/indian-express-tamil/media/media_files/l1TBJ6upwXQb3oq5tBWG.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 16, 2025 15:18 IST
பள்ளி மாணவிக்கு கத்திகுத்து
சென்னை, பல்லாவரத்தில் 9ம் வகுப்பு மாணவியை கத்தியால் வெட்டிவிட்டு கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர். மாணவியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் திருவண்ணாமலையை சேர்ந்த செல்வம் மீது போக்சோ வழக்குபதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Aug 16, 2025 15:13 IST
திமுக தலைவர்களை மிரட்ட முடியாது - கனிமொழி
சிக்கல்களை கடந்து கழகத்தோடு உறுதுணையாக நிற்கக்கூடியவர். எந்த பயமுறுத்தலாலும் திமுகவை அச்சுறுத்த முடியாது"என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.
- Aug 16, 2025 14:35 IST
தமிழகம் வருகிறார் அமித்ஷா
நெல்லையில் நடைபெற உள்ள பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வரும் 22ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
- Aug 16, 2025 14:29 IST
EDக்கும் அஞ்ச மாட்டோம்; மோடிக்கும் அஞ்ச மாட்டோம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
EDக்கும் அஞ்ச மாட்டோம்; மோடிக்கும் அஞ்ச மாட்டோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக உள்ளது. வாக்கு திருட்டு என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. பாஜக வாசிங் மிஷினில் கழுவி, வழக்குகளை வாபஸ் பெற திமுகவினர் கோழைகள் அல்ல. அமைச்சர் பெரியசாமி தொடர்பு இடங்களில் நடைபெறும் ED சோதனைக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- Aug 16, 2025 14:29 IST
தா. வெ. க தலைவர் விஜய் கிருஷ்ணா ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இல்லங்கள் தோறும் அமைதி, வளம் பெருக, மகிழ்ச்சியுடன் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் என்று தா. வெ. க தலைவர் விஜய் கூறியுள்ளார்.
- Aug 16, 2025 14:00 IST
ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை- செல்வப்பெருந்தகை கண்டனம்!
மாண்புமிகு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.கட்சியின் மூத்தத்தலைவருமான திரு.ஐ.பெரியசாமி அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது.
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பாஜக அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை. இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் சிதைக்கக் கூடியவை. அமலாக்கத்துறையினரின் இத்தகைய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
மாண்புமிகு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.கட்சியின் மூத்தத்தலைவருமான திரு.ஐ.பெரியசாமி அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது.
— Selvaperunthagai K (@SPK_TNCC) August 16, 2025
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பாஜக… - Aug 16, 2025 13:59 IST
அமலாக்கத்துறையினர் மீது போலீஸ் வழக்கு
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.
- Aug 16, 2025 13:29 IST
எவ்வளவு மிரட்டல்கள் வந்தாலும் திமுக தலைவர்களை அசைத்து பார்க்க முடியாது- கனிமொழி
தூத்துக்குடி: அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக எம்.பி கனிமொழி, "எவ்வளவு மிரட்டல்கள் வந்தாலும் திமுக தலைவர்களை அசைத்து பார்க்க முடியாது... ஜனநாயகத்தின் மீது பல தாக்குதல்களை தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் எஸ்.ஐ.ஆர் போல (S.I.R) பாஜக அரசு தேர்தலை வெல்ல முயற்சிக்கிறது..." என்று கூறினார்.
Thoothukudi, Tamil Nadu | On ED raids on State Minister I. Periyasamy, DMK MP Kanimozhi says, "No amount of intimidation can intimidate DMK leaders...The BJP government is trying to win the elections by launching many attacks on democracy, like SIR with the help of the Election… pic.twitter.com/iKA4vyxA9L
— ANI (@ANI) August 16, 2025 - Aug 16, 2025 13:24 IST
ஐ.பெரியசாமி அறையை உடைக்க சுத்தியலுடன் வந்த அதிகாரிகள்
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை பசுமைவழி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை தொடரும் நிலையில், பசுமைவழி இல்லத்தில் பூட்டப்பட்ட அறையை உடைக்க இ.டி. அதிகாரிகள் சுத்தியலுடன் வந்தனர்.
ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திரா, உறவினர்களின் நிறுவனங்களிலும் சோதனை நடந்து வருகிறது. - Aug 16, 2025 13:18 IST
ஐ.பெரியசாமி இல்லத்தில் சோதனை- திமுக தொண்டர்கள் முற்றுகை
திண்டுக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் அங்கு வந்த திமுக தொண்டர்கள், சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
- Aug 16, 2025 13:04 IST
ஜி.எஸ்.டி 2.0: நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
மாநில அளவிலான ஜி.எஸ்.டி-யை அறிமுகப்படுத்துவதை நோக்கி நகர, மாநிலங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பொருளாதாரத்தில் முக்கிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எம்.எஸ்.எம்.இ-க்களின் (MSME) பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ஜி.எஸ்.டி 2.0 குறித்த அதிகாரபூர்வ விவாதக் கட்டுரையை மிக விரைவில் வெளியிட வேண்டும்.
ஜி.எஸ்.டி 2.0 தொடர்பாக மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- Aug 16, 2025 13:02 IST
நாளை திட்டமிட்டப்படி பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம்
புதுச்சேரி 'சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நாளை (ஆகஸ்ட் 17) பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும், அதில் எந்த மாற்றமும் இல்லை' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
'பொதுக்குழு ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- Aug 16, 2025 13:00 IST
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் வரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Aug 16, 2025 12:29 IST
வரி உயர்வு - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு வர்த்தகத்தை மீட்டெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உற்பத்தித் துறை நெருக்கடியில் இருப்பதால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- Aug 16, 2025 12:22 IST
கிருஷ்ண ஜெயந்தி: தூத்துக்குடியில் மாட்டு வண்டி பந்தயம்
தூத்துக்குடி: கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், சிறிய மாடுகள் மற்றும் பூஞ்சிற்று மாடுகள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் 19 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.
#WATCH | Thoothukudi, Tamil Nadu: On the occasion of Krishna Janmashtami, a Bullock cart race was held in the Jambulingapuram village of the Thoothukudi district.
— ANI (@ANI) August 16, 2025
A total of 19 pairs of bullocks participated in the competition, divided into two categories: small bullocks and… pic.twitter.com/ESOYY4NrOI - Aug 16, 2025 12:18 IST
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினி
திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ரஜினி. "நான் நீண்ட காலமாக மதிக்கும் ஒரு தலைவரிடமிருந்து வாழ்த்து பெறுவதை மரியாதையாக கருதுகிறேன்" -
ரஜினிகாந்த் X பக்கத்தில் பதிவு
- Aug 16, 2025 12:15 IST
பிளாட்ஃபார்ம் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியது ஸ்விக்கி
ஆன்லைன் உணவு டெலிவரி ஆர்டருக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை மீண்டும் ரூ.2 உயர்த்தியது ஸ்விக்கி நிறுவனம்..கடந்த 2023 ஏப்ரலில் ரூ.2 ஆக இருந்த இந்தக் கட்டணம், 2024 அக்டோபரில் ரூ.10 ஆகவும், தற்போது ரூ.14 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பிளாட்ஃபார்ம் கட்டணம் 600% அதிகரித்துள்ளது.
- Aug 16, 2025 12:13 IST
மொழியுரிமை மீதான தாக்குதல்: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!
மொழி உரிமைகள் மீது தொடர் தாக்குதல்!
தெற்கு ரயில்வேயின் இளநிலை பொறியாளர் பதவி உயர்வு தேர்வில், வினாத்தாள் மாநில மொழியையும் சேர்த்து மூன்று மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்பது விதி.
ஆனால், இந்த தேர்வு தமிழ் வினாத்தாள் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் நீக்கம், இந்தி திணிப்பு ஆகிய இரண்டும் ரயில்வேயின் இரட்டைப் பாதைகள்.
தேர்வை ரத்து செய்து, தமிழ் வினாத்தாளுடன் மீண்டும் ஒரு தேர்வை நடத்துங்கள்!
A Continuous assault on language rights!
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 16, 2025
In the Southern Railway junior engineer promotion exam, the rule is that the question paper must be provided in three languages, including the state language.
But the exam was conducted without a Tamil question paper.
Elimination of… pic.twitter.com/lmirWHiyG3சு.வெங்கடேசன் எம்.பி. X பக்கத்தில் கண்டனம்!
- Aug 16, 2025 11:38 IST
பயிற்சியில் இந்திய ராணுவ வீரர்கள்
ஜம்மு-காஷ்மீர்: டாங்தார் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
#WATCH | J&K: Indian Army personnel carry out drills in the border area of Tangdhar. pic.twitter.com/1ofyqqHrDa
— ANI (@ANI) August 16, 2025 - Aug 16, 2025 11:37 IST
சியாட்டிலில் இந்தியக் கொடி
அமெரிக்கா | இந்தியாவின் 79-வது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, சியாட்டிலில் உள்ள விண்வெளி ஊசியின் (Space Needle) உச்சியில் இந்தியக் கொடி இன்று ஏற்றப்பட்டது.
சியாட்டில் நகர மேயர் புரூஸ் ஹாரெல், சியாட்டிலில் உள்ள இந்திய துணைத் தூதர் மற்றும் சியாட்டில் நகர நிர்வாகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உயரதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(ஆதாரம்: இந்திய துணைத் தூதரகம், சியாட்டில்)
United States | The Indian flag was raised on top of the Space Needle today in honour of India’s 79th Independence Day celebrations.
— ANI (@ANI) August 16, 2025
Consul General of India in Seattle, along with the Mayor of Seattle, Bruce Harrell, and other select dignitaries from Seattle city leadership,… pic.twitter.com/O8iLdLOqSr - Aug 16, 2025 11:29 IST
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைகள்
திருச்சி: கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, திருச்சியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில், கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றன, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
#WATCH | Trichy, Tamil Nadu: On the occasion of Krishna Janmashtami, special rituals and abhishekam were performed for Lord Krishna at the Sri Venugopala Krishna Temple in Trichy, drawing a large number of devotees. pic.twitter.com/cbMtblfdIA
— ANI (@ANI) August 16, 2025 - Aug 16, 2025 11:25 IST
தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் வருமானம் 5 மடங்கு அதிகரிப்பு
தமிழ்நாடு சுற்றுலாக் துறையின் வருமானம் 2020-21ல் ரூ.49.11 கோடியாக இருந்த நிலையில், 2023-24ல் சுமார் 5 மடங்கு உயர்ந்து ரூ.243.31 கோடியாக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாக் பயணிகளின் எண்ணிக்கை 2022ல் 1.4 லட்சமாக நிலையில், 2023ல் 1.17 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- Aug 16, 2025 11:02 IST
ஜார்க்கண்ட்: பள்ளிக்கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் மரணம்
ஜார்க்கண்ட் மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 62. முதல்வர் ஹேமந்த சோரனுக்கு நெருக்கமானவர். கடந்த சில வாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், ஆக.2ம் தேதி ஜாம்ஷெட்பூரில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பல நாட்களாக மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த ராம்தாஸ் சோரன் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்த நிலையில் காலமானார்.
- Aug 16, 2025 10:40 IST
மாணவர்களுக்கு சிறப்பு சலுகையில் இலங்கைக்கு கப்பல் டூர்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலங்கையில் தங்குவதற்கு சிறப்பு சலுகையாகக் கப்பல் டிக்கெட் கட்டணம், பயணச் செலவு என அனைத்தும் சிறப்பு சலுகையாக ரூ.9,999-க்கு அறிவித்தது கப்பல் நிறுவனம். மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்துவரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என நிறுவன உரிமையாளர் சுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
- Aug 16, 2025 10:36 IST
கேரளாவில் மழை-தரையிறங்க முடியாமல் விமானங்கள் தவிப்பு
கேரளாவில் பெய்து வரும் கனமழை, மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து கிளம்பிய ஸ்பைஸ் ஜெட் விமானம், கொச்சியில் தரையிறங்க முடியாமல் பல்வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டு இறுதியில் கோவையில் தரையிறக்கப்பட்டது. உணவு, குடிநீர் இன்றி பயணிகள் அவதி. நள்ளிரவு 2 மணிக்கு பேருந்து ஏற்பாடு செய்து பயணிகள் கோவையில் இருந்து கேரளா அழைத்துச் செல்லப்பட்டனர்.
- Aug 16, 2025 10:35 IST
மேப்புலியூர் தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடந்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மேப்புலியூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Aug 16, 2025 10:13 IST
ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு - உமர் அப்துல்லா நேரில் ஆய்வு
ஜம்மு-காஷ்மீர் மேக வெடிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாயமான 200 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் மீட்புப் பணி குறித்து கேட்டறிந்தார்.
- Aug 16, 2025 10:02 IST
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா
முருகனின் 5ம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா இன்று தொடங்கியது. ஆடிக் கிருத்திகையை ஒட்டி திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டு வருகின்றனர்.
- Aug 16, 2025 09:55 IST
ஜம்மு-காஷ்மீா் மழை-வெள்ளம்: உயிரிழப்பு 60-ஆக உயா்வு
ஜம்மு - காஷ்மீர் கிஷ்த்வார் மாவட்டத்தின் சோசிடி கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம்-மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. மாயமான 69 பேரை தேடும் பணி, வெள்ளிக்கிழமை மழைக்கு மத்தியிலும் தொடா்ந்தது. அண்டை கிராமங்களில் தவிக்கும் பக்தா்களை பத்திரமாக மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- Aug 16, 2025 09:41 IST
வாஜ்பாய் நினைவிடத்தில் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி
இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு தினமான இன்று டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் பிற மூத்த தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- Aug 16, 2025 09:33 IST
அதிக கட்டணம்: 18 ஆம்னி பஸ்களுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம்
தொடர் விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீனம்பாக்கம் - தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மீனம்பாக்கம், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் ஆம்னி பஸ்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் அதிகமாக கட்டணம் வசூலித்த 18 பேருந்துகளுக்கு ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பயணிகளிடம் வசூலித்த கூடுதல் கட்டணம் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- Aug 16, 2025 09:31 IST
எம்.பி.பி.எஸ். முதல்சுற்று கலந்தாய்வு: 18-ல் முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வுக்கான முடிவுகள் ஆக. 18-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரி நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.
- Aug 16, 2025 09:05 IST
அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மக்களுக்கான சேவையாற்றுவதில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். உங்கள் தலைமை பொது குடிமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை தொடர்ந்து வலுப்படுத்தட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- Aug 16, 2025 09:00 IST
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் - கவுன்சிலுக்கு மத்திய அரசு பரிந்துரை
தற்போது இந்தியாவில், 0%, 5%, 12%, 18% மற்றும் 28% என 5 படி நிலைகளில் ஜிஎஸ்டி வரி அமலில் உள்ளது. இதில் சுமார் 21% பொருட்கள் 5% வரி பிரிவிலும், 19% பொருட்கள் 12% வரி பிரிவிலும், 44% பொருட்கள் 18% வரி பிரிவிலும் இருக்கின்றன. குறிப்பாக அதிகப்படியான பொருட்கள் 12% மற்றும் 18% ஜிஎஸ்டி வரி பிரிவில் உள்ளன. 5 அடுக்குகளாக விதிக்கப்பட்டு வரும் ஜி.எஸ்.டி.யை, 2 அடுக்குகளாக குறைத்து, தற்போது வசூலிக்கப்பட்டு வரும் அதிகபட்ச வரியான 28% ரத்து செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. 12% வரி அடுக்கிலுள்ள பொருட்களை 5%, 18% என்ற 2 வரி அடுக்குகளுக்கு மறுபகிர்வு செய்து, புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களுக்கு 40% ஜி.எஸ்.டி. விதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
- Aug 16, 2025 08:52 IST
ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருத்தணியை சேர்ந்த மேஸ்திரி முனிரத்தினத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
- Aug 16, 2025 08:18 IST
அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடுகளில் இ.டி. சோதனை
சென்னை, திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. திண்டிக்கல் அசோக் நகரில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டில் காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருகிறது.
- Aug 16, 2025 08:17 IST
குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று இரண்டாவது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் நேற்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இன்றும் நீடிக்கிறது!.
- Aug 16, 2025 07:56 IST
இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது சபரிமலை நடை
தமிழ் மாதமான ஆனி, மலையாள மாதமான சிங்ஙம் பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மாதந்திர பூஜைகளுக்காக இன்று திறக்கப்படும் நடை, ஆக.21-ம் தேதி வரை திறந்திருக்கும். பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 16, 2025 07:53 IST
32 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- Aug 16, 2025 07:51 IST
சுதந்திர தினம்: சிறப்பு பஸ்களில் 3.13 லட்சம் போ் பயணம்
சுதந்திர தினம், வார இறுதி விடுமுறையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் கடந்த ஆக.13- முதல் 15 வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 3,13,900 போ் பயணித்துள்ளனா். சென்னையில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் சுதந்திர தினம் மற்றும் வாரவிடுமுறையையொட்டி சொந்த ஊா் செல்லவசதியாக விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் 2449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- Aug 16, 2025 07:30 IST
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு: ஸ்டாலின்
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருவதாக ஆளுநா் ரவி குற்றம்சாட்டியிருந்தாா். இந்நிலையில், அவரது கருத்தை குறிப்பிடாமல், எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டில் கல்வியில் பெண்கள் முன்னேறி வருவதுடன், அதிகமான பணியாளா்களைக் கொண்ட மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது. திறனுடைய வகையிலும், குற்றங்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
- Aug 16, 2025 07:21 IST
இந்திய கம்யூ. மாநில மாநாடு: இன்று பங்கேற்கும் ஸ்டாலின்
‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் 2-வது நாளாக இன்று (சனிக்கிழமை) நடக்கும் மாநாடு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கத்தில் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் முன்னிலை வகித்தார்.
- Aug 16, 2025 07:14 IST
டிரம்ப்-புதின் இடையே 3 மணி நேர பேச்சுவார்த்தை நிறைவு
டிரம்ப்-புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது. இதனை தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது புதின் கூறும்போது, எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம் என்று கூறினார். உக்ரைன் போர் முடிவுக்கு வருமா என இருநாட்டு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், முடிவு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.