Advertisment

Chennai News Highlights: டெல்லி, பெங்களூரில் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chartered flight

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.49 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

புத்தக கண்காட்சி: சென்னையில் நடைபெற்று வரும் 48 ஆவது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு நிறைவு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பங்கேற்கிறார். பபாசி புத்தகக் காட்சியை கடந்த டிசம்பர் 27 இல் துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

  • Jan 13, 2025 06:31 IST

     ஒவ்வொரு பாத்திரத்திலும் அஜித் தனித்துவத்துடன் சிறந்து விளங்குகிறார் - அண்ணாமலை வாழ்த்து

    துபாய் 24H கார் ரேஸின் 991 பிரிவில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள அஜித் குமாருக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், “துபாய் 24H தொடரில் 991 பிரிவில் ஸ்ரீ அஜித் குமார் ஏ.வி.எல் 3வது இடத்தையும், GT4 பிரிவில் ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ் பட்டத்தையும் பெற்றதால் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தருணம்.

    ஸ்ரீ அஜித் குமார் குறிப்பிடத்தக்கவர், அவர் எடுக்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் தனித்துவத்துடன் சிறந்து விளங்குகிறார், மேலும் அவரது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பால் எண்ணற்ற மற்றவர்களை ஊக்குவிக்கிறார்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Jan 12, 2025 22:17 IST

    சென்னை புத்தகக் காட்சி நிறைவு; ரூ.20 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

    சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 17 நாட்கள் நடைபெற்ற 48வது சென்னை புத்தகக்காட்சி நிறைவடைந்தது. இந்த புத்தகக் காட்சிக்கு 20 இலட்சம் வாசகர்கள் வருகை ட்தந்தனர். சென்னை புத்தகக் காட்சியில் மொத்தம் ரூ.20 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது என்று தகவல் வெளியாகி உள்ளது.



  • Advertisment
    Advertisement
  • Jan 12, 2025 20:55 IST

    உதயநிதிக்கு இருந்தது போல் அஜித்குமாருக்கு நோ காட் ஃபாதர் - அண்ணாமலை

    துபாய் 24H கார் ரேஸின் 991 பிரிவில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “நடிகர் அஜித்குமார், எந்த காட் ஃபாதரும் இல்லாமல் சினிமாவில் நடித்து மிகப்பெரிய நடிகராக வந்துள்ளார். நோ காட்ஃபாதர் உதயநிதி ஸ்டாலின் மாதிரி முட்டுக்கொடுக்க சந்தானமும் பின்னால் தயாரிக்க ஸ்டாலின் ஐயா இருந்தது போல் இல்லை. தனிமனிதனாக பிரேக் எடுத்து சாதனை படைத்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Jan 12, 2025 19:13 IST

    துபாய் 24H கார் ரேஸ் 991 பிரிவில் அஜித் குழுவினர் 3-வது இடத்தில் வெற்றி - உதயநிதி வாழ்த்து

    துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “துபாய் 24H கார் ரேஸின் 991 பிரிவில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளனர் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். 



  • Jan 12, 2025 18:53 IST

    முதல் முறையாக தேர்தல் களத்தில் தி.மு.க- நாம் தமிழர் நேரடி போட்டி 

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், முக்கிய எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்ததால், ஆளும் கட்சி தி.மு.க-வை கடும் போட்டியில்லாம் தேர்தலை எதிர்கொள்கிறார். தி.மு.க சார்பில் சந்திரகுமார் போட்டியிடுகிறார். அதே நேரத்தில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதால், முதல் முறையாக தேர்தல் களத்தில் தி.மு.க- நாம் தமிழர் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.



  • Jan 12, 2025 18:48 IST

    மீனவ சமுதாயத்திற்கு பிரதமர் இதயத்தில் இடம் - ஆளுநர் ரவி 

    பழவேற்காட் அருகே மேல் அவுரிவாக்கம் மீனவ கிராமத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு: “மீனவ சமுதாயத்தினர் பிரதமர் இதயத்தில் இடம்பிடித்துள்ளனர். பிரதமரை சந்திக்கும் போதெல்லாம், மீனவர் பிரச்னையை எடுத்துக் கூறுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Jan 12, 2025 17:42 IST

    ஐ.பி.எல் மார்ச் 23-ஆம் தேதி தொடக்கம்

    நடப்பு ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் மார்ச் 23-ஆம் தேதி தொடங்கும் என பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.



  • Jan 12, 2025 17:03 IST

    த.வெ.க சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா

    சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் த.வெ.க சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் 500 பேருக்கு சமபந்தி விருந்து மற்றும் 300 தூய்மைப் பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டன.



  • Jan 12, 2025 15:41 IST

    ரேஸில் வாகை சூடிய ஏ.கே அணி

    துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ரேஸ் பிரிவில் அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



  • Jan 12, 2025 15:38 IST

     ஆதாரத்தை தி.மு.க காட்ட வேண்டும் - தம்பிதுரை

    டங்ஸ்டன் சுரங்கத்தை தான் ஆதரித்து பேசியதாக தி.மு.க கூறும் குற்றச்சாட்டுகளை அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் தங்கதுரை மறுத்துள்ளார். இதற்கான ஆதாரத்தை தி.மு.க காண்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jan 12, 2025 14:53 IST

    பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு ஜெகதீச பாண்டியன் கண்டனம்

    பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். திராவிடத்தையும், பெரியாரையும் ஒழிப்பது தான் எனது நோக்கம் என சீமான் பேசியிருப்பது அவரது சொந்த கருத்து மட்டுமே என ஜெகதீச பாண்டியன் கூறியுள்ளார்



  • Jan 12, 2025 14:26 IST

    "அரசியலமைப்பை ஸ்டாலின் அவமதித்து விட்டார்": ஆர்.என். ரவி கண்டனம்

    சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடாமல் அரசியலமைப்பை முதலமைச்சர் ஸ்டாலின் அவமதித்து விட்டார் என ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். உரையை படிக்காமல் ஆளுநர் சென்றதாக ஸ்டாலின் விமர்சித்த நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Jan 12, 2025 14:07 IST

    சீமான் பேச்சுக்கு நா.த.க-வில் எதிர்ப்பு

    பெரியார் குறித்த சீமானின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன்படி, பெரியார் குறித்து சீமான் பேசியது அவரது சொந்த கருத்து என்றும், கட்சியின் ஒட்டுமொத்த கருத்து கிடையாது என்றும் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைபாளர் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.



  • Jan 12, 2025 13:46 IST

    தமிழர்கள் பண்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்த வேறு பண்பாடுகளைத் தகர்ப்பதற்கான ஆயுதம் தமிழர் திருநாள்; ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

    தமிழர்கள் பண்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்த வேறுவித பண்பாடுகளைத் தகர்ப்பதற்கான ஆயுதம் தமிழர் திருநாள் என தி.மு.க தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்



  • Jan 12, 2025 13:29 IST

    திருப்பதியில் தங்க பிஸ்கட்டை திருடிச் செல்ல முயன்ற ஒப்பந்த ஊழியர் கைது

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது 100 கிராம் தங்க பிஸ்கட்டை திருடிச் செல்ல முயன்ற ஒப்பந்த ஊழியர் பென்சிலய்யா கைது செய்யப்பட்டுள்ளார்



  • Jan 12, 2025 13:01 IST

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியா? - இன்று மாலை அறிவிப்பு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிடுவது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது. பா.ஜ.க உட்கட்சி தேர்தல் தொடர்பாக, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. ஆலோசனையில் அண்ணாமலை, எல்.முருகன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க போட்டியிடவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது



  • Jan 12, 2025 12:38 IST

    பெரியார் எந்த சமுதாயத்திற்கு நீதியை பெற்று கொடுத்தார்? - சீமான்

    பெரியார் எந்த சமுதாயத்திற்கு நீதியை பெற்று கொடுத்தார். பெரியார் சமூக நீதியை நிலைநாட்டினார் என்றால், பாமக ஏன் இன்னும் போராடுகிறது? அம்பேத்கருடன் பெரியாரை ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்



  • Jan 12, 2025 12:10 IST

    தமிழர்களை தேடிச் சென்று ஆதரவுக் கரம் நீட்டி வருகிறோம் - ஸ்டாலின்

    உலகை உலுக்கும் உக்ரைன் போராக இருந்தாலும் சரி.. மனதை உருக்கும் இஸ்ரேல் போராக இருந்தாலும் சரி.. தமிழர்களை தேடிச் சென்று ஆதரவுக் கரம் நீட்டி வருகிறோம் என சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற 'அயலகத் தமிழர் தினம்' மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சாதனைகளை பட்டியலிட்டார்



  • Jan 12, 2025 11:42 IST

    அயலகத் தமிழர்களுக்காக ரூ.10 கோடியில் புதிய திட்டம்

    100 ஆசிரியர்கள், தமிழ் கலைஞர்கள் தமிழர் வாழும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். ஆசிரியர்கள், கலைஞர்கள் தமிழ் மொழி, கலைகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிப்பர்.  ஆசிரியர்கள், கலைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.



  • Jan 12, 2025 11:05 IST

    6 மாவட்டங்களில் லேசான மழை

    மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் பிற்பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jan 12, 2025 11:03 IST

    விஷால் உருக்கம்

    “மருந்துகளை விட COME BACK.. GET WEL SOON என நீங்கள் செய்த வேண்டுதல்கள்தான் என்னை குணமாக்குச்சு..” என்று மதகஜராஜா’ பட PRESS SHOW-ல் நடிகர் விஷால் உருக்கமாக கூறினார்.



  • Jan 12, 2025 10:29 IST

    விவேகானந்தர் புகழைப் போற்றி வணங்குவோம்: அண்ணாமலை

    சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றி வணங்குகிறோம். நாட்டிற்காக எளிய மக்கள் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை விதைத்தவர் விவேகானந்தர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



  • Jan 12, 2025 09:55 IST

    தமிழ்நாடு முழுவதும் 1.47 கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது!

    தமிழ்நாடு முழுவதும் நேற்று வரை 1.47 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 67% பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பயணாளிகளுக்கு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.



  • Jan 12, 2025 09:27 IST

    மகா கும்பமேளா நாளை தொடங்குகிறது

    மகா கும்பமேளா உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் நாளை தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 



  • Jan 12, 2025 09:25 IST

    மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவருக்கு விருது

    முன்னாள் மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC) தலைவரும், மலேசியாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்துக்கு ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதினை இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.



  • Jan 12, 2025 09:03 IST

    சிறப்புப் பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் பயணம்

    பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். ஜனவரி 10 மற்றும் ஜனவரி 11 ஆகிய நாட்களில் மொத்தம் 7,513 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Jan 12, 2025 09:00 IST

    2 செயற்கைக்கோள் தூரம் குறைப்பு

    இஸ்ரோவால் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி60 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களுக்கு இடையிலான தூரம் குறைக்கப்பட்டது. கடந்த 8ஆம் தேதி 500 மீட்டராக இருந்த இடைவெளி 15 மீட்டதாக குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.தீவிர ஆய்வுக்கு பின்னர் இரண்டு செயற்கைக்கோள்களையும் இணைக்கும் பணி நடைபெறும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.



  • Jan 12, 2025 08:44 IST

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

    சென்னை சேப்பாக்கத்தில் ஜன.25ல் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 போட்டிக்கு இன்று காலை 11 மணி முதல் இணையத்தில் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.



  • Jan 12, 2025 08:39 IST

    நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. 56 வயதான கோயில் யானை காந்திமதிக்கு மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்தபோதும் உயிரிழந்தது. 1985 ஆம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் கோயிலுக்கு யானை நன்கொடையாக அளிக்கப்பட்டது. 

     

     

     

     



  • Jan 12, 2025 08:27 IST

    டெல்லியில் 'விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடலில்' பிரதமர் மோடி பங்கேற்பு

    பிரதமர் நரேந்திர மோடி 'விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல்' நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இது அரசியல் தொடர்பு இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாகும். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான தேசிய இளைஞர் தினத்தையொட்டி இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.



  • Jan 12, 2025 08:17 IST

    ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் தூரம் 3 மீட்டராக குறைப்பு

    பி.எஸ்.எல்.வி. சி 60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவட்டப்பட்ட 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 8 ஆம் தேதி 500 மீ ஆக இருந்த இடைவெளி படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 3 மீ என்ற நிலையை எட்டியுள்ளது. தீவிர ஆய்வுக்கு பிறகு இரண்டையும் இணைக்கும் பணி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.



  • Jan 12, 2025 07:41 IST

    மனித நேயமற்ற சினிமா - நடிகை நித்யா மேனன் வேதனை

    உடல்நிலை சரியில்லை என்றாலும் நடித்து கொடுத்துவிட வேண்டும் என்கிற மனித நேயமற்ற தன்மை சினிமாவில இருப்பதாக, நடிகை நித்யா மேனன் வேதனை தெரிவித்துள்ளார். இயக்குநர்கள் அனைவரும் அப்படி இல்லை என்பதை மிஸ்கின் நிரூபித்து விட்டதாக ஓபன் டாக் கொடுத்துள்ளார்.



  • Jan 12, 2025 07:36 IST

    மீனவர்கள் கைது

     எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களிடம் இருந்து 2 விசை படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.



  • Jan 12, 2025 07:36 IST

    சபரிமலை மகரவிளக்கு பூஜை

    சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு பூஜை வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பந்தளம் அரண்மனையில் இருந்து பாரம்பரிய முறைப்படி ஆபரண பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டன. 25 பேர் கொண்ட குழுவினர் சுமார் 100 கி.மீ. ஆபரண பெட்டிகளை தலையில் சுமந்து கோயில் சன்னிதானத்திற்கு எடுத்துச் செல்வார்கள். 



  • Jan 12, 2025 07:35 IST

    புதுச்சேரியில் இன்று முதல் தலைக்கவசம் கட்டாயம்

    புதுச்சேரியில் இன்று முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். ஹெல்மெட் அணிவதை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி டி. ஐ. ஜி சத்தியசுந்தரம் தெரிவித்துள்ளார். பைக் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக ஹெல்மெட் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.



  • Jan 12, 2025 07:32 IST

    போகி - இன்று, நாளை விமான சேவைகளில் மாற்றம்

    போகி பண்டிகையையொட்டி இன்றும் நாளையும் 14 விமானங்களின் வருகை, புறப்பாடு நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. மஸ்கட், கோலாலம்பூர், துபாய், சிங்கப்பூரிலிருந்து காலை 9.30 மணிக்கு விமானங்கள் வரும். அபுதாபி - சென்னை இடையேயான ஏர் ஏசியா விமானம் ஒரு மணி நேரம் முன்னதாக வரும். 



Live News news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment