Advertisment

Chennai News Highlights: சீமானுக்கு பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!

Chennai News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
seeman coimbatore press meet DMK NTK Periyar Tamil News

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

டான்செட் நுழைவுத் தேர்வு

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட்  பொது நுழைவுத் தேர்வுக்கு இன்று (ஜன.24) முதல் பிப்.21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மார்ச் 22-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Jan 24, 2025 20:34 IST

    ‘மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற முயற்சிக்கிறது பா.ஜ.க’ - ஆ. ராசா

    நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து தி.மு.க எம்.பி. ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். “வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவில் இரவோடு இரவாக பொருளடக்கம் மாற்றப்பட்டு, சரத்து வாரியாக விவாதம் நடத்த முடியாது என எங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதை கடுமையாக எதிர்த்தோம். அவ்வாறுதான் செய்வோம் என கூட்டுக்குழு தலைவர் தெரிவித்தார். இவ்வளவு அவசரமாக மசோதாவை இறுதி செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை கொடுப்பது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது” என்று ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.



  • Jan 24, 2025 20:28 IST

    உடற்கல்வி வகுப்புகளை மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்காதீர்கள்; உதயநிதி பேச்சு ஆர்ப்பரித்த மாணவர்கள்

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “உடற்கல்வி வகுப்புகளை கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்காதீர்கள். நன்றாக விளையாடும் குழந்தைதான் நன்றாக படிக்கும்” என்று கூறியுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு அரங்கம் அதிர பள்ளி மாணவர்கள் ஆர்ப்பரித்தனர்.



  • Advertisment
    Advertisement
  • Jan 24, 2025 19:33 IST

    பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இ.பி.எஸ் வலியுறுத்தல்

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வேலியே பயிரை மேய்வதற்குச் சமமாக வீராங்கணைகள் மீது நடுவரே தாக்குடல்; கபடி வீராங்கணைகளின் பாதுகாப்பை தி.மு.க அரசு உறுதி செய்ய வேண்டும். விளையாட்டில் சமத்துவம் இருக்க வேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக் கூடாது.மிழக அணி பயிற்சியாளரை கைது செய்திருந்தால் விடுவிக்க நடவடிக்கை தேவை” என்று வலியுறுத்தினார்.



  • Jan 24, 2025 19:27 IST

    பெரியார் – பிரபாகரனை கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக - பழ. நெடுமாறன் வலியுறுத்தல்

    உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    பெரியார் அவர்கள் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து போராடியவர். அவரது இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுதப் பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்தப் பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை.

    2009-ம் ஆண்டு இறுதிப்போருக்கு முன்பாக தமிழீழத்தின் பெரும் பகுதி விடுதலைப்புலிகளின் ஆட்சிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அப்போது பெரியார் அவர்களின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினைச் செயல்படுத்திய பெருமை பிரபாகரன் அவர்களுக்கு உண்டு. விடுதலைப்புலிகள் திருமணம் செய்துகொள்ளவேண்டுமானால், சாதி மறுப்புத் திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றை பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார். அவரது திருமணம் முதல் விடுதலைப்புலிகள் பலரின் திருமணங்கள் இத்தகைய புரட்சிகர திருமணங்களாகவே அமைந்தன. அவற்றைப் பார்த்த மக்களும் அவர்களைப் பின்பற்றி சாதி மறுப்புத் திருமணங்களை செய்துகொள்ள வழிவகுக்கப்பட்டது.

    சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கடைப்பிடிப்பவர்கள் மீது விடுதலைப்புலிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர்.  மேலும் பல புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். பெரியார் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், தனது கோட்பாடுகளைச் செயல்படுத்தி வரும் பேரன் பிரபாகரனைச் சந்தித்துப் பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை.

    பெரியாரைப் பற்றியோ அல்லது பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல் அவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். சாதி, சமய வேறுபாடுகளால் பிளவுப்பட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், பகுத்தறிவுச் சமதர்மப் பாதையில் தொடர்ந்து நடக்கவும் அரும்பாடுபட்ட இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்துகொள்பவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்க விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.



  • Jan 24, 2025 19:15 IST

    நடிகர் ஜெயசீலன் மரணம்

    புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா, பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜெயசீலன் (40), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். நாளை (40) அவரது வீட்டில் இறுதிச் சடங்கு நடக்கிறது.



  • Jan 24, 2025 18:43 IST

    சென்னையில் டி20 கிரிக்கெட் போட்டி - போக்குவரத்து மாற்றம்

    சென்னையில் நாளை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை சேப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளான விக்டோரியா ஹாஸ்டெல், பெல்ஸ் சாலை, பாரதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.



  • Jan 24, 2025 18:11 IST

    ரௌடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்கவும் - நீதிமன்றம்

    ரௌடிகளுக்கு பட்டப்பெயர் வைத்து அழைப்பதை தவிர்க்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பாம் சரவணன், பாம்பு நாகராஜன் போன்ற பெயர்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.



  • Jan 24, 2025 17:59 IST

    கனிமவளக் கொள்ளை - தி.மு.க மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

    கனிமவளக் கொள்ளையை தி.மு.க தடுப்பதில்லை என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். 2026-ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்க, கனிமவளக் கொள்ளை கும்பலின் வசூலை தான் தி.மு.க நம்பி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது போன்ற செயல்களில் பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.



  • Jan 24, 2025 17:16 IST

    பேருந்து கட்டண உயர்வு - பதிலளிக்க உத்தரவு

    தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து 4 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jan 24, 2025 17:08 IST

    50 நாட்களில் 20,000 பேர் விண்ணப்பம் 

    கைவினை கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை திட்டத்தில் பயன் பெயர் 50 நாட்களில் 20,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  கலைஞர் கைவினை திட்டத்துக்கு இந்தாண்டிற்கு ரூ. 75 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  



  • Jan 24, 2025 17:07 IST

    சென்னை அண்ணா நகர்  பாலியல் வன்கொடுமை - ஐகோர்ட் உத்தரவு 

    சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூலம் வீடியோ வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழுவை மாற்றியமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறுமியின் வாக்குமூலம் வெளியான விவகாரம் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சைபர் க்ரைம் பிரிவு அதிகாரியை நியமிக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார். 

    மேலும், விசாரணை தொடர்பான அறிக்கையை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்ய புதிய சிறப்பு புலனாய்வு குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

     



  • Jan 24, 2025 16:48 IST

    வீராங்கனைகள் பாதுகாப்பாக இருக்கின்றனர் - தமிழக அரசு 

    பஞ்சாப்பில் கபடி போட்டிக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவிகள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த கபடி பயிற்சியாளர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. பஞ்சாப்பிற்கு கபடி விளையாடச் சென்ற தமிழக மாணவிகளை பத்திரமாக தமிழகம் அழைத்து வர துணை முதலமைச்சர் உதயநிதி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.



  • Jan 24, 2025 16:43 IST

    ஆளுநரின் தேநீர் விருந்து - விஜய்க்கு அழைப்பு

    குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் அளித்துள்ளது.

     



  • Jan 24, 2025 16:42 IST

    அசோகச் சக்கர வடிவில் நின்று மாணவ - மாணவியர்கள் உலக சாதனை

    புதுச்சேரி அடுத்த மதகடிப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அசோகச் சக்கர வடிவில் நின்று மாணவ - மாணவியர்கள் உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர். 42,000 சதுர அடி நிலப்பரப்பில், 5000 பேர் ஒரே சீருடையில் பங்கேற்று அசோகச் சக்கரத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.



  • Jan 24, 2025 16:41 IST

    இஸ்ரேலுக்கான இந்திய தூதராக நியமனம்

    வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக உள்ள ஜிதேந்திர பால் சிங், இஸ்ரேலுக்கான இந்திய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஸ்லோவேனியா நாட்டுக்கான இந்திய தூதராக உள்ள நம்ரதா குமார், லாத்வியா நாட்டுக்கான தூதராக மாற்றபட்டுள்ளார்.  

     



  • Jan 24, 2025 16:24 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு  - வழக்கறிஞர்கள் நியமனம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட 2 மூத்த குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீனிவாஸ், சிஎஸ்எஸ் பிள்ளை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.50 லட்சம் பக்கங்கள் கொண்ட வழக்கின் ஆவணங்களை முறைப்படுத்தி, வரும் பிப்ரவரி 7ம் தேதிக்குள் வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 



  • Jan 24, 2025 16:23 IST

    குடிநீர் வாரிய வாகன பேட்டரி திருடு - கைது செய்த போலீஸ் 

    சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் வாகனத்தின் பேட்டரியை திருடிச் சென்ற 2 நபர்கள் கைது. பேட்டரி மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருடியவர்களை கைது செய்தது போலீஸ். கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன், சூர்யாவை விசாரணை செய்தபோது அவர்கள் மிது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உள்பட 4 வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது



  • Jan 24, 2025 16:02 IST

    டி20 போட்டி - கட்டணமின்றி பயணம்

    சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டிக்கு செல்லும் ரசிகர்களுக்கு மாநகர பேருந்தில் இலவச பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    போட்டியை காண டிக்கெட் வைத்திருந்தால்,நடத்துனரிடம் காண்பித்து ரசிகர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. 



  • Jan 24, 2025 15:24 IST

    தலையில் காயம் - மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட  காட்டு யானை

    கேரளா மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் தலையில் காயத்துடன் சுற்றி வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக யானையை பிடிக்கும் முயற்சி நடந்து வந்த நிலையில், இன்று அடர்வனத்தை விட்டு வெளியே வந்த போது மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை பிடிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகும் யானையின் உடல்நிலை தொடர்ந்து வனத்துறையினரால் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     



  • Jan 24, 2025 14:55 IST

    பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான  தாக்குதல்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான  தாக்குதல் கண்டிக்கத்தக்கது: வீராங்கனைகள், பயிற்சியாளரின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

     பஞ்சாப் மாநிலம்  பதின்டா நகரில் உள்ள  குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின் போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டிருப்பதாகவும், பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

    பிகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியுடன் இன்று நடைபெற்ற போட்டியின் போது, பிகார் வீராங்கனைகளின் விதிமீறல்கள் குறித்து புகார் செய்ததால், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. பஞ்சாப் மாநில அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதேபோல், தமிழக பயிற்சியாளர் மீதான வழக்கை திரும்பப் பெறச் செய்வதுடன், பிகார் அணியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.



  • Jan 24, 2025 14:30 IST

    போதைப்பொருள் கடத்தல் வழக்கு: இயக்குநர் அமீர் பிப்ரவரி 7-ல் ஆஜராக உத்தரவு

    போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்ட விரோத பணப்பரிவர்த்தையில் ஈடுப்பட்டதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், இயக்குநர் அமீர் நேரில் ஆஜரான நிலையில் வழக்கு பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jan 24, 2025 14:29 IST

    தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் - காங். கண்டனம் 

    பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. உடனடியாக தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தலையிட்டு தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பஞ்சாபில் இருந்து தமிழக வீராங்கனைகளை பத்திரமாக அழைத்து வரவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன் என்று  தமிழக காங்கிரஸ் தலைவர் செவ்வப்பெருந்தகை கூறியுள்ளார்.



  • Jan 24, 2025 14:15 IST

    சீமான், திருமுருகன் காந்தி ஆகியோர் மீது வழக்கு

    பெரியார் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்த சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தில் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சீமான் வீட்டை முற்றுகையிட வருவோரை தாக்குவதற்காக உருட்டுக்கட்டைகளுடன் பதுங்கி இருந்தாக நாம் தமிழர் கட்சியின் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சட்டவிரோதமாக அனுமதியின்றி ஒன்று கூடுதல், உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



  • Jan 24, 2025 14:10 IST

    மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா: இதுதான் திராவிட மாடல்: மு.க.ஸ்டாலின்!

    நாதக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "இதுதான் திராவிட மாடல். அவர்களுக்கு ஆவேசம் வரட்டும்.. கோபம் வரட்டும்.. ஆனால் நாங்கள் திராவிட மாடல் என்ற சொல்லிக்கொண்டேதான் இருப்போம் என்று கூறியுள்ளார்.



  • Jan 24, 2025 14:06 IST

    நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் ஆ.ராசா உட்பட 10 எம்.பிக்கள் சஸ்பெண்ட்!

    வக்பு சட்ட திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில், ஆ.ராசா, ஓவைசி, கல்யாண் பானர்ஜி ஆகியோருடன் உள்பட 10 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வக்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளதால், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், எம்.பிக்கள் கூட்டுக் குழுவின் தலைவர் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை என்றுமு் எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



  • Jan 24, 2025 13:56 IST

    பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் 

    பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின் போது போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் தமிழக வீராங்கனைகள் மீது நாற்காலிகளை தூக்கி எறிந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் குறித்து சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ள பயிற்சியாளர், பஞ்சாப் மாநிலத்தில் தமிழக வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிப்பிட்டுள்ளார்.



  • Jan 24, 2025 13:17 IST

    பிரபாகரன் பிள்ளைகளுக்கு ரத்த உறவு இல்லை, லட்சிய உறவு தான்: சீமான்

    நான் பிரபாகரனை சந்திக்கவில்லை என ஒவ்வொருவரும் கருத்து சொல்கிறார்கள் பிரபாகரன் பிள்ளைகளுக்கு ரத்த உறவு இல்லை...லட்சிய உறவு தான். நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என சீமான் கூறியுள்ளார். 



  • Jan 24, 2025 13:13 IST

    ஊழல் ஒழிப்பிலும் உலகளவில் முன்னோடியாக இருக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

    "இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் ஒழிக்க வேண்டும். ஊழல் ஒழிப்பிலும் உலகளவில் முன்னோடியாக இருக்க வேண்டும். சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை, ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



  • Jan 24, 2025 13:09 IST

    த.வெ.க ஆலோசனை கூட்டம்: கட்சி அலுவலகம் வந்த விஜய்

    தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தார் த.வெ.க தலைவர் விஜய்



  • Jan 24, 2025 12:59 IST

    உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த டி.இமான்

    தனது பிறந்தநாளை ஒட்டி, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்திற்காக பதிவு செய்தார் இசையமைப்பாளர் டி. இமான். 



  • Jan 24, 2025 12:23 IST

    கட்சி தொடங்கிய உடனே ஆட்சியா? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வருவோம் என சில காட்சிகள் சொல்லி வருகின்றன. இப்போது அனாதை நிலையில் சுற்றி கொண்டிருப்பவர்கள் எல்லாம், நாங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று இன்றைய விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 



  • Jan 24, 2025 11:51 IST

    ஜன.31இல் தமிழகம் வருகிறார் அமித்ஷா

    மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா ஜன.31 தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்க அமித்ஷா தமிழகம் வரவுள்ளதாக தகவல் வந்துள்ளது. 



  • Jan 24, 2025 11:20 IST

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெரியார் சிலை பரிசு

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3000-க்கும் மேற்பட்ட நா.த.க உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் முதலமைச்சருக்கு நினைவு பரிசாக பெரியார் சிலை வழங்கப்பட்டது. 



  • Jan 24, 2025 11:04 IST

    ஆனந்த் தலைமையில் த.வெ.க ஆலோசனை கூட்டம்.

    த.வெ.க மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது. ஒரு சில மாவட்ட செயலாளர்கள் தேர்வில் நீடிக்கும் சிக்கல் குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது. முதல் கட்டமாக குறிப்பிட்ட சில மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. 



  • Jan 24, 2025 10:39 IST

    மாற்றுக் கட்சியை சேர்ந்த 3000 பேர் தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சி

    மாற்றுக் கட்சியை சேர்ந்த 3000 பேர் தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

     நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய சுமார் 2,000 பேர் தி.மு.கவில் இணைய உள்ளனர். பிற கட்சியை சேர்ந்த 1000 பேரும் தி.மு.கவில் இணைய உள்ளனர்.



  • Jan 24, 2025 10:32 IST

    நா.த.க கட்சியில் இருந்து விலகியவர்கள் அணி அணியாக அண்ணா அறிவாலயம் வருகை

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்று கட்சியினர் தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில் சீமானின் நா.த.க கட்சியில் இருந்து விலகியவர்கள் அணி அணியாக சென்னை அண்ணா அறிவாலயம் நோக்கி வருகின்றனர். நாம் தமிழரில் இருந்து விலகி ஆயிரக்கணக்கானவர்கள்  தி.மு.கவில் இணைய வருகை தந்துள்ளனர். 



  • Jan 24, 2025 09:57 IST

    தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,555க்கும், ஒரு சவரன் ரூ.60,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. 



  • Jan 24, 2025 09:54 IST

    சீமான் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு

    நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீமான் வீட்டின் அருகே உருட்டுக் கட்டைகளுடன் கூடியிருந்த தொண்டர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Jan 24, 2025 09:17 IST

    அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் தாமதம்

    சென்னை பெரம்பூர் பகுதியில் சிக்னல் கோளாறு காரணமாக அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. சமீபகாலமாக சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய மார்க்கங்களில் இயங்கும் மின்சார ரயில்கள் தொடர்ந்து தாமதமாக வருவதாக பயணிகள் குற்றச்சாட்டி உள்ளனர். 



  • Jan 24, 2025 07:54 IST

    குடியரசு தின விடுமுறை- சிறப்பு ரயில் இயக்கம் 

    குடியரசு தின தொடர் விடுமுறையையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் 24ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு 26ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.



  • Jan 24, 2025 07:49 IST

    பெரிய மெட்ரோ நிலையம்

    சென்னையின் 2-வது பெரிய மெட்ரோ நிலையமாக பிரம்மாண்டமாக பனகல் பார்க் மெட்ரோ நிலையம் தயாராகி வருகிறது. தரையில் இருந்து 20 மீட்டர் ஆழத்திலும், பூமிக்கு அடியில் 320 மீட்டர் நீளத்திற்கும்  கட்டப்பட்டு வரும் நிலையம் ஒரே நேரத்தில் 5000 பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment