Chennai News Updates: மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன் - மோடி

Tamil Nadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
modi

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும்we கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

  • Sep 13, 2025 15:53 IST

    மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன் - பிரதமர் மோடி

    மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன்; இது என் வாக்குறுதி; மணிப்பூரை வன்முறை பாதித்ததில் வருத்தம் என்று மோடி தெரிவித்துள்ளார். விரைவில் மணிப்பூரில் புதிய விடியல் மலரும், அமைதிக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும், மத்திய அரசின் திட்டங்கள் மணிப்பூர் உட்பட அனைத்து மாநில வளர்ச்சிக்கும் புதிய பாதை அமைக்கும் என மோடி தெரிவித்துள்ளார்.



  • Sep 13, 2025 13:02 IST

    மணிப்பூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி

    வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, பிரதமர் மோடி இன்று வருகை தந்தார். வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக மணிப்பூருக்குச் செல்லும் அவர், ₹7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குக்கி மக்கள் அதிகம் வசிக்கும் சுராசந்திரப்பூர் பகுதிக்குச் செல்ல முடிவெடுத்த பிரதமர், இம்பாலில் இருந்து கனமழைக்கு மத்தியில் காரில் பயணம் மேற்கொண்டார்.



  • Advertisment
  • Sep 13, 2025 12:36 IST

    இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற நேபாள கைதிகள் கைது

    நேபாளத்தில் வன்முறையின்போது தப்பித்த 75 நேபாளக் கைதிகள், இந்தியாவிற்குள் நுழைய முயன்றபோது சிக்கியுள்ளனர். இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து நேபாள மற்றும் இந்திய அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 13, 2025 12:04 IST

    தொழில் துறையினரைச் சந்தித்துப் பேசிய இ.பி.எஸ்.

    கோவையில் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு தொழில் துறையினரைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையில், பம்பு செட் மின் மோட்டார் உற்பத்தியாளர்கள், ஜவுளித்துறை மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் உட்பட ஏராளமான தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர். 



  • Advertisment
    Advertisements
  • Sep 13, 2025 12:02 IST

    மக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக: மு.க.ஸ்டாலின்

    திமுக முப்பெரும் விழா குறித்து தொண்டர்களுக்குக் கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின், "கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல. கொள்கையில்லாத கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிடுவது திமுக அல்ல. பழைய மற்றும் புதிய எதிரிகளால் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. 2026 தேர்தல் களத்திற்கு இந்த முப்பெரும் விழா ஒரு முன்னோட்ட அணிவகுப்பு, வரவிருக்கும் தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

     



  • Sep 13, 2025 11:33 IST

    எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

    திமுகவின் முப்பெரும் விழா என்பது நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ளும் திருவிழா. பழைய, புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக எனும் உறுதிமிக்கக் கோட்டையைத் தொட முடியாது.

    திமுக முப்பெரும் விழா தொடர்பாகத் தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய  கடிதம்



  • Sep 13, 2025 11:30 IST

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சென்னை சூளைமேட்டில் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய மாநிலச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.



  • Sep 13, 2025 10:53 IST

    உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா

    உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை நேற்று அறிவித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தை உடனடியாக பலன் தரும் என எதிர்பார்க்க முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார், ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.



  • Sep 13, 2025 09:55 IST

    பேனர் வைத்து இடையூறு: அதிமுக நகரச்செயலாளர் மீது வழக்கு

    பல்லடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார கூட்டத்திற்காக பள்ளி முன்பு கட் அவுட் வைத்தது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர் வைத்ததற்காக அக்கட்சி நகரச்செயலாளர் ராமமூர்த்தி மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.



  • Sep 13, 2025 09:52 IST

    ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைவு

    தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து, ஒரு சவரன் ரூ.81,760-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.10,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போல, வெள்ளியும் கட்டுக்கடங்காமல் உயருகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.143க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 



  • Sep 13, 2025 09:20 IST

    வடகிழக்கு பருவமழை-தடையை மீறி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை

    வடகிழக்கு பருவமழை காலத்தில் தடையை மீறி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. பொது இடங்கள், சாலையோரங்களில் தடையை மீறி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கு பருவமழையை ஒட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.



  • Sep 13, 2025 09:20 IST

    7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Sep 13, 2025 08:38 IST

    நீலாங்கரை வீட்டிலிருந்து விமான நிலையம் புறப்பட்டார் விஜய்

    த.வெ.க தலைவர் விஜய் தனது பிரசார சுற்றுப் பயணத்தை இன்று திருச்சியிலிருந்து தொடங்குகிறார். இதற்காக சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து விமான நிலையம் புறப்பட்டார். அவரது பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டது. இதற்கிடையே, மக்கள் சந்திப்பையொட்டி இலச்சினை (லோகோ) ஒன்றை த.வெ.க. வெளியிட்டு உள்ளது. இந்த லோகோவில், உங்க விஜய் நான் வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது.



  • Sep 13, 2025 08:05 IST

    இரிடியம் மோசடி தொடர்பாக சிபிசிஐடி தீவிர சோதனை

    இரிடியம் மோசடி தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சி.பி.சி.ஐ.டி. சோதனை நடத்தி வருகிறது. 40 இடங்களில் சோதனை நடத்தி 30 பேரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரிடியம் விற்பனை செய்து கோடிக்கணக்கான ரூபாய் ரிசர்வ் வங்கியில் வைத்திருப்பதாக நம்ப வைத்து மோசடி செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் இருந்து வெளியில் எடுப்பதற்கு பணம் தேவை எனக் கூறி முதலீடு செய்ய வைத்து மோசடி நடந்துள்ளது. ஒரு லட்சம் முதலீடு செய்தால் ஒரு கோடி ரூபாய் தருவோம் எனக் கூறி பலரிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது. 



  • Sep 13, 2025 08:04 IST

    பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடிகர் சங்க கூட்டம்

    நடிகர் சங்க சட்டதிட்டத்தின்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவு சில வழக்கு காரணங்களினால் 2022-ல் வெளியானது. அதில் நாசர் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று சங்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களது பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் சங்க கட்டிட பணிகள் முடியும் வரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு இப்போதுள்ள நிர்வாகிகள் தொடரலாம் என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய கட்டிட திறப்பு விழா, சங்க தேர்தல் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் என பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.



  • Sep 13, 2025 07:41 IST

    சென்னை: பணம் வைத்து சீட்டு விளையாடிய 12 பேர் கைது

    சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் பணம் வைத்து சீட்டுக்கட்டு விளையாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களில் நாகமுத்து (40) என்பவர் மெரினா கடற்கரையில் பிரபலமான சுந்தரி அக்கா கடையின் உரிமையாளரின் மகன் என்பது தெரியவந்தது. மேலும், இவர் வாட்ஸப் மூலம் பணம் வைத்து சூதாடும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.



  • Sep 13, 2025 07:21 IST

    விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் லாரி புகுந்து 8 பேர் பலி

    கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று இரவு லாரி ஒன்று விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் புகுந்தது. ஒரு பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர்மீடியனில் பாய்ந்து, விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். 25-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.



  • Sep 13, 2025 07:19 IST

    இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் இன்று பாராட்டு விழா

    இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா, தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 5.30 மணிக்கு விழா நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடக்கிறது. இதில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.



  • Sep 13, 2025 07:17 IST

    விஜய்யின் பிரசார பயணம் திருச்சியில் இன்று தொடக்கம்

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசார பயணத்தை திருச்சியில் இருந்து விஜய் தொடங்குகிறார். அவரது பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டது. இதற்கிடையே, மக்கள் சந்திப்பையொட்டி இலச்சினை (லோகோ) ஒன்றை த.வெ.க. வெளியிட்டு உள்ளது. இந்த லோகோவில், உங்க விஜய் நான் வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது.



  • Sep 13, 2025 07:17 IST

    கலவரத்துக்கு பின் இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

    வடகிழக்கு மாநிலங்களுல் ஒன்றான மணிப்பூரில் வசிக்கும் குக்கி-மெய்தி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடந்த 2023-ம் ஆண்டு இனக்கலவரமாக வெடித்தது. அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 260-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் மோடி எந்த கருத்தும் கூறவில்லை. மணிப்பூருக்கும் செல்லவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் மோடி, இன்று மணிப்பூர் செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு செல்கிறார். அங்கு அவர் ரூ.7,300 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.1,200 கோடி மதிப்புள்ள திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசுகிறார்.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: