Chennai News Live Updates: வாக்காளர் பட்டியல் முறைகேடு - ராகுல் தலைமையில் எம்.பிக்கள் பேரணி

Tamilnadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamilnadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rahul

வாக்காளர் பட்டியல் முறைகேடு - ராகுல் தலைமையில் இன்று பேரணி

Today Latest News Updates: 

Advertisment

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்: இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். 700க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

தக்காளி விலை தொடர் உயர்வு: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளியின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80க்கு விற்பனையாகிறது. ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

  • Aug 11, 2025 09:28 IST

    காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை பணியிடை நீக்கம்

    சென்னை ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்து கோவையில் உள்ள கிணற்றில் வீசிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் திறன்பட செயல்படாத கோவை சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரையை பணியிடை நீக்கம் செய்து, கோவை சரக டி.ஐ.ஜி சசி மோகன் உத்தரவிட்டுள்ளார்.



  • Aug 11, 2025 09:07 IST

    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு

    திருவண்ணாமலை, பருவதமலைக்கு சென்று திரும்பியபோதுகாட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்களில், ஒருவரின் உடல் இறந்த நிலையில் மீட்பு, மற்றொருவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர். பருவதமலை பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Aug 11, 2025 08:49 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,766 கனஅடியாக குறைந்தது

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,200 கனஅடியில் இருந்து 8,766 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 118.200 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 90.628 டி.எம்.சி.யாக உள்ளது.



  • Aug 11, 2025 08:24 IST

    மழைநீர் வடிகால் பணி-இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

    சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மியூசிக் அகடாமி, மயிலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை நோக்கி வரும் மாநகரப் பேருந்துகளின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



  • Aug 11, 2025 08:10 IST

    கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை

    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளியின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80க்கு விற்பனையாகிறது. ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.



  • Aug 11, 2025 07:55 IST

    சென்னையில் இன்று முதல் ஏ.சி மின்சார பேருந்து சேவை

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதல் முறையாக ஏ.சி. மின்சார பஸ் சேவை இன்று முதல் தொடங்குகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.49.56 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பெரும்பாக்கம் பணிமனையை இன்று (திங்கட்கிழமை) திறந்து வைத்து, அங்கிருந்து 55 மின்சார ஏ.சி. பஸ்களின் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.



  • Aug 11, 2025 07:35 IST

    வாக்குத்திருட்டு புகார்: பிரத்யேக வலைத்தளம் தொடக்கம்

    வாக்குத் திருட்டுக்கு எதிரான தங்கள் போராட்டத்தில் பொது மக்களும் இணைந்துகொள்ளும் வகையில் பிரத்யேக வலைத்தள பக்கத்தை காங்கிரஸ் கட்சிதொடங்கியுள்ளது. VOTE CHORI என்ற வலைத்தளத்தில் மக்கள் தங்கள் புகாரை பதிவு செய்யலாம் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. வாக்குத் திருட்டு நடந்துள்ளது என்று ராகுல் காந்தி வெளியிட்ட ஆதாரங்களை பதிவிறக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் வாக்குத்திருட்டு தொடர்பான தங்கள் அனுபவங்களையும் பதிவிடலாம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.



  • Aug 11, 2025 07:29 IST

    பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு - குளிக்கத் தடை

    தொடர் மழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாள் என்பதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில் மழை பெய்தின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்



  • Aug 11, 2025 07:26 IST

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்

    தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், வரும் 16ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 11, 2025 07:25 IST

    இண்டி கூட்டணி கட்சி எம்.பிக்கள் இன்று டெல்லியில் பேரணி

    வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் ’இந்தியா’ கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் பேரணி செல்ல உள்ளனர். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சரிபார்க்கும் வகையில், வெளிப்படைத்தன்மையுடன் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். தனது குரலுக்கு வலுசேர்க்க இணையதளம் வாயிலாகவோ, மிஸ்டு கால் மூலமாகவோ ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.



  • Aug 11, 2025 07:20 IST

    ”அதிமுக தலைவர்களுக்கு எதிராக விசிகவினர் பேசக்கூடாது”

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நான் அவமதிக்கும் வகையில் பேசிவிட்டேன் என்று கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். அதற்கு எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.வின் முன்னணி தலைவர்களுக்கு பதில் சொல்கிறோம் என்று எதையும் பேசக்கூடாது. என் மீதான விமர்சனத்திற்கு விளக்கம் தர நான் தயாராக இருக்கிறேன். எனவே, கட்சியினர் யாரும் அதுகுறித்து பேச வேண்டாம். எந்த தலைவரையும் அவமதிக்கும் நோக்கம் நமக்கு கிடையாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

     



  • Aug 11, 2025 07:12 IST

    சின்னத்திரை நடிகர் சங்க தலைவரானார் பரத்

    சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக பெப்சி அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் உமா சங்கர் பாபு தேர்தலை நடத்தினார். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடந்தது. மொத்தம் 936 வாக்குகள் பதிவாகின. இதில் 491 வாக்குகள் பெற்று நடிகர் பரத் தலைவராக தேர்வாகியுள்ளார். 

     



  • Aug 11, 2025 07:11 IST

    சென்னையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

    திருவனந்தபுரத்திலிருந்து 5 எம்.பி.க்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, நேற்று இரவு சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் எம்.பி.க்கள் மற்றும் பயணிகள் அனைவரும் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.



  • Aug 11, 2025 07:10 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

    இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழப்பு. நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்  வருவாய் இழப்பு ஏற்படும்.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: