/indian-express-tamil/media/media_files/pykm1V6ZN4yCFxNxaK1j.jpg)
Today Latest Live News Update in Tamil: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. சி.என்.ஜி. ஒரு கிலோ கிராம் ரூ.91.50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்: 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 3,012 மில்லியன் கனஅடியாக உள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 170 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 404 மில்லியன் கனஅடியாக உள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்டாலின் வெளிநாடு பயணம்: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு முலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 5வது முறையாக ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Aug 30, 2025 13:37 IST
அரசு பேருந்துகளில் விளம்பரம்: ஐகோர்ட் உத்தரவு
அரசு பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், சட்ட விதிகளைப் பின்பற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அரசுப் பேருந்து கண்ணாடிகளில், விளம்பரங்கள் ஒட்டப்படுவதாக ராசிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
- Aug 30, 2025 13:34 IST
தேமுதிகவுக்கு தமிழிசைஅழைப்பு
தமாகா தலைவர் மூப்பனாரின் நினைவஞ்சலியில் எல்கே சுதிஷ் பங்கேற்றிருந்த நிலையில், தே.ஜ. கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
- Aug 30, 2025 13:33 IST
சென்னை விமான நிலையத்தில் சிபிஐ சோதனை
சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு போலி தங்க நகைகளை ஏற்றுமதி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, சென்னை விமான நிலையத்தின் கார்கோ பகுதி மற்றும் சுங்கத்துறை அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சிபிஐ சோதனையால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- Aug 30, 2025 13:26 IST
சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜப்பான் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி. சீனாவில் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
- Aug 30, 2025 12:42 IST
செப். 1 ஆம் தேதி பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்
ராமதாஸ் தலைமையில் செப். 1 ஆம் தேதி நடைபெறுகிறது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்.
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராமதாஸிடம் அறிக்கை அளித்த ஒழுங்கு நடவடிக்கை குழு; குற்றச்சாட்டுகள் குறித்து நாளைக்குள் (ஆக. 31) பதிலளிக்க அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கெடு; அன்புமணி இதுவரை பதிலளிக்காத நிலையில், நடவடிக்கைகள் குறித்து செப். 1 ஆம் தேதி ஆலோசனை.
- Aug 30, 2025 12:42 IST
அடுத்த மாதம் தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்
தமழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், அடுத்த மாதம் தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார். இந்த சுற்றுப்பயணம் குறித்து, த.வெ.க. தலைமை அலுவலகமான பனையூரில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டு, விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் தேவையான அனுமதிகளைப் பெறுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
- Aug 30, 2025 12:41 IST
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்வு- அரசாணை வெளியீடு
மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நெல் கொள்முதல் விலையை உயர்த்தி உத்தரவிடப்பட்டது. சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,545, பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி வரும் செப். 1-ம் தேதி முதல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
- Aug 30, 2025 11:49 IST
மூப்பனார் பிரதமராக வருவதைத் தடுத்தனர்: நிர்மலா சீதாராமன்
மூப்பனார் பிரதமராக வருவதைத் தடுத்தனர். நல்லாட்சியை மக்கள் தேடி வருகின்றனர்; தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்; சிறிய சிறிய பூசல்களைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட வேண்டும்; இந்தக் கூட்டணியை நல்லபடியாக நடத்த வேண்டும் - சென்னையில் நடைபெற்ற மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேச்சு.
- Aug 30, 2025 11:40 IST
இந்த கூட்டணி நல்ல முறையில் நடத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன்
உங்கள் அனைவரிடமும் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டணி நல்ல முறையில் நடத்த வேண்டும். இந்த கூட்டணி மூலமாக மக்களுக்கு செய்ய வேண்டிய தொண்டை ஆற்ற வேண்டும். சின்ன சின்ன உட்பூசல்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்- தமிழ் மாநிலக் காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் நிர்மலா சீதாராமன் பேச்சு
- Aug 30, 2025 11:15 IST
அமைச்சர் சேகர் பாபு கருத்து
சென்னை: நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுடைய அறப் பணிகளுக்கு மேலும் மேலும் உறுதுணையாக இருக்கும்
-கோயில் நிதியில் பள்ளி, கல்லூரிகள் நடத்தப்படுவது தொடர்பான தீர்ப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு கருத்து
- Aug 30, 2025 11:15 IST
டேங்கர் லாரி மீட்பு
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் நள்ளிரவில் சரக்குடன் கவிழ்ந்த டேங்கர் லாரி 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது.
- Aug 30, 2025 11:10 IST
உதயநிதி ஸ்டாலின் X தள பதிவு
— Udhay (@Udhaystalin) August 30, 2025
- Aug 30, 2025 10:44 IST
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் உரிய தேதியில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்கள். குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடைந்தபிறகே பணப் பலன்களைப் பெற முடியும். இதுவரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 30, 2025 10:42 IST
மூப்பனார் நினைவிடத்தில் நிர்மலா சீதாராமன், இபிஎஸ் மரியாதை
த.மா.கா. நிறுவனர் ஜி.கே.மூப்பனார் நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
- Aug 30, 2025 10:20 IST
சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனை - பரபரப்பு
தங்க நகை வியாபார மோசடி தொடர்பாக, சென்னையில் உள்ள மீனாம்பாக்கம், பூக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு இடத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- Aug 30, 2025 09:57 IST
ஜம்மு-காஷ்மீரில் மேக வெடிப்பு, நிலச்சரிவு: 10 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு என 2 வெவ்வேறு சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ராம்பான் மாவட்டத்தின் ராஜ்கர் தாலுகாவில் ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். அதேபோல், ரியாசி மாவட்டத்தின் மஹோர் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய ஒரு வீட்டில், ஒரு தம்பதி மற்றும் அவர்களின் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- Aug 30, 2025 09:46 IST
"யார் சதி செய்தாலும் முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உண்டு"
பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இருக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் நினைத்தது நடக்காது என்றும், அங்கும் மக்களை எழுச்சி பெற வைக்க தேர்தல் ஆணையம் உதவியிருக்கிறது என்பதே உண்மை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Aug 30, 2025 09:21 IST
"தமிழகம் வளர்ந்துள்ளதா? மத்திய அரசின் புள்ளி விபரங்களே பதில்"
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டதன் காரணமாக, 32.81 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தமிழகம் வளர்ந்துள்ளதா என கேட்பவர்களுக்கு மத்திய அரசின் புள்ளி விபரங்களே பதிலாக உள்ளது. திமுகவை நோக்கி புதிய கட்சிகள் வருகின்றனவோ இல்லையோ. புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும், அதை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டிற்கு உண்டு என்றார்.
- Aug 30, 2025 08:58 IST
எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு ஸ்டாலின் பதில்
முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். "அவருடைய வெளிநாட்டுப் பயணங்கள் எப்படி இருந்ததோ, என்னுடைய வெளிநாட்டுப் பயணங்களும் அப்படியே இருக்கும் என்று நினைத்து எப்படி பழனிசாமி பேசுகிறார்? ஆனால், நாங்கள் போடும் ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன; வந்துள்ளன," என்று அவர் தெரிவித்துள்ளார்.
- Aug 30, 2025 08:50 IST
”தி.மு.க. ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு”
தி.மு.க. ஆட்சியில் இதுவரை ரூ.10.62 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 929 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகியுள்ளன என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே முதலீடுகளாக மாறி, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வளர்ச்சிக்கு, மத்திய அரசின் புள்ளிவிவரங்களே சான்றாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
- Aug 30, 2025 08:41 IST
ஜப்பான் ஆளுநர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
டோக்கியோ- ஜப்பான் நாட்டின் 16 மாகாணங்களின் ஆளுநர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு மேற்கொண்டார். இந்திய மாநிலங்களுக்கும், ஜப்பானிய மாகாணங்களுக்கும் இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
- Aug 30, 2025 08:17 IST
டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை: நீதிமன்றம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது அதிகாரத்தை மீறி டிரம்ப் வரிகளை விதித்துள்ளதாக நீதிமன்றம் கூறி உள்ளது. வரிவிதிப்பு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை "ஒட்டுமொத்த பேரழிவு" என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்து உள்ளார். மேல்முறையீட்டு நீதிமன்றம் "தவறாக" தீர்ப்பை வழங்கியது, "ஆனால் இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன்" எதிர்த்துப் போராடுவேன் என்றும் டிரம்ப் கூறினார்.
- Aug 30, 2025 08:04 IST
நெல்லை: மர்மமான முறையில் எரிக்கப்பட்ட மனித உடல்
நெல்லை மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள இடுகாட்டில் மர்மமான முறையில் எரிக்கப்பட்ட மனித உடல் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மேலப்பாளையம் போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். தென்னை மட்டைகளைக் கொண்டு அவசர அவசரமாக உடல் எரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடல் எலும்புக்கூடுகளிலிருந்து சில தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
- Aug 30, 2025 07:38 IST
தமிழகத்தில் செப்.4ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் செப்டம்பர் 4ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துடுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- Aug 30, 2025 07:25 IST
2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் -அரசு உத்தரவு
2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் ஆட்சியர் அருண்ராஜ் சர்க்கரை துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சார் ஆட்சியர் மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- Aug 30, 2025 07:20 IST
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.88.19 ஆக சரிந்துள்ளது. முக்கிய காரணங்களாக பொருளாதார வல்லுநர்கள் 2 காரணங்களை முன்வைக்கின்றனர். இந்தியப் பொருட்களின் மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிதி. கூடுதலாக, தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ள நிலையில், ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடைவதால், தங்கத்தின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
- Aug 30, 2025 07:19 IST
வாகனங்களை சேதப்படுத்திய யானை - மக்கள் அச்சம்
கோவை மாவட்டம் வெள்ளிமலைபட்டினம் அருகே திடீரென ஊருக்குள் புகுந்த ஒற்றை கொம்பு யானை, அங்கிருந்த இருசக்க வாகனங்கள் மற்றும் காரை சேதப்படுத்தி உள்ளது. யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- Aug 30, 2025 07:17 IST
சீனாவில் நாளை மறுநாள் பிரதமர் மோடி-புதின் சந்திப்பு
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் 1-ம் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். இந்த தகவலை கிரெம்ளின் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் யுரி உஷா கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.
- Aug 30, 2025 07:13 IST
எடப்பாடி தலைமையில் இன்று அ.தி.மு.க. மா.செ. கூட்டம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (சனிக்கிழமை) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. 82 2மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குத் தயாராவது, பூத் கமிட்டிகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
- Aug 30, 2025 07:11 IST
தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்டாலின் வெளிநாடு பயணம்
முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை ஜெர்மனியில் இருந்து புறப்பட்டு, நாளை ஜெர்மனி சென்றடைகிறார். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் சிலையினை திறந்து வைக்க உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.