Chennai News Live Updates: காலை உணவுத் திட்டம் செலவல்ல, சூப்பரான சமூக முதலீடு - ஸ்டாலின்

Tamil Nadu Latest News Update: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu Latest News Update: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cm stalin

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நிலவரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 59.15% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 6.954 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. குறிப்பாக புழல் ஏரியில், 3 மாதங்களுக்குப் பிறகு நீர் இருப்பு 3 டி.எம்.சி. ஆக உயர்ந்துள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் தொடங்கியது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை விரிவாக்கம் செய்துவைத்தார். 

  • Aug 26, 2025 09:49 IST

    பஞ்சாப் சி.எம் பங்கேற்பு

    சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



  • Aug 26, 2025 09:27 IST

    காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    ஆண்டுக்கு ரூ.600 கோடிக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது செலவல்ல, சூப்பரான சமூக முதலீடு. இக்குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பணியாற்றுவார்கள். இதுதான் இத்திட்டத்தின் உண்மையான வளர்ச்சி என காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 



  • Advertisment
    Advertisements
  • Aug 26, 2025 08:48 IST

    காலை உணவுத்திட்ட விரிவாக்கம்: தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

    தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணியளவில் தொடங்கியது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை விரிவாக்கம் செய்துவைத்தார். 



  • Aug 26, 2025 08:38 IST

    பஞ்சாப்பில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை

    தமிழ்நாட்டை போல பஞ்சாப் மாநிலத்திலும், காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறி உள்ளார். சென்னை மயிலாப்பூரில், நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்க உள்ளார்.



  • Aug 26, 2025 08:36 IST

    கிழக்கு கடற்கரை சாலையில் உயர்மட்ட சாலை அமைக்க டெண்டர்

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ. தொலைவுக்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்த சாலைப் பணிகளின் மதிப்பு சுமார் ரூ.2,100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.



  • Aug 26, 2025 08:33 IST

    சில்லறை பணவீக்க விகிதம் துல்லியமாக கணிக்க திட்டம்

    நாட்டின் சில்லறை பணவீக்க விகிதத்தை மிகவும் துல்லியமாக கணிக்க ஒன்றிய அரசு புதிய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட மின்வணிக நிறுவனங்களிடம் பொருட்கள் விலை குறித்த விவரத்தை பெறவும் புதிய திட்டமிட்டுள்ளது.



  • Aug 26, 2025 08:32 IST

    காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: 3.5 லட்ச மாணவர்கள் பயன்

    சென்னை மயிலாப்பூரில், நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தால் 2 ஆயிரத்து 430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் 3.5 லட்ச மாணவர்கள் பயன்பெறுவர். 



  • Aug 26, 2025 07:48 IST

    ராணுவத்திற்கு ஆட்சேர்க்கை: ஈரோட்டில் தொடங்கியது

    ஈரோட்டில் ராணுவத்திற்கு ஆட்சேர்க்கை முகாம் - எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை ஆகியவை அதிகாலை முதல் தொடங்கின. 11 மாவட்டங்களில் இருந்து எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு இன்று முதல் வரும் செப். 7ம் தேதி வரை உடற்தகுதித் தேர்வு நடக்க உள்ளது. கூடுதல் எஸ்.பி. தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்



  • Aug 26, 2025 07:47 IST

    மந்தைவெளி பேருந்து நிலையம் நாளை முதல் இடமாற்றம்

    சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யபப்ட்டுள்ளது. அதன்படி, மந்தைவெளியில் புறப்படும் பேருந்துகள், மந்தைவெளி ரயில் நிலையம், பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் லஸ் கார்னரில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடம் எண் 21, 41D, S17, 49K, S5 பேருந்துகள் மந்தைவெளி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது



  • Aug 26, 2025 07:31 IST

    கனமழை: இமாச்சல்லில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதால் 8 மாவட்டங்களில் பள்ளி. கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



  • Aug 26, 2025 07:30 IST

    இந்திய பொருட்களுக்கு +25% வரி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா. நாளை முதல் இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது. ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும்



  • Aug 26, 2025 07:29 IST

    டெல்லி முதல்வருக்கு வழங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ்

    டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு வழங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. ரேகா குப்தாவை, சகாரியா என்பவர் தாக்க முயன்ற நிகழ்வால் இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு குறித்து சர்ச்சை எழுந்ததால் மத்திய அரசு திரும்பப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Aug 26, 2025 07:14 IST

    தூத்துக்குடியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு: 3 பேர் கைது

    தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தனர். சோதனை நடத்திய போலீசார் பெண் உள்பட மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டாசுகள் மற்றும் அவற்றின் தயாரிப்பு உபகரணங்களும் பறிமுதல் செய்தனர்.



  • Aug 26, 2025 07:09 IST

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

    தமிழகம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்படுகிறது. இதற்கான விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணியளவில் நடக்கிறது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறார்.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: