Chennai News Updates: தெருநாய்களுக்கு உணவு அளிக்க தனி இடம்- மாநகராட்சிக்கு புளூக்ராஸ் அமைப்பு கடிதம்

Tamilnadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamilnadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
stray dogs x

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.93-க்கும், டீசல் 92.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
  • Sep 22, 2025 20:22 IST

    இந்தியா - மொராக்கோ இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்

    இந்தியா - மொரோக்கோ இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான விரிவான செயல்திட்டம் குறித்து ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 22, 2025 20:22 IST

    கழிவறையை தேடி காக்பிட்டிற்குள் புகுந்த பயணி

    பெங்களூருவில் இருந்து வாரணாசி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி பயணி ஒருவர் கழிவறையை தேடி காக்பிட்டுக்குள் புகுந்ததால், சக பயணிகள் அச்சம் அடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Advertisment
    Advertisements
  • Sep 22, 2025 20:16 IST

    சென்னையில் ரூ.1.33 கோடியிலான சிகரெட்டுகள் பறிமுதல்

    யு.ஏ.இலிருந்து சரக்கு விமானத்தில் சென்னைக்கு கடத்தி  வரப்பட்ட 4.31 லட்சம் மத்திய அரசு தடை செய்த இ-சிகரெட்டுகளும் எடுத்துவரப்பட்ட நிலையில் சுங்கத்துறையினர் வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Sep 22, 2025 20:02 IST

    கிரிக்கெட்-க்கு இணையான உற்சாகம்: சாய்னா நேவால் பாராட்டு

    ஈஷா கிராமோத்சவ இறுதிப்போட்டியில் 15,000க்கும் மேற்பட்ட மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டதை, என்னால் நம்ம முடியவில்லை. பல தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளோம். இது போன்ற உற்சாகமான சூழல் கிரிக்கெட்டில் நடக்கும் அடுத்து இங்கு தான் நடக்கிறது என சாய்னா நேவால் பாராட்டு தெரிவித்துள்ளார்,



  • Sep 22, 2025 19:59 IST

    பாக். வீரரை விட சிறப்பாக செயல்பட்டேன் என்பதை ஏற்கமாட்டேன்: சச்சின் யாதவ்

    டோக்கியோ உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் சச்சின் யாதவ் நான்காவது இடத்தைப் பிடித்தார். இது குறித்து பேசிய அவர், எனது செயல்திறன் குறித்து நான் நன்றாக உணர்கிறேன், நான் நீரஜை விட சிறப்பாக செயல்பட்டதாகத் தெரியவில்லை நீரஜ் சோப்ரா, பாக். வீரர் அர்ஷத் நதீமை விட சிறப்பாக செயல்பட்டேன் என்பதை ஏற்கமாட்டேன் என சச்சின் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.



  • Sep 22, 2025 19:56 IST

    தெருநாய்களுக்கு உணவு அளிக்க தனி இடம்- மாநகராட்சிக்கு புளூக்ராஸ் அமைப்பு கடிதம்

    தமிழ்நாட்டில் தெரு நாய்களுக்கு உணவு அளிப்போர் மீது தாக்குதல் மற்றும் தொந்தரவுகளை தடுக்க கோரி டி.ஜி.பிக்கு புளூக்ராஸ் அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர். முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுப்பார்கள். இதற்காக தனியாக சுற்றறிக்கை தேவையில்லை என்ற, டி.ஜி.பி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தெரு நாய்களுக்கு உணவு அளிக்க தனி இடம் அமைத்து தர கோரி மாநகராட்சிக்கு ப்ளூ க்ராஸ் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. 



  • Sep 22, 2025 18:56 IST

    டெல்லி புறப்பட்ட நயினார் நாகேந்திரன்: அமித்ஷா, நட்டாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்

    அதிமுக பொதுச்செயலாளா எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், டெல்லி சென்றுள்ளார். அக்டோபர் மாதம் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்க உள்ள நிலையில், அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.



  • Sep 22, 2025 18:35 IST

    நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று  சந்தித்த நிலையில் இன்று நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்க உள்ளதாக தகவல்.



  • Sep 22, 2025 18:25 IST

    தெற்காசிய கால்பந்து போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

    இலங்கை கொழும்புவில் நடைபெற்று வரும் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டியில் பாகிஸ்தான் அணியை 3-2 என்ற கணக்கில் வென்று இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி



  • Sep 22, 2025 18:24 IST

    "மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பார்கள்" - ஜாய் கிரிசில்டா

    கடந்த 2 வருடங்களாக என்ன நடந்தது என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். திருமணம் செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள்.  உண்மையாகவே மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து கொண்டார், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என ஜாய் கிரிசில்டா கூறியுள்ளார்.



  • Sep 22, 2025 17:24 IST

    மாதா திரிபுர சுந்தரி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம்

    திரிபுராவில் உள்ள மாதா திரிபுர சுந்தரி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் மேற்கொண்டார்.



  • Sep 22, 2025 16:13 IST

    தினகரன் - அண்ணாமலை திடீர் சந்திப்பு

    அமமுக பொதுச்செயலாளர் தினகரனை அவரது இல்லத்தி வைத்து நேற்று இரவு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றுள்ளது. தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல்



  • Sep 22, 2025 15:40 IST

    ஜாய் கிரிசில்டாவிடம் 4 மணி நேரமாக விசாரணை

    திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார்.  ஜாய் கிரிசில்டாவிடம் 4 மணிநேரமாக பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் புகைப்பட வீடியோ ஆதாரங்கள் துணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.



  • Sep 22, 2025 15:03 IST

    டைடல் பார்க் சந்திப்பில் வெல்டிங் குறைபாடு -சாலையில் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தல்

    சென்னையில் டைடல் பார்க் சந்திப்பில் (வெளியேறும் பக்கம்) வெல்டிங் குறைபாடு காரணமாக ஆபத்தான முறையில் இரும்புத் தகடொன்று உள்ளது; இதன் வீடியோவை வெளியிட்டு, பாதுகாப்பாக இப்பகுதியை கடக்கும்படி மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.



  • Sep 22, 2025 15:00 IST

    இந்தியா வருகிறார் உசைன் போல்ட்

    முன்னாள் தடகள வீரரும், உலக சாம்பியனுமான உசைன் போல்ட் செப்.26ம் தேதி இந்தியா வருகிறார். வரும் 26 முதல் 28-ம் தேதி வரை டெல்லி, மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் உசைன் போல்ட் பங்கேற்கிறார்.



  • Sep 22, 2025 14:59 IST

    `டாடா’ பெயரில் போலி உப்பு - உபியில் அம்பலம்

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது இரு கடைகளில் டாடா நிறுவனத்தின் பெயரில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட உப்பை போலியாக பேக்கிங் செய்து விற்றது அம்பலமானது



  • Sep 22, 2025 14:26 IST

    விஜயின் வேலூர் சுற்றுப்பயணத்தில் மாற்றம்

    அக்டோபர் 18யில்தவெகதலைவர்விஜய்மேற்கொள்ளவிருந்தவேலூர்சுற்றுப்பயணத்தில்மாற்றம். அக்டோபர் 4 ஆம்தேதியேவிஜய்வேலூர், ராணிப்பேட்டையில்சுற்றுப்பயணம்செய்யவுள்ளதாகதவெகவினர்மனுஅளித்துள்ளனர். அக்டோபர் 4,5 தேதிகளில்கோவை, நீலகிரி,திருப்பூர், ஈரோட்டில்விஜய்சுற்றுப்பயணம்செய்யதிட்டமிட்டிருந்ததால்அதிலும்மாற்றம்வரக்கூடும்எனசொல்லப்படுகிறது.

     



  • Sep 22, 2025 14:12 IST

    கீதாவின் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

    நடிகை ராதிகாவின் தாயார் கீதா வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 



  • Sep 22, 2025 14:10 IST

    டிக்கெட் எடுக்க புதிய செயலி

    சென்னை ஒன் என்ற புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசுப் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் மற்றும் ஆட்டோக்களில் பயணிக்க ஒரே கியூ.ஆர்.கோடை பயன்படுத்தி டிக்கெட் பெறலாம்.



  • Sep 22, 2025 14:08 IST

    "இரட்டை போனஸ்" - பிரதமர் மோடி

    நாடு முழுவதும் ஜி.எஸ்.டி திருத்தங்கள் அமலுக்கு வந்துள்ளன. பண்டிகை காலத்தில் இது இரட்டை போனஸ் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 



  • Sep 22, 2025 13:25 IST

    அமித்ஷா சொல்லி ஆனந்த் மூலம் கட்சி ஆரம்பித்துள்ளார் விஜய் - சபாநாயகர் அப்பாவு விமர்சனம்

    செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு: “அமித்ஷா சொல்லி ஆனந்த் மூலம் கட்சி ஆரம்பித்துள்ளார் விஜய். முதல்வரை மிரட்டு தொனியில் இருந்தே பா.ஜ.க-டான் விஜயை இயக்குகிறது என்பது தெரிகிறது. முதல்வரை, பிரதமரைப் பற்றி பேசும்போது மிகவும் கண்ணியத்துடனும் கவனத்துடனும் பேச வேண்டும். விஜயின் வார்த்தையில் கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. சினிமாவில் பேசுவது போல பேசுகிறார்.” என்று விமர்சனம் செய்துள்ளார்.



  • Sep 22, 2025 13:18 IST

    காலை உணவுத் திட்டத்தால் 20.59 லட்சம் குழந்தைகளுக்கு பயன் - அமுதா ஐ.ஏ.எஸ்

    தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளரும், அரசு செய்தித் தொடர்பாளருமான அமுதா ஐ.ஏ.எஸ் பேட்டி: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் 20.59 லட்சம் குழந்தைகளுக்கு பயன் அடைந்துள்ளனர்; தமிழ் புதல்வன் திட்டத்தால் 3.92 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர் என்று கூறினார்.



  • Sep 22, 2025 13:16 IST

    ஜி.எஸ்.டி வரி குறைப்பு எதிரொலி: ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு 

    மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி குறைப்பு எதிரொலியாக, ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் பொருட்களான பனீர், நெய் ஆகியவற்றின் விலையை குறைத்தது ஆவின் நிர்வாகம். 

    ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை ரூ.690ல் இருந்து ரூ.650ஆக குறைப்பு

    200 கிராம் பனீர் விலை ரூ.120ல் இருந்து ரூ.110ஆக குறைப்பு

    ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட 500 கிராம் பனீர் விலை ரூ.275ஆக குறைப்பு



  • Sep 22, 2025 13:13 IST

    நடிகை ராதிகாவின் தாயார் மறைவு: மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும் நடிகை ராதிகாவின் தாயுமான கீதா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 



  • Sep 22, 2025 13:06 IST

    சென்னையில் செப்.25ம் தேதி கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி; ரேவந்த் ரெட்டி பங்கேற்பு - அமுதா ஐ.ஏ.எஸ்

    தமிழக அரசின் சார்பில் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற நிகழ்ச்சி செப்டம்பர் 25-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றார்.

    தமிழக அரசின் 7 திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக, தமிழ்நாடு அரசு செய்தி தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 



  • Sep 22, 2025 12:51 IST

    டெல்லியில் இன்று மாலை ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார் நயினார் நாகேந்திரன்

    தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை டெல்லியில் இன்று மாலை சந்திக்கிறார். நயினார் நாகேந்திரன் அக்டோபர் 11 முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.



  • Sep 22, 2025 12:48 IST

    ‘சி.எம். சார்’ என அழைக்கும் விஜய்க்கு இந்த அகந்தை எங்கிருந்து வந்தது? - சபாநாயகர் அப்பாவு கேள்வி 

    சபாநாயகர் அப்பாவு, “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சிஎம் சார் என்று அழைக்கிற அளவுக்கு விஜய்க்கு இந்த அகந்தை எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதப் பிரதமர் வழிகாட்டுதலின் படி த.வெ.க கட்சி தொடரப் பட்டுள்ளதாகப் பல பத்திரிகை, ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க-தான் விஜய்க்கு கேட்காமலேயே Y பாதுகாப்பு கொடுத்ததாக சொல்கிறார்கள்” என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.



  • Sep 22, 2025 12:24 IST

    விஜய்க்கு அகந்தை அதிகம்... சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார் - சபாநாயகர் அப்பாவு விமர்சனம்

    த.வெ.க தலைவர் விஜய் தமிழக அரசு குறித்து விமர்சனம் செய்வது குறித்த கேள்வ்க்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “த.வெ.க தலைவர் விஜய்க்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. நடிகர் கட்சி ஆரம்பித்திருக்கிறார். சினிமாவில் பேசுவது போல பேசுகிறார்.” என்று கூறினார்.



  • Sep 22, 2025 12:21 IST

    சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



  • Sep 22, 2025 11:52 IST

    சீமானுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிப்பு

    டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Sep 22, 2025 11:51 IST

    வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டத்தை அடுத்து  போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



  • Sep 22, 2025 11:44 IST

    சென்னை ஒன் ஆப் அறிமுகம்

    இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப், ஆட்டோக்கள் போன்ற அனைத்து பொது போக்குவரத்துத்திலும், ஒரே QR பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் வகையில் சென்னை ஒன் மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



  • Sep 22, 2025 11:13 IST

    சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கேள்வி

    சமத்துவத்தைப் பேணும் நமது நாட்டில் மாணவர்களிடையே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்கள் ஆபத்தானவை. அதுவும் அரசு விடுதிக்குள் நடக்கும் இந்த சமூகவிரோதச் செயலை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் அரசும் அதை வேடிக்கை பார்க்கக்கூடாது. 



  • Sep 22, 2025 11:05 IST

    ஜிஎஸ்டி வரி குறைப்பு - நவராத்திரி நாள் பரிசு

    ஜிஎஸ்டியில் முன்னெப்போதும் இல்லாத  வரி குறைப்பு நாட்டு மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். ஜிஎஸ்டி வரி குறைப்பு நவராத்திரி நாளில் தாய்மார்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசு

    - அமித் ஷா



  • Sep 22, 2025 11:04 IST

    பணி நியமன ஆணைகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

    சென்னை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1156 கிராம சுகாதார செவிலியர் மற்றும் 75 துணை செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டு, அதற்கான பணி நியமன ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.



  • Sep 22, 2025 10:29 IST

    ராதிகாவின் தாயார் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

    கீதா ராதாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; தாயார் கீதாவை இழந்து வாடும் ராதிகா சரத்குமார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் 

    நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதாவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

     



  • Sep 22, 2025 10:28 IST

    2 எம்டிசி பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்

    சென்னை, வேளச்சேரி தண்டீஸ்வரம் அருகே எதிரெதிர் திசையில் வந்த 2 எம்டிசி பேருந்துகள் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்துக் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 22, 2025 10:21 IST

    டிசம்பர் மாத‌த்திற்கான தரிசன டிக்கெட் புக்கிங் இன்று தொடக்கம்

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், டிசம்பர் மாதத்திற்கான ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் பல்வேறு ஆன்லைன் சேவைகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான கல்யாணோத்சவம், ஊஞ்சல் சேவா, அர்ஜித பிரம்மோத்சவம் போன்ற சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செப்டம்பர் 22) மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது.

    மேலும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தரிசன டோக்கன்கள் நாளை (செப்டம்பர் 23) மதியம் 3 மணி முதல் ஆன்லைனில் கிடைக்கும். சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 24, காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 



  • Sep 22, 2025 09:37 IST

    இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.82,880-க்கும், ஒரு கிராம் ரூ.10,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.



  • Sep 22, 2025 09:35 IST

    ஜி.எஸ்.டி - புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு

    ஜி.எஸ்.டி. 2.0 குறித்த நுகர்வோர்களின் புகார்களை 1800-11-4000 என்ற எண்ணில் அளிக்கலாம் என்று தேசிய நுகர்வோர் உதவி மையம் அறிவித்து உள்ளது. https://consumerhelpline.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 22, 2025 09:33 IST

    பெண் மருத்துவரை தாக்கிய வட மாநில இளைஞர்

    சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பெண் மருத்துவரின் தலைமுடியை இழுத்து கல்லால் தாக்கிய வடமாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 22, 2025 09:24 IST

    திருப்பதியில் ரூ.100 கோடி திருட்டு? வைரல் வீடியோ

    ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திருப்பதி தேவஸ்தான உண்டியலில் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். கோவில் ஊழியர் ரவிக்குமார் என்பவர் உண்டியலில் இருந்து பணத்தைத் திருடியதாகக் கூறி, அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு இருக்கிறார். 

     



  • Sep 22, 2025 09:21 IST

    நடப்பாண்டில் 7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

    தமிழ்நாட்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் நடப்பாண்டில் 7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 276 சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தமிழகத்தில் மட்டும் 54 மண்டலங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 54 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் 2024-25ல் ரூ.2,20,5501 கோடி மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.



  • Sep 22, 2025 09:00 IST

    குலசை கோயில் தசரா திருவிழா: நாளை தொடக்கம்

    தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 7 மணிக்கு வில்லிசை நடக்கிறது.



  • Sep 22, 2025 08:59 IST

    அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி 8 பேர் காயம்

    சென்னை வேளச்சேரி அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதே சமயம் எதிரில் மற்றொரு பேருந்து பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், பேருந்து தண்டீஸ்வரம் அருகே வந்துகொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் 7 பயணிகள் காயமடைந்தனர்.



  • Sep 22, 2025 08:17 IST

    திருச்செந்தூரில் நேற்று திடீரென உள்வாங்கிய கடல்

    அமாவாசை தினமான நேற்று திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும், ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர். கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.



  • Sep 22, 2025 08:02 IST

    அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

    அருணாச்சலப்பிரதேச மாநிலம் அப்பர் சியாங் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவாகியுள்ளது.



  • Sep 22, 2025 07:53 IST

    10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 22, 2025 07:53 IST

    கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு; இன்று தொடக்கம்

    கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்குகிறது.இந்த பணியில் 1¾ லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த கணக்கெடுப்பு பணி 17 நாட்கள் அதாவது வருகிற அக்டோபர் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுமார் 7 கோடி பேரின் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிப்பார்கள்.



  • Sep 22, 2025 07:22 IST

    "அதிக ஜி.எஸ்.டி. விதித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள்"

    8 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.55 லட்சம் கோடி வசூலித்துவிட்டு, தற்போது ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு கிடைக்கும் என்று பேசுவது, பெரிய காயத்தை ஏற்படுத்திவிட்டு சிறிய Band-Aid போடுவது போன்றது. பருப்பு, தானியங்கள், பென்சில், புத்தகம், சிகிச்சைகளுக்கு அதிக ஜி.எஸ்.டி. விதித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: