காலமானார்
கன்னட திரைத்துறையின் மூத்த துணை நடிகர் தினேஷ் மங்களூரு உடல்நலக்குறைவால் காலமானார். தினேஷ் மங்களூரு கேஜிஎப், ரிக்கி, ராணா விக்ரமா உள்ளிட்ட பல்வேறு முக்கிய படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவு கன்னட திரையுலகை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது
- Aug 25, 2025 11:14 IST
பதவி பறிப்பு மசோதா நிறைவேறும்
பிரதமர், முதல்வரின் பதவி பறிப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறும். பதவி பறிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும்.
-அமித் ஷா
- Aug 25, 2025 11:12 IST
சென்னை இதழியல் கல்வி நிறுவனம்- தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின். பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஓராண்டு முதுநிலை இதழியல் படிப்பை இங்கு பயிலலாம்.
- Aug 25, 2025 10:38 IST
சென்னையில் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை
டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்ட நிலையில், சென்னையில் கட்டண உயர்வு ஏதும் பரிசீலனையில் இல்லை. சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசுதான் முடிவு செய்யும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் 8 ஆண்டுகளுக்குப் பின் மெட்ரோ ரயில் கட்டணம் அனைத்து வழித்தடங்களிலும் ரூ.1 முதல் ரூ.4 வரை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
- Aug 25, 2025 10:37 IST
உடல்நல காரணங்களுக்காகவே ஜெகதீப் தங்கர் ராஜினாமா: அமித் ஷா
உடல்நலக் காரணங்களுக்காகவே குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்தார்; வேறு காரணமில்லை. மத்திய அரசுடனான கருத்து வேறுபாட்டால் பதவி விலகியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு அமித் ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.
தனது பதவிக் காலத்தில் ஜெகதீப் தங்கர் சிறப்பாகவே செயல்பட்டார் - அமித் ஷா - Aug 25, 2025 10:32 IST
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் எனும் தேசிய நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் www.gate2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2026 பிப். 7, 8, 14, 15 ஆகிய நாட்களில் கேட் தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் நடைபெறும்.
- Aug 25, 2025 10:30 IST
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும்: திருமா
பாஜகவால் அதிமுகவுக்கு ஆபத்து என நாங்கள் சொன்னபோது விழுந்து புரண்ட அக்கட்சியினர் தற்போது அதே கருத்தை விஜய் கூறும்பொழுது அமைதியாக இருப்பது ஏன்?
அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் இருக்க ஒரே வழி பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும்
திருமாவளவன்
- Aug 25, 2025 10:30 IST
பாஜக-வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது -சு.வெங்கடேசன் எம்.பி
முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்போது அனுமன் தான் முதன் முதலில் விண்வெளிக்குப் போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விஷயமல்ல. பாஜக-வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.
நீல் ஆம்ஸ்ட்ராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்தும் நீக்கி ப்ரம் ப்ரம் பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்
- Aug 25, 2025 09:59 IST
தெருநாய்களுக்கு இடையே நடந்த சண்டை - முதியவர் காயம்
பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களுக்கு இடையே நடந்த சண்டையின்போது அவ்வழியே நடந்து சென்ற 77 வயது முதியவரை கடித்துக் குதறிய நாய். நாய் கடித்துக் குதறியதில் காலில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணனுக்கு 9 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- Aug 25, 2025 09:57 IST
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.39 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.10 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.26 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.