Chennai News Updates: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

Tamilnadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamilnadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai rain imd z

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, கிண்டி, பல்லாவரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம்: அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும், இன்று தொடங்கி வரும் டிசம்பர் 4ம் தேதி வரை, வாக்காளர்களை சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளன.

  • Nov 05, 2025 07:09 IST

    சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

    சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, கிண்டி, பல்லாவரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.



  • Nov 04, 2025 21:54 IST

    சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ராஃப்-க்கு அபராதம்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சர்ச்சையான வகையில் துப்பாக்கியால் சுடுவதைப்போல் சைகை காண்பித்த பாக்., வீரர் ஹாரிஸ்க்கு  ஊதியத்தில் 30% அபராதம்,  2 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ள ஐசிசி, இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு ஊதியத்தில் 30% அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Nov 04, 2025 20:29 IST

    பீகார் சட்டப்பேரவை தேர்தல் - தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியீடு

    பீகார் சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து்கணிப்பு நிலவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், பாஜக 83 முதல் 87 தொகுதிகள் வரை கைப்பற்றும்  என்றும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ்குமாரின் ஜேடியு 61-65 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல்,  காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேஜஸ்வி யாதவ்வின் ஆர்ஜேடி, 63 - 66 தொகுதிகள் வரை கைப்பற்றும்  என்றும், காங்கிரஸ் கட்சி தனித்து 7-9 தொகுதிகளை கைப்பற்றும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 243 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் ஐஏஎன்எஸ், மேட்ரிக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.



  • Nov 04, 2025 20:15 IST

    7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, வேலூர், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Nov 04, 2025 19:21 IST

    அமெரிக்காவுக்கு இணையாக பீகாரின் சாலைகள் மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை - நிதின் கட்கரி

    பீகாரின்சாலைகள்அமெரிக்காவுக்குஇணையாகமாறும்காலம்வெகுதூரத்தில்இல்லைஎனதேர்தல்பரப்புரையில்ஒன்றியஅமைச்சர்நிதின்கட்கரிபேசியுள்ளார். இதேகருத்தைகடந்த 2022 ஆம்ஆண்டிலும்நிதின்கட்கரிபேசியிருந்ததுகுறிப்பிடத்தக்கது.

     



  • Nov 04, 2025 18:44 IST

    எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மனோஜ் பாண்டியன் பேட்டி

    ஆலங்குளம் தொகுதிக்காக நான் கேட்ட கோரிக்கைகள் அனைத்தும் முதல்வர் நடவடிக்கையால் ஏறக்குறைய நிறைவேற்றப்பட்டுள்ளன என சென்னை தலைமை செயலகத்தில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மனோஜ் பாண்டியன் பேட்டி அளித்துள்ளார். 



  • Nov 04, 2025 18:06 IST

    பாமக எம்.எல்.ஏ. அருள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

    பாமக எம்.எல்.ஏ. அருள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அருள் மீதான தாக்குதலுக்கு அன்புமணியின் நடைபயணமே காரணம் என ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். நடைபயணம் என்ற பெயரில் என்னை அன்புமணி அவமானப்படுத்துகிறார். பாமகவினரை அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அன்புமணி வன்முறையை தூண்டுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். நடைபயணம் என்ற பெயரில் அன்புமணி கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்தேன் என அவர் தெரிவித்தார்.



  • Nov 04, 2025 18:05 IST

    அன்புமணி தான் காரணம்

    வாழப்பாடி அருகே பாமக எம்.எல்.ஏ அருள் சென்ற கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அன்புமணி தான் காரணம், சதித்திட்டம் தீட்டி தாக்குதல் நடத்தியுள்ள அன்புமணியின் கும்பலை தடை செய்து சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும். எம்.எல்.ஏ அருள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் எஸ்.ஐ தலைமையில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு தர வேண்டும். அநாகரீக, வன்முறை அரசியலை கையில் எடுத்துள்ளார் அன்புமணி என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 



  • Nov 04, 2025 17:43 IST

    சத்தீஸ்கரில் ரயில் விபத்து: 2 பேர் பலி

    சத்தீஸ்கர்மாநிலம்பிலாஸ்பூர்அருகேசரக்குரயில்மீதுபயணிகள்ரயில்மோதியவிபத்தில் 2 பேர்உயிரிழந்தனர். 20 பேர்காயமடைந்தனர். ஜெய்ராம்நகர்ரயில்நிலையம்அருகேநின்றுகொண்டிருந்தசரக்குரயில்மீதுகோர்பாபயணிகள்ரயில்மோதியது.

     



  • Nov 04, 2025 17:09 IST

    5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை

    தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், திருவாரூர், கோவை, தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



  • Nov 04, 2025 17:08 IST

    திமுகவில் இன்று இணைந்த ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.,

    திமுகவில் இன்று இணைந்த ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.



  • Nov 04, 2025 17:08 IST

    எஸ்.ஐ.ஆர்- திமுக சார்பில் உதவி மையம் அறிவிப்பு

    வாக்காளர்பட்டியல்சிறப்புதீவிரதிருத்தம்திமுகசார்பில்உதவிமையம்அமைக்கப்பட்டுள்ளது. திமுகநிர்வாகிகள் 8065420020 என்றஎண்ணில்தொடர்புகொண்டுசந்தேகங்களுக்குவிளக்கம்பெறலாம். எஸ். ஐ .ஆர்பணிகளில்ஈடுபடும்திமுகவினருக்குஉதவிடும்வகையில்உதவிமையம்அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாஅறிவாலயத்தில்மூத்தவழக்கறிஞர்என்.ஆர். இளங்கோஎம்.பி. மேற்பார்வையில்உதவிமையம்அமைக்கப்பட்டுள்ளது.

     



  • Nov 04, 2025 16:37 IST

    தெருநாய் தாக்கியதில் சிறுவன் கை மற்றும் முதுகில் காயம் - மருத்துவமனையில் அனுமதி

    சென்னைவானகரத்தில்சாலையில்சென்றலக்ஷன்என்றசிறுவனைதெருநாய்தாக்கியதில்கைமற்றும்முதுகில்காயமடைந்தனர். தனியார்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில்போலீசார்விசாரணைநடத்திவருகின்றனர்.

     



  • Nov 04, 2025 16:33 IST

    "சிபிஎஸ்இ அட்டவணையை திருத்த வேண்டும்" - அன்புமணி

    சிபிஎஸ்இ அட்டவணையில் இந்தி தேர்வுக்கு 4 நாள் இடைவெளி; தமிழுக்கு ஒருநாள் இடைவெளி தரப்பட்டுள்ளது; பொதுத் தேர்வுகளில்கூட மொழி வேறுபாடு காட்டப்படுவது கண்டிக்கத்தக்கது என்று  பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். 



  • Nov 04, 2025 16:06 IST

    +2 தேர்வில் கால்குலேட்டருக்கு அனுமதி..' 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

    தமிழகத்தில் நடப்பாண்டு முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் 2026 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி மற்றும் அட்டவணையும், 11ஆம் வகுப்பு அரியர் பொதுத்தேர்வுக்கான அட்டவணையும் இன்று வெளியடப்பட்டது..



  • Nov 04, 2025 16:05 IST

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் உதவி மையங்கள் அமைப்பு

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபடும் திமுகவினருக்கு எழும் கேள்வி சந்தேகங்களுக்கு உதவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தலைமைக் கழகம் மூலம் ஒருங்கிணைத்திட என்ஆர். இளங்கோ மேற்பார்வையில் உதவி மையம் செயல்படும். திமுக நிர்வாகிகள், 80654 20020 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சந்தேங்களுக்கு பதிலை பெறலாம்.



  • Nov 04, 2025 16:05 IST

    திரையரங்குகளில் நியாயமான வகையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்

    திரையரங்குகளில் நியாயமான வகையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நியாயமான விலையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்காவிட்டால், மக்கள் வருகை குறைந்து தியேட்டர்கள் காலியாகிவிடும். மல்டி ப்ளக்ஸ்களில் டிக்கெட், உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களின் விலை குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் ரூ.100க்கு தண்ணீர் பாட்டில், ரூ.700க்கு காபி விற்பனை செய்கிறார்கள் என உச்ச நீதிமன்றம் காட்டம் தெரிவித்துள்ளது.



  • Nov 04, 2025 14:26 IST

    வங்கக்கடலில் மியான்மர் கடலோர பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது!

     வங்கக்கடலில் மியான்மர் கடலோர பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் மியான்மர் வங்கதேச கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 16% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 201.9 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 234.5 மிமீ மழை பொழிந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 9% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 325.4 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 354.9 மி.மீ. மழை பொழிந்துள்ளது.



  • Nov 04, 2025 13:58 IST

    முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும் - அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி

    கிட்னி விவகாரத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதிடாததன் காரணமாக மருத்துவமனை உரிமத்தை ரத்து செய்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன தன் கட்சிக்காரரின் மருத்துவமனையை தப்பிக்க வைக்க, மக்களின் நலனை புறந்தள்ளி இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன் என்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார். 



  • Nov 04, 2025 13:57 IST

    பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு

    பொன்முடிக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது



  • Nov 04, 2025 13:54 IST

    தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, திருச்சியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



  • Nov 04, 2025 13:31 IST

    மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம்

    மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு துணை ஆனையருக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. திருமணம் செய்து மோசடி செய்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். தன்னை கர்ப்பமாக்கிவிட்டு, சேர்ந்து வாழ மறுப்பதுடன் மிரட்டுவதாக ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார்.



  • Nov 04, 2025 13:05 IST

    பீகாரில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ரூ.30,000 உதவித் தொகை - தேஜஸ்வி வாக்குறுதி

    பீகாரில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு தலா ரூ.30,000 உதவித் தொகை ஜனவரி 14-ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.



  • Nov 04, 2025 11:47 IST

    மார்ச் 11-ஆம் தேதி பொதுத்தேர்வு... 10-ஆம் வகுப்பு அட்டவணை வெளியிட்ட அன்பில் மகேஷ்


    10-ஆம் வகுப்பு பொதுதேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ்  வெளியிட்டார். மார்ச் 11-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 



  • Nov 04, 2025 10:51 IST

    உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி - நாளை பிரதமருடன் சந்திப்பு

    உலக கோப்பையை வென்ற இந்திய அணியினரை நாளை பிரதமர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். இந்த சந்திப்பு டெல்லி பிரதமர் இல்லத்தில் நடைபெறவுள்ளது



  • Nov 04, 2025 10:09 IST

    வைகை அணைக்கு வினாடிக்கு 2,176 கன அடி நீர்வரத்து

    தேனி: வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,176 கன அடியாக உள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக உள்ளது; நீர் திறப்பு 3,499 கன அடியாக உள்ளது.

     



  • Nov 04, 2025 10:08 IST

    தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூறும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



  • Nov 04, 2025 10:05 IST

    கோவை அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு

    கோவையில், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் இன்று அதிகாலையில் சுட்டுபிடித்தனர். காலில் குண்டு காயத்துடன் பிடிக்கபட்ட மூவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரபட்டுள்ளது. கோவைக்கு வரும் நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே மருத்துவமனைக்குள் அனுமதிக்கபட்டு வருகின்றனர்.



  • Nov 04, 2025 09:38 IST

    சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.800 குறைவு

    இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,250-க்கும், சவரன் ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இதன்படி வெள்ளிவிலை கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.165க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



  • Nov 04, 2025 09:33 IST

    தெலங்கானா: 3 சகோதரிகள் உடல்கள் நசுங்கி பலி

    தெலங்கானவில், அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று சொந்த ஊர் திரும்பிய 3 சகோதரிகள் உடல்கள் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் சகோதரிகள் 3 பேரும் ஒரே இருக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் உடல்கள் நசுங்கி மரணம் அடைந்து விட்டனர். இதனால் 4 மகள்களில் ஒரு மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய எல்லையா கௌடு குடும்பம் கடும் சோகத்தில் மூழ்கியது. இந்நிலையில், விபத்தில் சிக்கி பலியான 3 சகோதரிகளின் உடல்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவர்களின்  குடும்பத்தினர் உறவினர்கள் ஆகியோர் கதறி அழுதனர்.



  • Nov 04, 2025 09:30 IST

    தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்

    இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார். அதில்; தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறும் அ.தி.மு.கவின் பிரிவு, உண்மையான அ.தி.மு.க அல்ல. கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க ஆணையத்திடம் செங்கோட்டையன் அவகாசம் கோரியுள்ளார்.



  • Nov 04, 2025 09:27 IST

    துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தடயவியல் சோதனை 

    கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் சுட்டு பிடித்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு அருகே தடயவியல்  நிபுணர் குழு சோதனை மேற்கொண்டுள்ளனர்.



  • Nov 04, 2025 09:26 IST

    சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

    சென்னையில் அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட 5  இடங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வரும் நபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள்.



  • Nov 04, 2025 09:24 IST

    திருப்பூர்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். பல்லடம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பஸ்சில் திடீரென தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். இதையடுத்து, பஸ்சில் பயணித்த பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பஸ்சில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 

     



  • Nov 04, 2025 09:24 IST

    "ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும்"

    மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • Nov 04, 2025 08:59 IST

    நெல்லை: தாமிரபரணி ஆற்றில் 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே சக்திகுளம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் பழமைவாய்ந்த 3 ஐம்பொன் சிலைகள் கிடந்ததைப் பார்த்து அவற்றை வெளியே எடுத்து வந்தனர். பழமைவாய்ந்த ஐம்பொன் சிலைகளை வேறு எங்கேனும் கோவிலில் இருந்து மர்மநபர்கள் திருடி வந்தனரா?, பின்னர் போலீசாருக்கு பயந்து அவற்றை ஆற்றில் வீசிச் சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

     



  • Nov 04, 2025 08:41 IST

    முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி

    செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை நெருங்குகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 22 அடி வரை நிரம்பி உள்ளது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் விநாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் சென்னையில் மழையின் தாக்கம் அதிகரிக்கலாம் என்பதால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றது.



  • Nov 04, 2025 08:31 IST

    மண்டல பூஜை: சபரிமலை கோயில் நடை நவ.16-ல் திறப்பு

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மண்டல பூஜை அடுத்த மாதம் 27ம் தேதி வரை நடைபெறுகிறது, அன்று இரவு நடை சாத்தப்படும். மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும். மகரவிளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதி நடைபெறும்; ஜன.20ல் நடை சாத்தப்படும். மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை பிப். 12ம் தேதி திறக்கப்பட்டு 17ம் தேதி நடை அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு 19ம் தேதி நடை சாத்தப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.



  • Nov 04, 2025 08:11 IST

    காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Nov 04, 2025 08:10 IST

    இமயமலையில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 7 பேர் பலி

    நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர். மலையில் 5 ஆயிரத்து 630 மீட்டர் உயரத்தில் உள்ள யலொங் ரி சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் மலையேற்ற வீரர்கள் தங்கி இருந்தனர். அப்போது அந்த முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேற்ற வீரர்கள் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர். 



  • Nov 04, 2025 08:03 IST

    10, 12 ஆம் பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நுலக அரங்கில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நிகழ் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை வெளியிடுகிறார். அப்போது, 11 ஆம் வகுப்பு அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையும் வெளியிடப்படுகிறது. ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. 



  • Nov 04, 2025 07:59 IST

    துணை ஜனாதிபதி இன்று கோவை வருகை: டிரோன் பறக்க தடை

    துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார். இதையொட்டி கோவையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று இரவு 8 மணி வரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறி டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • Nov 04, 2025 07:37 IST

    மாணவி பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க, த.வெ.க ஆர்ப்பாட்டம்

    கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. கோவையில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. ஆட்சியை கண்டித்தும் அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில், இன்று காலை 11 மணியளவில், கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கல்லூரி மாணவி வன்கொடுமையை கண்டித்து இன்று (நவ.04) கோவையில் த.வெ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் அருகே இன்று பகல் 12 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 04, 2025 07:36 IST

    கோவை சம்பவத்தைக் கண்டித்து இன்று பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

    கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் துணை ஜனாதிபதி பாதுகாப்பில் குறைபாடு இருந்தது. பாதுகாப்பு வளையத்தை தாண்டி 2 பேர் அத்துமீறி நுழைந்தனர். காவல்துறையின் மெத்தன போக்குதான் இதற்கு காரணம். கோவையில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பா.ஜனதா சார்பில் (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.



  • Nov 04, 2025 07:34 IST

    வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று முதல் தொடக்கம்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் துணையுடன் அரசு ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர்கள் பட்டியல் டிசம்பர் 9-ம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: