/indian-express-tamil/media/media_files/2025/08/27/mk-stalin-bihar-2025-08-27-08-20-10.jpg)
ராகுல்காந்தி பேரணியில் பங்கேற்க பீகார் புறப்பட்டார் ஸ்டாலின்
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே குளித்து முடித்து பக்தர்கள் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகம் முழுவதிலுமுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தன. தொடர்ந்து களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு கொழுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல் போன்ற பதார்த்தங்களை படையலிட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
- Aug 27, 2025 09:00 IST
செப்.7 சந்திர கிரகணம்: 12 மணி நேரம் திருப்பதி மூடல்
செப்டம்பர் 7-ந்தேதி இரவு 9.50 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பித்து, மறுநாள் அதிகாலை 1.31 மணிக்கு நிறைவடைகிறது. கிரகண நேரத்திற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பே திருப்பதி கோயில் கதவுகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி 7-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை சுமார் 12 மணி நேரம் மூடப்படும். பின்னர் 8-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் மூலம் கோவில் கதவுகள் திறந்து கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படும். காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 27, 2025 08:58 IST
விநாயகர் சதுர்த்தி பண்டிகை - பிரதமர் மோடி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டு வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது: உங்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். நம்பிக்கையும் பக்தியும் நிறைந்த இந்த நாள் அனைவருக்கும் மங்களகரமானதாக அமையட்டும். கஜானன் தனது பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அருள பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- Aug 27, 2025 08:56 IST
விஜய் பேசிய கருத்துகளை ஏற்க முடியாது: ஓ.பி.எஸ்.
கடந்த 4½ ஆண்டு தி.மு.க. அரசின் செயல்பாடுகள், தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறேன். தமிழகத்தில் அ.தி.மு.க. தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும். மாநாட்டில் விஜய் பேசிய ஒரு சில கருத்துகள் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம். த.வெ.க. மாநாட்டில் அரசியல் ரீதியாக ஈர்க்கும் கருத்துகள் இல்லை என்றார்.
- Aug 27, 2025 08:30 IST
8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, மதுரை, திருவள்ளூர், சென்னை, கோயம்புத்தூர், தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 27, 2025 08:26 IST
நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 1ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
- Aug 27, 2025 08:24 IST
ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் பலி
ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவம் களமிறங்கியுள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
- Aug 27, 2025 08:21 IST
சுபமுகூர்த்த தினம்: பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்
சுபமுகூர்த்த தினத்தையொட்டி பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தின நாட்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 27, 2025 08:05 IST
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 10 முதல் 25 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15 முதல் 26 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 27, 2025 07:43 IST
ராகுல் பேரணியில் பங்கேற்க பீகார் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் பங்கேற்க உள்ளார் முதலமைச்சர்
- Aug 27, 2025 07:22 IST
பீகாரில் ராகுல்காந்தி பேரணி: ஸ்டாலின் பங்கேற்பு
பீகாரில், ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்க உள்ளார். இதற்காக அவர், சென்னையில் இருந்து காலை 7.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் பீகார் புறப்பட்டு செல்கிறார். தர்பங்கா விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்று ராகுல்காந்தி பேரணியில் கலந்துகொள்கிறார்.
- Aug 27, 2025 07:20 IST
த.வெ.க. தலைவர் விஜய் மீது போலீஸ் வழக்குப்பதிவு
மதுரையில் நடைபெற்ற த.வெ.க. 2-வது மாநில மாநாட்டில் விஜயயை பார்க்க வந்த சரத்குமார் என்பவரை உடனிருந்த பவுன்சர்கள் தூக்கி வீசியதாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டிருந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- Aug 27, 2025 07:12 IST
சுர்ஜித், தந்தை சரவணனுக்கு செப்.9 வரை காவல் நீட்டிப்பு
நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித், தந்தை சரவணனுக்கு செப்.9 வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலனுக்கும் செப்.9ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
- Aug 27, 2025 07:11 IST
விநாயகர் சதுர்த்தி -வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி சென்னையில் 1,519 சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியது. சென்னை முழுவதும் 16,500 காவலர்கள், 1,500 ஊர்க்காவல்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். சிலைகள் உள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள், 2 தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபட வேண்டுகோள் விடுத்துள்ளது.
- Aug 27, 2025 07:10 IST
விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டியில் சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- Aug 27, 2025 07:09 IST
அமெரிக்கா விதித்த 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிரான நடவடிக்கையாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியா மீது வரிகளை விதித்து வருகிறது. இதன்படி, 25% கூடுதல் வரி உள்பட மொத்தம் 50% வரியானது இந்திய பொருட்கள் மீது விதிக்கப்படும் என டிரம்ப் அரசு தெரிவித்தது. இந்திய இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் 25% கூடுதல் வரி தொடர்பான நோட்டீஸ் ஒன்றையும் அமெரிக்கா நேற்று பிறப்பித்தது. இந்த நடைமுறை இன்று (27-ந்தேதி) அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.