/indian-express-tamil/media/media_files/2025/07/16/eps-2025-07-16-17-28-13.jpg)
Today Latest Live News Update in Tamil 15 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 17, 2025 00:20 IST
பெயர் வைப்பதில் நோபல் பரிசு பெற்றவர் ஸ்டாலின்: எடப்பாடி பழனிச்சாமி
பெயர் வைப்பதில் நோபல் பரிசு பெற்றவர் ஸ்டாலின். காட்டுமன்னார்கோயிலில் உள்ள ஆதனூர் தடுப்பணை பணி முடிந்தும் திறக்கவில்லை - ஈபிஎஸ்
-
Jul 16, 2025 20:54 IST
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு - சோதனை வெற்றி
லடாக் அருகே உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி. இது இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ரேடார் வழிகாட்டுதல் அமைப்பு காரணமாக இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
Jul 16, 2025 20:51 IST
சென்னை, குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
சென்னை, குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. கணக்கில் வராத பணம் பறிமுதல். சார்பதிவாளர்,
ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை -
Jul 16, 2025 20:34 IST
வேளாண் உற்பத்தி பெருக்க ரூ.24,000 கோடி அனுமதி
வேளாண் உற்பத்தி பெருக்க தன்தான்ய திட்டத்துக்கு ரூ.24,000 கோடியை மத்திய அமைச்சரவை அனுமதித்துள்ளது. வேளாண் உற்பத்தியில் பின்தங்கிய 100 மாவட்டங்களை எடுத்து தன் தான்ய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு மாவட்டமாவது திட்டத்தில் இணைக்கப்பட்டு உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 16, 2025 20:10 IST
தி.மு.க-வின் கட்டுக்கதைகளால் காமராஜர் வீழ்த்தப்பட்டார் - ஜோதிமணி
கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "பெருந்தலைவர் காமராஜர் நேர்மைக்கும், நிர்வாகத்திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர் போனவர் என்பதை உலகறியும். தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் காமராஜர். அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும், ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை.
ஒரு முதல்-அமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர். அவர் ஏசி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.
எமது தலைவர் காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு.
காமராஜருக்கு எதிராகப் பரப்பப்படுகிற கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. அவரின் பெயராலேயே காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணில் இன்றளவும் அரசியல் களத்தில் நிற்கிறது என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நினைவில் கொள்ள வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.
-
Jul 16, 2025 20:05 IST
சென்னையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நாளை காலை 10 மணிக்கு காணொலி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. -
Jul 16, 2025 19:55 IST
இஸ்ரேல் விமானங்கள் சிரியா மீது தாக்குதல்
டமாஸ்கஸில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் மீது நேரடி குண்டு வீச்சு தாக்குதலால் சிரியா - இஸ்ரேல் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. "இஸ்ரேல் மக்கள் சிரியா எல்லை அருகில் இருக்கவேண்டாம்" என்று பிரதமர் நெதன்யாகு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
Jul 16, 2025 19:45 IST
விஷால் பேச்சு - கொந்தளித்த ரிவியூவர் பிரசாந்த்
"3 நாள் ரிவியூ பண்ணக் கூடாதுனு சொல்றது சீப்பை ஒளிச்சு வச்சிட்டா கல்யாணம் நின்னுடும்னு சொல்ற மாதிரி இருக்கு. நல்லா இல்லாத படத்த நாங்க நல்லா இருக்குனு சொன்னா படம் ஓடிருமா?" என்று ரிவியூவர் பிரசாந்த் கூறியுள்ளார்.
-
Jul 16, 2025 18:54 IST
விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு!
அதிமுக - பாஜக கூட்டணியில் சேர விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். எங்கள் கூட்டணியில் சேர்ந்தால் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என சிதம்பரத்தில் பேசியுள்ளார்.
-
Jul 16, 2025 18:50 IST
நான் எடுப்பதுதான் முடிவு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கூட்டணி ஆட்சி இல்லை; எங்கள் கூட்டணி ஆட்சியமைக்கும் என்றுதான் அமித்ஷா சொல்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
Jul 16, 2025 18:49 IST
முதல் 3 நாட்கள் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க கூடாது - விஷால்
வரும் காலங்களில் ஒரு படம் வெளியான முதல் 3 நாட்களில் படத்தை பற்றி ரிவ்யூ எடுக்க அனுமதிக்க கூடாது என விஷால் தெரிவித்துள்ளார். ரிவ்யூ என்ற பெயரில் திரையரங்க வளாகத்திற்குள் யாரையும் பேட்டி எடுக்க அனுமதிக்க கூடாது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
Jul 16, 2025 18:15 IST
பாஜகவை பார்த்து ஸ்டாலினுக்குதான் பயம்: பழனிசாமி
கருப்பு பலூன் விட்ட மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் மோடிக்கு வெள்ளை குடைபிடித்தார்; யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்; நீங்கள் ஏன் நடுங்குகிறீர்கள்? எல்லா கட்சியிலும் அமைச்சரவையில் இடம் பெற்ற திமுக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என இபிஎஸ் கூறியுள்ளார்.
-
Jul 16, 2025 18:01 IST
பயம் என்ற சொல்லே அதிமுகவுக்கு இல்லை: பழனிசாமி
பயம் என்ற சொல்லே அதிமுகவுக்கு இல்லை; அதிமுக தொண்டன் யாருக்கும் பயப்பட மாட்டான். மக்களிடம் அதிமுகவுக்கு கிடைத்துள்ள எழுச்சி, தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது; எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் சபதமிட்டு பேரவைக்குள் நுழைந்தனர் என இபிஎஸ் கூறியுள்ளார்.
-
Jul 16, 2025 17:59 IST
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 17) காலை 10 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 16, 2025 17:40 IST
விலையில்லா லேப்டாப் - கொள்முதல் செய்ய ஒப்பந்தபுள்ளி
20 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்ய ஒப்பந்த புள்ளிகள் Acer, Dell, Hp நிறுவனங்கள் பங்கேற்று ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்துள்ளன. அடுத்த 30 முதல் 45 நாட்களுக்குள் கொள்முதல் செய்வதற்கான ஆணைகளை நிறுவனங்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
-
Jul 16, 2025 17:28 IST
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமின் முதல் நாளில் 1.25 லட்சம் மனுக்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமின் முதல் நாளிலேயே 1.25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இதில், கலைஞர் மகளிர் உரிமை தொகை கோரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Jul 16, 2025 16:59 IST
மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை சட்ட விரோதமாக கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டதிருத்தம் ஜூலை 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
Jul 16, 2025 16:26 IST
ரயிலை மறித்து பயணிகள் போராட்டம்
கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரவில்லை என்று பயணிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இதன் காரணமாக, சென்னை சென்ட்ரல் செல்லும் ரயிலை மறித்து ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
-
Jul 16, 2025 16:20 IST
உடல் பருமன் பாதிப்பு குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - சி.பி.எஸ்.இ
உடல் பருமன் பாதிப்பு குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சி.பி.எஸ்.இ அறிவுறுத்தியுள்ளது. இந்த பாதிப்பு 2021-ஆம் ஆண்டில் 18 கோடி மாணவர்களிடம் காணப்பட்ட நிலையில், 2050-ல் இதன் எண்ணிக்கை 44 கோடியாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Jul 16, 2025 15:00 IST
மகளிர் மாநாடு அழைப்பிதழ்: அன்புமணி படம் தவிர்ப்பு
பாமக, வன்னியர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் . 10ல் நடக்கும் மகளிர் மாநாடு அழைப்பிதழில் அன்புமணி படம் தவிர்க்கப்பட்டுள்ளது. பாமக மகளிர் மாநில மாநாடு அழைப்பிதழில் ராமதாஸ், கலசம் சின்னம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
-
Jul 16, 2025 14:45 IST
ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சியில் பெண்ணின் நகை மாயம்.!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சியில் பெண்ணின் 5சவரன் நகை மாயம் ஆகி உள்ளது. 5 சவரன் நகை, செல்போன் மாயம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் திருமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தார். இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ராணி என்பவர் அணிந்திருந்த 5 சவரன் செயின் மாயமாகியது.
-
Jul 16, 2025 14:31 IST
பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் உறுதி..!!
கேரள மாநிலம் பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மன்னார்காட்டைச் சேர்ந்த 59 வயது நபர் நிஃபா வைரஸால் இறந்த நிலையில் அவரது மகனுக்கு நிஃபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. நிஃபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளா – தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
-
Jul 16, 2025 14:22 IST
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை: அன்புமணிக்கு அதிமுக செம்மலை பதில்
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று அன்புமணிக்கு அதிமுக மூத்த தலைவர் செம்மலை பதில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை; எதிர்காலத்திலும் வாய்ப்பில்லை. ஆட்சியில் பங்கு என்பது அன்புமணியின் விருப்பம்; விருப்பப்படுவது தவறில்லை. கூட்டணி ஆட்சிக்கு நேர்மாறாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிப்பார்கள். கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் விரும்பமாட்டார்கள் என தெரிவித்தார்.
-
Jul 16, 2025 14:22 IST
திருவள்ளுவரை அவமதிக்கும் மன்னிக்க முடியாத செயல் :ப.சிதம்பரம்
காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். போலிச் சித்திரம், போலிக் குறள், இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? என்று ஆளுநர் அளித்த விருதில் திருக்குறள் சர்ச்சையானது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
Jul 16, 2025 14:11 IST
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை ஆட்சியர் அறிவித்துள்ளார். மேல்மருவத்தூரில் நடக்கும் ஆடிப்பூர விழாவை ஒட்டி ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக.9ம் தேதி வேலை நாளாக செயல்படும்.
-
Jul 16, 2025 13:53 IST
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இல்லை; வந்தாலும் வரலாம் - எடப்பாடி பழனிசாமி
தம்பரத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி: “அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இல்லை; கூட்டணிக்கு பா.ம.க வந்தாலும் வரலாம் என்றுதான் நான் கூறினேன்” என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 16, 2025 13:49 IST
கூட்டணிக்கு தலைமை நாங்கள்தான்... நான் எடுப்பதுதான் முடிவு - எடப்படி பழனிசாமி
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கூட்டணிக்கு தலைமை நாங்கள்தான்... நான் எடுப்பதுதான் முடிவு. அ.தி.மு.க கூட்டணி தெளிவான கூட்டணி; 2026 தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றி பெறும்; தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம். எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொல்கிறார். கூட்டணி ஆட்சி என அவர் சொல்லவில்லை.” என்று கூறியுள்ளார்.
-
Jul 16, 2025 13:44 IST
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை - வானிலை மையம்
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 11 மாவட்டங்களில் நாளை (17.07.2025) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
Jul 16, 2025 13:15 IST
அமித்ஷா கூட்டணி ஆட்சி என சொல்லவில்லை -எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொல்கிறார். கூட்டணி ஆட்சி என அவர் சொல்லவில்லை” என்று கூறியுள்ளார்.
-
Jul 16, 2025 13:10 IST
நான் இன்றும் விவசாயி தான் - எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க ஆட்சியின் போது விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தேன், நான் படிக்கும் காலத்தில் இருந்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். கஜா புயலில் கடுமையான சேதம் ஏற்பட்டது, நாங்கள் புயல் வேகத்தில் பணியாற்றினோம், விவசாயிகளுக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வந்தோம். விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தோம், விவசாயிகளுக்காக அதிமுக அறிவித்த திட்டங்கள் கைவிடப்பட்டன” என்று கூறினார்.
-
Jul 16, 2025 13:08 IST
நீட் மறுதேர்வு மனு: விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்
மின்தடையால் நீட் மறுதேர்வு நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதை எதிர்த்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிரான மேல்முறையீடு மனுவை அடுத்த வாரம் விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
-
Jul 16, 2025 12:51 IST
காமராஜர் பற்றி பேச தி.மு.க எம்.பி. திருச்சி சிவாவிற்கு தகுதியில்லை - செல்வப்பெருந்தகை
காமராஜர் ஏசி இல்லாமல் தூங்கமாட்டார் என்று தி.மு.க எம்.பி. திருச்சி சிவா பேசிய நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “அவர் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். அதை விட்டுவிடுங்கள். காமராஜரைப் பற்றி குறைசொல்ல யாருக்கும் தகுதியில்லை” என்று கூறினார்.
-
Jul 16, 2025 12:08 IST
புதிய பயணத்தை பகிர்ந்தேன்; மகிழ்ந்தேன்; ரஜினிகாந்த் உடன் கமல்ஹாசன் சந்திப்பு
ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடன் சந்தித்துள்ளார். “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன்; மகிழ்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 16, 2025 11:59 IST
நடிகர் ரவி மோகன் வழக்கு: பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
பட தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு - தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு
-
Jul 16, 2025 11:23 IST
த.வெ.க. கட்சிக் கொடி நிறம் தொடர்பாக வழக்கு
நடிகர் விஜயின் த.வெ.க. கட்சிக் கொடி நிறம் தொடர்பாக தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட தங்களது சபையில் கொடி நிறத்தில், த.வெ.க கொடி உள்ளதாக மனுவில் தெரிவிப்பு
-
Jul 16, 2025 11:22 IST
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆஜர்
அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி வரை ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆஜர்.
கடந்த மாதம் 16ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் விசாரணை தொடங்குகிறது
-
Jul 16, 2025 11:21 IST
நாம் தமிழர் கட்சி - மதிமுகவினர் மோதல்: வரும் 19ம் தேதி தீர்ப்பு
2018ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி - மதிமுகவினர் இடையே நடந்த மோதல் வழக்கில் வரும் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என திருச்சி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அறிவிப்பு
இவ்வழக்கில் சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்
-
Jul 16, 2025 10:51 IST
பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் செல்ஃபி எடுத்த மு.க.ஸ்டாலின்
Video: Sun News
#Watch | மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கைக்குலுக்கி செல்ஃபி எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.#SunNews | #Mayiladuthurai | @mkstalin pic.twitter.com/YlFQ9XIctI
— Sun News (@sunnewstamil) July 16, 2025 -
Jul 16, 2025 10:15 IST
ஆகஸ்டில் நடைபெறுகிறது தவெக 2வது மாநில மாநாடு
தவெக-வின் 2வது மாநில மாநாடு வரும் ஆக. 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு
-
Jul 16, 2025 09:44 IST
"ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்"
தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
Jul 16, 2025 09:34 IST
ராணுவத்துக்கு எதிராக அவதூறு கருத்து; ராகுல்காந்திக்கு ஜாமீன்
எல்லை சாலைகள் அமைப்பில் ராணுவ கர்னலுக்கு நிகரான அந்தஸ்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் லக்னோ கோர்ட்டில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரத ஒற்றுமை யாத்திரையில் பேசிய ராகுல்காந்தி, சீன ராணுவத்திடம் நமது படையினர் அடி வாங்கியது பற்றி யாரும் ஒருதடவை கூட கேள்வி எழுப்பாதது ஏன் என்று பேசியதாகவும், ராணுவத்தை அவதூறாக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல்காந்திக்கு லக்னோ கோர்ட்டு சம்மன் அனுப்பியது.அதன்பேரில், ராகுல்காந்தி நேற்று பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜரானார். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். ராகுல்காந்தி, ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்தார்.
-
Jul 16, 2025 09:02 IST
தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 6 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஜூலை 17, 18, 19, 20, 21, 22 ஆகிய 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
-
Jul 16, 2025 08:49 IST
” யாருடன் கூட்டணி என்பது தற்போது முடிவு செய்ய முடியாது”
அன்புமணி-ராமதாஸ் இடையே இருக்கும் பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தற்போது முடிவு செய்ய முடியாது, செயற்குழு, பொதுக் குழுவைக் கூட்டி அனைவரிடமும் கலந்து ஆலோசித்து அதன் பின்னர்தான் முடிவெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Jul 16, 2025 08:44 IST
நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலமானார்
நடிகர் ரவி தேஜாவின் தந்தை பூபதிராஜு ராஜகோபால் ராஜு(90), வயது முதிர்வு காரணமாக நேற்று இரவு காலமானார். ஐதராபாத்தில் உள்ள ரவி தேஜாவின் இல்லத்தில் அவர் இறந்தார். பிரபலங்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
Jul 16, 2025 08:42 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,235 கன அடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,485 கனஅடியில் இருந்து 17,235 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.56 அடி; மேட்டூர் அணையின் நீர் இருப்பு 92.77 டி.எம்.சி., மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,000 கனஅடி நீர் வெளியேற்றம். மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
-
Jul 16, 2025 08:09 IST
பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 24 மணிநேரத்திற்குள் 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பொற்கோவிலுக்குள் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் இருப்பதாக ஒரு மின்னஞ்சல் வந்ததை அடுத்து கோவிலுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் போலி என்று தெரியவந்ததும் யார் மின்னஞ்சல் அனுப்பினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jul 16, 2025 08:08 IST
சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி
போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து புறப்படும் 3 விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய 3 விமானங்கள் என 6 விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டதால், சிங்கப்பூர், மும்பை செல்லும் பயணிகள் அவதியடைந்தனர். முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
Jul 16, 2025 08:05 IST
பெங்களூரு சாலைக்கு நடிகை சரோஜாதேவி பெயர்: சித்தராமையா
மல்லேசுவரம் 11-வது கிராஸ் சாலைக்கு சரோஜாதேவியின் பெயர் சூட்டுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.
-
Jul 16, 2025 07:46 IST
கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம். முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 15ல் முடிந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆக்ஸ்ட் 4ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஆக்ஸ்ட் 11ல் நடைபெறும்; பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 13ல் தொடங்கும். முதலாமாண்டு முதுகலை மாணவர்களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கும்.
-
Jul 16, 2025 07:43 IST
8 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.