Chennai News Live Updates: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக கர்நாடக பள்ளிகள் நாளை முதல் 10 நாள் விடுமுறை

Chennai News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Chennai News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
siddaramaiah 5

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தீபாவளி பண்டிகையொட்டி, தமிழகம் முழுதும் 4 நாட்களுக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அக்., 16ம் முதல் 19ம் தேதி வரை, சென்னையில் இருந்து தினமும் செல்லும் 2,092 பேருந்துகளுடன், 4 நாட்களுக்கும் சேர்த்து 5,900 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,268 பேருந்துகள் இயக்கப்படும்.

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை (புதன்கிழமை) கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

  • Oct 07, 2025 16:06 IST

    கர்நாடக பள்ளிகள் நாளை முதல் 10 நாள் விடுமுறை

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக கர்நாடக பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை முதல் வரும் 18 ஆம் தேடி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று விடுமுறை முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.



  • Oct 07, 2025 15:48 IST

    தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - உடுமலை பத்திரிக்கையாளர்கள் சங்கம்

    அரசு கேபிள் சேவையில் இருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்கள் சார்ந்த பிரச்னைகளை உடனுக்குடன் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது புதிய தலைமுறை தொலைக்காட்சி; எந்தவித முன்னறிவிப்பு இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று உடுமலை பத்திரிக்கையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. 



  • Advertisment
    Advertisements
  • Oct 07, 2025 15:42 IST

    வெளியே வர விஜய்க்கு பயம்: துரைமுருகன்

    தன் நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் வெளியே வர விஜய்க்கு பயம்| குற்றம் புரியவில்லை எனில் துயர சம்பவம் ஏற்பட்ட வீடுகளுக்கு சென்று விஜய் ஆறுதல் சொல்லி இருக்க முடியும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 



  • Oct 07, 2025 15:19 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தமிழக அரசு மனு உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 10ஆம் தேதி விசாரணை

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு மனு உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 10ஆம் தேதி விசாரணை வருகிறது. உச்ச நீதிமன்றம் நீதிபதி முன் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சபரீஷ் சுப்பிரமணியம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலான நிலையில், வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக முறையீடு செய்திருந்தார்.



  • Oct 07, 2025 15:19 IST

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி அவர்கள் இயற்கை எய்தியதையொட்டி சென்னை, சாலிகிராமத்திலுள்ள எல்.கே.சுதீஷ் இல்லத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று, உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.



  • Oct 07, 2025 15:06 IST

    மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன் கண்டனம்

    அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சி முடக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுவதை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள். புதிய தலைமுறை தொலைக்காட்சியை அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 



  • Oct 07, 2025 14:38 IST

    எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது ஸ்டாலின் அரசு - எடப்பாடி பழனிசாமி

    ஊடகங்களில் தப்பித் தவறிக் கூட தங்களுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது  ஸ்டாலின் அரசு; உடனடியாக அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனலின் ஒளிபரப்பு தொடரப்படுவதை ஸ்டாலின் மாடல் திமுக உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 



  • Oct 07, 2025 14:34 IST

    பாஜகவின் பயணம் ஒரு நாளும் தமிழரின் பயணமாக அமையாது: அமைச்சர் மனோ தங்கராஜ்

    பாஜகவின் பயணம் ஒரு நாளும் தமிழரின் பயணமாக அமையாது, அது வடநாட்டு பயணம்தான் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பாஜக நடத்தும் எந்த ஊர்வலமும் தமிழர்களுக்காகவோ தமிழர் நலனுக்காகவோ இருக்க வாய்ப்பில்லை என அவர் தெரிவித்தார்.



  • Oct 07, 2025 14:30 IST

    புதிய தலைமுறை தொலைக்காட்சி தடை செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன் - அன்புமணி ராமதாஸ்

    அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சி தடை செய்யப்பட்டிருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இது அரசின் கோழைத்தனம் என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 



  • Oct 07, 2025 14:29 IST

    புதிய தலைமுறை முடக்கம் ஏன் என எழும் கேள்வி

    மக்களுக்கு கேபிள் சேவையை வழங்கும் நிறுவனம் எதுவாயினும், எல்லா தொலைக்காட்சிகளும் மக்களைச் சென்றடைய பாலமாகச் செயல்படுவதே கேபிள் சேவைக்கான நெறியாகும். ஆனால் இந்தச் சூழலில் புதிய தலைமுறை சேவை முடக்கப்பட்ட பின்னணி என்ன என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் நடுநிலையான இதழியலுக்குப் பெயர் பெற்ற தொலைக்காட்சி என்பதோடு, எப்போதுமே மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் தொலைக்காட்சியாகவும், பெருவாரி மக்களால் பார்க்கப்படும் முன்னணி தொலைக்காட்சியாகவும் திகழ்வது புதிய தலைமுறை. இப்படிப்பட்ட சூழலில், புதிய தலைமுறையின் சேவை நிறுத்தப்பட்ட காரணம் என்ன என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி வருகின்றனர்.



  • Oct 07, 2025 14:15 IST

    கோ கலர்ஸ் ஆடையகத்தின் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை

    கோ கலர்ஸ் ஆடையகத்தின் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் ஜவுளி கடைகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 30 இடங்களிலும் இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட இடங்களிலும் கோ கலர்ஸ் நிறுவன கிளைகள் உள்ளன. ஆண்டு வருமானம் சுமார் ரூ.850 கோடி ஈட்டும் வகையில் கோ கலர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.



  • Oct 07, 2025 13:56 IST

    கரூர் துயரம்: ‘மனவேதனையில் இருக்கிறேன்’ - விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்

    “கரூர் துயர சம்பவத்தால் மனவேதனையில் இருக்கிறேன்” என்று த.வெ.க தலைவர் விஜயின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.



  • Oct 07, 2025 13:28 IST

    புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நீதி கிடைக்க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் - திருமாவளவன் நம்பிக்கை

    சென்னை அசோக் நகரில் உள்ள வி.சி.க அலுவலகத்தில் செய்தியளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், புதிய தலைமுறை தொலைக்காட்சி அரசு கேபிளில் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “ஊடகங்களுக்கான ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதில் யாருக்கும் உடன்பாடு இல்லை. புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நீதி கிடைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்” என்று கூறினார்.



  • Oct 07, 2025 13:00 IST

    விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை - திருமாவளவன் விளக்கம்

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் படங்களுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள வி.சி/க அலுவலகத்தில் எம்.பி திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்: “விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை. அவரை கைது செய்ய வேண்டும் எனவ்ம் நாங்கல் வலியுறுத்தவில்லை. நடந்த சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்றுதான் விமர்சனம் செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் இந்த விவகாரத்தில் திருப்தி அளிக்கிறது. பா.ஜ.க அதன் கூட்டணி கட்சிகள்தான் இதில் அரசியல் செய்கின்றன” என்று கூறினார்.



  • Oct 07, 2025 12:26 IST

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர் படங்களுக்கு திருமாவளவன் அஞ்சலி

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் படங்களுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள வி.சி.க அலுவலகத்தில் எம்.பி திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.



  • Oct 07, 2025 12:22 IST

    டெங்கு காய்ச்சலால் இந்த ஆண்டு இதுவரை 8 பேர் உயிரிழப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  “தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இன்று வரை 15,796 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் ஒரு இறப்புக்கூட இருக்கக்கூடாது என்பதுதான் அரசியன் முதன்மையான நோக்கம் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று வேண்டுகோள்விடுத்துள்ளார்.



  • Oct 07, 2025 12:00 IST

    கரூர் துயரம் - சிபிஐ விசாரணை கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஏற்பு

    கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பாஜக நிர்வாகி உமா தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. முறையான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், இந்த மனு அக்டோபர் 10 அன்று விசாரணைக்கு வர உள்ளது.



  • Oct 07, 2025 11:47 IST

    கடவுள் சொல்லிதான் நீதிபதியை தாக்க முயன்றேன்

    "கடவுள் சொல்லிதான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்றேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மன்னிப்புக் கேட்க மாட்டேன்"

    ராகேஷ் கிஷோர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்ற வழக்கறிஞர்



  • Oct 07, 2025 11:45 IST

    அஜித்குமாருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

    "நடிகர் அஜித் குமாரின் 'Ajith Kumar Racing Team' அணி, 2025ஆம் ஆண்டுக்கான Creventic 24H European Endurance Championship தொடரில் 3ஆம் இடம் பிடித்து, நம் தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்த வெற்றியின் மூலம், நம் பாரத நாடு மட்டுமன்றி, நம் தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித் குமார்; மேன்மேலும் அவரது அணி பல வெற்றிகளை குவிக்க மனமார்ந்த வாழ்த்துகள்"

    - நயினார் நாகேந்திரன் x பதிவு



  • Oct 07, 2025 11:25 IST

    கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்டோருடன் விஜய் ஆறுதல்!


    கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் வீடியோ காலில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசி ஆறுதல் கூறினார். உயிரிழந்தவரின் தங்கை ஒருவரிடம், "அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன்" என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.



  • Oct 07, 2025 11:22 IST

    உற்பத்தித் துறையில் லீடர் ஆக தமிழ்நாடு: ஸ்டாலின்

    "உற்பத்தித் துறையில் லீடர் ஆக தமிழ்நாடு மாறி வருகிறது. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாக உள்ளது. அனைத்து வகையான தொழில்களிலும் தடம் பதித்து வருகிறது தமிழ்நாடு. இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்"

    சென்னையில் விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரை



  • Oct 07, 2025 11:17 IST

    பழனிசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு நடத்தினர்.

    பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைஜெயந்த் பாண்டா, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.



  • Oct 07, 2025 11:16 IST

    முதல்வர் தொடங்கி வைத்த விண்வெளி கருத்தரங்கு

    AeroDefCon’25 என்ற கண்காட்சி, கருத்தரங்கைச் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    விண்வெளி, பாதுகாப்புத் தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாடு அக். 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலக அளவில் வான்வழி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப வணிக நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.



  • Oct 07, 2025 11:15 IST

    இந்தியர்களின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி - பிரதமர் மோடி

    "2001ஆம் ஆண்டு இதே நாளில், நான் முதல் முறையாக குஜராத் முதல்வராகப் பதவியேற்றேன். என் சக இந்தியர்களின் தொடர்ச்சியான ஆசீர்வாதங்களுக்கு நன்றி"

    - பிரதமர் நரேந்திர மோடி X பதிவு



  • Oct 07, 2025 11:06 IST

    ராமதாஸ், வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கமல்ஹாசன்

    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.



  • Oct 07, 2025 11:05 IST

    பிரேமலதா தாயார் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணியின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Oct 07, 2025 10:33 IST

    குரூப் 5A தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

    குரூப் 5A தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 5
    எழுத்துத் தேர்வு: 21.12.2025
    காலியிடங்களின் எண்ணிக்கை: 32



  • Oct 07, 2025 10:31 IST

    பிரேமலதாவின் தாயார் மரணம்

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி(83) உடல்நலக்குறைவால் காலமானார்



  • Oct 07, 2025 10:28 IST

    இந்தாண்டின் முதல் சூப்பர் மூன்

    இந்தாண்டின் முதல் சூப்பர் மூன் இன்று (அக்.07) இரவு வானில் தென்படவுள்ளது. இந்த பெளர்ணமியின்கபோது சந்திரன் வழக்கத்தை விட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தெரியும். நேற்று வானில் தென்பட்ட நிலையில் இன்றும் அதனை காணலாம்.



  • Oct 07, 2025 10:23 IST

    நயினார் நாகேந்திரனின் பரப்புரைக்கு அனுமதி

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்புரைப் பயணத்திற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்தனர். 'தமிழகம் தலைகீழாகக் குமிழியன் பயணம்' என்ற பெயரில் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொள்கிறார். 

    அக்.12-ம் தேதி நயினார் நாகேந்திரனின் பரப்புரையை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா மதுரையில் தொடங்கி வைக்கிறார்

    பரப்புரைப் பயணத்திற்கு நிபந்தனைகள்:

    பரப்புரைப் பயணத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர் கொடுக்க வேண்டும்; கர்ப்பிணிகள், குழந்தைகள் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என பாஜகவுக்கு காவல்துறை நிபந்தனைகள் விதித்துள்ளனர். 



  • Oct 07, 2025 09:52 IST

    மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி-உதயநிதி ஆய்வு

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டை வி.பி. இராமன் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை நேற்று நள்ளிரவு அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.



  • Oct 07, 2025 09:32 IST

    தங்கம் புதிய உச்சம்: சவரன் ரூ. 90,000 நெருங்கியது

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கும், சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 600-க்கும் தங்கம் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வெள்ளி ஒரு கிராம் ரூ.165-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.2 அதிகரித்து கிராம் ரூ.167-க்கும், ரூ.2,000 அதிகரித்து கிலோ ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.



  • Oct 07, 2025 09:27 IST

    ராமதாஸிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த ரஜினி

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸிடம் தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் அங்கிருந்து தொலைபேசி மூலம் ராமதாஸ் உடல் நலம் குறித்து விசாரித்தார்.



  • Oct 07, 2025 09:25 IST

    "மக்கள் ஆதரவுடன் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்"

    அ.தி.மு.க, த.வெ.க வரிசையில் தேர்தலை மனதில் வைத்து பாஜாகவும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. எத்தனை பேர் களம் இறங்கினாலும்,  மக்கள் ஆதரவுடன் தி.மு.க கூட்டணியே வெல்லும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



  • Oct 07, 2025 09:04 IST

    சிம்பு-வெற்றிமாறன் படத்திற்கு 'அரசன்' டைட்டில்

    வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்திற்கு "அரசன்" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ள இப்படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. 



  • Oct 07, 2025 08:57 IST

    மதுரை-குருவாயூர் ரயில் கொல்லத்துடன் நிறுத்தம்

    திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் மற்றும் பெங்களூரு ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்துவரும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை-குருவாயூர் ரயில் 11-ந் தேதி கொல்லம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் 12-ந் தேதி கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு வழக்கமான நேரத்தில் மதுரை புறப்படும். 



  • Oct 07, 2025 08:56 IST

    காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை உயிரிழப்பு

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி பகுதியில் காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கடந்த 10 நாட்களாக யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தது.



  • Oct 07, 2025 08:30 IST

    தொண்டர் பாதுகாப்பு படை அமைக்க விஜய் முடிவு

    கரூர் சம்பவத்திற்கு பிறகு, த.வெ.க. தலைவர் விஜய் கட்சியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார். பெரும் கூட்டங்களை கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் மற்ற கட்சிகளை போல் தொண்டர் படையை உருவாக்க அவர் யோசித்து வருகிறார். திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளில் ஏற்கனவே தொண்டர் படை இருக்கிறது. இந்த தொண்டர் படையின் பணி என்பது, எங்கெல்லாம் கட்சி சார்பில் கூட்டமோ, பேரணியோ நடக்கிறதோ அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தான். அந்த வரிசையில், தவெகவும் தற்போது தொண்டர் படை அமைத்து, தொண்டர் படையில் இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.



  • Oct 07, 2025 08:26 IST

    பீகார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி

    அக்டோபர் 9ம் தேதி வேட்பாளர்களை அறிவிக்க போவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகாருக்கு இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும், நவ.14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் கூறி உள்ளது.



  • Oct 07, 2025 08:25 IST

    வனத்துறையினரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

    கோவை ஆனைக்கட்டி வனத்துறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் லஞ்ச பெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. பணியில் உள்ள வனக்காப்பாளர் செல்வகுமாரிடமும் விசாரணை நடைபெறுகிறது.



  • Oct 07, 2025 08:23 IST

    தி.மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்வார்கள். புரட்டாசி மாத பவுர்ணமி நேற்று பகல் 11.49 மணிக்கு தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். நேற்று பகலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர்.



  • Oct 07, 2025 08:22 IST

    பாம்பனில் மீனவர்கள் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்

    டூம்ஸ்டே மீன் பிடிபட்டால் உலகில் எங்காவது பேரழிவு ஏற்படக்கூடும் என்பது ஜப்பானிய மக்களின் ஒருவித நம்பிக்கை ஆகும். ஆனால் இது மூடநம்பிக்கை என்ற கருத்தும் உள்ளது. இந்தநிலையில் பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கி இருக்கும் டூம்ஸ்டே மீன் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகி உள்ளது. ஆனால் இந்த அரிய வகை மீன் மிக குறைந்த விலைக்கே விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.



  • Oct 07, 2025 08:21 IST

    திருச்செந்தூரில் நேற்று திடீரென உள்வாங்கிய கடல்

    பவுர்ணமி தினமான நேற்று திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 60 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும், ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர். கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.



  • Oct 07, 2025 07:28 IST

    காலை 10 மணிக்குள் 12 மாவட்டங்களில் மழை வாய்ப்பு

    தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், நாகை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Oct 07, 2025 07:27 IST

    டிரக்குகளுக்கு 25% வரி விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு

    டிரக்குகளுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். டிரக்குகளுக்கு விதிக்கப்பட்ட 25% வரி நவம்பர் 1ம் தேதி அமலுக்கு வரும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



  • Oct 07, 2025 07:27 IST

    நாகை-இலங்கை இம்மாதம் பயணிகள் கப்பல் சேவை

    தீபாவளியை ஒட்டி நாகை - இலங்கை இடையே இம்மாதம் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இருநாட்டு பயணிகளின் கோரிக்கையை ஏற்று இம்மாதம் முழுவதும் கப்பல் இயக்கப்பட உள்ளது.



  • Oct 07, 2025 07:25 IST

    தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை (புதன்கிழமை) கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

     



  • Oct 07, 2025 07:24 IST

    8 மாதங்களில் பி.எஸ்.என்.எல். 5ஜி - மத்திய அமைச்சர்

    அடுத்த 8 மாதங்களில் அனைத்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து 4ஜி செல்போன் கோபுரங்களும் 5ஜியாக மாற்றப்பட உள்ளதாக மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பி.எஸ்.என்.எல்.ன் 4ஜி செல்போன் கோபுரங்கள் அனைத்தும் 5ஜியாக மாற்றப்படும். இதன்மூலம் அதிவேக இணையத்தை இன்னும் சிறப்பாக அனுபவிக்க முடியும் என்றார்.



  • Oct 07, 2025 07:22 IST

    இ.பி.எஸ் உடன் பா.ஜ.க பொறுப்பாளர்கள் இன்று சந்திப்பு

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று (07-10-2025) பா.ஜனதா மேலிட பொறுப்பாளர்கள் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.வுடன் கலந்து பேசவும், கூட்டு பிரசாரத்தை முன்னெடுக்கவும், பா.ஜனதா தேர்தல் வியூகத்தை வடிவமைக்கவும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து பா.ஜனதா உத்தரவிட்டுள்ளது.



  • Oct 07, 2025 07:21 IST

    தீபாவளி பண்டிகை - 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    தீபாவளி பண்டிகையொட்டி, தமிழகம் முழுதும் 4 நாட்களுக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அக்., 16ம் முதல் 19ம் தேதி வரை, சென்னையில் இருந்து தினமும் செல்லும் 2,092 பேருந்துகளுடன், 4 நாட்களுக்கும் சேர்த்து 5,900 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,268 பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட நாட்களுக்கு, 6,110 சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: