Advertisment

Chennai News Updates: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Heavy rainfall

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

சிறப்பு பேருந்து: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 2,17,000 பயணிகள் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 6.40 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Jan 14, 2025 00:43 IST

    பொங்கல் தொடர் விடுமுறை:  கிளாம்பாக்கத்தில் குவியம் மக்கள் கூட்டம்!

     கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நான்காவது நாளாக அலைமோதும் பயணிகள் கூட்டம். பொங்கல் தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் அரசுப் பேருந்துகளில் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.



  • Jan 13, 2025 21:00 IST

    எல்லா மக்களும் சமம்.. இதுதான் என்னோட தத்துவம்: பாடகர் டி.எம்.கிருஷ்ணா

    சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்று பெரியார் பாடல் பாடிய, பாடகர் டி.எம்.கிருஷ்ணா "எல்லா கலைகளும் சமம்.. எல்லா மக்களும் சமம்.. இதுதான் என்னோட தத்துவம் என்று கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisement
  • Jan 13, 2025 20:31 IST

    பெண் தவறவிட்ட கைப்பையை பத்திரமாக மீட்டு ஒப்படைத்த போக்குவரத்து காவலர்

    நாகர்கோவிலில் கைப்பையை தவறவிட்ட பெண், கைப்பையில் பணம், நகை மற்றும் 2 ஐபோன்கள் இருந்ததாக கூறிய நிலையில், பையை கண்டுபிடித்த போக்குவரத்து காவலர் விஜயகுமார் பத்திரமாக அந்த பெண்ணிடம் ஒப்படைத்தார்,



  • Jan 13, 2025 20:28 IST

    யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு

    வரும் 15ம் தேதி நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது, பொங்கல் விடுமுறையில் தேர்வு நடத்துவதா? என பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



  • Jan 13, 2025 19:54 IST

    100 நாள் வேலை திட்டம்: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கான ஊதிய நிலுவைத் தொகை ரூ. 1,056 கோடியை உனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 



  • Jan 13, 2025 19:49 IST

    பொங்கல் பண்டிகை -  பூக்களின் விலை 7 மடங்கு உயர்வு

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றுமுன்தினம் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு,அனைத்து பூக்களின் விலை 4 மடங்கு உயர்ந்தது. நாளை பொங்கல் பண்டிகை முன்னிட்டு, இன்று காலை அனைத்து பூக்களின் விலை 7 மடங்கு உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மல்லி 2,600 ரூபாயில் இருந்து 3 ஆயிரத்துக்கும் ஐஸ் மல்லி 2 ஆயிரத்தில் இருந்து 2,500க்கும் முல்லை 1,400 லிருந்து 2,100க்கும் ஜாதிமல்லி 1000 லிருந்து 1,800 க்கும் கனகாம்பரம் 1,400 லிருந்து 1,500க்கும் அரளி பூ 200 லிருந்து 500 க்கும் சாமந்தி 160 லிருந்து 180 க்கும் சம்பங்கி 180 லிருந்து 250க்கும் பன்னீர் ரோஸ் 160 லிருந்து 180 க்கும் சாக்லேட் ரோஸ் 150 லிருந்து 280 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



  • Jan 13, 2025 19:13 IST

    விஜய் அண்ணாவிற்கு நன்றி - லோகேஷ் கனகராஜ் 

    'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'விஜய் அண்ணாவிற்கு நன்றி' நெகிழ்ச்சியான பதிவு போட்டுள்ளார். 



  • Jan 13, 2025 19:12 IST

    1,60,000 ஆண்டுகளுக்கு பின் - அரிய நிகழ்வு

    வானில் அரிய நிகழ்வாக ஒன்றரை லட்சம் வருடங்கள் பயணித்து சூரியனுக்கு பக்கத்தில் இன்று இரவு அட்லஸ் வால் நட்சத்திரம் வருகிறது. வானம் தெளிவாக இருந்தால் வெறும் கண்களால் பார்க்க முடியும். 



  • Jan 13, 2025 19:11 IST

    படிகளில் தொங்கியபடி பயணம் 

    பொங்கல் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள். தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. ரயில் பெட்டிகளில் நிற்கக்கூட இடம் இல்லாததால், படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.



  • Jan 13, 2025 18:57 IST

    ஆளுநருக்கு சி.பி.எம் கண்டனம்

    "ஆளுநர் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு தான் குறைந்தபட்சம் பொறுப்புணர்வோடும் நாகரிகத்தோடும் நடக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவருக்கு அத்தகைய குணமில்லை எனில் அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்" என்று  ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சி.பி.எம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். 



  • Jan 13, 2025 18:40 IST

    ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு - 7 பேருக்கு ஆயுள் தண்டனை

    சென்னையில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்த கீழமை நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 



  • Jan 13, 2025 18:35 IST

    சிக்கி தவிக்கும் தாம்பரம் சண்முகம் சாலை 

    தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் வாங்க  மக்கள் குவிந்து வருகிறார்கள். வாகனங்களும் அதிகளவில் செல்வதால், கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.வாகன ஓட்டிகள் - பாதசாரிகள் இடையே வாக்குவாதம் நடந்து வருகிறது. 

     

     



  • Jan 13, 2025 16:17 IST

    போதைப்பொருள் தடுப்பு காவல் குழுவினருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் பாராட்டு

    சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் குழுவினருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்தார். 2025-ல் 300 போதைப் பொருள் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Jan 13, 2025 15:36 IST

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு 31வது இடம்

    டாம் டாம் நிறுவனம் வெளியிட்ட 2025-ம் ஆனண்ின் இந்தியாவின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் படிட்யலில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது. கொல்கத்தாவில் 10 கி.மீ-ஐக் கடக்க 34 நிமிடங்கள் 33 நொடிகள் தேவைப்படுகிறது. பெங்களூரு 2வது இடத்திலும் புனே 3வது இடத்திலும் உள்ளன. சென்னை 31-வது இடத்தைப் பிடித்துள்ளது.



  • Jan 13, 2025 15:15 IST

    தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள மாவட்டங்களில் விடுமுறை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (ஜனவரி 14) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 13, 2025 14:46 IST

    "சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார்": - ஆர்.என். ரவி பேச்சு

    சனாதன தர்மத்தை வள்ளலார் மீட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். மேலும், ஆங்கிலேயர்கள் அழிக்கப் பார்த்த தமிழையும், சமஸ்கிருதத்தையும் வள்ளலார் மீட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jan 13, 2025 14:24 IST

    பண்டிகை நாட்களில் தேர்வுகள் நடக்காது - கேந்திரிய வித்யாலயா 

    ஜனவரி 13 முதல் 16-ஆம் தேதிவரை தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என கேந்திரிய வித்யாலயா அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேர்வுகளின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 13, 2025 13:59 IST

    தி.மு.க-வுடன் போட்டியிட தயாராக இல்லை - தமிழிசை 

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-வுடன் போட்டியிட எந்தக் கட்சியினரும் தயாராக இல்லை என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



  • Jan 13, 2025 13:35 IST

    பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - இ.பி.எஸ்

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த நபர், உள்நோயாளியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.



  • Jan 13, 2025 13:22 IST

    பி.சி.சி.ஐ புதிய செயலாளர் தேர்வு

    பி.சி.சி.ஐ புதிய செயலாளராக தேவஜித் சைகியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசாம் கிரிக்கெட் வாரிய செயலாளராக முன்பு பதவி வகித்த இவர், 2022-ஆம் ஆண்டு முதல் பி.சி.சி.ஐ இணை செயலாளராக இருந்துள்ளார்.



  • Jan 13, 2025 13:15 IST

    நிர்ணயித்த தொகைக்கே கட்டணம் வசூல் - சிவசங்கர் 

    ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கே கட்டணம் வசூலிக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் வந்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jan 13, 2025 13:02 IST

    ஜெயலலிதாவின் சொத்துகளை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது

    ஜெயலலிதாவின் சொத்துகளை ஒப்படைக்க கோரி தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தீபா தரப்பு தாக்கல் செய்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஒப்படைக்க கோரி தீபா மனு தாக்கல் செய்தார். 

    சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக சொத்துக்கள் அனைத்தும் அரசு பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது என கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறியது. 

    மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என தீபாவுக்கு அறிவுறுத்தல் வழங்கியது. 



  • Jan 13, 2025 12:44 IST

    திருப்பதி : லட்டு விநியோகிக்கும் மையத்தில் திடீர் தீ

    திருப்பதி மலையில் லட்டு விநியோகிக்கும் மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 47ஆம் எண் மையத்தில் மின்கசிவு காரணமாக தீ பற்றியுள்ளது. 

    கரும்புகை வெளியேறுவதை பார்த்து அலறி அடித்து ஓடிய பக்தர்கள். உடனடியாக தேவஸ்தான மின்சார துறை அதிகாரிகள் மின்சாரத்தை நிறுத்தி துரித நடவடிக்கை எடுத்தனர். 



  • Jan 13, 2025 12:41 IST

    தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட மஹிந்திரா கார்களை பார்த்து ஸ்டாலின் பெருமிதம்

    தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் அதிநவீன SUV கார்களை பார்த்து தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். 

    தமிழ்நாடு அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற, வேலுச்சாமி உள்ளிட்ட பொறியாளர்கள் இந்த கார்களை வடிவமைத்து முத்திரை பதித்துள்ளனர். 



  • Jan 13, 2025 12:36 IST

    3,186 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு பதக்கங்கள்

    2025 பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 



  • Jan 13, 2025 12:34 IST

    பொங்கல் பண்டிகை - பூக்களின் விலை உயர்வு

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மல்லி மற்றும் முல்லை பூக்களின் விலை கிலோ ரூ.2,400க்கும், ஜாதி மல்லி ரூ.2,000க்கும், ஐஸ் மல்லி கிலோ ரூ.1,900க்கும் விற்பனைக்கும் செய்யப்படுகிறது. 



  • Jan 13, 2025 11:11 IST

    தனுஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன்.

    தனுஷ் நடிப்பில் புதிய படத்தை வெற்றிமாறன் மீண்டும் இயக்குகிறார். படப்பிடிப்புகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 13, 2025 10:54 IST

    மருத்துவமனையில் புகுந்து பாலியல் தொல்லை

    கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மகளிர் பிரிவில் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் 50வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை மதுபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தது காவல்துறை



  • Jan 13, 2025 10:44 IST

    அஜித் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகள் - இபிஎஸ்

    அஜித் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்என இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Jan 13, 2025 09:52 IST

    ஞானசேகரனின் வீடு கோவில் நிலத்தில் உள்ளது - அமைச்சர்

    அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் கைதான ஞானசேகரனின் வீடு கோவில் நிலத்தில் உள்ளது. 16 இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது, முன் பகுதி மாநகராட்சிக்கும் பின்புறம் அறநிலையத்துறைக்கும் சொந்தம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.



  • Jan 13, 2025 09:13 IST

    சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து கொச்சுவேலிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06151) செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு (ஜன 14 )மதியம் 2 மணிக்கு சென்றடையும். இதற்கான முன்பதிவு தொடங்கியது. 



  • Jan 13, 2025 08:44 IST

    திருச்செந்தூர் கடற்கரையில் கிடைக்கும் சிற்பங்கள்

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடலில், சமீப காலமாக கடல் சீற்றம், கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கடலில் இருந்து பல்வேறு விதமான வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்று வருகின்றன. இதனை தொல்லியல் துறை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 



  • Jan 13, 2025 08:14 IST

    போகி பண்டிகை புகை மூட்டம்

    போகி பண்டிகை புகை மூட்டம் காரணமாக சென்னையில் 30 விமானங்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.



  • Jan 13, 2025 08:10 IST

    சபரிமலையில் நாளை மகரஜோதி - ஏற்பாடுகள் தீவிரம்

    சபரிமலையில் நாளை ஏற்படும் மகரஜோதி தரிசனத்திற்கான முன்னேற்பாடுள்  தீவிரமடைந்துள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம். இன்றும் நாளையும் ஆன்லைனில் புக் செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 



  • Jan 13, 2025 08:08 IST

    போகி பண்டிகை - சென்னையில் காற்று மாசு

    சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பெய்த மழையால் காற்று மாசு குறைந்துள்ளது. காலை 5 மணி நிலவரப்படி காற்றின் தர குறியீடு ஆலந்தூரில் 72ஆகவும், பெருங்குடியில் 71ஆகவும் , அரும்பாக்கத்தில் 70ஆக பதிவாகியுள்ளது. 5மணி நிலவரப்படி காற்று மாசு குறைந்துள்ள நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் படிப்படியாக உயரும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.



  • Jan 13, 2025 08:06 IST

    அஜித்குமாருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வாழ்த்து

    துபாய் 24H சீரிஸ் கார் ரேஸில் அஜித்குமார் அணி வென்ற நிலையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Jan 13, 2025 07:46 IST

    10 மணி வரை எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.



  • Jan 13, 2025 07:43 IST

    புதுச்சேரி சிறுமிக்கு HMPV தொற்று

    புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV வைரஸ் தொற்று உறுதியானது. காய்ச்சல் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.



  • Jan 13, 2025 07:40 IST

    விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு

    சென்னையில் போகி புகை, பனிமூட்டம் காரணமாக 30 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களில் மாற்றம். டெல்லி, பெங்களூருவில் இருந்து அதிகாலை சென்னை வரவேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போகியையொட்டி கழிவுகள் எரிக்கப்படுவதால் கடும் புகை மூட்டம் விமான நிலைய ஓடுபாதையை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. விமான நேரம் மாற்றங்கள் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 13, 2025 07:39 IST

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - போக்குவரத்து மாற்றம்

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறும் நிலையில், இன்று காலை 9 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மதுரை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பிலிருந்து அவனியாபுரம் நகருக்குள் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. திருப்பரங்குன்றம் செல்லக்கூடிய வாகனங்கள் அவனியாபுரம் பைபாஸ், வெள்ளைக்கல் வழியாக செல்ல வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.



  • Jan 13, 2025 07:37 IST

    போகி பண்டிகை கொண்டாட்டம்

    சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இன்று காலை முதலே போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 



Live News news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment