/indian-express-tamil/media/media_files/Zh2xcAw1NOSkohwXbYwv.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 13, 2025 00:41 IST
பள்ளிகளை மூடுவது அரசின் நோக்கம் அல்ல; பள்ளி கல்வித்துறை விளக்கம்
207 பள்ளிகள் மூடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பள்ளிகளை மூடுவது அரசின் நோக்கம் அல்ல. மாணவர்கள் சேர்க்கை நிகழாத பள்ளிகள் மட்டுமே செயல்பாட்டில் இல்லை. சேர்க்கைக்கான வை இருந்தால் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- Aug 12, 2025 21:13 IST
எங்களில் பாதி கம்யூனிஸ்ட்டுகள்.. என் பெயரே ‘ஸ்டாலின்: மு.க.ஸ்டாலின் பேச்சு
"ஏகாதிபத்திய சதிச் செயல்களை எதிர்கொள்ள, இதே தோழமையுடன் எந்நாளும் இருப்போம். எங்களில் பாதி கம்யூனிஸ்ட்டுகள்.. என் பெயரே ‘ஸ்டாலின் என்று சென்னையில் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
- Aug 12, 2025 21:10 IST
டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் சேப்பாக்கம் மைதானம்
அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் சேப்பாக்கம் மைதானத்தின் புனரமைப்பு பணிகள் விரைவில் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 12, 2025 20:08 IST
அடிமைத்தனத்தைப் பற்றி பழனிசாமி பேசலாமா? - ஸ்டாலின் கடும் தாக்கு
சென்னையில் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிலையில், அடிமைத்தனத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். "என்னில் பாதியான செங்கொடி தோழர்கள் அழைத்து நான் வராமல் இருந்தது இல்லை. நமக்குள் இருக்கும் தோழமை தேர்தலுக்கானது அல்ல; கொள்கை நட்பு; இங்கு யாருக்கும் யாரும் அடிமை இல்லை. ஏகாதிபத்திய சதிச் செயல்களை எதிர்கொள்ள, இதே தோழமையுடன் எந்நாளும் இருப்போம்" என்று அவர் கூறியுள்ளார்.
- Aug 12, 2025 19:27 IST
கருணை அடிப்படையில் பணி - விதிகளில் திருத்தம்
தமிழ்நாட்டில் கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான விதிகளை திருத்தம் செய்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களின் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்குள் பணி வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் மாநில அளவில் மூப்பு பட்டியல் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்ட பணி நியமனம் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- Aug 12, 2025 18:36 IST
கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒரு சிறப்புக் காட்சியை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. நாளை மறுநாள் காலை 9 மணி முதல் 5 சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
- Aug 12, 2025 18:35 IST
ஜனநாயகனால் சந்தோஷமும் வருத்தமும் - நடிகை பூஜா ஹெக்டே பேட்டி
"கூலி படத்தின் வியாபாரத்தை பெரிது படுத்தும் என, 'மோனிகா...’ பாடலுக்கு நடனமாட என்னை அழைத்த லோகேஷுக்கு நன்றி. மேலும் அப்பாடலுக்கு ஆடுவது மிகவும் கடினமாக இருந்தது. ஜனநாயகன் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருந்தாலும் அது விஜய்யின் கடைசி படம் என நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது" என்று நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
- Aug 12, 2025 18:34 IST
நிர்வாண வீடியோ எடுத்த நபர் கைது
சென்னை, நசரத்பேட்டையில் திருப்புலியை காட்டி பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து நகை பறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டையார்பேட்டையை சேர்ந்த அஜய்குமார், திருடிய நகைகளை விற்று விமானத்தில் சுற்றி வந்தபோது, கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Aug 12, 2025 17:51 IST
அதிகாரம் இன்றி கூட்டம் நடத்துகிறார் - அன்புமணி மீது தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்
அன்புமணி நடத்திய பொதுக்குழுவுக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் நிறுவனரை அழைக்காமல் சட்டவிரோதமாக அன்புமணி பொதுக்குழுவை நடத்தியுள்ளதாக புகார் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் சூழலையே அன்புமணி மாசுபடுத்துகிறார். அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது. கட்சி நிறுவனர், தலைவர் ஒப்புதலின்றி தன்னிச்சையாக பதவிக் காலத்தை அன்புமணி நீட்டித்துள்ளார். அன்புமணியிடம் விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- Aug 12, 2025 17:51 IST
நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது... தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற பெயரில், 5 கோடி வாக்காளர்களை நீக்கினால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது; தேர்தல் ஆணையத்தின் நடைமுறையில் சட்டவிரோத செயல்முறைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் ஒட்டுமொத்த நடைமுறையும் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- Aug 12, 2025 17:44 IST
ஓட்டுனர் உரிமம் கேட்டு டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
புதிய வாகன ஓட்டுனர் உரிமம் கேட்டு யூடயூபர் டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். முன்னதாக அக்டோபர் 2023-ல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஒட்டிய விவகாரத்தில் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்திருந்தார்.
- Aug 12, 2025 17:05 IST
பசு மாட்டைத் தேசிய விலங்காக அறிவிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்
பசு மாட்டைத் தேசிய விலங்காக அறிவிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என மக்களவையில் ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. மக்களவையில் பாஜக எம்.பி. திரிவேந்திர சிங் ராவத் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய பால்வளத்துறை இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
- Aug 12, 2025 16:50 IST
திருப்பதி மலைப்பாதையில் ஆக.15ம் தேதி முதல் இனி ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிப்பு
திருப்பதி மலைப்பாதையில் ஆக.15ம் தேதி முதல் இனி ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை ஆக.15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
- Aug 12, 2025 16:49 IST
மடிக்கணினி திட்டம் - விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!
தமிழ்நாட்டின் அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினி வழங்குவதற்கான திட்டத்துக்கு, குறைந்த தொகை சமர்ப்பித்துள்ள நிறுவனங்களாக டெல், ஏசர் நிறுவனங்கள் தேர்வாகியுள்ள. ஒரு ஒரு மடிக்கணினிக்கு ரூ.40,828 விலையுடன் (15.6 இன்ச் திரை) டெல் நிறுவனமும்; ரூ.23,385 விலையுடன் (14 இன்ச் திரை) ஏசர் நிறுவனம் ஒப்பந்தங்கள் சமர்ப்பிப்பு! இம்மாத இறுதிக்குள் லேப்டாப் கொள்முதல் ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Aug 12, 2025 16:10 IST
இன்ஸ்டா திவாகர் மீது புகார்
“இன்ஸ்டா பிரபலம் திவாகர் என்பவர் மீது புகார் கொடுத்துள்ளேன்; நெல்லை படுகொலை விவகாரத்தில், குற்றவாளியை குறிப்பிட்டு சாதிப்பெருமை பேசுகிறார். அது நல்லதல்ல. அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்க தண்டனையும் கிடைக்க வேண்டும்" என்று சென்னை காவல் ஆணையரகத்தில் நடிகை ஷகீலா புகார் அளித்துள்ளார்.
- Aug 12, 2025 16:07 IST
ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து
ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல என பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணைய வாதத்தை நீதிமன்றம் ஏற்றது
- Aug 12, 2025 15:36 IST
சென்னை உயர் நீதிமன்ற மாடியில் இருந்து பெண் குதித்ததால் பரபரப்பு
சென்னை உயர் நீதிமன்ற மாடியில் இருந்து பெண் குதித்துள்ளார். ஆட்கொணர்வு வழக்கில் விசாரணைக்கு ஆஜரான அவரை, பெண்கள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டதால் கீழே குதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார்.
- Aug 12, 2025 15:30 IST
தூய்மைப் பணியாளர்களுக்காக களமிறங்கிய மாணவர்கள்
“இன்னைக்கு அவங்களுக்கு நடக்குற அநீதி, நாளைக்கு எங்களுக்கும் நடக்கும். எதிர்க்கட்சியா இருந்தபோது இதே முதல்வர்தானே சொன்னார். நம்பி ஓட்டுப்போட்ட நாங்க என்ன முட்டாளா?” என தூய்மைப் பணியாளர்களுக்காக களமிறங்கிய மாணவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.
- Aug 12, 2025 14:54 IST
நாய்கள் மிகவும் அழகான, மென்மையான உயிரினங்கள் - காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா
நகரத்தின்அனைத்துதெருநாய்களையும்ஒருசிலவாரங்களுக்குகாப்பகங்களுக்குமாற்றுவது, அவற்றைமனிதாபிமானமற்றமுறையில்நடத்துவதற்குவழிவகுக்கும். அவற்றைக்கையாளபோதுமானதங்குமிடங்கள்கூடஇல்லை. இந்தஅப்பாவிஜீவன்களைகவனித்துபாதுகாப்பாகவைத்திருக்கஒருமனிதாபிமானவழியைக்கண்டறியவேண்டும். நாய்கள்மிகவும்அழகான மென்மையான உயிரினங்கள், அவை கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட வேண்டியவை அல்லஎன காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்திதெரிவித்துள்ளார்.
- Aug 12, 2025 14:49 IST
Contract நிறுவனத்தில் நாங்க எதுக்கு வேலைக்கு போகணும்? - தூய்மைப் பணியாளர்கள் போராட்டக் குழு
நாங்ககார்ப்பரேஷனில்வேலைசெய்தோம். எங்களுக்குகார்ப்பரேஷன்சம்பளம்கொடுத்தது. இப்போதும்கார்ப்பரேஷனில்வேலைபார்க்கணும்னுநினைக்கொறோம். ராம்கிகாண்ட்ரேக்ட்நிறுவனத்தில்நாஙக்எதுக்குவேலைக்குபோகனும்எனதூய்மைப்பணியாளர்கள்போராட்டக்குழுஅறிவித்துள்ளது.
- Aug 12, 2025 14:12 IST
வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு - RBI விளக்கம்
ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்பை ரூ.10,000ல் இருந்து ரூ.50,000ஆக உயர்த்திய விவகாரம். "வங்கி சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்பை ரிசர்வ் வங்கி ஒழுங்குபடுத்தவில்லை சேமிப்பு கணக்கு தொடர்பான விதிகளை வங்கிகளே முடிவு செய்ய சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது" என RBI ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.
- Aug 12, 2025 14:06 IST
மக்களவையை கலையுங்கள் - வாக்கு திருட்டு விவகாரத்தை சுட்டிக்காட்டி திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தல்
வாக்காளர்பட்டியல்தீவிரதிருத்தத்தைஅமல்படுத்தும்முன்உடனடியாகமக்களவையைகலைக்கவேண்டும். பிரதமர், மத்தியஅமைச்சர்கள்உடனடியாகபதவிவிலகவேண்டும். பாஜகவிற்குஎதிராகநேற்றுநடந்தபோராட்டம்ஒருதொடக்கம்மட்டுமேஎனவாக்குதிருட்டுவிவகாரத்தைசுட்டிக்காட்டிதிரிணாமுல்காங்கிரஸ்வலியுறுத்தியுள்ளது.
- Aug 12, 2025 13:59 IST
கல்லறைத் திருநாளில் ஆசிரியர் தகுதித் தேர்வு: வேறொரு தேதிக்கு மாற்ற இ.பி.எஸ் வலியுறுத்தல்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்; உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
- Aug 12, 2025 13:43 IST
பணி நிரந்தரம் வாக்குறுதியை ஸ்டாலின்தான் கொடுத்தார் - தூய்மைப் பணியாளர்கள் போராட்டக் குழு
பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியை முதல்வர்தான் அப்போது கொடுத்தார். நாங்கள் அப்படி வாக்குறுதியே ஒருபோதும் கொடுக்கவில்லை என முதல்வரை கூறச்சொல்லுங்கள். நாங்கள் இப்போதே கூடாரத்தை கலைத்துவிட்டுச் செல்கிறோம் என்று தூய்மைப் பணியாளர்கள் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
- Aug 12, 2025 13:40 IST
சாகும்வரை ஆயுள் தண்டனை தீர்ப்பை ரத்து செய்யக் கோரி அபிராமி மேல்முறையீடு; காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
2 குழந்தைகளை கொலை செய்த வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி அபிராமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணத்தை மீறிய உறவிற்காக 2 குழந்தைகளை கொலை செய்த அபிராமிக்கு சாகும் வரை ஆய்ள் தண்டனை வழங்கி காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது.
- Aug 12, 2025 13:36 IST
உதயநிதி ஸ்டாலினுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சந்திப்பு
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சந்தித்தார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின், “நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு கபில்தேவ் உத்வேகமாக உள்ளார்” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- Aug 12, 2025 13:11 IST
முருகன் மாநாட்டு மலர் கட்டாய விற்பனை: ‘மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்?’ - அன்புமணி
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்: “பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம்ம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2,700-க்கு முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் கருத்துகளும் அவர்களின் புகைப்படங்களும்தான் நிறந்துள்ளன.
- Aug 12, 2025 12:48 IST
டெல்லியில் தெருநாய்களை அகற்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி அதிருப்தி
டெல்லியில் தெருநாய்களை அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு, மனிதாபிமான அறிவியல் சார்ந்த கொள்கைகளுக்கு பின்னடைவு. தெருநாய்களை அகற்றும் முடிவு கொடூரமானது. காப்பகங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு ஆகியவை மூலம் பொது பாதுகாப்பையும் விலங்குகள் நலனையும் ஒருசேர உறுதி செய்ய முடியும்” என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
- Aug 12, 2025 12:43 IST
யூடியூப் பிரபலம் திவாகர் மீது நடிகை சகிலா புகார்
யூடியூப் பிரபலம் `வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் மீது நடிகை சகிலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சாதி மோதல்களை உருவாக்கும் நோக்கில் திவாகர் கருத்துக்களை தெரிவித்து வருவதாக சகிலா புகார் அளித்துள்ளார்.
- Aug 12, 2025 12:36 IST
தொடக்கப் பள்ளிகளில் காலி பணியிடங்களை இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புக - ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடக்கப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்புக; நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 13,038 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2013 முதல் தேர்ச்சி பெற்றவர்கள் பெரும்பான்மையானோர் 40, 50 வயதைக் கடந்துவிட்டனர்” என்று கூறியுள்ளார்.
- Aug 12, 2025 12:15 IST
‘நாம் மாற்று சக்தி அல்ல, முதன்மை சக்தி’; த.வெ.க மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த விஜய்
“மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை இந்த உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்; நாம் கொள்கை எதிரி, அரசியல் எதிரியை எதிர்த்து நின்று ஜனநாயக போரில் வெல்வோம். தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நமது குறிக்கோள். வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு. மாநிலம் அதிர மாநாட்டிற்கு தயாராவோம்” என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- Aug 12, 2025 11:41 IST
தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகவே அரசு
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. பணியாளர்களுக்கு ஆதரவாகவே அரசு இருக்கிறது என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
போராட்டம் தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்ய, தினந்தோறும் முறையீடு செய்ய வேண்டாம், மனுவாக தாக்கல் செய்தால் பின்பு விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
- Aug 12, 2025 11:41 IST
தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு
மதுரை மாநாடு வருமாறு தொண்டர்களுக்கு விஜய் X பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
- Aug 12, 2025 11:36 IST
டி-ஷர்ட்டுகளை அணிந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்
இந்தியா கூட்டணியின் தலைவர்கள் வாக்காளர் மோசடி மற்றும் SIR தொடர்பான பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் 124 வயதுடைய வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் மின்டா தேவி என்ற பெயர் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகளை அணிந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்பட்டனர்.
#WATCH | Delhi: INDIA bloc leaders continue to protest over the alleged voter fraud and SIR issues. MPs were seen wearing T-shirts featuring the name Minta Devi, a voter allegedly listed as 124 years old in the Election Commission's voter list. pic.twitter.com/LVhS3I5CZJ
— ANI (@ANI) August 12, 2025 - Aug 12, 2025 11:02 IST
கல்லறைத் திருநாள் அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு: இபிஎஸ் கண்டனம்
நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.
ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா? பொம்மை முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இபிஎஸ் X பக்கத்தில் பதிவு - Aug 12, 2025 11:00 IST
தீப்பிடித்ததாக வெளியான தகவல் பொய்யானது: விமான நிலைய நிர்வாகம் விளக்கம்
மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததாக வெளியான தகவல் பொய்யானது; தீ பாதிப்பு எதுவும் இல்லை என விமான நிலைய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அதிகாலை 4 மணிக்கு அந்த விமானம் தரையிறங்கிய போது, ஓடுபாதையில் உராய்ந்து அதிகப்படியான புகை எழும்பியது. சரக்கு விமானங்கள் தரையிறங்கும் போது இது வழக்கம் எனவும் தெரிவித்துள்ளது.
- Aug 12, 2025 09:47 IST
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் பெரியசாமி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கிண்டியில் பிரபல நட்சத்திர ஓட்டல் மட்டுமின்றி பல்வேறு தொழில், கல்வி நிறுவனங்களை பெரியசாமி நடத்திவருகிறார்.
- Aug 12, 2025 09:44 IST
”பதவிக்காக மதிமுக என்றும் கூட்டணி வைப்பதில்லை”
மதிமுக ஒருபோதும் பதவிக்காக கூட்டணி வைத்தது இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கொள்கைக்காகவே கூட்டணி வைப்போம். கூட்டாட்சி தத்துவம் மட்டும்தான் இந்தியாவை பாதுகாக்கும். மதச்சார்பின்மை தான் இந்தியாவை வளர்க்கும். இந்து-முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியையும் பாஜக எடுத்து வருகிறது என்றார்.
- Aug 12, 2025 09:35 IST
புழல் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு
புழல் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த ஸ்ரீனிவாச ராவ் (57), உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கே.கே.நகரைச் சேர்ந்த அவர் கடந்த ஏப்ரல் மாதம் போக்சோ வழக்கில் கைதான நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த மாதம் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- Aug 12, 2025 09:33 IST
தொடர் விடுமுறை: 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தொடர் விடுமுறையை ஒட்டி சுமார் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 13/08/2025 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பாயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- Aug 12, 2025 09:11 IST
கோவையில் சிக்கியது ரூ.7 கோடி உயர்ரக கஞ்சா
கோவை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்த இருவர் சிக்கினர். அவர்களிடம் இருந்து சுமார் 6.7 கிலோ கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது.
- Aug 12, 2025 08:57 IST
வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி சிறுவன் பலி
கோவை மாவட்டம் வால்பாறை அருகே வேவர்லி தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை தாக்கி சிறுவன் உயிரிழந்தார். சிறுத்தை தாக்கியதில் புலம்பெயர் தொழிலாளியின் 5 வயது மகன் உயிரிழந்தார் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
- Aug 12, 2025 08:57 IST
69.77 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.77 அடியை எட்டியதால் விரைவில் அணை நிரம்ப உள்ளது. அணை நிரம்ப உள்ளதால் மதகுப்பகுதிகளில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அணையின் 7 பிரதான பெரிய மதகுகள், 7 சிறிய மதகுகள் வழியாக நீரை திறந்து சோதனை மேற்கொண்டனர். நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை அணை நிரம்ப உள்ளது.
- Aug 12, 2025 08:56 IST
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 16,288 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.63 அடியாக உயர்வு, நீர் இருப்பு 91.302 டி.எம்.சி. ஆக உள்ள நிலையில், அணையில் இருந்து மொத்தமாக 7500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- Aug 12, 2025 08:44 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக ஸ்டிரைக்
மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர். இதனால் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 20வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Aug 12, 2025 08:05 IST
தவறான கணக்கீடு: மின் வாரியம் எச்சரிக்கை
தவறான மின் கணக்கீடு செய்யும் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின் வாரியம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து துணை நிதிக் கட்டுப்பாட்டாளா்களுக்கு நிதி இயக்குநா் அலுவலகம் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கணக்கீட்டில் ஏதாவது அசாதாரணமான நடவடிக்கைகள் இருந்தால் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட தலைமை அலுவலகத்துக்குத் தெரிவிப்பதுடன், அது தொடா்பான அறிக்கையையும் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 12, 2025 08:02 IST
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Aug 12, 2025 07:47 IST
”வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு -விசாரணை தேவை”
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். தோ்தல் ஆணையத்தை பாஜக தனது தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக மாற்றிவிட்டது. பெங்களூரின் மகாதேவபுரா தொகுதியில் நிகழ்ந்தது, நிா்வாகக் குளறுபடி அல்ல. மக்கள் அளித்த தீா்ப்பைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி என்று ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றஞ்சாட்டி உள்ளார்.
- Aug 12, 2025 07:22 IST
மனநல மருத்துவமனையில் மீரா மிதுன் அனுமதி
நடிகை மீரா மிதுன் டெல்லி மனநல மருத்துவமனையில் அனுமதி என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மிகுந்த மன அழுத்தத்துடன் டெல்லி மருத்துவமனையில் நடிகை மீரா மிதுன் சிகிச்சை பெறுவதால் சென்னைக்கு அழைத்துவர இயலவில்லை எனவும் கூறியுள்ளனர். பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
- Aug 12, 2025 07:19 IST
செந்தில் பாலாஜி கோரிக்கையை நிராகரித்த கோர்ட்டு
முந்தைய அதிமுக ஆட்சியில் முந்தைய அதிமுக ஆட்சியில் (2011-2015) வேலைக்காக பணம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான ‘2022’ தீா்ப்பில் இடம்பெற்றுள்ள சில கருத்துகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ‘அக்கருத்துக்கள் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினா்.(2011-2015) வேலைக்காக பணம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான ‘2022’ தீா்ப்பில் இடம்பெற்றுள்ள சில கருத்துகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.