/indian-express-tamil/media/media_files/2024/11/22/mumnzI6emEtmQ0CGAhJ6.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48 காசுக்கும் விற்பனையாகிறது.
இடைத்தேர்தல்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
-
Jan 19, 2025 00:05 IST
"ஜன. 25ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி வரும் 25ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் ஜன.18 வரை 85% நிறைவு பெற்றுள்ளது. விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை வரும் 25ம் தேதி வரை பெற்று பயன் பெறலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
-
Jan 19, 2025 00:03 IST
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகார் எண் அறிவித்த அமைச்சர்
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
Jan 19, 2025 00:01 IST
சென்னை அருகே ஆவடி சகோதரர்கள் விரட்டி படுகொலை
சென்னை அருகே ஆவடி, பட்டாபிராம் ஆயல்சேரி பகுதியை சேர்ந்த அண்ணன் - தம்பி ஓட ஓட வெட்டிக்கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவரையும் கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jan 18, 2025 21:32 IST
தல வந்தா தள்ளிப்போய் தானே ஆகனும்: பிரதீப் ரங்கநாதன் ட்விட்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகியுள்ள ட்ராகன் படம், வரும் பிப்ரவரி 14-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 6-ந் தேதி அஜித் நடித்த விடா முயற்சி திரைப்படம் பிப்ரவரி 6-ந் தேதி வெளியாகவதால், ட்ராகன் படம், பிப்ரவரி 21-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தல வந்தால் தள்ளிப்போய் தானே ஆக வேண்டும் என்று பிரதீப் ரங்கநாதன் பதிவிட்டுள்ளார்.
Thala vandha thalli poyi dhana aganum 😊
— Pradeep Ranganathan (@pradeeponelife) January 18, 2025
Dragon 🐉 from Feb 21 . -
Jan 18, 2025 21:26 IST
பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் இன்றுவரை 85 சதவீதம் நிறைவு: அமைச்சர் தகவல்!
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் இன்றுவரை 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். மீதமுள்ள பயணாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்கும் பணி வரும் ஜனவரி 25-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
-
Jan 18, 2025 19:29 IST
ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடிக்கு கண்டனம்: தமிழ்நாடு மாணவர் கழகம் அறிக்கை
கோமியம் (மாட்டு சிறுநீர்) குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்குப் புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடிக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கழகம் அறிக்கையில், தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல்படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
-
Jan 18, 2025 18:51 IST
ஆளுநரை மாற்ற வேண்டாம் - ஸ்டாலின்
ஆளுநரை தான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி பேசப் பேசத்தான் பா.ஜ.க அம்பலப்படும் என்றும், திராவிட கொள்கைகள் மேலும் மக்களிடம் சென்றடையும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Jan 18, 2025 18:24 IST
ஆளுநர் ரவிக்கு எதிராக தீர்மானம்
ஆளுநர் உரையைப் படிக்காமல் வெளியேறியதற்கு தமிழர்களிடம், ஆர்.என். ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என தி.மு.க சட்டத்துறை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
Jan 18, 2025 18:03 IST
இந்தியா ஒரு சனாதன தேசம் - ஆளுநர் ஆர்.என். ரவி
இந்தியா ஒரு சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக் காட்டு என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக காசிக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jan 18, 2025 18:00 IST
விஜய்க்கு 2 மணி நேரம் அனுமதி
ஜனவரி 20-ஆம் தேதி பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை, த.வெ.க தலைவர் விஜய் சந்திக்கிறார். இந்நிலையில், அவருக்கு 2 மணி நேரம் அனுமதி வழங்கி காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
-
Jan 18, 2025 17:39 IST
காவல்துறைக்கு முழு சுதந்திரம் தேவை - அண்ணாமலை
சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடந்ததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பழிவாங்கும் போக்கிற்கு காவல்துறையை பயன்படுத்தாமல், முழு சுதந்திரத்துடன் அவர்களை பணியாற்ற விட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
-
Jan 18, 2025 17:17 IST
முட்டை குருமா - பக்தர்களை கண்டித்த போலீசார்
திருப்பதிக்கு முட்டை குருமா கொண்டு சென்று சாப்பிட்ட கும்மிடிப்பூண்டி பக்தர்களுக்கு ஆந்திர போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். திருப்பதி மலையில் அசைவ உணவுகள், புகையிலை பொருட்கள் உபயோகத்திற்கு ஏற்கனவே தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Jan 18, 2025 16:50 IST
"அருந்ததி இன மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம்"
3 சதவீதம் உள் இடஒதுக்கீட்டால் அருந்ததி இன மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Jan 18, 2025 16:41 IST
சென்னையில் சிறப்பு ரயில் சேவை
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் 20-ஆம் தேதி தாம்பரம் - காட்டாங்குளத்தூர் பகுதிகளில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Jan 18, 2025 16:31 IST
தமிழ் சங்கமம் குறித்து ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி கருத்து
காசியை பற்றி மக்கள் புரிந்து கொள்வதற்கு தான் தமிழ் சங்கமம் நிகழ்வு நடத்தப்படுகிறது ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். குறிப்பாக, 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற தலைப்பின் அடிப்படையில் இங்குள்ள மக்கள் காசியை பற்றி தெரிந்து கொள்ள வசதியாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jan 18, 2025 16:03 IST
சென்னை சர்வதேச புத்தகக் காட்சி - 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சியில் மொழிபெயர்ப்பு தொடர்பாக 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது .
1,005 ஒப்பந்தங்கள் தமிழ் புத்தகங்களை வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கும், 120 ஒப்பந்தங்கள் வெளிநாட்டு மொழி புத்தகங்களை தமிழில் மொழி பெயர்ப்பதற்கும் ஆனவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Jan 18, 2025 16:02 IST
சென்னை திரும்ப இன்று 3,412 பேருந்துகள் இயக்கம்
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப வசதியாக இன்று 3,412 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வசதியாக தமிழ்நாடு முழுவதும் 5,290 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை திரும்ப ஏதுவாக இன்று 3,412 பேருந்துகளும், நாளை 4,302 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை ஒட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Jan 18, 2025 15:46 IST
12,000 பணியாளர்களை சேர்க்ககும் விப்ரோ
2025-26ம் ஆண்டில் புதிதாக 12,000 பணியாளர்களை சேர்க்க உள்ளதாக தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ அறிவித்துள்ளது. 12,000 புதிய பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக விப்ரோ நிறுவன அதிகாரி சவுரப் கோவில் தகவல் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில் கேம்பஸ் மூலம் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் எண்ணிக்கை 10,000ஐ எட்டும் என எதிர்பார்ப்பு. 3வது காலாண்டில் புதிதாக ஏற்கனவே 7,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அடுத்த காலாண்டில் கூடுதலாக 2,500 முதல் 3,000 வரை புதிய பணியாளர்களை பணியமர்த்த திட்டம். ஒவ்வொரு காலாண்டிலும் 2,500 முதல் 3000 வரை புதிய பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
-
Jan 18, 2025 15:12 IST
சாம்பியன்ஸ் டிராபி - இந்திய அணி அறிவிப்பு
மும்பையில், சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது.
-
Jan 18, 2025 14:49 IST
ஒரே நாடு, ஒரே தேர்தலை மக்கள் ஏற்க மாட்டார்கள் - கபில் சிபல் பேச்சு
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். சென்னையில் தி.மு.க சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உரையாற்றினார். அப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் கோட்பாட்டின் அடிப்படையிலேயே குறைபாடு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
-
Jan 18, 2025 14:43 IST
கொல்கத்தா பாலியல் படுகொலை - சஞ்சய் ராய் குற்றவாளி; கோர்ட் அதிரடி தீர்ப்பு
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் குற்றவாளி என்று சீல்டா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் தண்டனை விபரங்கள் வருகிற திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
-
Jan 18, 2025 14:36 IST
சட்டத்தை ஆளுநர் மதிப்பதில்லை - சபாநாயகர் அப்பாவு பேச்சு
"உச்சநீதிமன்றத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் மதிப்பதில்லை; இல்லாத அதிகாரத்தை ஆளுநர் கையில் எடுக்கிறார்" என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
Jan 18, 2025 14:14 IST
பரந்தூர் மக்களை சந்திக்க நிபந்தனை இல்லை - த.வெ.க மாநில பொருளாளர் தகவல்
"பரந்தூர் விமானநிலைய போராட்டக் குழுவினரை சந்திக்க த.வெ.கவுக்கு நிபந்தனை விதிக்கப்படவில்லை. த.வெ.க தலைவர் விஜய் வருகை குறித்து தற்போது எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை" என்று த.வெ.க மாநில பொருளாளர் வெங்கட்ராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Jan 18, 2025 13:58 IST
வதந்திக்கு முற்றுப்புள்ளி
பிரபல இசைக்குழுவான கோல்டு பிளேவின் (Coldplay) முன்னணி பாடகர் கிறிஸ் மார்ட்டின் மற்றும் காதலியான டகோட்டா ஜோன்சன் இருவரும் மும்பையில் உள்ள கோவிலுக்கு ஜோடியாக சென்றனர். இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
-
Jan 18, 2025 13:35 IST
மதுரை-சென்னை இடையே விமானக் கட்டணம் அதிகரிப்பு
மதுரை-சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரித்துள்ளது. திருச்சி – சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.11,089 வரை அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி – சென்னை ரூ.17,365, சேலம் – சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.10,441 வரை அதிகரித்துள்ளது.
-
Jan 18, 2025 13:23 IST
தமிழ்நாட்டில் கால் பதிக்கும் டாபர் நிறுவனம்: தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி
திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடியில் டாபர் நிறுவன தொழிற்சாலைக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உள்ளது. தொழிற்சாலை கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாபர் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. டாபர் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியது
-
Jan 18, 2025 13:05 IST
9 மாவட்டங்களில் இன்று கனமழை - வானிலை மையம் தகவல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (18-01-2025) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
Jan 18, 2025 12:25 IST
தாம்பரம் அருகே ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலரிடம் செயின் பறிப்பு ஏற்பட்டுள்ளது. சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்பட 8 இடங்களில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையனை காவல்துறை தேடிவருகின்றனர். தொடர் செயின் பறிப்பு சம்பவங்களால் பெண்கள் அனைவரும். அச்சத்தில் உள்ளனர்.
-
Jan 18, 2025 11:58 IST
நடிகர் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
நடிகர் ரவி – ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து வழக்கை பிப்., 15-க்கு ஒத்திவைத்தது குடும்ப நல நீதிமன்றம். சமரச பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பின்னர் விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு.
-
Jan 18, 2025 11:56 IST
“விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும்” - செல்வப்பெருந்தகை அழைப்பு
“இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என நினைத்தால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும்” என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.
-
Jan 18, 2025 11:52 IST
மக்களை குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடல் சாதனை' - அன்புமணி காட்டம்
தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை கஞ்சாவும், மதுவும் தான் தாராளமாக கிடைக்கின்றன. அதனால் தமிழ்நாடு சீரழிவை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். கஞ்சா புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களை குடிக்கு
அடிமையாக்கியது தான் திராவிட மாடல் சாதனை என்று அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார். -
Jan 18, 2025 11:45 IST
பரந்தூரில் பொதுமக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு
பரந்தூரில் பொதுமக்களை விஜய் சந்திக்க 2 இடங்களை ஒதுக்கியுள்ளது காவல்துறை. 2 இடங்களில் எங்கு பொதுமக்களை சந்திக்கிறார் என்பதை இன்று மாலைக்குள் தெரிவிக்க நிபந்தனை. அதிக கூட்டத்தை கூடாமல் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும் தான் வர வேண்டும் என நிபந்தனை. கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
-
Jan 18, 2025 11:43 IST
அனைத்து காய்கறிகளின் விலையும் சரிந்து உள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறைக்கு பிறகு, மக்கள் மெல்ல மெல்ல சென்னை திரும்பும் நிலையில், தொடர்ந்து காய்கறி விற்பனை குறைவாகவே இருப்பதால் கோயம்பேடு சந்தையில் பச்சை காய்கறிகள் உட்பட அனைத்து காய்கறிகளின் விலையும் சரிந்து உள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.அதன்படி கடந்த 12ம் தேதி நிலவரப்படி, ஒரு கிலோ வெங்காயம் அதிகபட்சமாக 40 ரூபாய்க்கும், தக்காளி 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 35 ரூபாய்க்கும், ஊட்டி கேரட் 70 ரூபாய்க்கும், பீன்ஸ் 60 ரூபாய்க்கும், முள்ளங்கி 20 ரூபாய்க்கும், முட்டைகோஸ் 15 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 60 ரூபாய்க்கும் என விற்பனை செய்யப்பட்டது.இதனிடையே தற்போது, காய்கறிகளின் விலை கிலோவுக்கு 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வெகுவாக சரிந்துள்ளது. தற்போது ஒரு கிலோ வெங்காயம் அதிகபட்சமாக 32 ரூபாய்க்கும், தக்காளி 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 35 ரூபாய்க்கும், ஊட்டி காரட் 60 ரூபாய்க்கும், பீன்ஸ் 40 ரூபாய்க்கும், முள்ளங்கி 20 ரூபாய்க்கும், முட்டைகோஸ் 10 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Jan 18, 2025 11:37 IST
"சமத்துவத்தை வலியுறுத்துகிற ஒரு இசம் ட்ராவிடியனிசம்" - அமைச்சர் பொன்முடி பேச்சு
கம்யூனிசம், செக்குலரிஸ்ம் என்று பல இசங்கள் இருக்கின்ற, அந்த இசத்துலேயே சமத்துவத்தை வலியுறுத்துகின்ற ஒரு இசம் ட்ராவிடியனிசம் என்று திமுக சட்டத்துறை மாநில மாநாட்டில் அமைச்சர் பொன்முடி பேச்சு.
-
Jan 18, 2025 11:26 IST
சென்னை அருகே சாலையில் நடந்த அதிர்ச்சியூட்டும் விபத்து
செங்கல்பட்டில் மாவட்ட சிறைச்சாலை அருகே சாலையில் மாடுகள் நடமாடுவதால் அடிக்கடி விபத்துக்கள் நேரிடுகின்றன. இந்நிலையில் சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது இருசக்கர வாகனம் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சஞ்சய் என்ற இளைஞர் காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சாலையில் மாடுகள் நடமாடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Jan 18, 2025 11:16 IST
திமுக கொண்டு வந்த சட்டங்கள் வலிமையானவை - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
திமுக கொண்டு வந்த சட்டங்கள் அனைத்தும் வலிமையானவை, எண்ணற்ற சட்ட போராட்டங்களை நடத்தி வழக்கு தொடுத்து வெற்றி கண்டுள்ளோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Jan 18, 2025 11:10 IST
சட்டத்தின் அடிப்படையை தகர்க்கும் பாஜக - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை பாஜக தகர்கின்றது, பாஜக அரசால் அரசியல் சட்டத்திர்ற்கு ஆபத்து என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Jan 18, 2025 10:44 IST
கழுத்து வலி காரணமாக ரஞ்சி போட்டிகளில் கோலி விளையாட மாட்டார் எனத் தகவல்
கழுத்து வலி காரணமாக விராட் கோலியும் முழங்கை பிரச்னை காரணமாக கே.எல். ராகுலும் எதிர்வரும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
-
Jan 18, 2025 10:41 IST
சிறுவனிடம் கேட்ட முதலமைச்சர்
தம்பி இன்னொரு முறை செய்து காட்டுறியா? - மல்லர் கம்பத்தில் ஏறி சாகசம் செய்த சிறுவனிடம் கேட்டுக் கொண்ட முதலமைச்சர்; ஸ்டைல் செய்து காட்டிஅசத்திய சிறுவன் வீடியோ வெளியாகி உள்ளது.
-
Jan 18, 2025 10:18 IST
துரைமுருகன் கலகல பேச்சு
"பொன்முடியும் வழக்கறிஞர்தான், ஆனால் கோர்ட்டுக்கே போகாதவர் திமுக சட்டத்துறை மாநாட்டில் அமைச்சர் துறைமுருகன் வழக்கம் போல் கலகலப்பாக பேசினார்.
-
Jan 18, 2025 09:52 IST
திருச்சியில் ஜல்லிக்கட்டு
திருச்சியில் களைகட்டும் ஜல்லிக்கட்டு. மாடுபிடி வீரர்கள் உற்சாகம் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள் மற்றும் அவற்றை அடக்க மல்லுக்கட்டும் வீரர்கள். விறுவிறுப்பாக நடக்கும் ஜல்லிக்கட்டு.
-
Jan 18, 2025 09:50 IST
சபரிமலை பக்தர்களுக்கு தகவல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடைகிறது. நாளை இரவு வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
Jan 18, 2025 09:49 IST
‘தென்பாண்டி முத்துப்போல’ - பாடல் வெளியீடு
பிரதாப் இயக்கத்தில் சத்யராஜ், ஜெய், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் பேப் அண்ட் பேபி திரைப்படத்தின் ‘தென்பாண்டி முத்துப்போல’ பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. யுகபாரதி வரிகள் எழுத இமான் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
-
Jan 18, 2025 09:15 IST
குடும்பஸ்தன் படக்குழு அறிவிப்பு
ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ளது.
-
Jan 18, 2025 09:13 IST
விஷாலை இயக்கும் கவுதம் வாசுதேவ் மேனன்..!
விஷாலை வைத்து முதல் முறையாக படம் இயக்க உள்ளதாக மதகஜராஜ படம் வெற்றி விழாவில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்துள்ளார்.
-
Jan 18, 2025 08:49 IST
நடிகர் விஷால் பேட்டி
"எனக்கு நரம்பு தளர்ச்சி, போதை பழக்கம் என சிலர் வதந்தி பரப்பினர், என் உடல்நலனில் பிரச்சனை இல்லை, நன்றாக இருக்கிறேன். மதகஜராஜா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் எனக்கு கடுமையான காய்ச்சல் என்னை நேசிப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டேன் என்று நடிகர் விஷால் பேட்டி அளித்துள்ளார்.
-
Jan 18, 2025 08:47 IST
விராலிமலை ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள மண்டையூரில் பொங்கல் விழா ஜல்லிக்கட்டு போட்டியை திமுக செயலாளர் செல்லபாண்டியன் தொடங்கிவைத்தார். 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் களம் இறங்க உள்ளனர்.
-
Jan 18, 2025 08:24 IST
“திராவிட மாடலை பின்பற்றும் பாஜக”
திராவிட ஆட்சியின் மாடல்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகிறது. இப்போது பாஜகவும் பின்பற்ற தொடங்கி இருப்பதற்கு வாழ்த்துக்கள். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதணந்ோறும் ரூ.2500 வழங்கப்படும் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார்.
-
Jan 18, 2025 08:21 IST
பொங்கல் பரிசுத் தொகுப்பு - இன்றே கடைசி நாள்!
தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற இன்றே கடைசி நாளாகும். 75%க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Jan 18, 2025 08:00 IST
பாஜகவில் இருந்து விலகல்
திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவராக இருந்த தயா சங்கர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரோடு மாவட்ட பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த வேல் ஆறுமுகம் என்பவரும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.