Chennai News Live Updates: ஓட்டுரிமைக்கான வயது 18ல் இருந்து 16 ஆக குறைக்கப்படும் என இங்கிலாந்து அரசு தகவல்

Tamil Nadu news live updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu news live updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
England

Today Latest Live News Update in Tamil 17 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
    • Jul 17, 2025 21:14 IST

      ஓட்டுரிமைக்கான வயது 18ல் இருந்து 16 ஆக குறைக்கப்படும் என இங்கிலாந்து அரசு தகவல்

      இங்கிலாந்தில் ஓட்டுரிமைக்கான வயது 18ல் இருந்து 16 ஆக குறைக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.16 - 17 வயதினர் வேலை செய்ய முடியும், அரசுக்கு வரி செலுத்த முடியும் என்றால் அரசை தீர்மானிக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும்“ என பிரிட்டன் பிரதமர் கேயர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.



    • Jul 17, 2025 19:56 IST

      குரூப் 4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் - த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த்

      தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் என த.வெ.க பொதுச் செயலாளர் என். ஆனந்த் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, பொது தமிழுக்கான வினாத்தாள் 10-ஆம் வகுப்பு தரம் என்று அறிவிக்கப்பட்டு, அதில் ஆராய்ச்சி நிலையில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



    • Advertisment
      Advertisements
    • Jul 17, 2025 19:10 IST

      கேரளாவில் தெருநாய்களை கருணைக் கொலை செய்ய மாநில அரசு அனுமதி

      கேரளாவில், நோய் பாதித்த, தொற்று நோய்களை பரப்பக் கூடிய தெருநாய்களை கருணைக் கொலை செய்ய மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. தெருநாய்க்கடியால் ரேபிஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர் சான்று பெற்று கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்து உத்தரவிரப்பட்டுள்ளது.



    • Jul 17, 2025 18:41 IST

      முகலாய மன்னர்கள் குறித்து தவறான தகவல்; குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் செயல் - தமிமுன் அன்சாரி

      என்.சி.இ.ஆர்.டி பாட புத்தகத்தில் முகலாய மன்னர்கள் குறித்த வரலாறு திரிபுகள் இடம்பெற்றிருப்பதாக ம.ஜ.க தலைவர் தமிமுன் அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார். இது இளம் பிள்ளைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் செயல் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார். எனவே, சர்ச்சைக்குரிய பாடங்களை நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.



    • Jul 17, 2025 18:18 IST

      காமராஜரை இழிவுப்படுத்துவதே தி.மு.க-வின் நோக்கம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

      காமராஜரை இழிவுப்படுத்துவதே தி.மு.க-வின் நோக்கம் என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மேலும், முரசொலி இதழில் காமராஜரை விமர்சித்து வெளியிடப்பட்ட பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, "எத்தனை பதிவுகளையிட்டு பூசி மெழுக முயன்றாலும் உண்மை வரலாற்றை அழிக்க முடியாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



    • Jul 17, 2025 17:55 IST

      தவெகவின் 2வது மாநில மாநாடும் - காவல்துறையின் 50 கேள்விகளும்

      தவெகவின் 2-வது மாநில மாநாடு தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை மதுரை மாவட்ட காவல்துறை கேட்டுள்ளது. "விஜய்யை தவிர்த்து வேறு விஐபிக்கள் யாரும் பங்கேற்கின்றனரா?..மாநாட்டில் எவ்வளவு தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்? மாநாட்டிற்கு வரும் நபர்களுக்கு போதிய பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?" - காவல்துறை மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி கேட்டு கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் மனு அளித்திருந்த நிலையில் காவல்துறை கேள்வி மாநாடு நடைபெறும் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி பகுதியில் இதுவரை எவ்வித கூட்டமும் நடத்தப்படவில்லை



    • Jul 17, 2025 17:08 IST

      உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் கெடு

      உயர்நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த திருநங்கைகளுக்கு சிறப்பு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த அனைத்து ஐகோர்ட்டுக்கும் உச்சநீதிமன்றம் கெடு வைத்துள்ளது. அறிக்கை தாக்கல் செய்யாத உயர்நீதிமன்றங்களுக்கு கடைசி வாய்ப்பாக 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



    • Jul 17, 2025 16:46 IST

      வேலுபிரபாகரன் திரைப்பயணம்

      வேலு பிரபாகரன் ஒரு ஒளிப்பதிவாளராக தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். பின்னர் இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களில் திகழ்ந்தார். 1989 ஆம் ஆண்டு வெளியான 'நாளைய மனிதன்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 'அசுரன்', 'ராஜாளி', 'கடவுள்', 'சிவன்', 'புரட்சிக்காரன்' போன்ற பல குறிப்பிடத்தக்க திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.



    • Jul 17, 2025 16:46 IST

      இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்

      பிரபல திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 17, 2025) காலமானார். கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் 12.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



    • Jul 17, 2025 16:36 IST

      பாறை சரிந்து பக்தர் பலி

      அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பெண் பக்தர் மீது பாறை சரிந்து உயிரிழந்தார். நீரில் அடித்துச்செல்லப்பட்ட இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஜம்முவின் கந்தர்பால் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் இது நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



    • Jul 17, 2025 16:34 IST

      மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு

      நகராட்சி நிர்வாகம்-குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நகர்ப்புற சாலைகள், மழை நீர் வடிகால்கள், பாதாள சாக்கடை பணிகளுக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு - புதிய திட்டங்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்புகள், அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் முறையாக செலவிடப்படுவது குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சாலை, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மழைக்காலம் துவங்குவதற்குள் மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



    • Jul 17, 2025 16:21 IST

      தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல்

      பாஜக நிர்வாகி கோவர்தன்,தங்கக் கட்டிகளுக்கு பதிலாக ரூ.97.92 லட்சம் பணத்தை ஹவாலா தரகர் சூரஜ்-க்கு கைமாற்றியுள்ளார். எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம், கோவர்தன் ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்ய உதவி? என தகவல் வெளியாகியுள்ளது. ஹவாலா தரகர் சூரஜ் ஜாமின் கோரிய வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.



    • Jul 17, 2025 16:09 IST

      ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு - சிபிசிஐடி சொன்ன பரபரப்பு தகவல்

      தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்ய நயினார் நாகேந்திரனுக்கு பாஜக நிர்வாகிகள் எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம், கோவர்தன் ஆகியோர் உதவியது உறுதியானது. தாம்பரம் ரயில்நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் சிபிசிஐடி பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கோவர்தனின் ஓட்டுநர் மூலமாக ஒன்றரை கிலோ தங்கத்திற்கு பதிலாக ரூ. 97.92 லட்சம் பணத்தை கைமாற்ற ஹவாலா தரகர் சூரஜ் உதவியது கால் டேட்டா ரெக்கார்ட் மூலம் உறுதியாகியுள்ளது.



    • Jul 17, 2025 15:54 IST

      திருச்சி சிவா சர்ச்சை பேச்சு - ஈபிஎஸ் கண்டனம்

      "காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திருச்சி சிவா பேசியது கண்டனத்திற்குரியது. காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்து புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய் பெருந்தலைவர் காமராஜர் பற்றி முதல்வர் ஸ்டாலினும், திமுகவும் பேசுவதெல்லாம் நகைமுரண்" என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். 



    • Jul 17, 2025 15:45 IST

      பணப்பட்டுவாடா செய்ய உதவியது கால் டேட்டா ரெக்கார்டு மூலம் உறுதியானதாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்!

      பணப்பட்டுவாடா செய்ய உதவியது கால் டேட்டா ரெக்கார்டு மூலம் உறுதியானதாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. பாஜக நிர்வாகிகள் எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம், கோவர்த்தனுக்கு பணப்பட்டுவாடா செய்தது உறுதி. ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் ஜாமின் கோரி ஹவாலா தரகர் சூரஜ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு. மக்களவை தேர்தலின்போது பாஜகவினருக்கு ஹவாலா தரகர் சூரஜ் ரூ.97.92 லட்சம் கொடுத்தது அம்பலம். சூரஜிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.



    • Jul 17, 2025 15:10 IST

      காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு

      திருவான்மியூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ்-சுமித்ரா தம்பதியின் இரண்டாவது மகள் ஹாசினி(3.5 வயது) காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு; டெங்கு காய்ச்சல் என பெற்றோர் தகவல் தெரிவித்துள்ளனர்.  ஆய்வகத்தின் முடிவுகள் வந்த உடன்தான் என்ன காய்ச்சல் என்பது தெரியவரும்.



    • Jul 17, 2025 15:05 IST

      தேர்தல் ஆணையத்திற்கு திமுக வலியுறுத்தல்

      "தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது ஆதார், ரேஷன்  அட்டைகளையும் ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். முதலில் தபால் வாக்குகளை எண்ணிய பின் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ண வேண்டும" என்று திமுக தெரிவித்துள்ளது. 



    • Jul 17, 2025 14:54 IST

      முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

      நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 503 கனஅடியில் இருந்து 1,168 கனஅடியாக உயர்வு. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர்திறப்பு 1,867 கனஅடி உயர்ந்துள்ளது.



    • Jul 17, 2025 14:44 IST

      பழனிசாமிக்கு பயம் வந்துவிட்டது - ஆர்.எஸ்.பாரதி

      அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் வந்துவிட்டதால் திமுக கூட்டணியின் கட்சிகளை அழைக்கிறார்; திமுக கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது. திமுகவைப் போன்று கூட்டணிக் கட்சிகளுக்கு யாராலும் மரியாதை கொடுக்க முடியாது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். 



    • Jul 17, 2025 14:33 IST

      அரக்கோணம் அருகே கார், டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

      அரக்கோணம் அருகே கார், டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காரில் பயணம் செய்த வெங்கடேசன் அவரது மனைவி லதா. தினேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து நடந்தவுடன், மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



    • Jul 17, 2025 14:25 IST

      ‘கூட்டணி ஆட்சிதான்... அ.தி.மு.க-வுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அமித்ஷாவுடன் பேசட்டும்’ - அண்ணாமலை

      பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உருவானதில் எனது பங்கு எதுவும் இல்லை; நான் ஒரு தொண்டன். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறும் என அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம்; கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா தொடர்ந்து தெளிவாக கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன். அ.தி.மு.க-வுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அ.தி.மு.க - பா.ஜ.க-வினர் அமித்ஷாவுடன் பேசட்டும். எனது தலைவர்களின் நிலைப்பாடு மாறும்வரை நானும் நிலைப்பாட்டை மாற்றமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

       



    • Jul 17, 2025 14:19 IST

      கடலூர் விபத்து எதிரொலி: அனுபவம் வாய்ந்த கேட் கீப்பர்களை பணியில் அமர்த்துக - தெற்கு ரயில்வே உத்தரவு 

      கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே லெவல் கிராஸிங்கில் பள்ளி வேன் மீது ரயில் மோதி நடந்த விபத்தின் எதிரொலியாக, அனுபவம் வாய்ந்த கேட் கீப்பர்களை பணியில் அமர்த்த வேண்டும். எந்தவித தவறான குறிப்புகளும்,  பணியில் ஒழுங்கீனம் இல்லாத கேட் கீப்பர்களை, பணியில் அமர்த்தப்பட வேண்டும். கேட் கீப்பர்களுக்கு குறைந்த பட்சம்  ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.” என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவிட்டுள்ளார்.



    • Jul 17, 2025 14:12 IST

      சத்யஜித் ரே வீட்டை இடிக்கும் பணி நிறுத்தம்

      இந்திய திரைப்பட ஜாம்பவான் சத்யஜித்ரேவின் பூர்வீக வீடு வங்கதேசத்தில் உள்ளது. சிதிலமடைந்த அந்த வீட்டை இடிக்க முடிவெடுத்த வங்கதேச அரசு. இதற்கு இந்தியா வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், இடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.



    • Jul 17, 2025 13:03 IST

      காமராஜர் சர்ச்சை: கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் - ஸ்டாலின் 

      காமராஜர் விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். பெருந்தலைவரை 'பச்சத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா. பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல் நின்று இறுதி மரியாதையை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர். உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்வில் கிடைத்தற்கரிய பெருபேறு! பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல.
      தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும். சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.



    • Jul 17, 2025 12:42 IST

      அ.தி.மு.க.,வுடன் கூட்டணி; எனக்கு சம்பந்தம் கிடையாது - அண்ணாமலை

      அமித்ஷா சொல்வதை தான் நான் கேட்க வேண்டும்.  கூட்டணி ஆட்சி இல்லை என நான் சொல்ல முடியாது. அ.தி.மு.க.,விற்கு மாற்று கருத்து இருந்தால் அமித்ஷாவை சந்தித்து பேசலாம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததில் எனக்கு சம்பந்தம் கிடையாது. மாற்று கட்சியினர் என் மேல் கோபப்படுவதை விட, நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் என பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்



    • Jul 17, 2025 12:40 IST

      அக்பர், பாபர், ஔரங்கசீப் கொடூரமான ஆட்சியாளர்கள் – என்.சி.இ.ஆர்.டி பாடப் புத்தகம்

      அக்பர், பாபர், ஔரங்கசீப் ஆகியோர் கொடூரமான ஆட்சியர்கள் என புதிய என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராட்டியர்கள் மற்றும் காலனி ஆட்சி குறித்து மாணவர்களுக்கு முதல் முறையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது



    • Jul 17, 2025 12:14 IST

      பா.ஜ.க, அ.தி.மு.க இழைத்துள்ள அநீதியை எடுத்துரைக்க வேண்டும் - ஸ்டாலின்

      'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு தி.மு.க தொண்டனுக்கும் நன்றி. அடுத்த 30 நாட்களில் 2.5 கோடி பேரை தி.மு.க உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். பா.ஜ.க.,வும், அ.தி.மு.க.,வும் தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்லவேண்டும். வாக்குச்சாவடிகளில் உறுப்பினர் சேர்க்கை பணியை முறையாக மேற்கொள்ளவில்லை என்றால் மீண்டும் சேர்க்கை நடத்த உத்தரவிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூறினார்



    • Jul 17, 2025 12:11 IST

      காமராஜர் பற்றி பேச தி.மு.க.,வுக்கு உரிமை இல்லை - அண்ணாமலை

      காமராஜர் பற்றி பேசுவதற்கு தி.மு.க.,விற்கு ஒரு சதவீதம் கூட உரிமை கிடையாது. காமராஜரைத் தாண்டி காங்கிரஸுக்கு தமிழகத்தில் அடையாளம் கிடையாது. சட்டம், ஒழுங்கு - ஊழல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தமிழகத்தில் உள்ளன, மீண்டும் திமுக ஆட்சிக்கு வராது. 2026ல் யாருமில்லாமல் தி.மு,க தனியாக போட்டியிடும் நிலைமை ஏற்படும் நோக்கில் உதயநிதி பேச்சு அமைந்துள்ளது என பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்



    • Jul 17, 2025 11:28 IST

      விஜய் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

      த.வெ.க. கட்சிக் கொடி தங்கள் அமைப்பின் கொடியை பிரதிபலிப்பதாக தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கு

      த.வெ.க., மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு



    • Jul 17, 2025 11:04 IST

      டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கு - அண்ணாமலை ஆஜர்

      அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலுக்கு எதிராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு - பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்



    • Jul 17, 2025 11:02 IST

      திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

      ஓரணியில் தமிழ்நாடு - திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஆலோசனை. ஜூலை 1ம் தேதி துவங்கிய "ஓரணியில் தமிழ்நாடு"உறுப்பினர் சேர்க்கை பரப்புரை இயக்கம். இதுவரை 1.35 கோடி பேர் இணைந்துள்ளனர். 


      "ஓரணியில் தமிழ்நாடு" பரப்புரையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தல், 2026 தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள்



    • Jul 17, 2025 10:33 IST

      ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி

      பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டதாக அளித்த புகாரில், விசாரணை நடத்த போலீசார் தைலாபுரம் வருகை



    • Jul 17, 2025 09:47 IST

      கனமழை காரணமாக காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்கு தடை

      கனமழை எச்சரிக்கை காரணமாக ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்கு தடை விதிக்கப்ட்டுள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில் பால்டால் பகுதியில் நிலச்சரிவால் பெண் பக்தர் உயிரிழந்தார். நிலச்சரிவால் பெண் உயிரிழந்த நிலையில், பஹல்காம், பால்டால் பகுதியில் யாத்திரை நிறுத்தம்.



    • Jul 17, 2025 09:46 IST

      சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

      சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.72,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.9,105க்கு விற்பனை. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றிமின்றி கிராம் ரூ.124க்கு விற்பனையாகிறது



    • Jul 17, 2025 09:36 IST

      கீழடி அறிக்கையைத் திருத்தச் சொல்வது அநீதியானது - அமர்நாத்

      கீழடி அறிக்கையைத் திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது. 982 பக்க ஆய்வறிக்கையில், எழுத்துப்பிழையை வேண்டுமானால் திருத்துவேன், உண்மையைத் திருத்த மாட்டேன். எனது கண்டுபிடிப்பைத் திருத்தினால், நான் குற்றவாளியாகிவிடுவேன். கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.



    • Jul 17, 2025 09:26 IST

      குரூப் 2 தேர்வர்களுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு

      குரூப் 2 தேர்வில் பங்கேற்றவர்களுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் நேற்று முன் தினம் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 22 முதல் 24-ம் தேதி வரை, சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும். இதற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



    • Jul 17, 2025 09:15 IST

      ராகுல்காந்தியின் ரேபரேலி பயணம் ரத்து

      நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். ராகுல்காந்தி உத்தரபிரதேச தலைநகர் லக்னோ வழியாக ரேபரேலிக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், இந்த பயணம் தவிர்க்க இயலாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட காங்கிரஸ் தலைவர் பங்கஜ் திவாரி தெரிவித்தார். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.



    • Jul 17, 2025 09:00 IST

      ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு - சோதனை வெற்றி

      உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இலக்குகளை வானிலேயே தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட இந்த ஆகாஷ் பிரைம் சோதனை லடாக்கில் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. சோதனையின் போது இலக்குகளை துல்லியமாக ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாகவும், சவாலான தட்பவெப்ப நிலையிலும் திறம்பட செயல்படும் வகையில் இந்த சிஸ்டம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை 4,500 மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்த முடியும் மற்றும் சுமார் 25-30 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது.



    • Jul 17, 2025 08:50 IST

      மேட்டூர் அணையிலிருந்து 18,500 கனஅடி நீர் வெளியேற்றம்

      மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 17,880 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றம். நீர் இருப்பு 92.677 டி.எம்.சி. ஆக உள்ளது.



    • Jul 17, 2025 08:48 IST

      கார்ல்சனை வீழ்த்தினார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா

      அமெரிக்காவில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியின் 4-வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தினார் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.



    • Jul 17, 2025 08:46 IST

      இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: அதிபர் டிரம்ப்

      இந்தியாவுடன் வரி விவகாரத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடபாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நெருங்கிவிட்டோம் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதனால் இருநாடுகளுக்கும் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் எனத்தெரிகிறது.



    • Jul 17, 2025 08:24 IST

      அண்ணாமலையார் கோயிலில் சேகர் பாபு சாமி தரிசனம்

      திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடித்து காத்திருக்கும் பக்தர்களுக்கு வாழைப்பழம் வழங்கி நிறை குறைகளை கேட்டறிந்தார். கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டுசெல்வது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.



    • Jul 17, 2025 08:22 IST

      கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

      கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள, அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் இரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். படுக்கை மெத்தை சேதமடைந்து, பச்சிளம் குழந்தையுடன் தரையில் படுத்திருந்த தாய்மார்கள் வீடியோ வெளியான நிலையில், ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மருத்துவமனையில் இருந்த பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.



    • Jul 17, 2025 08:19 IST

      பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ரூ.180 கோடி முறைகேடு

      பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் 2023-24-ம் ஆண்டு நிதியாண்டில் ரூ.180 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதை தணிக்கை துறை அம்பலப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கான ஸ்பான்சர்ஷிப்பில் பெரிய அளவில் முரண்பாடு இருப்பதை தணிக்கை துறை கண்டறிந்துள்ளது.



    • Jul 17, 2025 08:17 IST

      பாராளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்

      பரபரப்பான சூழலில் நடைபெற உள்ள இந்த தொடரில் பல்வேறு முக்கியமான சட்ட அலுவல்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக 8 புதிய மசோதாக்களை இந்த தொடரில் அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, புவிசார் பாரம்பரிய தளங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்பு (திருத்தம்) மசோதா ஆகிய மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.



    • Jul 17, 2025 08:12 IST

      ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

      தங்கக் கடத்தல் வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், கன்னட நடிகை ரன்யா ராவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து இன்று (ஜூலை 17, 2025) உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு கன்னட திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இந்த ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி 14.8 கிலோ தங்கத்துடன் அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) கைது செய்தது.



    • Jul 17, 2025 08:09 IST

      கர்நாடகாவில் 5-ந்தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்

      கர்நாடகாவில் அரசு பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளது. மேலும் 38 மாதங்களாக பயணப்படி வழங்கப்படாமல் உள்ளது. இதையடுத்து, சம்பள உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு, போக்குவரத்து கழக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. இதுபற்றி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆகஸ்டு 5-ந் தேதி காலை 6 மணியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    • Jul 17, 2025 07:54 IST

      சென்னை MMTC LIMITED அலுவலகத்தில் நேற்றிரவு தீ விபத்து

      சென்னை பிராட்வே எஸ்பிளனேடு சாலையில் அமைந்துள்ள சென்னை ஹவுஸ் கட்டிடத்தின் 2வது தளத்தில் இயங்கி வரும் MMTC LIMITED அலுவலகத்தில் மின் கசிவு காரணமாக நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தில் இருந்த பிளைவுட் மற்றும் மரடேபிள்கள், நாற்காலிகள் எரிந்து சேதமானது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



    • Jul 17, 2025 07:53 IST

      எடப்பாடியின் கூட்டணி அழைப்பு நிராகரித்த விசிக, சி.பி.எம்

      பாஜக -அதிமுக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை விசிக, சி.பி.எம் கட்சிகள் நிராகரித்தன. கம்யூனிஸ்ட்களுக்கு விரிப்பது ரத்தினக் கம்பளம் அல்ல, வஞ்சக வலை என பெ.சண்முகம் கருத்து தெரிவித்தார். திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி என திருமாவளவன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.



    • Jul 17, 2025 07:18 IST

      8 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

      8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கருர், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    Chennai

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: