Chennai News Updates: நாடுகளுக்கு இடையே வர்த்தகம் பரஸ்பரமாக இருக்க வேண்டும் - டொனால்ட் ட்ரம்ப்

Tamilnadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamilnadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trum

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.93-க்கும், டீசல் 92.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று; பாக்,.- இலங்கை இன்று மோதல்: 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்றில் இதுவரை 2 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்றின் 3வது ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. 

  • Sep 23, 2025 23:03 IST

    நாடுகளுக்கு இடையே வர்த்தகம் பரஸ்பரமாக இருக்க வேண்டும் - டொனால்ட் ட்ரம்ப்

    நாடுகளுக்கு இடையே நியாயமான அணுகுமுறைகளுக்கு வர்த்தகம் பரஸ்பரமாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் பொருளாதார நிலைப்பாட்டைப் பாதுகாக்க வரி விதிப்பை பாதுகாப்பு வழிமுறையாக கடைபிடிக்கிறோம் என ஐ.நா பொதுச்சபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.



  • Sep 23, 2025 20:55 IST

    சட்டவிரோதமாக வருபவர்கள் சிறை செல்வது உறுதி - டிரம்ப்

    அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வருபவர்கள் சிறை செல்வது உறுதி; எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திருப்பி அனுப்படுவார்கள் என ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். மேலும், உலகிலேயே அமெரிக்கா மிகவும் வெப்பமான நாடு, யாரும் நம் அருகில் நெருங்க முடியாதுஎன அமெரிக்காவின் பொருளாதாரம், ராணுவ பலத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Sep 23, 2025 19:59 IST

    பிரான்ஸ் அதிபரை தடுத்து நிறுத்திய போலீஸ்

    அமெரிக்க அதிபர் டிரம்பின் பாதுகாப்பு வாகன வருகைக்காக, நியூ யார்க்கில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். டிரம்புக்கு கால் செய்து மெக்ரான் புகார் அளித்த‌தை அடுத்து, போலீசார் அனுமதி அளித்தனர்.



  • Sep 23, 2025 19:58 IST

    மோகன்லாலுவுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து

    கலைத்துறையில் தனது திறமையால் முழுமையான நடிகர் என்ற நற்பெயரை மோகன்லால் நிலைநாட்டியுள்ளார். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் மோகன்லாலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து



  • Sep 23, 2025 19:56 IST

    ஐ.நா சபையின் 80-வது பொதுச்சபை கூட்டம்: அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு

    அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது பொது கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள நிலையில்,இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். 



  • Sep 23, 2025 18:44 IST

    வருமானத்தை மறைத்ததாக ரூ.1.50 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டதை எதிர்த்து விஜய் வழக்கு

    விஜய் வருமானத்தை மறைத்ததாக கூறி ரூ.1.50 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டது. இது தொடர்பாக விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.



  • Sep 23, 2025 18:13 IST

    பாராசிட்டமால் மாத்திரைகளால் 'ஆட்டிசம்' ஏற்படும் என்பதில் எந்த உண்மையும் இல்லை! - உலக சுகாதார மையம்

    பாராசிட்டமால் மாத்திரைகளால் 'ஆட்டிசம்' ஏற்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை என்று உலக சுகாதார மையம் விளக்கமளித்துள்ளது.



  • Sep 23, 2025 17:47 IST

    தி.மு.க-வை தொட்டுக்கூட பார்க்க முடியாது- உதயநிதி ஸ்டாலின்

    நாம் சண்டை போடாத ஆட்களே இல்லை. நம்முடன் சண்டை போடும் அளவிற்கு தகுதியானவர்கள் இந்தியாவிலேயே இல்லை. தமிழகத்தை எட்டிக் கூட பார்க்க முடியவில்லை என்று மத்திய பா.ஜ.க ஏங்குகிறது.  தி.மு.க-வை தொட்டு கூட பார்க்க முடியாது. 75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க எழுச்சியுடன் இருக்கும்.

     



  • Sep 23, 2025 17:26 IST

    தேசிய விருது பெற்ற பிரபலங்கள்

    தேசிய விருதை  நடிகை ஊர்வசி, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்,  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம் குமார், ‘பார்க்கிங்’ பட தயாரிப்பாளர் சினிஷ் ஆகியோர் பெற்றனர். 



  • Sep 23, 2025 17:19 IST

    கொல்கத்தாவை புரட்டிப் போட்ட பெரும் மழை! ஒரே இரவில் நடந்த பயங்கர சம்பவங்கள்

    கொல்கத்தாவில் ஒரே இரவில் பெய்த கனமழையால் தெருக்கள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் மெட்ரோ தண்டவாளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறைந்தது ஏழு பேர் இதில் உயிரிழந்தனர்.  போக்குவரத்து நெட்வொர்க் கடுமையாக பாதிக்கப்பட்டது, பல கார்கள் நீர் தேங்கிய சாலைகளில் பழுதடைந்தன மற்றும் பள்ளி பூல் கார் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையில் வீட்டிலிருந்து வேலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கள் குழந்தைகளை அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று பல பள்ளிகள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தின.



  • Sep 23, 2025 17:14 IST

    சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் அசத்தல்

    ஜி.வி.பிரகாஷ்க்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 'வாத்தி' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வென்றவர் ஜி.வி.பிரகாஷ்.



  • Sep 23, 2025 17:13 IST

    தவெகவுடன் நாங்கள் ஏன்?... - செல்வப்பெருந்தகை பதில்

    நாங்கள்எதற்குமறைமுகமாகதவெகவுடன்பேச்சுவார்த்தைநடத்தவேண்டும்? என்னதேவைஇருக்கிறது? அதுமாதிரிஎல்லாம்எதுவும்கிடையாதுஎனசெல்வப்பெருந்தகைபேட்டிஅளித்துள்ளார்.

     



  • Sep 23, 2025 16:44 IST

    மேற்கூரை பூச்சு விழுந்து விபத்து

    சென்னை வில்லிவாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நோயாளிக்கு மருத்துவம் பார்த்த பெண் மருத்துவருக்கு தோள்பட்டையிலும், செவிலியருக்கு தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.



  • Sep 23, 2025 16:41 IST

    சென்னையில் அண்ணாமலை பேட்டி!

    இந்தியாவிலேயே அதிக முறை பேட்டி கொடுத்தது நான் தான் என சென்னையில் அண்ணாமலை பேட்டியின்போது தெரிவித்துள்ளார்.



  • Sep 23, 2025 16:27 IST

    டெல்லியில் 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது

    டெல்லியில் 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது. 2023 ஆம்ஆண்டுக்கானதேசியவிருதுகளைகுடியரசுத்தலைவர்திரௌபதிமுர்முவழங்குகிறார்.

     



  • Sep 23, 2025 16:14 IST

    மலேசிய நாட்டவரின் கைப்பையை திருடிச் சென்ற நபர் கைது

    சென்னைமெட்ரோரயிலில்பயணித்தமலேசியநாட்டவரின்கைப்பையைதிருடிச்சென்றதனியார்நிறுவனத்தில்ஹெச். ஆர்சுனில்ராஜ்என்பவர்கைதுசெய்யப்பட்டுள்ளார். 8 சவரன்தங்கநகைகள்மற்றும்பாஸ்போர்ட்உள்ளிட்டமலேசியஆவணங்கள்அப்பையில்இருந்துள்ளது.

     



  • Sep 23, 2025 16:12 IST

    கடும் நிதி நெருக்கடியால், 20% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஐநா முடிவு!

    ஐநாவில்நிலவும்நிதிப்பற்றாக்குறையால்தனது 2026 பட்ஜெட்டில்இருந்து 500 மில்லியன்டாலரைகுறைக்கவும் 20 சதவீதஊழியர்களைபணிநீக்கம்செய்யவும்முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஐநாவுக்குஅமெரிக்கஅரசுவழங்கிவந்தமொத்தநிதியில்சுமார் 1 பில்லியன்டாலரைகுறைத்ததால்கடும்நெருக்கடி.

     



  • Sep 23, 2025 15:37 IST

    நான் தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது சொல்கிறேன் - அண்ணாமலை

    ரஜினியை நான் அடிக்கடி சந்தித்து வருகிறேன், நட்பு அடிப்படையிலேயே அவரை சந்திக்கிறேன். அவரை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். நான் தனிக்கட்சி ஆரம்பிப்பேனா என கேட்கிறீர்கள். ஆரம்பிக்கும்போது சொல்கிறேன் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



  • Sep 23, 2025 15:36 IST

    ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!

    ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில் தற்போது ஒரு சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,640க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.85,120-க்கு விற்பனை ஆகிறது.



  • Sep 23, 2025 15:06 IST

    அதிமுக கோஷ்டிகளை பாஜகவே வழிநடத்தும்: பெ.சண்முகம்

    அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அனைத்தையும் பாஜகவே வழி நடத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார். பாஜகதான் அதிமுகவை வழிநடத்துகிறது என்பதற்கு அமித் ஷாவுடனான சந்திப்பே எடுத்துக்காட்டு. மோடியா, லேடியா என்ற ஜெயலலிதாவின் அதிமுக இன்று அண்ணன் அமித் ஷா சொல்படிதான் நாடாகும். அமித் ஷா செல்படியே அதிமுக இனி நாடாகும் என்பதை டெல்லி சந்திப்புகள் உறுதிப்படுத்திக்கின்றன என அவர் தெரிவித்தார்.



  • Sep 23, 2025 15:05 IST

    காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது வழக்கு முடித்து வைப்பு

    காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக மாவட்ட நீதிபதி கைது உத்தரவு பிறப்பித்த விவகாரம். மாவட்ட நீதிபதி மீதான விஜிலன்ஸ் பதிவாளரின் விசாரணை அறிக்கையை நிர்வாக குழுவிற்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தனிப்பட்ட பிரச்னையால் டிஎஸ்பியை கைது செய்ய மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதாக கூறி காவல்துறை தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 



  • Sep 23, 2025 14:54 IST

    மாவட்ட நீதிபதி மீதான விசாரணை அறிக்கையை நிர்வாக குழுவுக்கு அனுப்ப ஐகோர்ட் ஆணை

    உள் நோக்கத்துடன் மாவட்ட நீதிபதி, காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது செய்ய உத்தரவிட்ட விவகாரத்தில் மாவட்ட நீதிபதி மீது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் பதிவாளர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். மாவட்ட நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏதுவாக விஜிலன்ஸ் பதிவாளரின் விசாரணை அறிக்கையை நிர்வாக குழுவுக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கைது செய்ய உத்தரவிட்டார். காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.



  • Sep 23, 2025 14:52 IST

    திமுக ஆட்சி அமைய தொண்டர்கள் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

    7வது முறையாக திமுக ஆட்சி அமைய களத்தில் இறங்கி தொண்டர்கள் வேலை செய்ய வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி நடத்தும் பரப்புரையில் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எடப்பாடி பரப்புரை கூட்டத்தை முடிக்கும்போது அவரும், அவரது ஓட்டுநரும் மட்டுமே இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்னஸ் பார்த்தாலே கோவப்படுகிறார் என அவர் தெரிவித்தார்.



  • Sep 23, 2025 14:27 IST

    பெருவளூரில் 100 நாள் வேலையின்போது மயங்கி விழுந்து பெண் பலி

    விழுப்புரம் மாவட்டம் பெருவளூரில் 100 நாள் வேளைத் திட்டத்தில் பணிபுரிந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தன. ஏரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து செல்லம்மாள் (55) உயிரிழந்தன.



  • Sep 23, 2025 14:27 IST

    செப்.25, 27ல் நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

    செப்.25, 27ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. செப்.26ல் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.



  • Sep 23, 2025 14:16 IST

    துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல்

    நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், துல்கரின் 2 கார்கள் பறிமுதல். பூட்டான் நாட்டின் வழியாக கார் இறக்குமதி செய்தததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



  • Sep 23, 2025 13:58 IST

    செப். 29 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் செப்டம்பர் 29-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு வங்கக்கடலில் தற்போது ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். மேலும், செப்டம்பர் 27-ம் தேதி ஒடிசா அருகே இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு, அதாவது செப்டம்பர் 29-ம் தேதி வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 23, 2025 13:27 IST

    ‘இதுதான் தேசிய மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் வித்தியாசம்’ - நயினார் நாகேந்திரன்

    பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்: “தமிழகத்தில் பாதாள சாக்கடைக் கழிவுகளை நீக்கும் தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி இறப்பது தொடர்கதையான நிலையில், தற்போது மேலும் இருவர் திருவெறும்பூரில் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பிரதமரின் நமஸ்தே திட்டம் தூய்மைப் பணியாளர்களின் நல்வாவுக்கு வித்திடுகிறது. முதல்வரின் அரசோ தூய்மைப் பணியாளர்களை காவு வாங்குகிறது. இதுதான் தேசிய மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் வித்தியாசம். சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம்தானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Sep 23, 2025 13:17 IST

    ‘தி.மு.க எம்.பி.க்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதிக்கு செல்ல வேண்டும்’ - மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. “நாடாளுமன்றம் நடக்கும் நடக்கும் நாட்களைத் தவிர்த்து வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் எம்.பி.க்கள் அனைவரும் அவர்களது தொகுதிகளுக்கு சென்று மக்களுக்கு தேவையான பணிகளை செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.



  • Sep 23, 2025 12:35 IST

    நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை சோதனை

    பூடானில் இருந்து சட்டவிரோதமாக வாகனங்களை வாங்கிய புகாரில், நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுளனர். கொச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 23, 2025 12:29 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியின் ஜாமின் மனு தள்ளுபடி 

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சுமார் ஓராண்டாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என பொற்கொடி மனு தாக்கல் செய்தார். பொற்கொடி ஜாமினில் வெளியே வந்தால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



  • Sep 23, 2025 12:05 IST

    அக். 14 ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மேலும், அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



  • Sep 23, 2025 11:42 IST

    துல்கர் சல்மான்- பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளில் ரெய்டு

    கேரளாவில் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பூட்டான் நாட்டின் வழியாக கார் இறக்குமதி செய்தது தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 23, 2025 11:23 IST

    திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

    திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. வாக்குத் திருட்டு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது



  • Sep 23, 2025 11:17 IST

    விஜய் கருத்தை வரவேற்கிறேன்- அண்ணாமலை

    முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் யாராவது குரல் கொடுக்க ஆரம்பித்தாலோ பாஜக பி டீம் எனக் கூறுகின்றனர்

    - அண்ணாமலை.



  • Sep 23, 2025 10:45 IST

    அண்ணாமலை பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை- சேகர்பாபு பதில்

    முதல்வர் மு.க.ஸ்டாலினை நாத்திக டிராமாவாதி என அண்ணாமலை பேசிய கருத்துக்கு, பாஜகவால் ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை போன்றோர் பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை

    அமைச்சர் சேகர்பாபு பதில்.

     

     

     

     



  • Sep 23, 2025 10:43 IST

    டிடிவி முடிவுக்காக டிசம்பர் வரை காத்திருப்போம்- அண்ணாமலை

    டிடிவி தினகரன் போன்ற தலைவர்கள் 2024 தேர்தலில் நம்மை நம்பி NDA கூட்டணிக்கு வந்தார்கள். அவர்களை காயப்படுத்தும் வகையில் பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. எனவே சிதம்பரம் வரை பொறுத்திருப்போம்

    - அண்ணாமலை



  • Sep 23, 2025 10:30 IST

    டிடிவி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினேன்- அண்ணாமலை

    தே.ஜ. கூட்டணியில் இருந்து வெளியேறிய முடிவை திரும்பப் பெற வேண்டும் என டிடிவி தினகரனை சந்தித்து வலியுறுத்தினேன். ஓ.பன்னீர்செல்வத்தையும் விரைவில் சந்திப்பேன்

    அண்ணாமலை



  • Sep 23, 2025 10:29 IST

    கோயம்பேடு காய்கறி சந்தையின் புதிய இணையதள சேவை தொடக்கம்

    அமைச்சர் சேகர்பாபு கோயம்பேடு காய்கறி சந்தையின் புதிய இணையதள சேவையைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய அவர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாவது மாஸ்டர் பிளான் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.



  • Sep 23, 2025 10:18 IST

    நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் வாசுதேவநல்லூர், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை நடத்துகிறார்.



  • Sep 23, 2025 09:36 IST

    இலங்கை பெண் கைதியிடம் அமலாக்கத்துறை விசாரணை

    சென்னை அடுத்த புழல் மகளிர் சிறையில் இலங்கை பெண் கைதியிடம்  அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் கைதி மேரி பிரான்சிஸ்கோவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.



  • Sep 23, 2025 09:35 IST

    குரோம்பேட்டை: சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

    குரோம்பேட்டை சி.எல்.சி. ஒர்க்ஸ் சாலையோரம் இயங்கி வந்த கடைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கடைகளை அகற்றுமாறு, தாம்பரம் மாநகராட்சி விதித்த ஒருவார காலக்கெடுவுக்குள் கடைகள் அகற்றப்படாததால் மாநகராட்சி நிர்வாகமே கடைகளை அப்புறப்படுத்தினர். மாற்று இடம் ஒதுக்குமாறு கடை உரிமையாளர்கள், மாநகராட்சி பணியாளர்களுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



  • Sep 23, 2025 09:22 IST

    ஆபரணத் தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,500-க்கு விற்பனையாகிறது. நேற்று காலையில் தங்கம் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,360க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.82,880க்கும் விற்பனையானது. காலையில் எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அதே வேகத்தில் மாலையிலும் தங்கம் விலை உயர்ந்தது. மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,430க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.83,440க்கும் விற்பனையானது.



  • Sep 23, 2025 09:00 IST

    ஸ்பெயின் கார் ரேஸில் பங்கேற்கும் அஜித்குமார்

    அஜித்குமார் அடுத்ததாக ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார்.அந்த போட்டிகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பர் 27–28 – க்ரெவென்டிக் 24H, செப்டம்பர் 30– அக்டோபர் 1 – LMP3 சோதனை, அக்டோபர் 6– மஹிந்திரா பார்முலா E சோதனை, அக்டோபர் 11–12– GT4 ஐரோப்பிய தொடர், என நான்கு கார் ரேஸ் போட்டிகளில் அஜித் பங்கேற்க உள்ளார் என அஜித்குமார்ரேஸிங் நிறுவனம் அறிவித்துள்ளது.



  • Sep 23, 2025 08:45 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,849 கனஅடியாக உயர்வு

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 10,849 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 119.05 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 91.962 டி.எம்.சி. ஆக உள்ளது. அணையில் இருந்து மொத்தமாக விநாடிக்கு 6500 கன அடிக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



  • Sep 23, 2025 08:44 IST

    "100 ஆண்டுகளை கடந்தும் நிலைத்து தி.மு.க. நிற்கும்"

    தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் தி.மு.க. இன்னும் 100 ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விழுப்புரம் சிறுவந்தாடு ஓவியர் T.R.கோவிந்தராஜன் எழுதிய கடிதமும் ஓவியப் புத்தகமும் நேற்று வந்தடைந்தது. 87 வயதான கோவிந்தராஜனின் எழுத்தில் வெளிப்படும் கட்சிப் பற்றைக் காணுங்கள் என முதல்வர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Sep 23, 2025 08:24 IST

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று உதயநிதி கள ஆய்வு

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்தில் இன்று வளர்ச்சி திட்ட பணிகளை கள ஆய்வு செய்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 11 மணிக்கு சாத்தூரில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது. பின்னர் அரசு மருத்துக்கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மாலை 5 மணிக்கு கிருஷ்ணன்கோவிலில் நடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.



  • Sep 23, 2025 07:54 IST

    பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது பிரான்ஸ்

    பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக ஐ.நா உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரன் அறிவித்துள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீன மக்களிடையே அமைதி ஏற்படுத்தும் முயற்சி என பாலஸ்தீன குழுவினர் ஆரவாரம் செய்தனர்.



  • Sep 23, 2025 07:48 IST

    எடப்பாடி பழனிசாமிக்கு கோபியில் அதிமுகவினர் வரவேற்பு

    செங்கோட்டையனின் கட்சி பதவி பறிப்புக்குப் பிறகு, கோபிக்கு சென்ற அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நீலகிரி மாவட்டத்தில் பரப்புரைக்கு செல்லும் வழியில் கோபியில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.



  • Sep 23, 2025 07:25 IST

    திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ.1 கோடி உண்டியல் வருவாய்

    மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வரலாற்றில் முதல்முறையாக உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி கிடைத்துள்ளது. அறுபடை வீடுகளில் முதலாம்படை வீடான திருப்பரங்குன்றத்தில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

     



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: