Chennai News Updates: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Tamilnadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamilnadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu rains today

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.93-க்கும், டீசல் 92.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்: தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் செப் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Sep 26, 2025 07:03 IST

    தமிழகத்தில் அக்.1 வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (செப்.26) முதல் அக்.1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (செப்.27-ம் தேதி) கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (செப்.26-ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Sep 25, 2025 22:03 IST

    ரஷ்ய துணை பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு

    டெல்லியில் நடைபெற்ற உணவு கண்காட்சியில் ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி பட்ருஷேவை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். ரஷ்யாவின் துணைப் பிரதமர் டிமிட்ரி பட்ருஷேவை சந்தித்ததில் மகிழ்ச்சி, விவசாயம், உரங்கள், உணவு பதப்படுத்துதலில் ரஷ்ய - இந்திய ஒத்துழைப்பை வலுபடுத்த வழிகள் பற்றி விவாதித்தோம் என மோடி தெரிவித்தார்.



  • Advertisment
    Advertisements
  • Sep 25, 2025 21:47 IST

    விரல்களில் சிக்கிய மோதிரம் : எடுக்க முடியாமல் சிரமமடைந்த நபர் - பத்திரமாக மீட்ட கோவை தீயணைப்பு வீரர்கள்..!

    கோயம்புத்தூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில்  சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபரின் கைவிரலில் மோதிரம் ஒன்று சிக்கிக் கொண்டு விரல் வீங்கியும் எடுக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் உதவி கோரினார். உடனடியாக  நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நிலையத்தில் மோதிரம் வெட்டும் உபகரணங்களை கொண்டு முயற்சி செய்து பார்த்ததில் மெட்டல் மிகக் கடினமானதாக இருந்ததால், வேறொரு முறை பயன்படுத்தப்பட்டு நரம்பு போன்ற நூல் சுற்றி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மெது மெதுவாக மோதிரத்தை எடுத்து விரலை பத்திரமாக மீட்டனர். இவ்வகையான மோதிரம் கழிவு மெட்டலால் உறுதியாகவும் விலை குறைவாகவும் கிடைப்பதால் இது போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.



  • Sep 25, 2025 21:37 IST

    தெலங்கானாவில் காலை சிற்றுண்டி திட்டம்

    கல்வி, ஊட்டச்சத்து, விளையாட்டில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தமிழக அரசு திட்டங்களை நாடே பின்பற்றும் நிலை உருவாகி உள்ளது. தெலங்கானாவில் 2026-ல் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும். மதிய உணவு திட்டத்தை முதலில் செயல்படுத்தியது தமிழகம் தான். தமிழகத்தை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் மதிய உணவுத் திட்டம் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி  தெரிவித்துள்ளார்.



  • Sep 25, 2025 21:04 IST

    தெலங்கானாவிலும் காலை உணவு திட்டம்

    தெலங்கானாவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.



  • Sep 25, 2025 20:40 IST

    செங்கோட்டையன்- பன்னீர்செல்வம் சந்திப்பு

    சென்னைகோட்டூர்புரத்தில்முன்னாள்முதல்வர்பன்னீர்செல்வத்தைஅதிமுகமுன்னாள்அமைச்சர்சென்கோட்டையன்சந்தித்தார். அதிமுகவைஒன்றிணைக்கும்முயற்சியில்ஈடுபட்டுள்ளசெங்கோட்டையன்பன்னீர்செல்வத்தைசந்தித்தார்.

     



  • Sep 25, 2025 19:26 IST

    அன்புமணியின் கூட்டம் பஃபூன் கூட்டம் - ராமதாஸ் தாக்கு 

    ``பா.ம.க-வில் இருதரப்பு என்றெல்லாம் ஒன்றுமில்லை. அன்புமணியின் கூட்டம் பஃபூன் கூட்டமே. இந்த இருதரப்புப் பிரச்னை தேர்தல்வரையில் செல்லாது. அதற்குள்ளாக சரிசெய்யப்படும். அவர்கள் நடத்துவது தெருக்கூத்து. அதில் பஃபூன் உள்பட ஒவ்வொரு வேடமும் வரும். காத்திருந்து பாருங்கள். கூட்டணி தொடர்பாக நான்தான் முடிவெடுப்பேன்’’ என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 



  • Sep 25, 2025 19:09 IST

    இட்லி கடை பட ப்ரமோஷன் - பேனர் வைத்தவர் மீது வழக்கு

    மதுரையில் இட்லி கடை பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஆபத்தான முறையில் பேனர் வைத்ததாக வழக்கு தொடரப்பட்டது. கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இட்லி கடை பட ப்ரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்காக தனுஷ் ரசிகர்கள், நற்பணி மன்றம் சார்பில் ஆபத்தான முறையில் பேனர் வைத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. பேனர் வைத்த புகாரில் தனுஷ் நண்பர்கள் தலைமை நற்பணி மன்ற நிர்வாகி மாரிமுத்து மீது வழக்கு தொடரப்பட்டது.



  • Sep 25, 2025 18:18 IST

    பா.ஜ.க ஆட்சியில் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் - ராஜஸ்தானில் மோடி பேச்சு 

    ராஜஸ்தானில் அரசுத்துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 15,000-க்கும் மேற்பட்டோருக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். இதன்பின்னர் அவர் பேசுகையில், "பா.ஜ.க ஆட்சியில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மின்சாரத்துறையில் இந்தியாவின் வலிமையில் புதிய அத்தியாயம் ராஜஸ்தானில் இருந்து  எழுதப்படுகிறது." என்று கூறினார். 

    ராஜஸ்தானில் ரூ.90,000 கோடி மதிப்புள்ள மின்சாரத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



  • Sep 25, 2025 17:49 IST

    ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேஷின் உடல் தகனம்

     உடல்நலக்குறைவால் காலமான ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேஷின் உடல், பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதிகாரிகள், குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்திய பிறகு, தகனம் செய்யப்பட உள்ளது



  • Sep 25, 2025 16:35 IST

    சென்னையில் தொடங்கியது ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி

     சென்னை நேரு உள்ளரங்கில் நடைபெறும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்பு



  • Sep 25, 2025 15:43 IST

    10 நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீடு ஒதுக்கப்படும் - ஒன்றிய அரசு

    டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களுக்குள் அரசு இல்லம் ஒதுக்கீடு செய்யப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி அரசியலில் அல்லாதவர்களுக்கும் இந்த பிரச்னை அடிக்கடி நடப்பதாகவும், இது குறித்து தகுந்த உத்தரவை பிறப்பிப்போம் எனவும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்த வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்தார்.



  • Sep 25, 2025 15:35 IST

    இலங்கை கேபிள் கார் விபத்தில் ஒரு இந்தியர் உட்பட புத்த துறவிகள் 7 பேர் உயிரிழப்பு

    இலங்கை கேபிள் கார் விபத்தில் ஒரு இந்தியர் உட்பட புத்த துறவிகள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து 125 கி.மீ. தொலைவில் உள்ள நிகவெரட்டி புத்த மடாலயத்தில் கேபிள் கார் விபத்துக்குள்ளானது. காயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 7 பேரில் ஒரு இந்தியர், ஒரு ரஷ்யர், ஒரு ருமேனிய நாட்டவர் கேபிள் காரில் பயணித்ததாக போலீஸ் தகவல் தெரிவித்தது.



  • Sep 25, 2025 15:16 IST

    18 மாணவிகள் புகார்: சாமியார் பார்த்தசாரதி மீது வழக்குப்பதிவு

    18 மாணவிகள் அளித்த பாலியல் புகாரின்பேரில் டெல்லியில் உள்ள சாரதா கல்வி நிறுவன மேலாளரான சாமியார் பார்த்தசாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் வாட்ஸ்ஆப்பில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாகவும் சாமியார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



  • Sep 25, 2025 15:07 IST

    தசரா பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    தசரா பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து திருச்செந்தூர், குலசேரகப்பட்டினத்துக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. கோவை, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்துக்கு அக்.3 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கம் செய்யப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்தது.



  • Sep 25, 2025 14:39 IST

    நாளை மறுநாள் வேளாண் வணிகத் திருவிழா

    சென்னை நந்தம்பாக்கத்தில் வேளாண் வணிகத் திருவிழாவை நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். சென்னையில் செப்.27, 28 தேதிகளில் வேளாண் வணிகத் திருவிழா நடைபெறுகிறது.



  • Sep 25, 2025 14:39 IST

    தபால் வாக்குகளின் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகுதான் அடுத்த சுற்று வாக்குகளை எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையம்

    20 சுற்றுகள் இருந்தால் 18-வது சுற்று முடிந்த உடன் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்ட பிறகுதான் அடுத்த சுற்று வாக்குகளை எண்ண வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.



  • Sep 25, 2025 14:39 IST

    ராமதாஸ் பேச்சை பொருட்படுத்தமாட்டோம்: திலகபாமா பேட்டி

    ராமதாஸ் பேச்சை பொருட்படுத்தப்போவதில்லை என பாமக பொருளாளர் திலகபாமா பேட்டி அளித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணிதான் என்று மக்கள் நம்ப தயாராகி விட்டனர். ராமதாஸ் சொல்வதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.



  • Sep 25, 2025 14:38 IST

    தனியுரிமை பாதுகாக்க கோரி நடிகர்கள் தொடர்ந்த வழக்கில் உரிய ஆணைகள் பிறப்பிப்பதாக நீதிபதி உறுதி

    தனியுரிமை பாதுகாக்க கோரி நடிகர்கள் தொடர்ந்த வழக்கில் உரிய ஆணைகள் பிறப்பிப்பதாக நீதிபதி உறுதி அளித்துள்ளார்.தனியுரிமை பாதுகாக்க கோரி ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், நாகார்ஜுனா சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அனுமதியின்றி சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



  • Sep 25, 2025 14:38 IST

    விழுப்புரம் அருகே குளவி கொட்டி மூதாட்டி உயிரிழப்பு

    செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் குளவி கொட்டி மூதாட்டி சின்னகுழந்தை (75) உயிரிழந்தார். குளவி கொட்டி காயமடைந்த சின்னகுழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



  • Sep 25, 2025 14:37 IST

    தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டாவை நியமித்து ஜே.பி.நட்டா அறிவிப்பு

    தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டாவை நியமித்து ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டார். பைஜயந்த் பாண்டா பாஜக தேசிய துணைத் தலைவராகவும் எம்.பி.யாகவும் உள்ளார்.பீகார் சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதானை நியமித்து பாஜக அறிவிப்பு வெளியிட்டது.



  • Sep 25, 2025 14:35 IST

    "வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் இந்தியாவுக்குப் பிடிக்கவில்லை!" -முகமது யூனுஸ் குற்றச்சாட்டு

    “இந்தியாவுடன் தற்போது எங்களுக்கு பிரச்னைகள் உள்ளன. வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பிரச்னைகளை உருவாக்கிய ஷேக் ஹசீனா இந்தியாவில் உள்ளார். அது இருநாடுகளுக்கும் | இடையில் பதற்றத்தை உருவாக்குகிறது" என்று வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். 



  • Sep 25, 2025 13:54 IST

    ‘என் சாதனையை முறியடித்ததற்கு வாழ்த்துகள்’- தேசிய விருது வென்ற 4 வயது ட்ரீஷா தோசருக்கு கமல்ஹாசன் வாழ்த்து

    சிறந்த குழந்தை நட்சத்திரம் பிரிவில் Naal 2 என்ற மராத்திய படத்துக்காக தேசிய விருது வென்ற 4 வய்து குழந்தை ட்ரீஷா தோசருக்கு நடிகரும் ராஜ்ய சபா எம்.பி-யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். “நான் என் 6 வயதில் என் முதல் விருதை வென்றேன்; அந்த சாதனையை முறியடித்ததற்காக ட்ரீஷா தோசருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்; நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம்” என்று கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.



  • Sep 25, 2025 13:49 IST

    திருப்பதியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு மற்றும் அமைச்சர்கள் சாமி தரிசனம். தொடர்ந்து திருமலையில் ரூ.102 கோடியில் கட்டப்பட்ட வெங்கடாத்ரி நிலையம், பக்தர்கள் ஓய்வறையை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுடன் இணைந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.



  • Sep 25, 2025 13:31 IST

    வி.சி.க-வை யாரும் அடிமைப்படுத்த முடியாது - திருமாவளவன் 

    வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி, “வி.சி.க-வை யாரும் அடிமைப்படுத்த முடியாது. எடுத்துக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதால் தி.மு.க கூட்டணியில் நீடிக்கிறோம்.  2026-ல் எத்தனை பேரை இறக்கி விட்டாலும் அனைவரையும் வீழ்த்தி தி.மு.க கூட்டணி வெல்ல்கும்” என்று கூறினார்.



  • Sep 25, 2025 13:24 IST

    பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    உடல்நலக்குறைவால் மறைந்த எரிசக்தி துறையின் அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.



  • Sep 25, 2025 12:55 IST

    ‘மக்கள் பிரதிநிதியை பிச்சைக்காரன் என இழிவு படுத்தியுள்ளார் இ.பி.எஸ்’ - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: “மக்கள் பிரதிநிதியை பிச்சைக்காரன் என எடப்பாடி பழனிசாமி இழிவு படுத்தியுள்ளார். இது தனிநபரைப் பழிக்கிற செயல் மட்டுமல்ல; விளிம்புநிஅலி மக்களையும் இழிவுபடுத்துவதாகும்” என்று தெரிவித்துள்ளார்.



  • Sep 25, 2025 12:46 IST

    பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே. மணியை மாற்றக் கோரிக்கை; பேரவை செயலரிடம்  வழக்கறிஞர் பாலு மனு

    பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே. மணியை மாற்றக் கோரி பா.ம.க வழக்கறிஞர் பாலு உள்பட அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்தனர். ஜி.கே. மணிக்கு பதிலாக அப்பதவிக்கு தருமபுரி எம்.எல். வெங்கடேஸ்வரனை தேர்வு செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். 



  • Sep 25, 2025 12:42 IST

    ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் 30-ம் தேதி தீர்ப்பு

    இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து கோரிய வழக்கில் வரும் அக்டோபர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.



  • Sep 25, 2025 12:24 IST

    இந்தியாவிலேயே முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் - ஸ்டாலின் பாராட்டு

    தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களின் பாக் வளைகுடாவில் அமையும் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. முன்னோடி முயற்சியை பாராட்டும் தீர்மானம் அபுதாபி மாநாட்டுக்கு முன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இம்முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று கூறினார்.



  • Sep 25, 2025 11:52 IST

    சுயசார்பு இந்தியா: பிரதமர் மோடி அழைப்பு

    இந்தியா சுயசார்புடையதாக மாற வேண்டும்; ஒவ்வொரு பொருளையும் இந்தியாவில் தயாரிக்க வேண்டும். இடையூறுகள் நம்மை திசைதிருப்பாது; அதில் புதிய திசைகளையும் புதிய வாய்ப்புகளையும் காண்கிறோம். உலகில் இடையூறுகள், நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி சுயசார்புடையதாக உள்ளது. நமது உறுதிப்பாடு, நமது மந்திரம் - 'சுயசார்பு இந்தியா'

    நொய்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி 



  • Sep 25, 2025 11:48 IST

    கே.கே.சி.பாலுவிற்கு அறிவிக்கப்பட்ட விருதை திரும்பப் பெற வேண்டும்- வன்னி அரசு

    வள்ளி கும்மியை முன்னெடுத்து வரும் கே.கே.சி.பாலுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும். சாதியத்தை பரப்பிவரும் வள்ளிகும்மியை தடை செய்ய வேண்டும்.  விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு



  • Sep 25, 2025 11:37 IST

    தெருநாய்களை பராமரிக்க இரண்டு புதிய மையங்கள்

    சென்னையில் தெருநாய்களை பராமரிப்பதற்காக, ரூ.7.67 கோடி மதிப்பில் இரண்டு புதிய மையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வேளச்சேரி மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளில் அமையவுள்ள இந்த மையங்களில், ரேபிஸ் பாதிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு குணம் கொண்ட சுமார் 500 நாய்களைப் பிடித்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 



  • Sep 25, 2025 11:35 IST

    கல்லூரி மாணவர்கள் மோதல்

    சென்னையில் உள்ள இரண்டு வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தேனாம்பேட்டை மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் மோதிக்கொண்டனர். இந்த மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக எட்டு மாணவர்கள் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • Sep 25, 2025 11:32 IST

    சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்றன. 



  • Sep 25, 2025 11:11 IST

    தலைமைச் செயலரை சந்தித்த ராமதாஸ் ஆதரவாளர்கள்

    ராமதாஸுக்கு 3 காவலர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருப்பதால், காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் தலைமைச் செயலரை சந்தித்துள்ளனர்.

    பாமக எம்எல்ஏ அருண் மற்றும் சிலர் இந்த கோரிக்கையை முன்வைத்து மனு அளித்துள்ளனர். அன்புமணி ஆதரவாளர்களால் ராமதாஸுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.



  • Sep 25, 2025 11:11 IST

    மனிதாபிமானத்தை துறந்தது மோடி அரசு: சோனியா காந்தி

    பாலஸ்தீன விவகாரத்தில் மோடி அரசு மனிதாபிமானத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடிக்கத் தவறிவிட்டதாகவும், ஆழ்ந்த மௌனம் காப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். இந்தியாவின் அரசியல் மதிப்பீடுகள் மற்றும் நலன்களை விட, மோடி மற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் தனிப்பட்ட நட்புக்கு மட்டுமே அரசு முன்னுரிமை அளிப்பதாக சோனியா காந்தி கண்டனம் தெரிவித்தார்.

    அரசின் நடவடிக்கைகள் ஒருதலைப்பட்சமானதாகவும், சர்வதேச சட்டங்களுக்கு முரணானதாகவும் இருப்பதாகவும் அவர் கூறினார்.



  • Sep 25, 2025 11:03 IST

    பியூலா வெங்கடேசன் மறைவு: விஜயபாஸ்கர் இரங்கல்

    கொரோனா காலத்தில் நான் அமைச்சராக இருந்தபோது என்னுடன் இணைந்து திறம்பட பணியாற்றிய பியூலா வெங்கடேசன் அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர். தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பியூலா வெங்கடேசன் உடல்நலக்குறைவால் மறைந்தது அதிர்ச்சி மற்றும் வேதனையை தருகிறது. அவரது மறைவால் வாடும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இரங்கல்

    விஜயபாஸ்கர் இரங்கல்



  • Sep 25, 2025 10:53 IST

    சென்னை விமானம் பெங்களூரு திரும்பியது ஏன்?

    டெல்லியில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், நேற்று இரவு அரை மணி நேரம் சென்னை வானில் வட்டமடித்தது. விமானத்தை தரையிறக்க முடியாத காரணத்தால், அது பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதனால், பெங்களூருவில் தரையிறங்கிய அந்த விமானம், நள்ளிரவு தாமதமாகவே மீண்டும் சென்னை வந்தடைந்தது. இச்சம்பவம் காரணமாக, சென்னையில் இருந்து டெல்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் 4 மணி நேரம் தாமதமானது. இதன் விளைவாக, பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையங்களில் 312 பயணிகள் நள்ளிரவு முழுவதும் தவித்தனர். விமானம் ஏன் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்காததால் பயணிகள் பெரும் குழப்பம் அடைந்தனர்.



  • Sep 25, 2025 10:35 IST

    பிலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

    சென்னை: உடல்நலக் குறைவால் காலமான ஐஏஎஸ் அதிகாரி பிலா வெங்கடேசன் உடலுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.



  • Sep 25, 2025 10:26 IST

    பேரவை செயலரை சந்திக்கும் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்

    அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்களான சிவகங்கை சி.வி. சண்முகம், மேட்டூர் செம்மலை, மற்றும் தருமபுரி வெங்கடேசன் ஆகியோர் இன்று காலை சட்டப்பேரவை செயலர் சீனிவாசனை சந்தித்தனர். முன்னதாக, இவர்கள் மூவரையும் அன்புமணியை ஆதரித்த காரணத்தால் பாமகவிலிருந்து நீக்கி, சேலம் எம்எல்ஏ அருணை பாமக சட்டமன்றக் கொறடாவாக நியமித்திருந்தார் ராமதாஸ்.



  • Sep 25, 2025 09:49 IST

    ராமதாஸுக்கு பாதுகாப்பு அதிகரிக்கக் கோரிக்கை

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பு அதிகரிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் தலைமைச் செயலரை சந்திக்க உள்ளனர். 3 காவலர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் உள்ளனர். அன்புமணி ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பாமக எம்எல்ஏ அருள் மற்றும் ஆதரவாளர்கள் மனு அளிக்க உள்ளனர்.



  • Sep 25, 2025 09:34 IST

    தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் - வானிலை மையம்

    தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் செப் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.



  • Sep 25, 2025 09:25 IST

    2-வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு 

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.84,080க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.10,510-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களாக சவரனுக்கு ரூ.3,000 வரை விலை அதிகரித்து அதிர்ச்சியளித்த நிலையில், 2-வது நாளாக தங்கம் விலை குறைந்து இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.



  • Sep 25, 2025 09:03 IST

    முப்படை தலைமை தளபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு

    இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக செயல்பட்டுவரும் அனில் சவுகானின் பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ராணுவத்தில் 1981-ம் ஆண்டு சேர்ந்த அவர், சிறப்பான பணியாற்றியதுடன், பல்வேறு பொறுப்புகளை நியமித்துள்ளார். பல பதக்கங்களை பெற்றுள்ளார். 2022 செப்.,30 முதல் முப்படை தலைமை தளபதியாக பணியாற்றி வருகிறார். 2026 மே 30 அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது. 



  • Sep 25, 2025 09:00 IST

    காணாமல்போன குழந்தை: கண்டுபிடிக்க வெப்சைட்

    காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க தனி இணையதளம் உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் கண்காணிப்பில் தனி இணையதளம் செயல்படவேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.



  • Sep 25, 2025 08:32 IST

    ”முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க முடியாது”

    அண்ணாமலை என்னை சந்தித்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார். என்.டி.ஏ கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதனால் கூட்டணியில் இருந்து வெளியில் வந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை. 2021-ம் ஆண்டு தேர்தலின்போது, எனக்கு துரோகம் செய்த பழனிசாமி என்னை சந்திக்க எவ்வாறு அவருக்கு தைரியம் வரும், தயக்கம் இருக்கும். அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக அவர் இருக்கும் வரை எங்களுடன் கூட்டணிக்கு வர வாய்ப்பு இல்லை என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.



  • Sep 25, 2025 07:54 IST

    டி.டி.வி-ஐ சந்தித்தேனா?-செங்கோட்டையன் மறுப்பு

    தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே சென்னை சென்றேன், அரசியல் ரீதியாக யாரையும் சந்தித்து நான் பேசவில்லை என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனை நேற்று சந்தித்ததாக வெளியான தகவலுக்கு அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். அ.தி.மு.க ஒருங்கினைய வேண்டும் என பலர் என்னுடன் பேசி வருகிறார்கள். அது சஸ்பென்ஸ் என்றார் செங்கோட்டையன்.

     



  • Sep 25, 2025 07:51 IST

    சென்னை: 53,000 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

    சென்னையில் 53,000 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், நவம்பர் மாத இறுதிக்குள் 1 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்தாண்டு நடந்த கணக்கெடுப்பின் படி சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.



  • Sep 25, 2025 07:29 IST

    பெங்களூரில் தரையிறங்கிய சென்னை விமானம்

    டெல்லியில் இருந்து152 பயணிகளுடன் நேற்று இரவு 8.30 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த விமானம், தரையிறங்காமல் சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு பெங்களூர் சென்று தரையிறங்கியது. அதன் பின்பு அந்த விமானம் நள்ளிரவில் பெங்களூரில் இருந்து சென்னை வந்தது. இதனால் ஏர் இந்தியா விமானங்களில் பயணித்த 312 பயணிகள், பெங்களூர் மற்றும் சென்னை விமான நிலையங்களில் நள்ளிரவில் காத்திருந்து தவிப்புக்குள்ளானார்கள்.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: