Chennai News Updates: கபினி அணையில் 25 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

Tamil Nadu Latest Live News Update in Tamil 19th June 2025: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu Latest Live News Update in Tamil 19th June 2025: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cauvery water

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
  • Jun 20, 2025 07:03 IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

    கபிணி அணையில் இருந்து தொடர்ந்து 25 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு



  • Jun 19, 2025 23:13 IST

    பிஹார் ஃபால்கு ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

    பிஹார் மாநிலம் கயா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர் மழை காரணமாக  ஃபால்கு ஆற்றில் வெள்ளப் பெருக்கு. வெள்ளப் பெருக்கில் சிக்கிய உள்ளூர் மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்பு



  • Advertisment
    Advertisements
  • Jun 19, 2025 21:22 IST

    கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி

    பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்த ராகுல் காந்தி. விரைவில் நாடாளுமன்றத்தில் உங்களைப் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் எனவும் பதிவு



  • Jun 19, 2025 21:21 IST

    பாமக எம்எல்ஏக்கள் அருள் மற்றும் ஜிகே மணி டிஸ்சார்ஜ்

    சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாமக எம்எல்ஏ அருள் மற்றும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்



  • Jun 19, 2025 20:08 IST

    ராகுலுக்கு விஜய் வசந்த் நேரில் வாழ்த்து 

    ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு  காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்  கன்னியாகுமரி MP விஜய் வசந்த் நேரில்  சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்



  • Jun 19, 2025 20:08 IST

    ஆபரேஷன் சிந்து: இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை

    ஆபரேஷன் சிந்து - இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை தரை வழியாகவும் அதனை தொடர்ந்து விமானம் மூலமும் அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை முடிவு.  நாடு திரும்ப விருப்பம் உள்ளவர்கள் டெல்அவிவ்-ல் உள்ள இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்யலாம் . இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளது



  • Jun 19, 2025 19:35 IST

    ஆபரேஷன் சிந்து - இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றும் அரசு 

    ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் பணியைத் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, இன்று வியாழக்கிழமை, ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் குடிமக்களை வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே வேகமாக தீவிரமடைந்து வரும் மோதலுக்கு மத்தியில் இந்த வெளியேற்றங்கள் நடைபெறுகின்றன.

    குடிமக்கள் முதலில் இஸ்ரேலில் இருந்து நில எல்லைகள் வழியாக கொண்டு வரப்பட்டு பின்னர் விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவார்கள் என்று வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.



  • Jun 19, 2025 19:26 IST

    ராகுலுக்கு விஜய் வசந்த் நேரில் வாழ்த்து 

    ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்



  • Jun 19, 2025 19:25 IST

    'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம் - சீமான் கடும் தாக்கு 

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமானுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும் - தெய்வத்தமிழ் பேரவையும் இணைந்து திருச்செந்தூரில் முன்னெடுத்த அறப்போராட்ட பொதுக்கூட்டத்தினால் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியின் விளைவாக, தற்போது திருச்செந்தூர் திருக்கோவில் நிர்வாகம் சார்பாக தமிழ்த்திருமுறைகள் முற்றோதல் நடைபெறும் என்றும், அதுதான் தமிழ் குடமுழுக்கு என்றும் ஏமாற்றும் வெற்று அறிவிப்பினை தி.மு.க. அரசு வெளியிட்டிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

    அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 'தமிழிலும்' குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது வெட்கக்கேடானது. குடமுழுக்கு முழுமையாக தமிழில் நடத்தப்பட வேண்டும். தாய்த்தமிழில் குடமுழுக்கு என்பது தி.மு.க. அரசு வேண்டா வெறுப்பாக இடும் பிச்சையோ, சலுகையோ அல்ல; திருச்செந்தூர் ஒன்றும் ஆந்திராவிலோ, கர்நாடாகவிலோ, கேரளாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ இல்லை. நாங்கள் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலோ, சபரிமலை ஐயப்பன் கோவிலிலோ, மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலிலோ தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டில், தமிழ் முன்னோர்கள் கட்டிய தமிழர் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் திருக்கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பது மானத்தமிழினத்தின் வழிபாட்டு உரிமை. அதனை வழங்குவதில் அமைச்சருக்கு ஏன் இத்தனை சலிப்பு? இத்தனை வெறுப்பு? தி.மு.க. அரசு யாரும் கேட்காமல் முழுமையாக தமிழில் குடமுழுக்கு நடத்தும் என்றால் அதனை அறிவிப்பதில் இன்னும் ஏன் தாமதம்? நாங்கள் போராட்டம் நடத்தும்வரை அமைச்சர் சேகர்பாபு வாய் திறவாதாதது ஏன்?

    திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் கோபுர கலசங்கள் நன்னீராட்டப்படும் போதும், வேள்விச்சாலையிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் அறிஞர்கள், மெய்யன்பர்கள் மற்றும் தமிழ் மக்களின் கோரிக்கையும், விருப்பமுமாகும். குறைந்தபட்சம் சம்ஸ்கிருதத்திற்கு இணையாக சரிபாதி வேள்விச்சாலைகள் அன்னைத்தமிழுக்கு வழங்கப்பட வேண்டும். கோபுர கலசங்கள் நன்னீராட்டின்போது கோபுர உச்சியிலும் தமிழ் மந்திரங்கள் ஒலிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாகும்.

    அதனை விடுத்து, தமிழ் ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்துவிட்டு, அதனை தமிழில் குடமுழுக்கு நடத்தியதாக ஏமாற்றும் தி.மு.க. அரசின் வழக்கமான ஏமாற்று அறிவிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது.

    தமிழ்நாடு அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னைத்தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதை ஐகோர்ட்டே தம்முடைய தீர்ப்பின் மூலம் உறுதி செய்துவிட்டது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தி.மு.க. அரசிற்கு ஏன் இத்தனை தயக்கம்? ஏன் இத்தனை நடுக்கம்? தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று உதட்டளவில் உச்சரித்து தமிழரை ஏய்த்து கிடைத்த அதிகாரத்தை வைத்து பிழைக்கும் தி.மு.க. அரசு, தமிழர் உரிமையை காவு கொடுக்கும் இழிசெயலை எப்போது கைவிடப்போகிறது?

    சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதி, ஆரிய வழிப்பாட்டு முறையில் கடைபிடிப்பதில் தி.மு.க. அரசிற்கு ஏன் இத்தனை ஆர்வம்? வடமொழி வழிபாட்டைக் கடைபிடிப்பதுதான் திராவிட மாடலா? இதுதான் தமிழ் மொழியை, தமிழ் பண்பாட்டை, தமிழர் உரிமையை தி.மு.க. அரசு காக்கும் முறையா?

    2,500 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் தமிழர் பண்பாட்டுத் தொன்மங்கள் கிடைத்துள்ளது பெருமை என்பதை ஏற்கும் தி.மு.க. அரசு, தமிழர் நிலத்தில் தமிழ்க் கடவுளுக்கு வடமொழியில் வழிபாடு நடந்துள்ளது என்பதை இன்னும் 1,000 ஆண்டுகளுக்கு பின்வரும் தலைமுறை அறிந்தால் அது தமிழ் இனத்திற்கு அவமானமா? வெகுமானமா? தமிழர் வரலாற்று பெருமைக்கு அது மாபெரும் இழுக்கில்லையா? அதனை தி.மு.க. அரசு உணர மறுத்து வடமொழிக்கு வால் பிடிப்பதேன்?

    ஆகவே, தாய்த்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கோரிக்கை! அதனை நிறைவேற்றும் வகையில், தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமானுக்கு குடமுழுக்கு நன்னீராட்டின் போதும், வேள்விச்சாலையிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி தமிழில் குடமுழுக்கு நடந்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் திட்டமிட்டபடி நாம் தமிழர் கட்சி அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



  • Jun 19, 2025 19:03 IST

    அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும், அ.தி.மு.க வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்கள் உடன் ஆலோசனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Jun 19, 2025 19:02 IST

    திருப்பதியில் மேலும் 20 கட்டணமில்லா பேருந்து சேவை அறிமுகம்

    பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக திருப்பதி மலையில் மேலும் 20 கட்டணமில்லா பேருந்து சேவை அறிமுகம் செய்துள்ளது. தேவஸ்தானத்தின் 12 இலவச பேருந்துகளுடன் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பதி மலைக்குள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இலவச பேருந்து அறிமுகம். திருப்பதி-திருமலை இடையே பக்தர்கள் வழக்கம்போல் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம்.



  • Jun 19, 2025 19:02 IST

    பா.ம.க எம்.எல்.ஏ அருள் டிஸ்சார்ஜ்

    சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பாமக எம்எல்ஏ அருள் இன்று வீடு திரும்பினார். ஐயா வந்து தன்னை பார்த்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக புறப்படுவதாக பேட்டியளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அருளுக்கு ஈசிஜி மற்றும் இதர இதயம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ம.க. தலைவர் அன்புமணி தலைமையில் இன்று சேலம், தருமபுரி மாவட்டங்களின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. சேலம் பொதுக்குழு கூட்டம் நடந்த முடிந்த உடன் பாமக எம்எல்ஏ அருள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.



  • Jun 19, 2025 19:01 IST

    ’சூர்யா 45’ படத்தின் டைட்டில் நாளை வெளியீடு 

    ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’சூர்யா 45’ படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 



  • Jun 19, 2025 17:46 IST

    முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரி சொத்துகளை முடக்க முடிவு

    சிறுவன் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் சொத்துகளை முடக்க போலீஸ் முடிவு செய்தது. கடத்தல் சம்பவத்தில் முக்கிய நபராக கூறப்படும் முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுரையைச் சேர்ந்த மகேஸ்வரி கொடைக்கானலில் நிறுவனம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு லட்சக் கணக்கில் சம்பாதித்து வந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகளை கணக்கெடுத்து அதனை முடக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மகேஸ்வரியின் கூட்டாளிகள் யார் யார் என்பது தொடர்பான விவரங்களையும் போலீஸ் சேகரித்து வருகிறது.



  • Jun 19, 2025 17:38 IST

    கொக்கைன் கடத்தல்: சென்னையில் இருவர் கைது

    சென்னையில் கொக்கைன் கடத்தல் வழக்கில் ஆப்பிரிக்க நாட்டைச் சேந்தவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் ஜரீக் என்பவரிடம் இருந்து கொக்கைன் வாங்கி வந்து சென்னையில் விற்றது அம்பலமாகியுள்ளது. சென்னையில் கொக்கைன் விற்ற ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான், சேலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் கைது செய்யப்பட்டுள்ளனர்



  • Jun 19, 2025 17:36 IST

    மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள்: ஸ்டாலின் ஆய்வு

    மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது முதல்வர் மின்தூக்கி மூலம் உயரே சென்று, உயரத்திலிருந்து கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டார். கத்திப்பாரா பகுதியில் ஏற்கனவே அமையப் பெற்றிருக்கும் வழித்தடம் 1. வழித்தடம் 2 மற்றும் கத்திப்பாரா மேம்பாலம் உள்ளடக்கிய சந்திப்பில் சமச்சீர் காண்டிலீவர் (Balance Cantilever) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதிலுள்ள சவால்கள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (திட்டங்கள்) முதல்வருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.



  • Jun 19, 2025 17:31 IST

    ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பாமக எம்.எல்.ஏ. அருள் டிஸ்சார்ஜ்

    சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பாமக எம்எல்ஏ அருள் இன்று வீடு திரும்பினார். ஐயா வந்து தன்னை பார்த்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக புறப்படுவதாக பேட்டியளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அருளுக்கு ஈசிஜி மற்றும் இதர இதயம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ம.க. தலைவர் அன்புமணி தலைமையில் இன்று சேலம், தருமபுரி மாவட்டங்களின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. சேலம் பொதுக்குழு கூட்டம் நடந்த முடிந்த உடன் பாமக எம்எல்ஏ அருள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.



  • Jun 19, 2025 17:04 IST

    ”மருத்துவமனை அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு கிடையாது”

    எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு என்பது கிடையாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பணிநீட்டிப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், ”எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு என்பது கிடையாது. கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்திருக்கலாம். இந்த இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு பணிநீட்டிப்பு என்பது கிடையாது. கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை என்பது 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்றார்.



  • Jun 19, 2025 16:49 IST

    தி.மு.க. கூட்டணி கப்பல் உறுதியாக உள்ளது - சேகர்பாபு

    கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ராஜா தோட்டம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்புகளின் இறுதி கட்டப் பணிகளை அறநிலைத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். தி.மு.க. கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என வைகை செல்வன் கூறியுள்ளார். தி.மு.க. கூட்டணி உறுதிமிக்க கப்பலை போன்றது. இந்த கப்பலை செலுத்துகின்ற மாலுமி பல்வேறு பூகம்பங்கள், புயல், மின்னல் உள்ளிட்டவை சந்தித்து தி.மு.க. என்ற கப்பலை கரைக்கு கொண்டு வந்து ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த ஆட்சியின் நீட்சி தொடரும் என்றார்.



  • Jun 19, 2025 16:34 IST

    திருவல்லிக்கேணியில் பள்ளி மாணவியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்

    திருவல்லிக்கேணியில் கடைக்கு சென்ற பள்ளி மாணவியை வளர்ப்பு நாய் கடித்து குதறியது. இதுதொடர்பாக நாயின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை தர்மன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேற்று தனது மகளை நாய் கடித்து விட்டதாக புகார் அளித்தார். அந்த புகாரின்படி போலீசார் நாயின் உரிமையாளர் லட்சுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jun 19, 2025 16:33 IST

    மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி டிஸ்சார்ஜ்

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 78) திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 15-ந்தேதி டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிறு தொடர்பான பிரச்னை அவருக்கு இருந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் உடல்நிலை சீரானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் 17-ந்தேதி அவருக்கு மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், காலை 10 மணி அளவில் அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார்.  மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 



  • Jun 19, 2025 16:31 IST

    தி.மு.க.வில் 30% கூடுதல் உறுப்பினர் சேர்க்கும் பணி 25-ந்தேதி தொடக்கம்

    தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் பயிற்சிக் கூட்டங்கள் நிறைவடைந்த பிறகு கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந்தேதி படிவத்தில் நிரப்பி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைப்பார். அதன் பிறகு அனைத்துத் தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



  • Jun 19, 2025 16:10 IST

    ”மாம்பழ விவசாயிகள் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல்”

    விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தும் திமுக அரசு, விளைவித்த பழங்களுக்கு விலையின்றி தவிக்கும் "மா" விவசாயிகளின் நலனை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். "தோளில் பச்சைத் துண்டு அணியும் போலி விவசாயி நான் அல்ல" என்று கூறும் முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால், மானியத்துடன் கூடிய மாம்பழம் கொள்முதல் விலையை ரூ. 20/கி ஆக உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என நயினார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 19, 2025 16:07 IST

    இரவு 7 மணிக்குள் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் மலைக்கு வாய்ப்புள்ளது.



  • Jun 19, 2025 16:01 IST

    தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது - திருமாவளவன் பேச்சு

    விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது; திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் பங்கு உண்டு. எனவே கூட்டணியின் வலிமையை பாதுகாக்கும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. தொகுதிப் பங்கிட்டில் கூடுதலான இடங்களை கேட்போம். பேச்சுவார்த்தையில் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகும். கொள்கை அடிப்படையில் எதிரிகள் யார் என்பதை முடிவெடுப்பதில் துணிவு தேவை. பாஜக, பாமக ஆகிய 2 கட்சிகள் இடம் பெற்றுள்ள கூட்டணிக்கு விசிக ஒருபோதும் செல்லாது. அதிமுகவோடு பாஜக கூட்டணியில் இருப்பதால் விசிக அதிமுகவோடு செல்ல முடியாது. கூட்டணியில் இருக்கும் போது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியை மிரட்டி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடையாது" என்றார்.



  • Jun 19, 2025 15:53 IST

    கூட்டணியை விட்டு திருமா வெளியேற மாட்டார்: திருநாவுக்கரசர்

    திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வெளியேற மாட்டார் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். விளம்பரத்திற்காகவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் வைகைச்செல்வன் பேசுகிறார். மதத்தை வைத்து தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்றும் கூறினார்.



  • Jun 19, 2025 15:17 IST

    ஐகோர்ட் வழக்கறிஞரை தாக்கிய இருவர் கைது

    வண்ணாரப்பேட்டையில் நண்பரை பார்க்க சென்ற ஐகோர்ட் வழக்கறிஞரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். வினித் குமார், சந்தோஷ் ஆகிய இருவரை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது வீண் வாக்குவாதம் செய்து தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.



  • Jun 19, 2025 14:57 IST

    மீண்டும் தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா?

    ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.



  • Jun 19, 2025 14:33 IST

    உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நயினார் நாகேந்திரன்

    நெல்லை எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆஜரானார். ராபர்ட் ப்ரூஸ் தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.



  • Jun 19, 2025 14:05 IST

    பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, அருள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்: அன்புமணி

    பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, அருள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். இருவரும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். சேலத்தில் நடைபெற்று வரும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் இருவரும் பங்கேற்காத நிலையில் அன்புமணி பேசியுள்ளார்.



  • Jun 19, 2025 13:43 IST

    ‘தக் லைஃப்’ வழக்கு: ‘நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?’ - சுப்ரீம் கோர்ட் கேள்வி

    ஒரு நகைச்சுவை நடிகர் உணர்வுபூர்வமாகப் பேசினால் கூட அச்சுறுத்தல்களும், சட்டவிரோத வேலைகளும் நடக்கின்றன என்று கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், "நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளது. கமல்ஹாசனின் 'தக் லைவ்' (Thug Life) திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், வன்முறைகள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், "நாளை இதே போன்று ஒரு நாடகத்திற்கு எதிராகவோ, கவிதைக்கு எதிராகவோ கும்பல்கள் மிரட்டல் விடுக்கக்கூடும். இதனை அனுமதிக்க முடியாது" தக் லைஃப் படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால், அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    தக் லைஃப் திரைப்படம் வெளியிடுவதற்கு கர்நாடக அரசு முழு பாதுகாப்பை அளிக்க வேண்டும்; வன்முறைகள் ஏற்பட்டால் அரசு அடக்க வேண்டும்; கடுமையான நடவடிக்கை எடுக்க வேனண்டம் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Jun 19, 2025 13:24 IST

    தக் லைஃப் வழக்கு: கர்நாடக பிலிம் சேம்பருக்கு - சுப்ரீம் கோர்ட் கண்டனம்

    நடிகர் கமல்ஹாசன் பேசியது அவதூறாக இருந்திருந்தால், அவதூறு வழக்கு மட்டுமே தொடர்ந்திருக்க வேண்டும் என்று கர்நாடகாவில் பிலிம் சேம்பருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    'தக் லைவ்' (Tak Live) திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாததால் ₹30 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.



  • Jun 19, 2025 12:53 IST

    கீழடியில் கிடைத்திருப்பது மானுடத்தின் பெருமை; அரசியல் பிழைத்தோர் உணர வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: “கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்லியல் பொருட்கள் தமிழர்களின் பெருமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுடத்தின் பெருமை. கீழடியில் பாடுபட்டு வெளிக்கொண்டு வந்தவற்றைத் தடுப்போர் வரலாற்றில் புதையுண்டு போவர். கீழடியில் கிடைத்திருப்பது தமிழர் பெருமை மட்டுமல்ல; மானுடத்தின் பெருமை. கிடைத்ததைக் கொண்டாடி, அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே நமது கடமை. இந்தக் கடமையை 'அரசியல் பிழைத்தோர்' உணர வேண்டும்: என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 



  • Jun 19, 2025 12:32 IST

    கள்ளக்குறிச்சி சம்பவம் ஓராண்டு நிறைவு: கள்ளச்சாராயம் அறவே இல்லாத நிலையை உருவாக்குவோம் - இ.பி.எஸ் உறுதி

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    "கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலை மீண்டும் வரும்" என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும், "2026-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு மீண்டும் வரும். இது தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி மட்டுமல்ல, மரணித்த 67 உயிர்களுக்கும் அதுவே நீதியாகும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 19, 2025 12:27 IST

    இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 11.9% - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

    தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.9% ஆக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் பேசுகையில், மோட்டார் வாகனங்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. ஜவுளி இயந்திரங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.தமிழ்நாட்டின் தொழில் முனைவோர்களில் பெண்களின் பங்கு 30% ஆக உயர்ந்துள்ளது என்ற முக்கிய தகவலையும் அவர் வெளியிட்டார். 



  • Jun 19, 2025 12:12 IST

    சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளை ஆய்வு செய்தார் மு.க.ஸ்டாலின்

    சென்னை ஆலந்தூரில் நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தற்போது இணைப்பு பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



  • Jun 19, 2025 11:50 IST

    டிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் இல்லை.

    சிறுவன் கட த்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் இல்லை.

    உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்



  • Jun 19, 2025 11:24 IST

    ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டியை அமெரிக்காவுக்கு அனுப்பும் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டியை ஆய்வு செய்ய இந்தியா நிபுணர்கள் அமெரிக்காவுக்கு அனுப்புகின்றனர்.



  • Jun 19, 2025 11:20 IST

    தக்லைஃப் ரிலீஸானால் பாதுகாப்பு வழங்கப்படும்

    `கர்நாடகாவில் `தக் லைஃப்' திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
    உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது கர்நாடக அரசு



  • Jun 19, 2025 11:18 IST

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25,26 தேதிகளில் நடைபெற உள்ளது.

    பூத் கமிட்டி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Jun 19, 2025 10:34 IST

    ராகுல் காந்திக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

    "மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்"
     -பிரதமர் மோடி



  • Jun 19, 2025 09:57 IST

    டெல்லி-லே இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

    டெல்லியில் இருந்து 180 பேருடன் லே-க்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறை அடுத்து விமானம் மீண்டும் டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது; லேவை நெருங்கிய சிறிது நேரத்தில் விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.



  • Jun 19, 2025 09:56 IST

    'தக் லைப்' தியேட்டர் முன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது”

    பெங்களூருவில் 'தக் லைப்' படம் திரையிடப்பட்டால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இதற்காக கன்னட அமைப்புகளின் தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். முதற்கட்டமாக கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவரான பிரவீன் ஷெட்டிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர். பெங்களூருவில் தக்லைப் படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை. பெங்களூரு சுதந்திர பூங்காவில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி உள்ளது. சட்டத்திற்கு எதிராக வேறு எங்கும் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கைகள் தேவையானது என்றும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.



  • Jun 19, 2025 09:48 IST

    சென்னை: ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 74,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,265க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ.122க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • Jun 19, 2025 09:47 IST

    "தக் லைப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்"

    கர்நாடகாவில் தக் லைப் திரைப்படத்தை வெளியிடும்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என உறுதி அளித்துள்ளது. 



  • Jun 19, 2025 09:36 IST

    அகமதாபாத் விபத்து: 210 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது

    அகமதாபாத் விமான விபத்தில் பலியான 210 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 187 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



  • Jun 19, 2025 09:12 IST

    வெளிநாட்டு மாணவர்களின் விசா நேர்காணல் மீண்டும் தொடக்கம்

    நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மாணவர்களின் விசா நேர்காணலை அமெரிக்கா மீண்டும் தொடங்கியது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் மாணவர் விசாக்களுக்கான நேர்காணலை அண்மையில் நிறுத்தியிருந்தது. மாணவர் விசா கோரி விண்ணபித்தவர்கள் தங்களது சமூக வலைதள கணக்கை ஆய்வுசெய்ய அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 19, 2025 09:10 IST

    "கீழடி தமிழர் தாய்மடி; டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும்"

    கீழடி தமிழர் தாய்மடி; டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய மத்திய பாஜக அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அறிவியல்பூர்வமான முடிவுகள் கிடைக்கப்பெற்றும், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் காலந்தாழ்த்தி, தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில், கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பியனுப்பியிருக்கிறது என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 19, 2025 09:06 IST

    மெட்ரோ வழித்தட விபத்து - 4 பொறியாளர்கள் பணிநீக்கம்

    சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் வழித்தட ராட்சத கார்டர் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், மெட்ரோ நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் கவனக்குறைவாக செயல்பட்ட 4 பொறியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



  • Jun 19, 2025 08:43 IST

    பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி

    பா.ம.க. கவுரவ தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேபோல, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அன்புமணி ராமதாஸ், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட பொதுக்குழுவில் இன்று பங்கேற்க உள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



Chennai Tamilnadu News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: